இது சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் வசிக்கும் இடத்தில் எடுத்தது. பொதுவா ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கும். அங்க வசிக்க போகும்போது அந்த சட்டத்தை மதிப்பதுதான் சரியா இருக்கும். படிச்ச இந்த காலத்து புள்ளைங்க ஈசியா அந்த இடத்துக்கேத்த மாதிரி மாறிப்பாங்க. ஆனா, வயசானவங்க?! அப்படி மாறமுடியாது. சிங்கப்பூருக்கு தனது மகன்/ள் வீட்டுக்கு போன ஒரு அம்மா, மிளகாய் பொடி அரைக்க மிளகாய், தனியா, மஞ்சள்லாம் காயவச்சு, அதுக்கு காவலா அங்கனயே படுத்திருக்கு. இது அங்க சட்டப்படி தப்புதான். ஆனா அந்த அம்மாவின் அன்புக்கு அது புரியாது. அன்பு கொண்ட உள்ளம் எப்போதும் வெகுளிதான் போல! எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாத காட்டாற்று வெள்ளம்போல!
சம்பளத்தை கூட்டிக்கொடுக்க சொன்னா, வீட்டில் காட்டி கொடுத்துடுவாரு போல!
ஆற்றில் எத்தனையோ வகையுண்டு?! இந்த ஆறு எந்த வகைன்னு தெரில! எங்கே செல்லுது நம் உலகம்?!
சிங்கமே ஆனாலும் பாதையில் கவனம் வேணும் ..இல்லைன்னா இப்படித்தான்
சிங்கமே ஆனாலும் பாதையில் கவனம் வேணும் ..இல்லைன்னா இப்படித்தான்
ரொம்ப அறிவாளின்னு மனசுக்குள் நினைப்பு!
வாழ்வுக்கும், உணவுக்குமான போராட்டம் இது
வயசுக்கு வந்த புள்ளைலாம் இழுத்து போர்த்திக்கிட்டு 11 மணிவரை தூங்குது.. இந்த பாப்பாப் எத்தனை அழகா சாமி கும்பிடுது?! கடவுள் தன்னைத்தானே திருப்பள்ளியெழுச்சி செய்துக்கொண்ட தருணம்...
முகநூலில் மூழ்கி உள்ளவர்க்கு (சங்கி மங்கி) போட்டோஷாப் கூட சரியாக செய்ய தெரியாது என்பது தான் நிசர்தனம்.....
ReplyDeleteஇப்பொழுது பேஸ்புக்,ட்விட்டர் இங்கெல்லாம்,நடக்காத விஷயங்களையும்,பேசாத அறிக்கைகளையும் போட்டோஷாப் செய்து வெளியிட்டு.மாறி மாறி தூற்றி கொள்கின்றனர்.சீரியஸ் ஆக பார்த்தாலும்,சிரிப்புக்காக சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற்றை கடந்து செல்வதே நல்லதுண்ணே...
Deleteஎல்லாமே ஜோர். அந்தக் குழந்தை சுப்ரபாதம் எனக்கும் வந்தது! அந்த சிங்கம் அப்புறம் எப்படி வெளியே வந்தது என்கிற கவலை வேறு!
ReplyDeleteவீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சிங்கம் கர்ஜிக்கிறது கேட்கிறது.சரி எப்படி எழுந்தேன் என்று சொல்லிவிட்டால்,ஏன் நீ வீழ்ந்தாய் என்று கேட்கமாட்டோம் என்று சிங்கத்திடம் கேட்டு சொல்கிறேன் சகோ...ஆனா அது அசிங்கமா திட்டாம இருந்தா சரி ...
Deleteஅந்த குழந்தை சுப்ரபாதம் செம அருமை.
ReplyDeleteட்விட்டர்ல பார்த்து யூட்யூப்ல தேடி கண்டுப்பிடிச்சு போட்டது சகோ
Delete