Friday, July 27, 2012

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? (பதிவர்களுக்கு டிப்ஸ்)

                                                  
அடிச்சு பிடிச்சு கரெக்ட் டைமுக்கு ஆபீசுக்கு வந்து,  மேலதிகாரிக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டு,சீட்டுக்கு வந்து,   கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஒரு போஸ்ட்டை போட்டு அதை திரட்டிகளில் இணைச்சு, படபடன்னு மத்த பிளாக்குகளுக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு போஸ்ட்டை தேத்தி டிராஃப்ட்ல போட்டு, அதுக்கு படங்களைஇணைச்சு...,  நிமிர்ந்து பார்த்தா மணி பணிரெண்டுதான் ஆகியிருக்கும்.

சரி,  ட்விட்டர், மூஞ்சி புத்தகத்துலலாம் போய் அரட்டை அடிக்கலாம்ன்னு போய் பார்த்தா எல்லாரும், அன்னிக்குன்னு பார்த்து  சின்சியரா வேலை பார்க்க போய்ட்டு இருப்பாங்க. நம்மை சுத்தி எல்லாருமே வேலை(ஆபீஸ் வேலை) பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்குதான் ஆபீஸ் வேலை செஞ்சு பழக்கம் இல்லியே. அதனால, நமக்கு போரடிக்கும், அதுமில்லாம நம்மளையே மேனேஜர் உத்து பார்க்குற மாதிரி நமக்கு தோணும்.

அதனால, நாம தீயா?! வேலை செய்றோம்ன்னு சீன் போட்டாகனுமே, அதுக்குதான் சில டிப்ஸ்..., டிரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் என்னன்னு  சொல்லுங்க...   1. உங்க மானிட்டரில முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ இல்ல  கோடையோ (code) திறந்து வச்சுட்டு..., ஏதையோ  யோசிக்குற மாதிரி,  அதையே பார்த்துக்கிட்டு இருங்க . பார்க்குறவங்கலாம்  நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

2. அடிக்கடி நெத்தியை சொறிஞ்சுக்கோங்க. . எப்ப பார்த்தாலும்னெத்தியை சொறிஞ்சுக்கிட்டு இருந்தாலும் சந்தேகம் வந்துடும். அதனால, கொஞ்சம் மாத்தி  பல்லை(உங்க)  கடிச்சுக்கோங்க.  ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செஞ்சுட்டு யோசிக்குற மாதிரி  பாவ்லா காட்டுங்க.

3. கம்ப்யூட்டர் மவுஸையூஸ் பண்ணாம  கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை யூஸ் பண்ணா பிஸியா, வேகமாக வேலை செய்ற மாதிரி தோணும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைச்சுக்கிட்டும்,  வெறிச்சிக்கிட்டும் பாருங்க. கூடவே நகத்தையும் கடிங்க.

.5. சீட்டுல சாய்ஞ்சு  உட்காராம முன்னால இழுத்து விட்டு, சில நிமிசங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிங்க.

6. அப்பப்போ பேப்பர் ஃபைல்களை கலைச்சு விட்டு பெருமூச்சு விடுங்க. நீங்க முக்கியமான பேப்பர் எதையோ தேடுறீங்கன்னு  நினைச்சுக்குவாங்க. கடைசியில எதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." இல்லைன்னா  "சக்சஸ்" ன்னு  சொல்லுங்க.

7. எங்காவது எழுந்து போகும்போது,  வேகமாக நடந்து போங்க. ஏதோ முக்கியமான விஷயத்துக்காக நீங்க  போறீங்கன்னு  மத்தவங்க  நினைச்சுக்குவாங்க.

8. உங்க கைகளை பிசைஞ்சுக்கோங்க. , கைவிரல்கள்ல சொடக்கு எடுத்துக்கோங்க . அப்பப்போ டென்ஷனா டேபிளில் ஒரு தட்டு தட்டுங்க.

9. உங்க மானிட்டருக்கு பகக்த்துல,   எப்பவும் ஒரு நோட்டையும்,பேனாவையும் திறந்தே வையுங்க. அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை, நம்பர்களையும் கிறுக்கிக்கிட்டிருங்க.

10. ஆபீசுக்குள்ள எங்கே போறதாயிருந்தாலும் கையில ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போங்க. நீங்க முக்கியமான மீட்டிங்குக்கோ, இல்ல  ஹிண்ட்ஸ் எடுக்கவோ போறீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

11. ஆபீஸில் நடந்து போகும்போது எதிர்க்க வர்றவங்க  சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாம போங்க. அப்பதான் நீங்க டென்ஷனா வேலை செய்யுறதா நினைச்சுக்குவாங்க. அப்புறமா அவங்ககிட்ட போய் பிஸியாக இருந்தேன், ஸாரி ன்னு  சொல்லிக்கலாம்.

