Showing posts with label சுப்ரபாதம். Show all posts
Showing posts with label சுப்ரபாதம். Show all posts

Saturday, February 16, 2019

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?! - சுட்டப்படம்


இது சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் வசிக்கும் இடத்தில் எடுத்தது. பொதுவா ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கும். அங்க வசிக்க போகும்போது அந்த சட்டத்தை மதிப்பதுதான் சரியா இருக்கும். படிச்ச இந்த காலத்து புள்ளைங்க ஈசியா அந்த இடத்துக்கேத்த மாதிரி மாறிப்பாங்க. ஆனா, வயசானவங்க?! அப்படி மாறமுடியாது. சிங்கப்பூருக்கு தனது மகன்/ள் வீட்டுக்கு போன ஒரு அம்மா, மிளகாய் பொடி அரைக்க மிளகாய், தனியா, மஞ்சள்லாம் காயவச்சு, அதுக்கு காவலா அங்கனயே படுத்திருக்கு. இது அங்க சட்டப்படி தப்புதான். ஆனா அந்த அம்மாவின் அன்புக்கு அது புரியாது. அன்பு கொண்ட உள்ளம் எப்போதும் வெகுளிதான் போல! எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாத காட்டாற்று வெள்ளம்போல!
No photo description available.
சம்பளத்தை கூட்டிக்கொடுக்க சொன்னா, வீட்டில் காட்டி கொடுத்துடுவாரு போல!
ஆற்றில் எத்தனையோ வகையுண்டு?! இந்த ஆறு எந்த வகைன்னு தெரில! எங்கே செல்லுது நம் உலகம்?!
சிங்கமே ஆனாலும் பாதையில் கவனம் வேணும் ..இல்லைன்னா இப்படித்தான் 
போட்டோஷாப்பா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா?!
ரொம்ப அறிவாளின்னு மனசுக்குள் நினைப்பு!
வாழ்வுக்கும், உணவுக்குமான போராட்டம் இது
வயசுக்கு வந்த புள்ளைலாம் இழுத்து போர்த்திக்கிட்டு 11 மணிவரை தூங்குது.. இந்த பாப்பாப் எத்தனை அழகா சாமி கும்பிடுது?! கடவுள் தன்னைத்தானே திருப்பள்ளியெழுச்சி செய்துக்கொண்ட தருணம்...
 மீண்டும் ஒருபதிவின் மூலம் உங்களை அடுத்தவாரம் சந்திக்கிறேன் 
நட்புடன் 
ராஜி