Showing posts with label தெனாலி ராமன். Show all posts
Showing posts with label தெனாலி ராமன். Show all posts

Saturday, July 13, 2013

பாத்திரங்கள் குட்டி போடுமா?! - பாட்டி சொன்ன கதை

சீனு வா! வா! இன்னிக்கு ஸ்கூல் லீவா!? பாப்பா எங்கே?!

அதோ வர்றா பாருங்க பாட்டி! ஸ்கூல் லீவ்தான் பாட்டி!!

செல்லம், வா! வா! என்ன, என் குட்டிம்மா மூஞ்சி உம்முன்னு இருக்கு?!

ம்ம்ம் அம்மா, தக்காளி சூப் வச்சு குடுத்து, என்னை சாப்பிட வச்சுட்டா பாட்டி.

ஓ, தக்காளி சூப் உடம்புக்கு நல்லதுதானே டா!?அதான் அம்மா உனக்காக செஞ்சு குடுத்திருக்கா. அதெல்லாம் சாப்பிட்டாதானே நீ ஹெல்தியா இருப்பே! நல்லா படிச்சு.., குட் கேர்ளா இருப்பே!

போ பாட்டி, அது புளிக்குது, சிவப்பா பார்க்கவே பயமா இருக்கு.

அடடா! அப்படி இல்ல செல்லம், தக்காளி குழம்பு வைக்க யூஸ் ஆனாலும் அது ஒரு ஃப்ரூட்தான். ஆப்பிள். ஆரஞ்ச், மாம்பழம் போல இதையும் பச்சையா சாப்பிடலாம்..., இதை அப்படியே பச்சையா சமைக்காம சாப்பிடுறது, டாக்டர் குடுக்குற டானிக் சாப்புடுற மாதிரி. அது மட்டுமில்லாம தக்காளியை எப்படி செஞ்சு சாப்பிட்டாலும், அதோட சக்தி அப்படியே நமக்கு கிடைக்கும். அதான் இதனோட ஸ்பெஷாலிட்டி.

தக்காளிப் பழத்துல அதிகபட்சமா வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராமும், வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் இருக்கு. ரொம்ப கம்மியா சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராம் இருக்கு. 

ஓ இவ்வளவு வைட்டமின்லாம் இருக்கா பாட்டி!?
ம்ம் அதுமட்டுமில்லாம  தக்காளிக்கு இரத்தத்தை ஃபியூரிஃபை பண்ணும்  ஆற்றல் இருக்கு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யும். . நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீரா இருக்க ஹெல்ப் பண்ணுது...,

பொதுவா இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தா உடம்புல  நோய்த் தொற்று வர்றது ஈசி இல்லை. தக்காளியை எந்த முறையிலாவது நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கனும்..,   தக்காளிப் பழத்தை சூப்பா செஞ்சு காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் ஹெல்தியா இருக்குறது மட்டுமில்லாம, ஸ்கின்லாம் சாஃப்ட் அண்ட் ஷைனிங்கா இருக்கும். இதோட ஸ்கின் இன்ஃபெக்‌ஷன் எதும் வரவும் வராதாம்.  

அப்பதியா?! பாத்தி!! ஆன, அம்மா எப்போ பார்த்தாலும் காரமா ஊறுகா, சத்னி, சாதம்தானே செய்யுறா. அதான் எனக்கு பிதிக்கலை..
ம்ம் இனி அம்மாவை தக்காளில ஜாம் செஞ்சு குடுக்க சொல்றேன். அதை இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்க, இதுப்போல செஞ்சா உன் போல குழந்தைகளுக்கு பிடிக்கும்.  உங்களுக்குலாம் தேவையான சத்தும் கிடைச்சுடும்.
முன்னலாம் ஏழைகளுக்கான ஆப்பிள்ன்னு தக்காளி பழத்தை சொல்லுவாங்க. இப்போ என்னடான்னா! பணக்காரங்க கூட வாங்க முடியாத அளவுக்கு தக்காளி விலை ஏறி போய் கிடக்கு... இனி தக்காளின்னு படத்தை பார்த்துதான் சமைக்கனும் போல!! சரி இன்னிக்கு கதை சொல்லவா?!