12. சரியாக காபி வர்ற நேரத்துல எங்காவது எழுந்து போய்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து  காபி கேளுங்க. மீட்டிங் போயிருந்தேன், ஃபைல் தேடினேன்னு புருடா விடுங்க.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நாலு இல்லை அஞ்சு அப்ளிகேஷன்களையோ இல்ல பைல்களையோ திறந்து வெச்சுக்கோங்க. அப்பப்போ  அதையெல்லாம்  ஓபன் செஞ்சு,  குளோஸ் செஞ்சு, மாத்திக்கிட்டே இருங்க. 

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கிட்டிருங்க. சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு  குறுக்கும் நெடுக்கும் நடங்க.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயா  இருந்தா (உங்களைப் போலவே வெட்டியா இருக்குற) உங்க டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்க. போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டுட்டு வாங்க.

16. முதல்ல  வர்ற  காபியைக்குடிக்காதீங்க. அப்படியே ஆற விடுங்க. மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிங்க. கொஞ்சம் பிஸியா இருந்ததால காபி குடிக்க முடியவிலைன்னு  (மற்றவர் காதில் விழும்படி) சத்தமா  சொல்லுங்க.17. இதையெல்லாத்தையும் மீறி உண்மையாவே ஏதாவது ஆபீஸ் வேலை செய்ஞ்சுட்டா?!  அதை மத்தவங்ககிட்ட  சந்தோஷமா சொல்லுங்க.. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா,   நமக்காக யார் பேசுவாங்க!?

டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.

54 comments:

 1. டிப்ஸ் எல்லாம் நல்லாயிருக்கே ... ஆண்டவா. மனேஜர் இதையெல்லாம் வாசிச்சிடக்கூடாது. :) :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஆல்ரெடி அவர் படிச்சுட்டாராம்

   Delete
 2. ஹா....ஹா....நல்ல நல்ல டிப்ஸ் கொடுத்த சகோதரிக்கு பாராட்டுக்கள்....
  (த.ம. 1)

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சகோ

   Delete
 3. ஆபீஸல என்னலாம் பண்றேன் நான்னு கேட்டு என்கிட்ட பேட்டி எடுத்தப்ப இப்படி எல்லாத்தையும் பப்ளிஷ் பண்ணப் போறேன்னு சொல்லவே இல்லையே தங்கச்சி...?

  ReplyDelete
  Replies
  1. அண்ணாக்கிட்ட இந்த தங்கச்சி பர்மிஷன் வாங்கனுமான்னு நினைச்சேன் சாரிண்ணா.

   Delete
 4. ஆஹா ஆஹா நல்ல ஐடியா ஆனால் நம் வேலையில் இப்படி இருக்க முடியாது ராஜி அக்காள் ஹீ

  ReplyDelete
  Replies
  1. சாரி சகோ. உங்க வேலை என்னன்னு சொன்னா அடுத்த பதிவுல அதுக்கு தகுந்த மாதிரி டிப்ஸ் குடுக்குறேன்.

   Delete
 5. ஆபிஸ் போறவங்களுக்கு மட்டும்தான் டிப்ஸா.என்னைப்போல வீட்டுல இருக்கறவங்களுக்கு இல்லையா..

  ReplyDelete
 6. ”அண்ணியோட பார்வையில” இருக்கும்போது நீங்க டிமிக்கிலாம் குடுக்க முடியாது சகோ

  ReplyDelete
 7. அட்டகாசமான டிப்ஸ்! பகிர்வுக்கு நன்றி!ஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கு நன்றி

   Delete
 8. நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாத்தையும் ஃப்லோ பண்ணுறதை விட வேலை செய்றது மிக எளிதாக இருக்கும் போல . இது வேணா நம்ம கவர்மெண்ட் ஆபீசுக்கு சரியா வரும்

  ReplyDelete
  Replies
  1. அப்போ ஆஃபீஸ்ல, ஆஃபீஸ் வேலை செய்யுறதே ஈசின்னு சொல்றீங்களா? அப்போ நீங்க ஆஃபீஸ்ல அஃபீஸ் வேலையைதான் பார்க்குறீங்களா? உங்களை போல ஆளுங்களுக்குதான் இந்த பதிவு சகோ

   Delete
 9. பதிவர்களுக்கு நல்ல டிப்ஸ்தாங்க சகோ...

  (அனேகமாக எல்லாரும் இப்படித்தான் செய்றாங்கன்னு நினைக்கிறேன். உண்மையை எல்லாம் இப்படியா வெட்ட வெளிச்சம் ஆக்குறது...)

  ReplyDelete
  Replies
  1. சாரிங்க இனி இதுப்போல உண்மைலாம் பதிவிட மாட்டேன்.

   Delete
 10. பக்கத்தில இருந்து என்னை பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க... -:)

  ReplyDelete
  Replies
  1. அதுக்குலாம் ஸ்பை வெச்சிருக்கோமாக்கும்.

   Delete
 11. டிப்ஸ் எல்லாம் சூப்பர் அக்கா.

