Thursday, November 08, 2012

நான் சின்ன புள்ளையா இருக்கும்போது!!...

                                      

1. சத்துணவு சோறெல்லாம் நல்லா ருசியா இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

2. நான் இருக்குற ஊருல மட்டும்தான் நிலா இருக்குன்னும்.., நான் எங்க போனாலும் கூடவே வருதுன்னும் நினைச்சுப்பேன்!!...,

3. டீச்சர்லாம் குடை வெச்சுக்கிட்டும்.., கண்ணாடி போட்டுக்கிட்டும் உர்ர்ர்ர்ருன்னு இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

4. அண்ணன், தங்கச்சிலாம் “பாசமலர்” படத்துல வர்றா மாதிரி அன்பா, இருப்பாங்கன்னும நினைச்சுப்பேன்!!..,

5. சினிமா பார்க்கும்போது. பெரிய பெரிய பூதம்லாம் தியேட்டரை தலையில தூக்கிகிட்டு போய் காட்டுதுங்க, படம் முடிஞ்சதும் மறுபதியும் இங்கயே கொண்டு வந்து விட்டுடுதுங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

6. பெரியவளானதும், நம்பியார், அசோகன், கிட்டியை எல்லாம் கொன்னுடனும் நினைச்சுப்பேன்!!...,

7.  ஆம்பிள்ளை போலீசெல்லாம் கெட்டவங்கன்னும், பொம்பளை போலீசெல்லாம் நல்லவங்கன்னும் நினைச்சுப்பேன்!!...,

8.  பெரியவளானதும் வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகி கெட்டவங்களைலாம் பறாந்து பறந்து அடிக்கனும்ன்னு  நினைச்சுப்பேன்..., (முக்கியமா எங்க ஸ்கூல் பியூனை.., அவந்தான் எங்க வூட்டு பக்கத்துல குடியிருந்துக்கிட்டு அங்க நடக்குறதை இங்கும்.., இங்க நடக்குறதை அங்கும் போட்டு குடுக்குறது!!...,

9. கொசுவை ஒழிக்க, தினமும் பத்து கொசு அடிச்சு கொண்டு வந்து காட்டனும்ன்னு அரசங்கமே சட்டம் போட்டு ஊருக்கு ஒரு ஆஃபீஸ் வெச்சு குறிச்சுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

10. காலேஜ் படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்டாலே வேலை கிடைச்சு ஒரே ப்ப்ப்ப்ப்ப்பணக்காரங்களாயிடலாம்ன்னு நினைச்சுப்பேன்!!..,

11. சாமிலாம் பெரிய சைஸ் ஜல்லடைல ஊத்துற தண்ணிதான் “மழை”ன்னு நினைச்சுப்பேன்!!...,

 12. பெரியவளாகி கல்யாணம் கட்டிக்கிட்டு வூட்டுக்காரரையும்.., புகுந்த வூட்டினரையும் பத்திரமா பார்த்துக்கிட்டு நல்ல பொண்ணுன்னு பேரெடுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

13.  எங்க ஊரு மணியக்காரருக்குதான் எல்லா ”பவரும்” இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!....,

14. எங்க ஊரு பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சாலே எல்லா வியாதியும்.., சரியாகிடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

15. எங்க பக்கத்து வீட்டு கார்த்தியண்ணாக்குதான் எல்லாமே தெரியும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

16. ஃபிளைட்  ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

17. கல்யாணம் கட்டிக்கிட்டா “அப்பா”வைத்தான் கட்டிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

18. அடுப்புல குண்டானை வெச்சு, பருப்பு, காய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க வெச்சா அதான் சாம்பார்ன்னு நினைச்சுப்பேன்!!...,

19. உலகத்துலேயே ருசியான பலகாரம் “தேன் மிட்டாயும், கலர் அப்பளமும்”தான் நினைச்சுப்பேன்!!....,

20.மெட்ராஸ், பெங்களூர், கல்கத்தாலாம் வெளிநாட்டுல இருக்குன்னு நினைச்சுப்பேன்!!..,

                                                                                                                        (தொடரும்...., )

              

இந்த தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாட.., புது விதமான ”பதிவர்கள் பெயர் தாங்கிய வெடிகள்” அறிமுகம்  நமது தளத்தில் திங்களன்று....,41 comments:

 1. அட
  என்னை மாதிரியே தான்
  நீங்களும் இருந்திருக்கீங்க ....

