நொறுக்குத்தீனிகள் எத்தனை இருந்தாலும் பக்கோடாவுக்கு ஈடு இணை கிடையாது... மாலை நேரத்தில் ரோட்டோர கடையில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து மினுமினுப்போடு எடுக்கும் பக்கோடாவை, அதே சூட்டோடு மந்தார இலையில் பொட்டலமா கட்டி வாங்கிக்கிட்டு வேலையிலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருந்த தருணம் அலாதியானது. வீட்டுக்கு வந்ததும் மந்தார இலையின் வாசத்தோடும் இளஞ்சூட்டோடும் இருக்கும் பக்கோடாவை சாப்பிட்டதுலாம் பொற்காலம்...
Showing posts with label கிச்சன் கார்னர். Show all posts
Showing posts with label கிச்சன் கார்னர். Show all posts
Tuesday, November 03, 2020
Tuesday, September 01, 2020
சீராளம் - பாரம்பரிய சமையல்-கிச்சன் கார்னர்
மகளுக்கு சீமந்தம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டி வந்தாயிற்று. அவள் இனிப்பா எதும் சாப்பிட மாட்டா. சத்தானதுன்னு ராகி புட்டு, ராகி வடை, முருங்கைக்கீரை தோசை, கேரட் ஜூஸ், உருளை கட்லட்ன்னு செஞ்சு கொடுத்தாலும் அவளோட விருப்பமெல்லாம் குக்கரில் செய்யாத வெண்பொங்கலும் சாம்பாரும்... மாலை நேரத்திற்கு காரமா சீராளம், அரிசி வடைதான். முன்னலாம் சிப்ஸ், பப்ஸ்ன்னு சாப்பிடுவா. இப்ப அதுலாம் கொடுக்கக்கூடாதே...
Tuesday, June 23, 2020
சத்தான முட்டை+கேரட் பொரியல் -கிச்சன் கார்னர்
கேரட் பொரியலில் துவரம்பருப்போ அல்லது பை பருப்போ சேர்த்து கூட்டு செய்வோம். இல்லன்னா, தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்வோம். முட்டை போட்டு புதுவிதமான பொரியலும் செய்யலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ.. அயோடின், பாஸ்பரஸ், துத்தாநாகம் போன்ற சத்துகளும், கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ,சி,கே, பொட்டாசியம் மாதிரியான சத்துக்களும் சேர்ந்து நமக்கு அதிகப்படியான சத்துக்களை தரும்ன்னு சொல்லி குழந்தைகளை ஏமாத்தலாம்..
Tuesday, June 16, 2020
புழுங்கல் அரிசியிலும் இடியாப்பம் செய்யலாம்!!- கிச்சன் கார்னர்
எங்க வீட்டில் யாருக்கும் இடியாப்பம் பிடிக்காது. இடியாப்ப செய்றதில்லைன்றதால இடியாப்ப மாவு வீட்டில் இருக்காது. மாமனாருக்கு உடம்பு சரியில்லைன்னா இரவு உணவுக்கு கண்டிப்பா இட்லியோ இல்ல இடியாப்பமோ இருக்கனும். அவருக்கு என்ன வேணும்ன்னு முதல்லியே சொல்லமாட்டாரு. திடீர்ன்னு அரை மணிநேரத்துக்கு முந்திதான் சொல்வாரு :-(
Tuesday, June 09, 2020
யாராச்சும் ஃபீரியா இருந்தால் இதுக்கு பேர் வச்சிட்டு போங்க! - கிச்சன் கார்னர்
சிலபல வருடங்களுக்கு முன் மதுரை, திருச்செந்தூர், குற்றாலம்ன்னு தென் தமிழகத்தில் ஒரு வாரம் குடும்பத்தோடு டூர் போனோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்து முடிச்சோம். அப்பதான் கோவிலில் அன்னதான திட்டம் அறிமுகப்பட்டிருந்தது. தரிசனம் முடிச்சு வரும் வெளியூர் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எங்க வீட்டில் யாரும் அன்னதானத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிடுறதை கௌரவக்குறைச்சலா நினைக்க மாட்டோம். அதனால் டோக்கன் வாங்கி சாப்பிட உக்காந்தோம்...
Tuesday, April 28, 2020
குட்டி குட்டி உருளைக்கிழங்கு வறுவல் - கிச்சன் கார்னர்
உருளைக்கிழங்கு.... இது எல்லாருக்கும் பிடித்தமானது. இந்த உருளையை பிடிக்காதுன்னு யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. உடலுக்கு ஆகாது ஆனாலும், கொஞ்சமா வைன்னு சொல்றவங்களைதான் பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கில் வறுவல், பொரியல், சிப்ஸ், பொடிமாஸ்,குருமான்னு சமைச்சு அசத்தலாம்.
