Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Thursday, August 01, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு


 வீட்டு வரவு செலவு கணக்கை என் மக தூயாக்கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணுவார் என் அப்பா.  ஆனா, என்னை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்க.  வூட்டுக்காரரோட ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் நம்பர் என் பையனுக்கு கூட தெரியும், ஆனா, எனக்கு தெரியும். நானா எதையாவது சமைக்க போனாலும் அதெல்லாம் வேணாம் இன்னிக்கு இட்லியும் ,  புதினா சட்னி மட்டும் செஞ்சுடு போதும்ன்னு அம்மா சொல்லுவாங்க. ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட போனா, நீ போடாதேம்மா, உன் அம்மாக்கு என்ன தெரியும்ன்னு அவங்ககிட்ட வாங்கி வந்திருக்கேன்னு மிஸ் திட்டுவாங்க. அதனால, அப்பா இல்ல தாத்தா  போடட்டும்ன்னு சொல்லிடுவாங்க என் புத்திர சிகாமணிகள்.

இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மதிக்காத என்னை திண்டுக்கல் தனபாலன் அண்ணா தன் முதல் பதிவின் சந்தோசம் ன்ற  தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். அவர் மரியாதைக்கு பதில் மரியாதை செஞ்ச மாதிரியும் ஆச்சு. ஒரு பதிவு தேத்துனது மாதிரியும் ஆச்சுன்னு எழுத ஆரம்பிச்சாச்சு!!

எப்பவாவது எல்லாரும் யாராவது கவன மறதியா கவனிக்காத பேப்பரும், பேனாவும் கிடைச்சா எதாவது கிறுக்க ஆரம்பிச்சுடுவேன். அதை படிச்ச என் ஃப்ரெண்ட் நல்லா இருக்கே!! இதை என் பிளாக்குல போடுறேன்னு சொல்லி அடிக்கடி போடுவாங்க. அப்புறம், என் கவிதைக்காக  தனியா பிளாக் ஓப்பன் பண்ணி பதிவு போட்டு வந்தாங்க.


அப்போதான், கம்ப்யூட்டர் பழக கிளாசுக்கு போனேன். கிளாசுல தினமலர் மட்டும் படிக்க அனுமதி உண்டு.  .சார் இல்லாத டைம்ல என் கவிதைகள் வந்த பிளாக்குக்கு போய் வருவேன்.  ஒரு பிளாக் ஓப்பன் பண்ணனும்ன்னு நினைச்சு என் ஃப்ரெண்டு கிட்ட கூட உதவி கேக்காம, இந்த  பிளாக்கை ஆரம்பிச்சு ஒரு  கவிதையை போட்டுட்டு என் ஃப்ரெண்டுக்கு உடனே மெசேஜ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

என்ன ஆச்சோ!? சரியா வந்ததா?!ன்னு குழப்பத்துலயே மறுநாள் கிளாசுக்கு போனா அங்க சார் இருந்தார்.  புதுசா கல்யாணம் ஆன ஜோடிலாம் ஆடி மாசம் தொடங்குறதுக்கு முன் ஒரு வாரம் எப்படி பிரியாம இருப்பாங்களோ அதுப்போல கம்ப்யூட்டர் செண்டரை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் நகரலை.  இப்படியே ரெண்டு நாள் போச்சு. மூணாவது நாளும் வந்து தன் சீட்டுல உக்காந்து கண்ணுல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கிளாசை பார்த்துக்கிட்டு இருந்தார்.

திடீர்ன்னு ஒரு போன்கால். ஒரு பத்து வருசத்துக்கு முந்தி ஆடி மாசம் பிரிஞ்சிருக்குற புருசனை, ஆஃபீஸ் ஹவர்ஸ்ல, ஆஃபீஸ் போன்ல   புது பொண்டாட்டி கூப்பிட்டா எப்படி பம்மிக்கிட்டு பேசுவாரோ அதுப்போல ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்னு சொல்லி வெளில போய்ட்டார்.