  ReplyDelete
 12. ஓஹோ..இப்படிதான் நீங்க போஸ்ட் போடறீங்களா...?

  ReplyDelete
  Replies
  1. அது சீக்ரெட். யார்கிட்டயும் சொல்ல மாட்டேனாக்கும்.

   Delete
 13. அட சூப்பரான யோசனையாய் இருக்கே
  நிச்சய்ம் இது அனைவருக்கும் பயன்படும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் பயன்படுமா ஐயா? அப்படின்னா இடுப்போல் பயனுள்ள பதிவுகளை இனி அடிக்கடி போடுறேன்.

   Delete
 14. அட நல்ல டிப்சுங்கோ

  ReplyDelete
 15. இதைத்தான் நான் ரெண்டு வருசமா செஞ்சுகிட்டு இருக்கேன்!

  என்ன ஒன்னு...இந்த டயத்துக்கு ஆபிஸ் போறதுதான் நமக்கு எப்போதும் பிரச்சனை! நம்ம ஒரு உயர் அதிகாரியா (ஆமா மூணு ஃபுளோர் உயரம்) இருக்குறதுனால யாரும் கேக்குரதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஓ ஓ அப்பிடிங்களா? அப்படின்னா இன்னும் சூப்பர் டிப்ஸ் உங்க அனுபவத்துல பதிவா போடுங்க சகோ.

   Delete
 16. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா......அருவாளையும் காணலை மம்பட்டியையும் காணலை.....பக்கத்துல மலை ஏதும் இருக்கா போயி குதிக்கலாம்னு இருக்கேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா இதுக்கே மலைன்னா, இனி வரப்போற பதிவுகளுக்கு அண்ணா என்ன பண்ணுவாரு??

   Delete
 17. அலுவலகப் பணியாளர்களுக்கு நல்ல
  டிப்ஸ் தான்...

  ReplyDelete
 18. நாளையில இருந்து பயன்படுத்தல் தொடங்கும்..ஹிஹி !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா எனக்கு ராயல்டி வந்தாகனும் சகோ

   Delete
 19. ஆண்டவா இந்த ஆக்கத்தைப் பார்த்து கருத்திட்ட பதிவர்கள் நம்ம
  ஆபீசுப் பக்கம் வரக்கூடாது....:) (கண்டாத்தான் நடிப்பென்று
  தெரிந்து விடுமே :) ........) தொடர வாழ்த்துக்கள் சகோதரி
  அருமையான ரிப்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆபீசு பக்கம் வராம பார்த்துக்குறேன். அதுக்கு என் அக்கவுண்டை பலமா பார்த்துக்கோங்க சகோ

   Delete
 20. வீட்டில் பெண்கள் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? முன்னணி தமிழ்மண பெண் பதிவர்களுக்கு பதிவர்களுக்கு டிப்ஸ்! - என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்!
  உங்கள் ஆசீர்வாதம் உண்டா?
  BTW, Congrats for reaching top ten!

  ReplyDelete
  Replies
  1. பதிவை போடுங்க யூஸ் ஆகுதான்னு பார்க்கலாம். வாழ்த்துக்கு தேங்க்ஸ்

   Delete
 21. ippadiyumaa nadakkuthu...

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமேலயும் நடக்குதுங்கோ

   Delete
 22. சகோ, ம்.....டிப்ஸ்.....எதோ ஆபிஸ் போய் எதோ வேலை பார்த்து...எதோ கொஞ்சம் போஸ்ட் தேத்தி.....எதோ சம்பளம் வாங்கி......என்ன ஒரு வெறி....உங்க டிப்ஸ்க்கு நன்னி

  ReplyDelete
 23. கணவர் சொன்னதை மனைவி முதல் முறையாக கேட்டு பதிவு போட்டிருக்கார் போல ;-0

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா இப்ப மட்டும் கேட்டுட்டோமாக்கும்.

   Delete
 24. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா, நமக்காக யார் பேசுவாங்க!?

  பாராட்டுக்கள் !!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி தேங்க்சுங்க

   Delete
 25. எவ்ளோ ஐடியா... எங்க கத்துக்கிட்டீங்க? ஆனாலும் நல்ல டிப்ஸ்தான். நெத்தி, கன்னம், நகம் இதையெல்லாம் மாத்தி மாத்தி சொறிஞ்சு புண்ணாயிடக்கூடாது. சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. சிரிச்சதுக்கு நன்றிங்க சகோ

   Delete
 26. நல்ல டிப்ஸ் பின்பற்றுகிறேன்....

  ReplyDelete
 27. இதெல்லாம் நமக்குதவாது சகோ... அலுவலகத்தில் நெட் கனெக்‌ஷனே ஒரே ஒரு சிஸ்டத்தில் மட்டும்தான்... அதிலும் ஆயிரத்தெட்டு பாதுகாப்பு! :) அதனால உபயோகுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete