Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Monday, September 23, 2013

அம்மா நலம் - ஐஞ்சுவை அவியல்


கடந்த ரெண்டு வருசமா அம்மாக்கு கால் வலி வர ஆரம்பிச்சுட்டுது. முதலில் லேசான வலியும், நாள்ப்பட நாள்ப்பட வீக்கம், கால் குடைச்சல்ன்னு அவதி பட்டாங்க. முழங்காலில் சில இடத்தில் ரத்த குழாய் சுருண்டு பச்சை நிறத்துல தெரியும். அதையெல்லாம் சீரியசா எடுத்துக்காம வலிக்கு மட்டும் மருந்து எடுத்துட்டு வந்தாங்க.

வயசாகிட்டாலே இப்படிலாம் வரும்ன்னு தனக்குத் தானே சமாதானம் செஞ்சுக்கிட்டு, வென்னீர் ஒத்தடம் கொடுத்துக்கிட்டு சமாளிச்சுக்கிட்டு வந்தாங்க, தாங்க முடியாத அளவு வலியும், வீக்கமும் வந்ததால, ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க. 

அங்க, பரிட்சைக்கு பயந்துக்கிட்டு ஸ்கூல் பக்கமே போகாத எங்கம்மாவை மந்த்லி டெஸ்ட்,  வீக்லி டெஸ்ட், டெய்லி டெஸ்ட் போல ப்ளட், ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பிபின்னு எல்லா டெஸ்ட்டும் பண்ணி பார்த்ததுல ”varicose vein”ன்னு எதோ நோய் பேரு சொல்லி, ஆப்ரேஷன் பண்ணனும். இல்லாட்டி கால் கொஞ்சம் கொஞ்சமா கருப்பாகி ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.

அதிக நேரம் நின்னுட்டே இருக்குறவங்களுக்கு வருமாம். ஆனா, அம்மாக்கு எப்படின்னு தெரியலை. எது எப்படியோ வலி போனால் போகுதுன்னு ஆப்ரேஷன் செய்ய சரின்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் போய் சேர்ந்துட்டாங்க. 

பசங்களை, வீட்டை விட்டு போனதாலயோ இல்ல ஆப்ரேஷனை நினைச்சு உள்ளுக்குள்ள பயந்ததாலயோ என்னமோ குறைச்சலா இருந்த பீபி, சும்மா கிர்ருன்னு ஏறி 300ஐ தொட்டது. பெரும்போராட்டத்துக்கு பின் அம்மாவோட பிபி நார்மல் நிலைக்கு வந்துட்டுது.

போன திங்கள் கிழமை(16.09.2013) ஒரு வழியா அம்மாக்கு ஆப்ரேஷன் செஞ்சாச்சு. நரம்பு சுத்தி இருக்கும் இடத்தை கீறி, பயப்பட போறேன்னு அப்பா என்கிட்ட சொல்லி இருந்தார். ஆனா, அம்மாவை பார்த்த பின் தான்  அம்மாவோடு வலது கால்ல 6 இடத்தில் கீறி, கிட்டத்தட்ட 30 தையல்களோடு செஞ்சிருக்காங்கன்னு. 

இது வரை யார் தயவையும் எதிர்பார்க்காம வீட்டு வேலைகள் எல்லாத்தையும் அவங்களே செய்வாங்க. அதேப்போல, சொந்தக்காரங்க வீட்டுக்கு போனால் கூட கூட மாட ஒத்தாசையா இருப்பாங்க.

எனக்கு தெரிஞ்சு முதன் முறையா எல்லாத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர் பார்த்து இருந்தது இதான் முதல் முறை. இப்படியே ஒரு நாள் முழுக்க படுத்த படுக்கையா இருந்தாங்க. மகளே ஆனாலும், இப்படி எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்ப்பது சங்கடப்படுத்தியதால, டாக்டர்கிட்ட கேட்டு, தைரியத்தை வரவச்சுக்கிட்டு லேசா நடக்க ஆரம்பிச்சாங்க.

பீபியும் நார்மல் லெவலுக்கு வந்திட்டு, இப்போ வீட்டுக்கும் வந்துட்டாங்க. இனி தையல் பிரிக்க ஹாஸ்பிட்டல் போனால் போதும். நான் கலங்கி தவித்த நேரத்துல், மனோ அண்ணா, ஆஃபீசர் அண்ணா, விக்கி அண்ணா ஃபோன் செஞ்சு, ராஜி, கலங்காத! என்ன உதவி எப்ப வேணும்னாலும் சொல்லும்மா! நம்மாளுங்க இருக்காங்கன்னு ஆறுதல் சொன்னாங்க. தினமும், தம்பி  ரூபக்ராம் போன் பண்ணி அம்மா நல்லா இருக்காங்களான்னு விசாரிச்சுட்டே இருப்பார். அதேப்போலதான், அம்மாக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதீங்கன்னு ரிஷபன் சாரும் ஆறுதல் சொன்னார்.