எல்லாரும் அவ்சர அவசரமா விஜய் போட்டோ கேலரியை பார்க்குறதும், சூர்யா கல்யாண ஆல்பத்தை பார்க்குறதும், அஜீத் பொண்ணை பார்க்குறதுமா பிசியா இருந்தாங்க. நான் பட்டுன்னு என் பிளாக்கை தட்டி பார்த்தா என் ஃப்ரெண்ட் ஆதிரை ”இத்தனையும் நீயே செய்து கவிதை எழுதியது மகிழ்ச்சியா இருக்கு”ன்னு கமெண்ட் போட்டுட்டு போய்ட்டாங்க.   அதை பார்த்ததும் ஆவணி மாசம் முதல் சந்தோசப்படுற புது ஜோடி மாதிரி விசில் அடிக்காத குறை.

அப்புறமும், ரொம்ப நாளைக்கு என் பதிவுல ஆதிரை மட்டும்தான் கருத்து சொல்லுவாங்க. அடுத்து “சிரிப்பு போலீஸ்” ரமேஷ் வந்து கருத்து சொன்னதோடு கமெண்ட் மாட்ரேஷன் வைக்காதீங்க. கண்ணை கட்டுதுன்னு  ஒரு அட்வைஸ் சொல்லிட்டு போனார்.  அங்க ஆரம்பிச்சு, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன், வெறும்பய, வசந்த், பன்னிக்குட்டி ராமசாமி, அருண்பிரசாத், சிபி சார், நாஞ்சில் மனோ அண்ணா, தமிழ்வாசி பிரகாஷ், சௌந்தர், கருண், மதுரை தமிழன், நண்டு நொரண்டு, விக்கியண்ணா, ராஜா, கோவை நேரம் ஜீவா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கணேஷ் அண்ணா, மோகன் உமார் அண்ணா, மதுமதி, ரமணி ஐயா, சென்னைப்பித்தன் ஐயா! கோமதி அரசு, கூடல் பாலா,  கண்ணதாசன், சக்கரை கட்டி, ராஜேஸ்வரி அம்மா, வெங்கட் நாகராஜ், கீதமஞ்சரி, விச்சு, சசி, அருணா, ரூபிகா, எழில்,  சங்கவின்னு பயணப்பட்டு,  ஜீவன் சுப்பு, கோவை ஆவி,  ரூபக் குமார்  ராஜலட்சுமி பரமசிவம்,    டி.ஆர்.பி ஜோசப்,   வரை வந்து நிக்குது.

 என் முதல் பதிவான  தாயுமான சுவாமி கடவுள்  படிச்சு பாருங்க. என்ன காரணம்ன்னு தெரியலை. தோழி ஆதிரையோட கருத்து காணோம்.  நான் போடுற மொக்கைகளுக்கு தவறாம வந்து போகும் அனைத்து சகோக்களுக்கும்  கோடானு கோடி நன்றிகளை இந்த சமயத்துல சொல்லிக்குறேன்.

தொடர்பதிவுன்னா யாரையாவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாம் இல்லாட்டி ரம்யா கிருஷ்ணன் சாரி பாதாள பைரவி நைட்டு கனவுல வந்து கண்ணை குத்திடுமாம். அதனால,

“கனவு மெய்ப்பட வேண்டும்” ரூபக்ராம்!

