அடிச்சு பிடிச்சு கரெக்ட் டைமுக்கு ஆபீசுக்கு வந்து, மேலதிகாரிக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டு,சீட்டுக்கு வந்து, கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஒரு போஸ்ட்டை போட்டு அதை திரட்டிகளில் இணைச்சு, படபடன்னு மத்த பிளாக்குகளுக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு போஸ்ட்டை தேத்தி டிராஃப்ட்ல போட்டு, அதுக்கு படங்களைஇணைச்சு..., நிமிர்ந்து பார்த்தா மணி பணிரெண்டுதான் ஆகியிருக்கும்.
சரி, ட்விட்டர், மூஞ்சி புத்தகத்துலலாம் போய் அரட்டை அடிக்கலாம்ன்னு போய் பார்த்தா எல்லாரும், அன்னிக்குன்னு பார்த்து சின்சியரா வேலை பார்க்க போய்ட்டு இருப்பாங்க. நம்மை சுத்தி எல்லாருமே வேலை(ஆபீஸ் வேலை) பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்குதான் ஆபீஸ் வேலை செஞ்சு பழக்கம் இல்லியே. அதனால, நமக்கு போரடிக்கும், அதுமில்லாம நம்மளையே மேனேஜர் உத்து பார்க்குற மாதிரி நமக்கு தோணும்.
அதனால, நாம தீயா?! வேலை செய்றோம்ன்னு சீன் போட்டாகனுமே, அதுக்குதான் சில டிப்ஸ்..., டிரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் என்னன்னு சொல்லுங்க...
1. உங்க மானிட்டரில முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ இல்ல கோடையோ (code) திறந்து வச்சுட்டு..., ஏதையோ யோசிக்குற மாதிரி, அதையே பார்த்துக்கிட்டு இருங்க . பார்க்குறவங்கலாம் நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சுக்குவாங்க.
2. அடிக்கடி நெத்தியை சொறிஞ்சுக்கோங்க. . எப்ப பார்த்தாலும்னெத்தியை சொறிஞ்சுக்கிட்டு இருந்தாலும் சந்தேகம் வந்துடும். அதனால, கொஞ்சம் மாத்தி பல்லை(உங்க) கடிச்சுக்கோங்க. ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செஞ்சுட்டு யோசிக்குற மாதிரி பாவ்லா காட்டுங்க.
3. கம்ப்யூட்டர் மவுஸையூஸ் பண்ணாம கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை யூஸ் பண்ணா பிஸியா, வேகமாக வேலை செய்ற மாதிரி தோணும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைச்சுக்கிட்டும், வெறிச்சிக்கிட்டும் பாருங்க. கூடவே நகத்தையும் கடிங்க.
.5. சீட்டுல சாய்ஞ்சு உட்காராம முன்னால இழுத்து விட்டு, சில நிமிசங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிங்க.
6. அப்பப்போ பேப்பர் ஃபைல்களை கலைச்சு விட்டு பெருமூச்சு விடுங்க. நீங்க முக்கியமான பேப்பர் எதையோ தேடுறீங்கன்னு நினைச்சுக்குவாங்க. கடைசியில எதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." இல்லைன்னா "சக்சஸ்" ன்னு சொல்லுங்க.
7. எங்காவது எழுந்து போகும்போது, வேகமாக நடந்து போங்க. ஏதோ முக்கியமான விஷயத்துக்காக நீங்க போறீங்கன்னு மத்தவங்க நினைச்சுக்குவாங்க.
8. உங்க கைகளை பிசைஞ்சுக்கோங்க. , கைவிரல்கள்ல சொடக்கு எடுத்துக்கோங்க . அப்பப்போ டென்ஷனா டேபிளில் ஒரு தட்டு தட்டுங்க.
9. உங்க மானிட்டருக்கு பகக்த்துல, எப்பவும் ஒரு நோட்டையும்,பேனாவையும் திறந்தே வையுங்க. அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை, நம்பர்களையும் கிறுக்கிக்கிட்டிருங்க.
10. ஆபீசுக்குள்ள எங்கே போறதாயிருந்தாலும் கையில ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போங்க. நீங்க முக்கியமான மீட்டிங்குக்கோ, இல்ல ஹிண்ட்ஸ் எடுக்கவோ போறீங்கன்னு நினைச்சுக்குவாங்க.
11. ஆபீஸில் நடந்து போகும்போது எதிர்க்க வர்றவங்க சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாம போங்க. அப்பதான் நீங்க டென்ஷனா வேலை செய்யுறதா நினைச்சுக்குவாங்க. அப்புறமா அவங்ககிட்ட போய் பிஸியாக இருந்தேன், ஸாரி ன்னு சொல்லிக்கலாம்.
12. சரியாக காபி வர்ற நேரத்துல எங்காவது எழுந்து போய்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து காபி கேளுங்க. மீட்டிங் போயிருந்தேன், ஃபைல் தேடினேன்னு புருடா விடுங்க.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நாலு இல்லை அஞ்சு அப்ளிகேஷன்களையோ இல்ல பைல்களையோ திறந்து வெச்சுக்கோங்க. அப்பப்போ அதையெல்லாம் ஓபன் செஞ்சு, குளோஸ் செஞ்சு, மாத்திக்கிட்டே இருங்க.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கிட்டிருங்க. சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு குறுக்கும் நெடுக்கும் நடங்க.
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயா இருந்தா (உங்களைப் போலவே வெட்டியா இருக்குற) உங்க டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்க. போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டுட்டு வாங்க.
16. முதல்ல வர்ற காபியைக்குடிக்காதீங்க. அப்படியே ஆற விடுங்க. மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிங்க. கொஞ்சம் பிஸியா இருந்ததால காபி குடிக்க முடியவிலைன்னு (மற்றவர் காதில் விழும்படி) சத்தமா சொல்லுங்க.
17. இதையெல்லாத்தையும் மீறி உண்மையாவே ஏதாவது ஆபீஸ் வேலை செய்ஞ்சுட்டா?! அதை மத்தவங்ககிட்ட சந்தோஷமா சொல்லுங்க.. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா, நமக்காக யார் பேசுவாங்க!?
டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.
டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.
