Wednesday, July 25, 2012

அம்மாவின் அறிவுரை

சலிச்சு எடுத்த அரிசியை கையில் எடுத்து!!
பாத்திரத்தில்  போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!


முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!


அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!

அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!


வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!

25 comments:

  1. இதுக்குத் தான் அம்மா பேச்சை கேட்கணும்கிறது....
    சாமர்த்தியமாக, லாவகமாக ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள்...
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் லேட்டாதான் புரியுதுண்ணா பெரியவங்க பேச்சை கேட்டு நடக்கனும்ன்னு.

      Delete
    2. ketkanumnu ninathu vittaale-
      ini pozhachukkuvom!

      Delete
  2. லேபிளில், டேக்கில் , அல்லது டைட்டிலில் கவிதை என போடவும், ஹி ஹி அப்போதான் நாங்க நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க உங்க பிளாக்ல காமெடி கும்மி, ஜோக்ஸ்ன்னு போடுறீங்களே அதுப்போலவா சார்? போட்டுட்டா போச்சு.

      Delete
  3. ஜெய்ச்சது சந்தோஷம் அக்கா...

    அழகான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வெற்றியில் சந்தோஷபட்டமைக்கு நன்றி தங்கச்சி

      Delete
  4. எப்படியோ ஜெயிச்சா சரிங்க

    ReplyDelete
  5. வித்தியாசமாக இருக்கிறது அக்கா, அருமையான கவிதை! (TM 4)

    ReplyDelete
  6. அப்புறம்...என்ன பூச்சி மருந்து அடித்து வண்டுகளை கொள்வீர்கள்... தெரியப்படுத்தினால் நாங்களும் முயற்ச்சிப்போம் ஹி ஹி ஹி ஹி!

    ReplyDelete
  7. வண்டுகளுடன்... ஆடுபுலி ஆட்டம் அருமை...

    ReplyDelete
  8. வண்டாட்டம் ஒரே திண்டாட்டம். அவைகளை ஜெயித்ததில் ஒரே கொண்டாட்டம். சூப்பருங்கோ...

    ReplyDelete
  9. ம்ம்ம்ம் அம்மா சொன்ன அறிவுரைகள் பின்நாளில்தான் நமக்கு புரியுது இல்லையா....?

    ஆடுபுலி ஆட்டம் தொடரட்டும்......

    ReplyDelete
  10. //வண்டுக்களுடன் தினமும் !!
    ஒரே போராட்டம் தான் !!
    ஆடு புலி ஆட்டம் தான் !!
    என் பாடு திண்டாட்டம் தான்!!//அருமை...
    அழகான கவிதை...

    ReplyDelete
  11. அனுபவக் கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. அம்மா சொன்ன அறிவுரை மறந்து ஈரக்கையை அரிசியில் வைத்து விட்டாலும் அதனால் வந்த வணடை ஓட்டி ஜெயிப்பது நல்லது தான்.
    கவிதை வருகிறதே!

    ReplyDelete
  13. வெற்றி உங்கள் பக்கம். அப்படித்தானே..

    ReplyDelete
  14. பெரியவர்களின் அறிவுரை
    காலம் கடந்து விளக்கும் உரைக்கும்
    மாபெரும் இதிகாசம் தான்...

    ReplyDelete
  15. அம்மாவாகிய பின்தான் அம்மா சொன்னா அறிவுரை புரிந்ததா?

    ReplyDelete
  16. ஹா ஹா ஹா சுவாரசியம்

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு. அம்மா சொன்னா சும்மாவா? :)

    ReplyDelete