Thursday, July 04, 2013

”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்டும் ஒரு திருவிளையாடல் ”

 ஐயோ! ஐயோ! நான் என்ன பண்ணுவேன்?! என்ன பண்ணுவேன்?! யாரை கேப்பேன்?! ஒண்ணா!? ரெண்டா?! ஐநூறு ரூபாயாச்சே?! இந்த நேரம் பார்த்து எனக்கு எழுத வர்ல்லே! எழுத வர்ல்லே! என் பிளாக்குல குப்பையை கொட்டுறதுக்கே முடியலை இதுல போட்டிக்குலாம் ஏன் பேர் குடுக்கனும்?! எனக்கில்ல, எனக்கில்ல, வேற யாரோ! வேற யாரோ! பரிசை அடிச்சுட்டு போகப்போறங்க... சொக்கா! சீனு கேட்ட லெட்டர் எழுதி அந்த ஐநூறு ரூபாயையும் எனக்கே கிடைக்குற மாதிரி அருள் புரிய கூடாதா?! எல்லாரும் எழுதி அனுப்பிட்டாங்க. கடைசி தேதி இந்த மாசம் 20ம் தேதி ஆச்சே! இன்னும் ஒரு வார்த்தையும் சிக்கலியே!! வேணும் வேணும் எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும், காலம் போன காலத்துல இந்த காதல், கடிதம், போட்டிலாம் தேவையா?!

அன்பே! ஆருயிரே!ன்னு ஆரம்பிக்கலாம்னா ஓல்டா இருக்குன்னு சொல்லி ஓட்டுவாங்க, அழகான ராட்சசின்னு ஆரம்பிக்கலாம்ன்னா! முதல்வன படத்திலிருந்து சுட்டுட்டேன்னு கிண்டல் அடிப்பாங்க, முரட்டு பிசாசு, ஆசை புயல்ன்னு ஆரம்பிக்கலாம்ன்னா எல்லா வார்த்தையையும் நம்மாளுங்க யூஸ் பண்ணி கடிதத்தை அனுப்பிட்டாங்க..., என்ன செய்வேன்! எங்க தேடுவேன்!?

ராஜி!

யாருங்க?!

”நாந்தான் கூப்பிட்டேன்” 

ஏன் கூப்பிட்டீங்க? நீங்க யாரு?!

லவ் லெட்டரு, மொக்கை ஜோக்கு, காதல் கவிதை, கடை, தகவல்கள், ஆன்மிகம், நட்பு கவிதை, புனைவுன்னு கலந்து கட்டி தரும் கூகுள் நான்..

இந்த பிளாக்குல காதல் கடிதம் எழுதுற போட்டின்னு போட்டதை நீயும் படிச்சுட்டியா?! என் வயித்துல அடிக்குறதுக்குன்னே வந்திருக்கியா நீ?! 

”திடங்கொண்டு போராடு” சீனு கேட்ட கடிதம் உனக்கு கிடைத்தால் பரிசு உனக்கே கிடைக்கும்தானே!

ஐய்ஹோ! ஐய்ஹோ! அந்த லெட்டர் மட்டும் கிடைச்சுட்டா! அடுத்த செக்கண்ட் என் கையில ஐநூறு ரூபா இருக்கும்!

கவலைப்படாத, அந்த லெட்டரை நான் தரேன்.

இன்னாது, லெட்டரா?! நீயா?! சொந்தமா எழுதுனாலே அங்க பார்த்தேன், இங்க படிச்சேன்னு கிண்டல் அடிக்கவே ஒருத்தர் அமெரிக்காவுல லேப்டாப் வாங்கி உக்காந்திருக்கார். இருந்தாலும், பதிவர்ன்னு போனா போகுதுன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அதையும் கெடுக்கலாம்ன்னு பார்க்குறியா?! நீ எழுதுறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்ன்னா நீயே மெயில் தட்டேன்.. அதான் நீ எப்படி குடுப்பே! கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிப்பாங்கன்னு பயம் உனக்கு. அதான் என் தலையில் கட்டப் பார்க்குறே?!

என் திறமை மீது உனக்கு டவுட் இருந்தா, என்னை டெஸ்ட் பண்ணி பாரேன், உனக்கு டேலண்ட் இருந்தா?!