அவங்களுக்கும்,அதுமட்டுமில்லாம, அம்மாவுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். 


புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கு விரதம் கொண்டாடுறது எங்க ஊரு வழக்கம். ஒரு சொம்புல, நாமம் இட்டு, துளசி மாலை கட்டி, குழந்தைகளுக்கும் துளசி மாலை போட்டு அவங்களை வீடு வீடா போய் அரிசி வாங்கி வரசொல்லுவாங்க. அப்படி வாங்கி வந்த அரிசில பொங்கல் வைச்சு சாமிக்கு படைப்பாங்க. நான், சின்ன புள்ளையா இருந்த போது அந்த சொம்பு நிறையாம வீட்டுக்கு வர மாட்டேன். ஊரு ஃபுல்லா சுத்தி வருவேன். பசங்களுக்குள் போட்டி வேற நடக்கும் யார் சொம்பு சீக்கிரம் நிறையுதுன்னு!! நாராயணா! கோபாலா! நாமம் விட்டேன் கோபாலா!ன்னு வீட்டு வாசல்ல நின்னு கத்துனா அரிசி போடுவாங்க. 

இப்பலாம் அதுப்போல சொம்பெடுத்துக்கிட்டு பசங்க வருவது குறைஞ்சு போச்சு. ஆனா, என் பசங்க அசிங்கம் பார்க்காம போய் வருவாங்க. என்ன, முன்னலாம் கிருஷ்ணர் போல அலங்காரம் பண்ணி அனுப்புவேன். இப்போ, அவன் வளர்ந்துட்டானாம். அதனால, வேட்டி மட்டும் கட்டி போய் அரிசி வாங்கி வந்தான்.

 ஏழு வகையான் காய்கறிகள் (கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய், முருங்கைக்கீரை, வாழைக்காய், உருளை, சேப்பக்கிழங்கு கண்டிப்பா இருக்கனும்), வடை, பாயாசம் செய்யனும்.  நடு இலையில்  பொங்கல் வச்சு, தயிர் ஊத்தி, வெல்லம் வச்சு சுத்திலும் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, திராட்சைலாம் வச்சு படைச்சு.., 


காய்கள், கீரை, வடை,பழங்கள்ன்னு எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பிசைஞ்சு சாப்பிட்டால்.. ஸ்ஸ்ஸ் செம ருசி. என்னதான் ஆயிரத்தெட்டு டீசன்ஸி பார்த்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு முன்னாடி எல்லாமே அடிப்பட்டு போகும். அதுதான் இந்த மண்ணோட மகிமை போல! உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும், நம்ம பண்டிகைகளை மட்டும் நம்மாட்கள் மறப்பதே இல்ல.



அம்மாவோடு ஹாஸ்பிட்டலில் இருந்த நேரம்..,காலைல குளிச்சுட்டு ஹாஸ்பிட்டலுகுள்ளயே இருக்கும் கோவிலுக்கு போய் வருவது வழக்கம். அப்படி போகும்போது, அங்க இருக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை கடந்துதான் போகனும். எங்க பார்த்தாலும் சரக்கு பாட்டில்கள் இருக்கும்.  சில நேரத்துல உடைஞ்சும் இருக்கும். யாராவது மிதிச்சுட்டா என்னாகும்!? என்னதான் நிர்வாகம் எச்சரிச்சாலும் நம்மாளுங்க திருந்தனுமே! ஒரு வேளை உள்ளிருக்கும் நோயாளிகளோட வலியையும், கூட இருப்பவங்க பணத்துக்கும், உடல் கஷ்டமும் படுற வேதனையை பார்த்து குடிப்பாங்களோ!?


நேத்து மகள்கள் தினமாம். ஆனா, எனக்கு தெரியாம போய்ட்டுது. அதனால, என் சின்ன பொண்ணை பத்தி ஒரு குட்டி பிளாஷ் பேக்...,

 இனியாக்கு 3 வயசிருக்கும். அவ ஸ்கூல் போக ஆரம்பிக்கலை. காலைல பெரியவ தூயாவுக்கும், வூட்டுக்காரருக்கும் டிஃபன் செஞ்சு, மதியமும் சாப்பாடு செஞ்சு டப்பா கட்டி கொடுத்துடனும்(சாம்பார் சாதம், கீரை சாதம், கேரட் சாதம்ன்னு தான் கொண்டு வரனும் டிஃபன் வகையான பூரி, உப்புமா, இட்லிலாம் கொடுத்தனுப்பினா அவ ஸ்கூல்ல திட்டுவாங்க.) இது அத்தனையும் 8 மணிக்குலாம் ரெடி ஆகிடனும்.

