Showing posts with label தென்றல். Show all posts
Showing posts with label தென்றல். Show all posts

Tuesday, March 12, 2013

என் வாசத்தின் முகவரி...,

     

கைக்குட்டையிலும் உன் வாசம்!!
என் சட்டைகையிலும் உன் வாசம்!!
பூத்துவாளையில் உன் வாசம்!!
பூக்களுக்குள்ளும் உன் வாசம்!!

தண்ணீரில் உன் வாசம்!!
என் தலையணைக்குள்ளும் உன் வாசம்!!
 உன் வாசம்!! உன் வாசம்!!  உன் வாசம்!! 
என் வீடெங்கும் உன் வாசம்!!

உன் வாசம் முகர்ந்த என் இதயம்..,
என் வாசல் வரை வந்து உன்னை எதிர்பார்க்கும்!!
நீ இல்லாத நிஜம் என்னை!!??
நிதம் நிதம் என்னை தாக்கும்..,

கதவின் பின்னே ஒளிந்திருப்பாய் என
ஆயிரம் கதை சொல்லும் உன் வாசம்!! 
காதலுடன் அருகில் சென்றால்...,
காயங்களே மிஞ்சும்...,

கட்டிலடியில்.., மாடிப்படியில்...,
உன் வாசத்தின் ஊற்றை
எங்கெங்கும் தேடி, தேடி களைக்கையில்..,
மீண்டும் தென்றலாய் உன் வாசம்!!!

அடி, கண்டுபிடித்துவிட்டேனடி..., உன்
வாசத்தின் முகவரியை!!??
அது நான் காணும் பொருட்களில் இல்லை!!

உன் வாசமே! என் சுவாசமாகிப்
 போனதின் வினைதான் அது என்பதை!!!!!!

Monday, November 26, 2012

நீயின்றி நானில்லை..., என் காதல் பொய்யுமில்லை..,



                          
உனக்காக இதயத்தையும்..,
விழிகளையும்.., வானையும்...,..
தென்றலையும்.., நிலவையும்..,
பறவைகளையும்..., பூக்களையும்
தூதுவிட்டேன்...,
என் காதலை
உனக்கு உணர்த்த சொல்லி?!


பூவானது வாடி வந்து சொன்னது
நீ மறுத்து விட்டாய் என்று
கலங்கி போய் வந்தன கண்கள்
உணர்ந்துகொண்டேன்


வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்


எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்றுவிட்டது

பறவையோ சோகமாய் வந்தது
இதயம் மட்டும் தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது


ஒரு வேளை
என் இதயத்தை
மட்டும் வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ


இதே நினைவில் வாழ்கிறேன்
நான்...
என் இதயம் உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்.....