இன்னாது, என்கிட்ட, என்கிட்டயே மோதப் பார்க்குறியா?! படிக்க சுமாரா இருந்தாலும் அதையும்!? நல்லா இருக்குன்னு சொல்ல ஒரு கூட்டத்தை சேர்த்து வச்சிருக்கேன். என்னை பத்தி தெரியாது உனக்கு.., ரெடியா  இரு.

ம்ம் கேள்விகளை நீ கேக்குறியா?! இல்ல நான் கேக்கட்டுமா?!

ஆங்.., நீ கேட்காத, நானே கேக்குறேன். எனக்கு கேக்கதான் தெரியும். அப்போதான் பதில் தெரியலைன்னாலும் சமாளிச்சுக்கலாம்.

பிரிக்க கூடாதது என்னவோ!? பதிவும்,  கலகலப்பும்,
பிரியக்கூடாதது என்னவோ?! சொந்த சரக்கும், ஓவர் பில்டப்பும்,
சேர்ந்தே இருப்பது?! கமெண்டும், சண்டையும்
சேராதிருப்பது?! உன் பிளாக்கும், உபயோகமான பதிவும், 
ம்ஹ்ம், ம்ஹ்ம், சொல்லக்கூடாதது?! பிளாக்குல உண்மையான விவரம்,
சொல்லக்கூடியது?! பிளாக்குல கற்பனைக் கதை,
பார்க்கக்கூடாதது?! பதிவு போட நேரம், காலம்,
பார்த்து ரசிப்பது?! கமெண்டுல செல்ல சண்டை,
பிளாக் என்பது?! கொஞ்சம் உன்மை, நிறைய பொய்,
பாட்டுக்கு?! “தென்றல்” சசிகலா?!
நாட்டு நடப்புக்கு?! ”வேடந்தாங்கல்” கருண்
வடநாட்டு பதிவுக்கு?! சகோ.”வெங்கட் நாகராஜ்”,
சாப்பாட்டு பதிவுக்கு?!   ”கோவை நேரம்” ஜீவா,
மொக்கைக்கு?! உன் பிளாக்,
என்னையே கலாய்க்க!? அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன்,

 ஐயா! ஆளை விடு!? நீர்தான் கூகுள், எங்கே அந்த லெட்டர்?! குடு அப்படியே மெயில் தட்டி விடுறேன். கிடைக்கும் பரிசை நெட் கார்டு போட்டுடுறேன்.  

ம்ம்ம்ம், இந்தா கடிதம், 
கலர் ஜெராக்ஸ் எடுத்த கருங்குரங்கே...,
ரொம்ப நாளாய் ஏங்கி, தவித்து, உருகி, அந்தா இந்தான்னு ஒரு வழியா உன் மீதான என் காதலை சொல்ல ஒரு காதல் கடிதம் எழுதிட்டேன் உனக்கு.., 

 செந்தமிழில் - உனக்கு
கடிதம் எழுதி முடித்த பின்,
ஏற்பட்ட உணர்வுதான்..,
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ? ...........
.
.
.
.
.
.
.
.
 இப்படிக்கு,
உன்  ஆசை ஜில்லு
 




Friday, November 16, 2012

குளிப்பதனால் வரும் நன்மைகளை தெரிஞ்சுக்க வாஙக!!

நாம, டெய்லி குளிப்பதானால, என்னென்ன நன்மைகள்லாம் வருதுன்னு கடைசியா சொல்றேன். அதுக்கு முன்னாடி, நாம குளிக்க யூஸ் பண்ணும் “சோப்”ல இருந்து எவ்வளவு அழகான சிற்பம் கிடைக்குதுன்னு பாருங்க. 











டிஸ்கி:  ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,

1. சோப்ன்னா என்ன? அது எதுக்கு யூஸ் ஆகுது?ன்னு தெரிஞ்சுக்கலாம்!!.

2. சோப் குளிக்க மட்டுமில்ல. இதுப்போல அழகான கலைப்பொருட்கள் செய்யவும் யூஸ் ஆகும்ன்னும் தெரிஞ்சுக்கலாம்!!

