Showing posts with label முகப்பூச்சு. Show all posts
Showing posts with label முகப்பூச்சு. Show all posts

Saturday, June 14, 2014

சில நிமிடதொடுதல் சுகத்துக்காய் ஏங்குபவர்களா பெண்கள்!? - கேபிள் கலாட்டா

வசந்த் தொலைக்காட்சியில் சனிகிழமை இரவு 9 மணிக்கு  “மண் பேசும் சரித்திரம்”ன்ற  நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதில் அழிந்து வரும் கோட்டைகள், வரலாற்று நாயகர்களின் கல்லறைகள், கடலுக்குள் புதைந்து போன நகரங்கள் போன்றவற்றை உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட இடங்களுக்கே நேரடியாக சென்று ஒளிபரப்பவுது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.  கூடவே ஆராய்ச்சியாளர்களின் வாயிலாகவே இந்நிகழ்ச்சியை தொடர்வது இன்னும் சிறப்பு. குடும்பத்தோடு  விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. 

ஞாயிறுதோறும் காலைல ஒளிப்பரப்பாகும் ”சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!” நிகழ்ச்சி ஆரம்பத்துல நல்லாதான் இருந்துச்சு. இப்ப இதுவும் சொல்லிக் கொடுத்து பேசுறாங்களோன்னு சந்தேகப்படுற மாதிரி இருக்கு நிகழ்ச்சிகள். ”நவரசம்”ன்னா என்னன்னு ஒரு 12வது படிக்கும்  பெண்ணை கேட்டால் எலுமிச்சை, உப்பு, புளி, தக்காளி, சீரகம், மிளகு போன்ற 9 பொருட்களை போட்டு செய்யுறதால அதுக்கு நவரசம்ன்னு பேர் வந்துச்சுன்னு சொல்லுது அந்த பக்கி. அந்த நிகழ்ச்சி ஷூட் பண்ணும்போது நானிருந்தால் ஓங்கி ஒரு அப்பு அப்பி இருப்பேன்.

அது ஒரு முகப்பூச்சு விளம்பரம். ஒரு பொண்ணு தனியாய் கூடை பந்து விளையாடிக்கிட்டு இருக்கும். அந்த வழியா போகும் ஒரு ஆண் பிள்ளை வந்து நான் சொல்லித்தரவான்னு கேட்பான். உடனே அந்தப் பொண்ணு ஓக்கே சொல்லும். அந்தப் பொண்ணை தொட்டு, தடவி விளையாடச் சொல்லிக் கொடுப்பான். அந்தப் பொண்ணும் அதை ரசிக்கும். சில நிமிடங்களில் அந்தப் பொண்ணோட தோழிகள் வந்து கூடப்பந்து விளையாட்டில் பதக்கம் வாங்கினதை சொல்லி வாழ்த்துவாங்க. அந்த பையன் அசடு வழிஞ்சி நிப்பான். சில நிமிட தொடுதல் சுகத்துக்காக யாரா இருந்தாலும் பெண்கள் ஓக்கே சொல்லிடுவாங்கன்ற ரீதியில் இந்த விளம்பரம் வருது. இதை ஏன் யாரும் கண்டிக்கலை!!??
பெண்கள்ன்னாலே புரணி பேசுறதும், சீரியல் பார்த்து பொழுது போக்குறது மட்டும்தான்ற மாயை எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனா, மக்கள் டிவில நாட்டுப்புற பாடலோடு அன்றாட நிகழ்ச்சிகளை அலசுறாங்க ராம.கவுசல்யா, மதுவந்தி, ஐஸ்வர்யா. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30க்கு மக்கள் டிவில் ஒளிப்பரப்பாகுது. சமையல், அரசியல் தொடங்கி இலக்கியம் வரை எல்லா தலைப்புலயும் பேசுறாங்க.


தந்தி டிவியில் திங்கள் முதல் வெள்லி வரை காலை 8  மணிக்கு ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் “‘மெய்ப்பொருள் காண்பது அறிவு.’.  தினமும் நியூஸ் பேப்பர்ல வரும் செய்திகளை சமூக சிந்தனையோடு அலசும் இந்த நிகழ்ச்சியில், அரசியல் முதல் ஆர்ப்பாட்டங்கள் வரை அனைத்தும் பேசறாங்க.  நடுநிலையோடு செய்தித் தாள்களில் இடம் பிடித்துள்ள செய்திகளை பட்டியலிடும் இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு. சமூக சீர்கேடுகளை  அரங்கத்தில் விவாதிப்பதோடு அதற்கான தீர்வுகள் பிறக்கவும் வழி செய்றாங்க.. மொத்தத்தில் ஆராய்ந்து தருவதில் இந்த விவாதம் ஆரோக்கியமானதாகவே இருக்கு. 

கேபிள் கலாட்டா தொடரும்....,