  பதிவர் பட்டாசா
  அவ்வ்வ்வ்....

  ReplyDelete
  Replies
  1. அண்ணனை போலவே தங்கை இருப்பதில் வியப்பென்ன?! “வசந்த மணப” மகேந்திரன் வெடியும் இங்கு கிடைக்கும் அண்ணா!

   Delete
 2. நீங்க சொல்ற எல்லா கனவுமே பலிக்கறதுக்கு சான்ஸ் இருக்கு.
  ஒண்ணே ஒண்ணைத் தவிர.

  அது தான் கொசுத் தொல்லை.

  டெடனஸ், டியூபர் குலோசிஸ், மெனின்சிடிஸ், ஜான்டிஸ், டைபாய்டு இத்தனைக்கும்
  வாக்சீன் கண்டுபிடிச்சவஙக கொசுத்தொல்லையினால் வரும் மலேரியா, டெங்கு
  இதுக்கெல்லாம் வாக்சின் கண்டு பிடிச்சாத்தான் நல்லது.

  எப்ப அந்த வாக்ஸின் வருமோ ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஓ இப்படியும் ஒரு வழி இருக்கா?! நன்றி தாத்தா!

   Delete
 3. அட , உங்கள் குழந்தைத்தனமான
  வெகுளி நம்பிக்கைகள்
  வெகு சுவாரசியம் . இங்கேயும் சிலதுகள்
  உண்டு. திங்களன்று உங்கள் தளத்தில்
  தீபாவளியா ? என்ன குண்டு
  போடப் போறீங்களோ ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் பதிவர் குண்டுதான்! வந்து படிச்சு பாருங்க... சூப்பரா வெடிக்கும்.

   Delete
 4. நீங்கள் சிறந்த எழுத்தாளாக பதிவராக
  விளங்குவதன் காரணம் புரிந்து போயிற்று
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவராகி வாங்குன் அப்ல்ப்லாம் இன்னும் இருக்கு.., அதையும் ஒரு பதிவில் அவசியம் சொல்றேன் ஐயா!

   Delete
 5. ஒரு அம்பது வருஷம் இருக்குமா?
  கோவிச்சுக்காதீங்க மேடம்! சும்மா!

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் பேராண்டி.., ஹா ஹா கோவிச்சுக்கும் ரகமில்லை நான் பயப்படாம கருத்து சொல்லுங்க சகோ.

   Delete
 6. இப்பவும் இப்படித்தான் ஏதாவது தப்பு தப்பா நினைசிக்குது இந்த புள்ள ; இன்னும் மாறவே இல்ல

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் இப்படித்தான் இல்லை சகோ..., எப்பவுமே இப்படித்தான் நான்:-)

   Delete
 7. மிக சுவையான பதிவு. இன்ரறெஸ்ரிங்
  இனிய நல்வாழ்த்து ராஜி!.
  இனிய தீபாவளி வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. பதிவை படித்து ரசித்தமைக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கும் நன்றி

   Delete
 8. சுவாரஸ்யமான பகிர்வு...

  நன்றி சகோ...
  tm6

  ReplyDelete
  Replies
  1. பதிவை படித்து ரசித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 9. ///சத்துணவு சோறெல்லாம் நல்லா ருசியா இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!...,///

  ஒசி சாப்பாடு எப்போதும் நல்லாவே இருக்கும்

  /// அண்ணன், தங்கச்சிலாம் “பாசமலர்” படத்துல வர்றா மாதிரி அன்பா, இருப்பாங்கன்னும நினைச்சுப்பேன்!!..,///

  என்ன சகோ கணேஷ் தீபாவளிக்கு சேலை தங்க செயின் வாங்கி தரவில்லையா அதுக்காக இப்படியா பொதுவுல போட்ட்டு தாக்குறது

  ///பெரியவளானதும், நம்பியார், அசோகன், கிட்டியை எல்லாம் கொன்னுடனும் நினைச்சுப்பேன்!!...,///
  இப்ப யாரு உங்க மனசுல இருக்காங்க?

  // பெரியவளானதும் வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகி கெட்டவங்களைலாம் பறாந்து பறந்து அடிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்..., (முக்கியமா எங்க ஸ்கூல் பியூனை.., அவந்தான் எங்க வூட்டு பக்கத்துல குடியிருந்துக்கிட்டு அங்க நடக்குறதை இங்கும்.., இங்க நடக்குறதை அங்கும் போட்டு குடுக்குறது!!.//

  நீங்க வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகலையா? ஆகலைன்னா சரி அதுக்காக ஸ்கூல் பியூனுக்கு பதிலாக வீட்டுல யாருக்கோ அடி குடுக்குறதா என் காதில் செய்தி வந்து விழுகிறதே அது உண்மையா?


  ///சாமிலாம் பெரிய சைஸ் ஜல்லடைல ஊத்துற தண்ணிதான் “மழை”ன்னு நினைச்சுப்பேன்!!...,////\

  நாங்க எல்லாம் சாமி போற மூச்சாதான் மழைன்னு நினைச்சுப்போம்

  ///பெரியவளாகி கல்யாணம் கட்டிக்கிட்டு வூட்டுக்காரரையும்.., புகுந்த வூட்டினரையும் பத்திரமா பார்த்துக்கிட்டு நல்ல பொண்ணுன்னு பேரெடுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,///

  நீங்க நினைச்ச மாதிரி இப்போ நடந்துகிறதில்லையா? பாவம் உங்க வீட்டு காரரும் புகுந்தவீட்டினரும்


  ////எங்க ஊரு பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சாலே எல்லா வியாதியும்.., சரியாகிடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,///

  பூசாரிகிட்ட என்ன இப்ப டாக்டர்கிட்ட போனா கூட வியாதியெல்லாம் சரியாகுவதில்லை நம்ம பணம்தான் சரியா காலியாமு

  /// எங்க பக்கத்து வீட்டு கார்த்தியண்ணாக்குதான் எல்லாமே தெரியும்ன்னு நினைச்சுப்பேன்!!...,///
  இப்ப லேப்டாப் வந்ததும் கார்த்தியண்ணவை தூக்கி எறிஞ்சிட்டு கூகுல் அண்ணாவைதான் உங்கள் அண்ணன் என்று சொல்லுகிறீர்களோ?

  ///ஃபிளைட் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...////

  ஆஹா இப்படி ஒரு அறிவுஜீவியா நம்ம சகோன்னு மூக்கில் விரலை வைக்கும்படி செய்துவிட்டீர்கள்,


  //அடுப்புல குண்டானை வெச்சு, பருப்பு, காய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க வெச்சா அதான் சாம்பார்ன்னு நினைச்சுப்பேன்!!...,//
  அப்ப நினைச்சதைதான் இப்ப செய்து கொண்டு இருக்கிறீர்களோ?


  ///மெட்ராஸ், பெங்களூர், கல்கத்தாலாம் வெளிநாட்டுல இருக்குன்னு நினைச்சுப்பேன்!!..//

  உங்க நினைப்பை நிஜமாக்க உங்கள் கூட சேர்ந்து தனித்தமிழநாடு வாங்க போராடப்போறேன்,

  ReplyDelete
  Replies
  1. பதிவை விட பெருசா கமெண்ட் போட்டதிலிருந்தே பதிவை ரொம்ப ரசிச்சு இருக்கீங்கன்னு நினைக்குறேன். நன்றி சகோ

   Delete
 10. இது என்னங்க.......
  அப்போவெல்லாம்
  (அப்போ இப்ப என்ன நீ பெரிய ஆளாகிட்டியா :(.... )
  உலகத்துல நான் ஒருத்தன் தான் நல்லவன் கொடையாளி எல்லோருக்கும் உதவுரவன் என்றெல்லோ நினைச்சிட்டு இருந்தேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் ஒரு பதிவை போட்டுடுங்களேன் சகோ. நாங்களும் படிச்சு கலாய்ப்போமில்ல!

   Delete
 11. ஐயோ மறந்து போச்சு
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆனா, நான் மறக்காம சொல்றேன். வாழ்த்துக்கு நன்றிங்க சகோ

   Delete
 12. நல்லதொரு பகிர்வு! என்னுடைய வலைப்பூவில் http://esseshadri.blogspot.in/2012/10/blog-post_30.htmlபடியுங்களேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கண்டிப்பா வந்து படிக்குறேன் சகோ

   Delete
 13. அட நீங்க இப்பவும் சின்ன புள்ளை தானே...!