எதோ சோம்பேறித்தனத்தால சமையல் ஆக லேட்டாகிட்டுது. சின்னவ எப்பவும் சமத்து. ஆனா, அன்னிக்குன்னு பார்த்து எதுக்கோ அடம் பண்ணி அழுதுக்கிட்டு இருந்தா. எனக்கோ சமையல் வேலை முடியாத டென்ஷன்.

ச்ச்ச்சீ, அழுவாத! உங்கப்பா ஆஃபீஸ் போக டைமாச்சு. ஆனா இன்னும் சமையல் முடியலியேன்னு இருக்கேன். குளிக்க போன மனுசன் வந்தா றெக்கை கட்டி பறப்பாரேன்னு இருக்கேன். நீ வேற அழுதிக்கிட்டுன்னு கத்தினேன். பாப்பா பட்டுன்னு அழுகையை நிறுத்தவும், அவ அப்பா வரவும் சரியா இருந்துச்சு.

அப்பாவை பறந்து காட்ட சொல்லுன்னு மீண்டும் அழ ஆரம்பிச்சா. விசயம் தெரிஞ்சு. நெற்றிக்கண்ணை என் வூட்டுக்காரர் தொறக்குறதுக்குள்ள அங்கிருந்து மீ எஸ்கேப்!!



 காலாண்டு பரிட்சை முடிஞ்சு இன்னில இருந்து லீவு தொடங்குது. சும்மாவே பத்து பதிவு தேத்துற மாதிரி என் பசங்க நடந்துப்பாங்க. லீவுன்னா கேக்கவே வேணாம். அதுலயும் அம்மாக்கு முடியாத இந்த நேரத்துல நம்மகிட்டதான் எல்லாம் விடியும். 

பொண்ணை பத்தி கவலை இல்ல. பத்தாவது படிக்குறதால ஸ்பெஷல் கிளாஸ், டியூசன்னு போய்டுவா. பையனை நினைச்சாதான் பயமா இருக்கு. ஸ்பேனர், டெஸ்டர், சுத்திலாம் எங்காவது கொண்டு போய் மறைச்சு வைக்கனும். இல்லாட்டி, நல்ல பொருளை நொள்ளையாக்கி மீண்டும் நல்லதாவே மாத்திடுவான்.

இப்படி அவன் கைல மாட்டி படாத பாடு பட்ட பொருட்கள் எத்தனையோ!! இந்த லீவுல எது உடைய போகுதோ!? 

Saturday, September 14, 2013

நினைத்தாலே இனிக்கும்!! - திருமண நாள் ஸ்பெஷல்

                                                
 42 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!! 

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்!!.
                                                                            

மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,

அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,

வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,

வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,

அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!


Monday, January 28, 2013

நீயும் நானுமில்லையேல் எம்மதமுமில்லை....,

  ”அம்மா”ன்னா சும்மா இல்லீங்கோ!!

மனிதனின் மறுபக்கம்...,

காதல்ன்னா..., இதான். வேற ஒரு மண்ணுமில்ல...,

மனித நேயத்தின் உச்சபட்சம்...,

செத்தாண்டா சேகரு...,
 
ஷார்ட் கட் கீஸ்...,
 
 உலகின் முதன் முதல் ஆம்புலன்ஸ்..,
 

We Never Complete Without " U & I "
try to understand the meaning brothers
 
 
இதால கொசு ஓடிப்போகுதோ இல்லியோ?! ஜலதோசம் ஓடிப்போகும்..,
 
நோ கமெண்ட்ஸ்.., ஏன்னா, எனக்கு சினிமா பிடிக்காது...,
 
 
ஏலேய்.., என்னலே நடக்குது இங்க?!
 
இதான் டீம் வொர்கா?!
 
 மண்டே ஃபீவர்...,

Tuesday, September 18, 2012

அஷ்டாவதானி...,


மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,

குளிருக்கு போர்வையாய்..,
தலையணை உறையாய்...,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,

இப்படி...,
அவளைப் போலவே??!
 பலரூபமெடுக்கும்,
                                                     அம்மா வாங்கித் தந்த "புடவை" 

Friday, September 14, 2012

நினைத்தாலே இனிக்கும்...., 40வது திருமண நாள்

                                                  
 40 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய்   தேற்றி நடக்க வைத்து திருமப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா...,

எத்தனை ஜென்மம எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்.
                       
                                                     

மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,
 
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,

வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,

வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,

அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!

Wednesday, July 25, 2012

அம்மாவின் அறிவுரை

சலிச்சு எடுத்த அரிசியை கையில் எடுத்து!!
பாத்திரத்தில்  போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!


முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!


அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!

அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!


வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!

Thursday, March 08, 2012

பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்

                                    
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
                                     

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!

தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!

புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!

தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!

கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!

பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!
சுட்ட டிஸ்கி: 
                       
 இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!