ம்ம்ம் சொல்லுங்க பாத்தி!!





  ஒரு ஊருல சேட் ஒருத்தன் இருந்தான். அவன்  தன்கிட்ட   இருக்குற பைசாவை வட்டிக்கு விட்டு    சம்பாதிக்குறவன்.அதுவும் பாதிக்கு பாதி     வட்டி     வாங்குற பேராசைக்காரன் அவன்..., இது தெரிஞ்சிருந்தும், அவன்கிட்டயே    மக்கள்லாம் வட்டிக்கு கடனா காசு வாங்குனாங்க.

இது   எப்படியோ    தெனாலிராமனுக்கு தெரிஞ்சிடுச்சு. அந்த சேட்டை  எப்படியாவது கையும் களவுமா பிடிச்சு திருத்தனும்ன்னு முடிவுக்கு வந்து அந்த ஊருக்கு போனான்..,

அந்த சேட், வட்டிக்கு கடனா குடுக்குறதோட, பாத்திரங்களை வச்சிக்கிட்டும் பணம் தருவான்.., இதை தெரிஞ்சிக்கிட்ட தெனாலிராமன், சேட்கிட்ட போய், ஐயா! என் பையனுக்கு காது குத்துற ஃபங்க்‌ஷன் வச்சிருக்கேன். அதனால, உங்க கிட்ட இருக்குற பாத்திரங்களை எனக்கு வாடகைக்கு குடுங்க.., பங்க்‌ஷன் முடிஞ்சதும் பாத்திரம் கொண்டு வந்து தந்துடுறேன். அதுக்கு,  எவ்வளவு காசு வேணுமோ அவ்வளவு காசும் நான் தரேன்னு சொன்னான்.

தெனாலி ராமன் கேட்ட மாதிரியே பாத்திரங்களை தந்தான் அந்த சேட். கொஞ்ச நாள் கழிச்சு தெனாலிராமன் அந்த சேட் வீட்டுக்கு வந்தான். வண்டியிலிருந்து பாத்திரங்களை இறக்கி வைத்தான். சேட் குடுத்தனுப்பிய பாத்திரங்கள் போலவே இன்னும் கொஞ்சம் சிறிய பாத்திரங்களும் அதோடு இருந்துச்சு..., 

இதை பார்த்த சேட், அப்பா ராமா! நான் உனக்கு பெரிய பாத்திரம் மட்டும்தானே குடுத்தேன். இதென்ன எக்ஸ்ட்ராவா சின்ன பாத்திரம்லாம்?!ன்னு கேட்டான்

ஐயா! நீங்க தந்தது பெரிய பாத்திரங்கள்தான். அதை நீங்க குடுக்கும்போது கர்ப்பமா இருந்துச்சு போல! எங்க வீட்டுக்கு வந்த உடனே குட்டி போட்டுச்சு. அதையும் உங்ககிட்ட குடுக்குறதுதானே முறைன்னு கொண்டு வந்தேன்ன்னு சொல்லி அப்பாவியா நின்னான் தெனாலிராமன்.


ஹா! ஹா! என்னாது பாத்திரம்லாம் குட்டி போடுமா?! இதென்ன புதுசா இருக்கு பாட்டி!? பாவம் தெனாலிராமன் ஏமாந்து போக போறான்.

அப்படில்லாம் ஒண்ணுமில்ல, நீ முழுசா கதை கேளு சீனு. இந்த ராமன் வடிக்கட்டுன முட்டாளா இருப்பான் போலன்னு நினைச்சு,  நமக்கு சின்ன பாத்திரம்லாம் லாபம்ன்னு கணக்கு போட்ட சேட்,  ஆமா, ராமா! உன்கிட்ட குடுக்கும்போது என் பாத்திரம்லாம் கர்ப்பமா இருந்துச்சு. அது குட்டி போட்டுடுச்சா?!ன்னு கேட்டுக்கிட்டே பாத்திரம்லாம் உள்ளே எடுத்து வச்சுக்கிட்டான்.