  ReplyDelete
  Replies
  1. அட, ஆமாமில்ல.., அடுத்த பதிவுல “நான் இப்படித்தான் நினைச்சுப்பேன்”ன்னு தலைப்பு வெச்சுடுறேன்.

   Delete
 14. அடடா... என் தங்கச்சி அப்பவே(வும்) உலகம் தெரியாத புள்யையா அப்பாவியா தான் இருந்திருக்காங்கப்பா... இதில சிலது மட்டும் நானும் உணர்ந்தது. (டில்லி. கல்கத்தா வெளிநாடு. உலகிலேயே ருசியான பலகாரம் தேன் மிட்டாய் போல). அருமைம்மா.

  ReplyDelete
  Replies
  1. என்னைப்போலவேதானா நீங்களும்? நல்லதுண்ணா!

   Delete
 15. மிக எதார்த்தமான வெகுளியான சிந்தனை அது...மறக்க முடியாத சில விஷயங்கள் இருக்கும்.அதை மீண்டும் நியாபகப் படுத்தியதற்கு நன்றி..அருமை...வாழ்த்துக்கள் ராஜி அவர்களே

  ReplyDelete
  Replies
  1. குழந்தக்கால நினைவுகள் வந்துட்டுதா? பதிவா போட்டுடுங்க சகோ. நாங்களும் ரசிப்போமில்ல?!

   Delete
 16. இதெல்லாம் நான் வெளிய சொல்லள நீங்க சொல்லிட்டீங்க அம்புடுதேன்.
  அய்யோ அய்யோ எப்படியெல்லாம் ஒரு பதிவு தேத்துராங்க பா.

  ReplyDelete
  Replies
  1. நாங்கலாம் யாரு?! ஒரு மெசேஜை வெச்சே ஒன்பது பதிவை தேத்துறவங்களாச்சே?!

   Delete
 17. அடங்கொக்கமக்கா.இம்பூட்டு அப்பாவியா இருந்திருக்கீங்க.ச்சோ ஸ்வீட்

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் இருக்கு. அதெல்லாம் படிச்சாதான் என் “புத்திசாலித்தனம்”!! உங்களுக்கு தெரிய வரும் தோழி

   Delete
 18. 40 வருஷத்துக்கு முன்னே நடந்ததெல்லாம் இன்னும் நினைவிருக்கா? அடேங்கப்பா

  ReplyDelete
 19. சின்ன வயசு நினைப்புக்கள் என்னையும் சிறுவயதிற்கு கூட்டிச்சென்றது! அருமை!

  ReplyDelete
 20. ஃபிளைட் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

  அருமை !...அருமை !..சகோ இது பறக்குற உயரத்தை வைத்து நல்ல நீளமா தடி கிடைச்சா அடிச்சு விழுத்தலாம் என்று
  நினைச்சிருப்பீங்களே ?...நான் நினைச்சதுண்டு அதுதான் :) இனிய வாழ்த்துக்கள் சகோதரி .

  ReplyDelete
 21. என்னுடைய வலைப்பூவில் " நலம் தருவாய் நரசிம்மா!"
  தரிசிக்க வாருங்கள்! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 22. நீங்க வேற பாம்பாய்க்கு போக பாஸ்போர்ட் வேணும், உலகம் பூராவும் தமிழ் தான் பேசுவாங்க, கார்ட்டூண் பொம்மைகள் எல்லாம் உண்மையா இருக்குது என்றும், சர்க்கரை சாப்பிட்டா வயிற்றுப் புழு பாம்பாய் மாறி மூக்கு வழியா வரும் என்றும், மயிலிறகு குட்டிப் போடும் எனவும், செத்தவங்க பேயா வீட்டுக்கு தண்ணீர் குடிக்க வருவாங்க, பட்டாம் பூச்சி இறகின் சாம்பலை நெற்றியில் இட்டால் நினைச்சது நடக்கும் எனவும், கொக்கு பறக்கும் போது கை நகங்களில் வெள்ளை விழும் எனவும், அப்படி வந்தா புது உடுப்பு கிட்டும் எனவும், எப்பா இன்னும் நிறையவே லூசுத் தனமாய் நினைச்சதுண்டு.

  ReplyDelete