3. “ சோப்”னால் இப்படி கலைப் பொருட்கள் செய்யலாம்ன்னு தெரிஞ்சுக்கிட்டா!! அதை வெச்சு ஒரு பதிவை தேத்தலாம்.. இதான் ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,

அடடா! ஏன் இப்படி டென்ஷனாகி கல்லுலாம் தேடுறீங்க..,  எதுவா இருந்தாலும் ”பேசி” தீர்த்துக்கலாம் சகோஸ். மீ பாவம்!!!

Monday, February 13, 2012

ஐயோ சொக்கா! எனக்கே..., எனக்கா?! இந்த விருதும் எனக்கே எனக்கா!?


    
                                                    
                               
  சரக்கை அடிச்ச குரங்கோட  வாலுல பட்டாசை கட்டி கொளுத்தி, அது  ஓடும்போது , கொளவி கொட்டுனா எப்படி அலம்பல் பண்ணுமோ அதுப்போல அலம்பல் பண்றேன்னு எங்க பாட்டி என்னை அடிக்கடி திட்டும் (நீங்க குரங்குன்னு உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சான்னு யாரும் கமெண்ட் போடக்கூடாது. போட்டீங்க, அப்புறம் மூஞ்சில பூரானை விட்டுடுவேனாக்கும்...,)

   புள்ளை படிக்க உதவுமேன்னு எங்க வீட்டு ரங்கமணி கம்ப்யூட்டரும் நெட் கனெக்சனும் வாங்கி குடுத்தாங்க. ஆனால், எனக்கு பொழுது போகாம இருக்கும்போது சும்மா கம்ப்யூட்டரை தூசு தட்டலாமேன்னு போனப்போ என்ன பட்டனுல என் கைப்பட்டுச்சோ தெரியலை.blogger.com ஓப்பன் ஆகிடுச்சு. என்ன இது புதுசா இருக்கேன்னு நோண்டிக்கிட்டு இருந்தேன். ஒரு லிங்க் அழுத்தினேன் படம் வந்துச்சு, அடுத்த லிங்க் அழுத்தினேன் எழுத்து சேர்ந்துச்சு, அடடான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே ஒவ்வொரு  லிங்கா அழுத்தி பார்த்தால் ஒண்ணுல எழுத்து பெரிசாச்சு, இன்னொன்னுல  எழுத்துக்கு கலர் சேர்ந்துச்சு.
                                                 
      ஐ நல்லா இருக்கேன்னு  கீழ இருக்குற publish post ங்குற பட்டனை கிளிக் பண்ணால் என் பதிவு  பப்ளிஷ் ஆச்சு. நான் கிறுக்குனதையும்  மதிச்சு?! ஆதிரைங்குற புண்ணியவதி ஒரு கமெண்டை போட்டு தொலைச்சுட்டாங்க. அப்புறம் அங்கங்கு போய் சுட்டுக்கிட்டு வந்து என் பிளாக்குல பதிவா போட்டேன். இப்படியே பதிவு போட்டுக்கிட்டு இருந்தால் நம்ம கடைக்கு கூட்டம் வராது. அடுத்தவங்க கடைக்கும் போய் வந்தாதான் நம்ம கூட்டம் வரும்ன்னும், பிளாக்குல எந்த டைம்ல போட்டா கூட்டம் வரும்ன்னு சிபி சார் பிளாக்குல படிச்சேன். அவர் பதிவுல சொல்லியிருந்தபடியே நடந்துக்கிட்டதாலே ஏதோ என் கடைக்கும் கூட்டம் வர ஆரம்பிச்சது.