இன்னும் கொஞ்ச நாள் போச்சு, தெனாலி ராமன் வந்து, ஐயா எங்க வீட்டுல என் தம்பிக்கு கல்யாணம், அதனால கொஞ்சம் வெள்ளி சாமானும். கொஞ்சம் தங்க நகையும் வாடகைக்கு குடுங்களேன்னு கேட்டான். ராமனுடைய நேர்மையும், இந்த பொருளும் குட்டி போட்டுச்சுன்னு சொல்லி இன்னும் நகைலாம் தருவான்னும் நம்பி சேட் வெள்ளி சாமான்களையும், தங்க நகையும் குடுத்து அனுப்பினான். அப்படி குடுக்கும்போது, இதுல்லாம் கர்ப்பமா இருக்கு. அதோட குட்டிகளையும் எடுத்து வா”ன்னு சொல்லி அனுப்பினான். 

ராமன் போய் வாரம், மாசம்ன்னு நாள்தான் போச்சே தவிர ராமன் திரும்பி வந்த பாடில்லை. சரின்னு வண்டி  கட்டிக்கிட்டு ராமன் ஊருக்கே போனான். போய் ராமன்கிட்ட என் வெள்ளி பொருளும் தங்க நகையும் எங்கேன்னு கேட்டான்..

ம்ம்ம் அதுக்கு, ராமன்  என்ன பதில் சொன்னான் பாட்டி??!!

நீ பாத்திரமும் நகையும்  எடுத்து  வந்து மாசம் பல ஆச்சு. இன்னும் ஏன் திருப்பி தரலைன்னு கோவமா கேட்டான்.

அதுக்கு ராமன், ஓன்னு அழுது.., அதை ஏன் கேக்குறீங்க ஐயா! சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்ன்னுதானே நான் உங்ககிட்ட சொல்லலை. நீங்க தரும்போது பாத்திரமும், நகையும் கர்ப்பமா இருந்துச்சுதானே! அதெல்லாம் பிரசவம் சிக்கலாயிட்டதால செத்து போச்சு. அதனால, அதையெல்லாம் அடக்கம் பண்ணிட்டேன்னு சொல்லி அழுதான்.

ஏய்! யாரை ஏமாத்த பார்க்குறே?! நகையும், பாத்திரமும் எங்காவது சாகுமா?!ன்னு கோவமா கேட்டான்.

ஏன் சாகாது, பாத்திரம் குட்டி போடும்போது, பிரசவம் சிக்கலாகி ஏன் சாகாதுன்னு கேட்டு வா! இந்த ஊரு ராஜாகிட்ட போய் நீதி கேக்கலாம்ன்னு கூட்டி போனான்.

ராஜாக்கிட்ட போனா, எங்க தன் குட்டு வெளிப்படுமோன்னு நினைச்சு, சரி, சரி, நடந்தது நடந்துடுச்சு. விடுன்னு நழுவ பார்த்தான் சேட். தெனாலிராமன் அவனை விடாது ராஜாக்கிட்ட போய் கம்ப்ளெயிண்ட் பண்ணான்.

எல்லா விவரங்களையும் கேட்ட ராஜா,  "பாத்திரங்கள்லாம் குட்டி போடும்ன்னா!!  நகையும், பாத்திரமும் பிரசவத்தின் போது ஏன் சாகக்கூடாது? உன் பேராசைக்கு இந்த நஷ்டம் உனக்கு தேவைதான். அதனால, இனியாவது,  நியாயமான வட்டி வாங்கு”ன்னு புத்திமதி சொல்லி அனுப்பினார் ராஜா. அத்தோடு இல்லாம தெனாலி ராமனின்  புத்திசாலித் தனத்தை பாராட்டி பரிசுலாம் தந்து அனுப்பினார் ராஜா.

இதிலிருந்து என்ன தெரியுது பசங்களா?!

உழைக்காம வர்ற காசு ஒட்டாதுன்னு தெரியுது பாட்டி!

ம்ம் கரெக்ட். நீங்களும் பெரியவங்க ஆனா, இதுப்போல வட்டிக்கு ஆசைப்படாம கடனா மத்தவங்களுக்கு கைமாத்தா காசு குடுக்கனும் தெரியுதா?!

சரி பாட்டி! டிவில சோட்டா பீம் போடுவாங்க நான் போய் பார்க்குறேன். பை பை

ம்ம் ரொம்ப நேரம் டிவி பார்க்காம சீக்கிரம் போய் படுங்க. பை பை