Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts
Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts

Wednesday, June 04, 2014

சென்னை மெட்ரோ ரயில் -மௌனச்சாட்சிகள்

கோடை விடுமுறைக்காக சிங்கார சென்னை போய் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில இறங்கும்போது எல்லோரும் கூட்டமா நின்னு எதையோ பார்த்துக்கிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னதான் இன்னிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி இருந்தாலும், கழைக்கூத்தாடி முன்னாடி நின்னு கைத்தட்டுன பரம்பரைதானே நம்முதுன்னு ஒரு படத்துல விவேக் சொல்வார். வேடிக்கப் பார்க்குறது நம்ம ரத்தத்துலயே ஊறினது. கூடவே பிளாக்கரா வேற இருக்கேன். என்ன ஏதுன்னு அலசி ஆராய்ஞ்சுப் பார்த்து பதவு தேத்தலாமேன்னு கூட்டத்துக்குள் புகுந்தேன்.


அங்க, ”கூண்டுகுள்ளே உன்னை வச்சு கூடி நின்ன ஊரை விட்டு கூண்டுக்குள்ளே போனதென்ன சோலைக்கிளியே!!ன்னு நம்ம கேப்டன் பாடாமயே ஒரு கூண்டுக்குள்ளே மெட்ரோ ரயில் எஞ்சினை  பொதுமக்கள் பார்வைக்காக வச்சு இருக்கிறாங்க.



ஆஹா! பதிவு தேத்த நல்ல சான்ஸ் கொடுத்தே ஆண்டவா!ன்னு நினைச்சுக்கிட்டு உடனே படமெடுத்திக்கிட்டு அதுபத்தின தகவல்களை திரட்டினேன்.  டெல்லியில் இதுப்போல ”மெட்ரோ ரயில்” ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கியது. அதனால மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையிலும் ”மெட்ரோ ரயில்” தொடங்க அப்பொழுது ஆளும் கட்சியில் இருந்த அரசு திட்டமிட்டு   2007 ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்.

இந்த மெட்ரோ ரயில் பறக்கும் ரயிலாக மாடியிலும், சுரங்க ரயில் பாதையாக மண்ணுக்கடியிலும் கட்டப்படுகிறது. 10 ஜூன் 2009 அன்று கோயம்பேடு அசோக் நகர் இடையே கட்டுமானப்பணி தொடங்கியது. சுரங்கபாதை ரயில் வழித்தடத்திற்காக சீனாவிலிருந்து  மண்ணுக்கடியில் துளையிடும் 12 மெசின்கள் வாங்கப்பட்டு, 28 ஜூலை 2012ல் நேரு பார்க்கிலிருந்து தொடங்கப்பட்டது. இந்த சுரங்க பாதை இணையான இரண்டு பாதைகள் தரைமட்டத்திலிருந்து 9 மீட்டரில் ஆரம்பித்து 20 மீட்டர் ஆழத்தில் 37 மீட்டர் நீளத்தில் செல்லும்.



ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரை 23கிலோமீட்டர் தூரம். இரண்டாம் வழித்தடம் சென்ட்ரல் முதல் புனித தோமையார் மலை (செயின்ட்தாமஸ் மவுன்ட்) வரை 21.9 கிலோ மீட்டர் தூரம். மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட ரயில்பெட்டி தொடர் பிரேசில் நாட்டிலும்மீதமுள்ளவை ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள பிரேஸில் நிறுவன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரேஸிலில் தயாரான ஒரு ரயில்பெட்டி தொடர் (06.11.2013) சென்னையில் 800 மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.


பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்டுள்ள இந்த ரயிலின் சிறப்பம்சங்கள்:

1) அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.
2) ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஓட்டுனர் அறையில் ஒளிபரப்பாகும்.
3) ரயில் பெட்டியின் வெளிப்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
4) பயணிகள் உட்காரும் இடங்களின் அருகே ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கும்.
5) ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் நிலையத்தின் பெயர் அறிவிக்கப்படும்.
6) நிலையத்தின் பெயர் ரயிலுக்குள் இருக்கும் திரையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிவிக்கப்படும்.
7)அவசர அழைப்புகளுக்கு பயணிகள் பகுதியில் பிரத்யேக தொலைப்பேசி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
8) பெண்கள் மற்றும் முதல்வகுப்பு பெட்டிகள் ஓட்டுனர் இருக்கைக்கு அருகே இருக்கும்.
9) மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுக்கு தனி வசதி உண்டு.

இது, தரைக்கு மேலே பாலத்தின் வழியே பறக்கும் ரயிலாக செல்லும் வழித்தடத்தையும், மண்ணுக்கு அடியில் சுரங்க ரயில் பாதையாக செல்லும் வழித்தடத்தையும் காட்டும் வரைபடம்.  இது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வடபழனி,  வள்ளுவர் கோட்டம், ஆற்காட்ரோடு, ஜெமினி ஃப்ளைஓவர், ராதாகிருஷ்ணன் சாலை, சோழ சர்ட்டன் வழியாக ஸ்மித்ரோடு, போலீஸ் கோர்டேர்ஸ் வரைக்கும் முதல் கட்டமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில அப்பப்ப வெள்ளோட்டம் பார்க்கிறாங்க. நான்  சென்னை சென்ற சமயம் எல்லா ரயில் பெட்டிகளையும் இணைத்து மெதுவாக ஓட்டிக்கொண்டு வெள்ளோட்டம் பார்த்தார்கள் உடனே என்னுடைய மொபைல் கேமராவில் கிளிக்கிட்டேன். அதை பார்க்கும் போது நமது சிங்கார சென்னையின் வளர்ச்சி நன்றாக தெரிந்தது. அறிவியல் வளர்ச்சியினால் சென்னையில் எவ்வுளவு மாற்றங்கள்!!??

மீண்டும் சந்திப்போம்......,