    சும்மா இல்லாம நாஞ்சில் மனோ அண்ணா நான் ரசித்த பதிவுன்னு அவார்டும், மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா   இளம்பதிவர்களுக்கான (நீங்க இளம் பதிவரான்னும் கேட்கப்படாது. எங்க வீட்டுல பூரான் நிறைய இருக்கு..)  Liebster விருதும் குடுத்துட்டங்களா?! பால்காரன் சண்டை போட்டதை பதிவா தேத்தலாமா? இல்ல கீரைக்கார பாட்டிக்கிட்ட டிப்ஸ் கேக்கலாமான்னு பார்க்குறதெல்லாம் பதிவா தேத்த யோசிச்சுக்கிட்டு  இருக்கேன்னு வீட்டுல திட்டுவாங்க.

       இப்போ எரியுற கொள்ளில எண்ணேய் ஊத்தி இன்னும் எரிய வைக்குற மாதிரி  தோழி சாகம்பரி அவர்களும், தம்பி தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் THE VERSATILE BLOGGER AWARD என்னும் விருது கொடுத்துள்ளார். அவர்களுக்கு என் நன்றிகளை சொல்லும் அதே வேளையில் இன்னும் என்னென்னலாம் அக்கப்போர் பண்ண போறேனோ யாருக்கு தெரியும்?!
                            

        இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து தோழி சாகம்பரிக்கு  வழங்கப்பட்டுள்ளது. தோழி சாகம்பரியிடமிருந்து எனக்கும், தம்பி பிரகாஷுக்கும் வழங்கப்பட்டது. தம்பி பிரகாஷ்  எனக்கு கொடுத்துள்ளார்.

     இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

பிடித்த விசயங்கள்:
1.என்  முத்தான மூன்று பிள்ளைகள்,
2. என் பிளாக்,
3. மெல்லிசை பாடல்கள்
4.நண்பர்கள்
5.சுபா, ராஜேஸ்குமார், பி.கே.பி, இந்திரா சௌந்திரராஜன், சாண்டில்யன் போன்றோர்  நாவல்கள், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்கள்

6. ரோஸ்மில்க், லஸ்ஸி
7. கடலலையில் கால் நனைத்தவாறு தனிமையில் இருப்பது

நான் ரசித்த ஐந்து வலைப்பூ எழுத்தாளருக்கு எனக்களித்த விருதை குடுக்கனுமாம்...,

1. தொழில் நுட்ப விஷயங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கேள்விகளை தொகுத்தும், நடிகர்களை தன் ரேஞ்சுக்கு உயர்த்தி?! கலாய்ச்சு பதிவு போடும் ராஜப்பாட்டை ராஜாவுக்கு....,

2. நாம் கேள்விப்பட்டே இராத கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள கண்ணை கவரும் படங்களுடன் பதிவிடும் ராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு...,
3. வயசுக்கு மீறி அமைச்சர்கள், சாதீ, கலைகள் காப்பது, என தன் கோபங்கள் கவிதையாய் கொட்டும் மாலதிக்கு....,
4. சிரிக்கவும், சில நேரம் அநீதிக்காகவும் பதிவும் நாஞ்சில் மனோ அண்ணாவுக்கும்...,
5.உலக வரலாற்றிலேயே கருப்பு கலர்ல இட்லி சுட்டும், பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குறேன்னு டாகடருக்கே பைத்தியம் பிடிக்க வச்சதையும் சிரிக்க பதிவ்டும் அப்பாவி தங்கமணிக்கும் இந்த விருதை கொடுப்பதில் பெருமை கொள்கிறேன்.

டிஸ்கி:  இந்த விருதுகள் வழங்கும் நோக்கம் நாம் ரசிக்கும் நல்ல வலைப்பூக்களை மற்ற வலைப்பூக்கள் எழுத்தாளருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. இந்த விருதால் எனக்களித்தவர்களோ. நானோ, இல்லை நான் அளிக்கப்பட்டவர்களும் தங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை தவிர வேறு எந்த விதமான லாபத்தையும் அடைய போவதில்ல.