Tuesday, April 21, 2020
சிறுகீரை +துவரம்பருப்பு கூட்டு - கிச்சன் கார்னர்
தினமும் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்குறது உடலுக்கு நல்லது. சாம்பார், சூப், பொரியல், போண்டா, கூட்டு, வெரைட்டி சாதம்ன்னு கீரையிலும் விதம் விதமா சமைக்கலாம். என்ன கீரையை சுத்தம் செய்வதுதான் கொஞ்சம் கஷ்டம்தான். டிவி, சீரியல்லாம் வருவதற்குமுன், முன்னலாம் அம்மாவின் அம்மா/மாமியார், மாமியாரின் அம்மா/மாமியார்ன்னு வயசான பெரியவங்க யாராவது ஒருத்தங்க எல்லா வீட்டிலும் இருப்பாங்க. அவங்க காய்கறிகளை அறிவது, தானியங்களை நோன்ப, புடைக்க, இட்லிக்கு மாவரைக்கன்னு உக்காந்தபடியே வேலை செய்வாங்க. வீட்டு வேலைகள் முடித்தபின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எதாவதொரு வீட்டின்முன் உக்காந்து பேசுவாங்க. அப்ப கீரை சுத்தம் செய்றது. கிழிஞ்ச துணிகள் தைக்க, பூ கட்டுறது, தானியங்கள் சுத்தம் செய்வதுன்னு வேலைகள் பகிர்ந்து நடக்கும். உடல் உழைப்பு அதிகமா இருந்தாலும் பகிர்ந்து செஞ்சுக்கிட்டதால் அலுப்பு இல்லாமல் இருந்தது, இன்னிக்கு மிக்சி, கிரைண்டர், பாக்கெட் பண்ணப்பட்ட மளிகைப்பொருட்கள்ன்னு இருந்தாலும் அலுப்பாவே இருக்கு.
Tuesday, April 07, 2020
கல்யாண வீட்டு கடலை மாவு போண்டா - கிச்சன் கார்னர்
மாலை நேரத்தில் எதாவது சூடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்போது சட்டுன்னு செஞ்சுடலாம் இந்த போண்டாவை...
Tuesday, March 31, 2020
வீட்டிலேயும் செய்யலாம் ரிங் முறுக்கு -கிச்சன் கார்னர்
யானை அசைஞ்சு தின்னும்.. வீடு அசையாம தின்னும்..ன்னு பெரியவங்க சொல்வாங்க. அதுல, வீட்டில் அடைஞ்சு கிடக்கும் பிள்ளைகள் அசைஞ்சும், அசையாமலும் தின்னும்ன்னு சேர்த்துக்கலாம் போல! பண்டம் செஞ்சு மாளலை.
Tuesday, March 24, 2020
எல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் கார்னர்
செரிமானம், வாயுத்தொல்லை தொடங்கி இப்ப வந்திருக்கும் கொரோனா வைரசைக்கூட பூண்டு தீர்க்கும்ன்னு அடிக்கடி வசந்தி பரவுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைகள் பூண்டை வெறுத்து ஒதுக்காம சாப்பிடுவாங்க. முக்கியமா புளிக்குழம்பில் ஊறிய பூண்டுக்கு அடிதடிலாம் நடந்த வரலாறுலாம் எங்க வீட்டில் உண்டு. அதுக்காகவே தலைக்கு இத்தனை பூண்டு பற்கள்ன்னு தட்டில் முதல்லியே எடுத்து வச்சதும் உண்டு. அப்பேற்பட்ட பிள்ளைகளுக்கு பூண்டு சட்னின்னா சொல்லவா வேணும்?! சூடான இட்லி, அளவான காரத்தோடு சட்னி இருந்தால் அன்னிக்கு ஹாட் பாக்சில் இருக்கும் இட்லி காணாம போகும். தோசைக்கும் நல்லா இருக்கும். ஆனா, இட்லிக்குதான் செம மேட்சிங்கா இருக்கு
தேவையான பொருட்கள்..
தோல் உரித்த பூண்டு பற்கள்
வெங்காயம்
காய்ந்த மிளகாய்
உப்பு
புளி
எண்ணெய்
கடுகு
ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க..
அடுத்து பூண்டு போட்டு வதக்குங்க...
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கனும்..
வெங்காயமும், பூண்டும் வதங்கினபின் தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்..
புளி கொஞ்சம் சேர்த்து அடுப்பை அணைச்சுட்டு நல்லா ஆறினதும், முதல்ல மிளகாயை அரைச்சுட்டு பிறகு வதக்கின வெங்காயம், பூண்டினை சேர்த்து கொரகொரப்பா அரைங்க. முதல்லியே எல்லாத்தையும் சேர்த்து அரைச்சா மிளகா முழுக்க மசியாது. பூண்டும், வெங்காயமும் மசிஞ்சு பிசுபிசுன்னு இருக்கும்.
அரைச்ச சட்னியில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டுங்க. சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி ரெடி.
பெரிய வெங்காயத்திற்கு பதிலா சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கிட்டா இன்னும் ருசி கூடும்.
நன்றியுடன்,
ராஜி
Tuesday, March 17, 2020
இதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு?!- கிச்சன் கார்னர்
அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் புதுசா பரவிக்கிட்டிருக்கும் காலக்கட்டத்தில் பாரம்பரிய பலகாரங்களை செய்ய யாருக்கு பொறுமையும், நேரமும் இருக்கு?!ன்னு பலரும் நினைக்குற மாதிரி இதுலாம் செய்யுறது பெரிய விசயமில்லை. பசங்களுக்கு நல்லது கொடுக்குற திருப்தியும், நம்மாலும் இதுலாம் செய்யமுடியும்ன்ற ஆர்வமும் இருக்கும்வரை இதுலாம் ஜுஜுபி மேட்டர்.
சின்ன வயசில் எல்லார் வீட்டிலும் அப்பப்ப முறுக்கு, தட்டை, கோதுமை கலகலா, சிம்னின்னு எதாவது பண்டம் செய்வாங்க. அதுதான் காலை, மாலை, சாப்பாட்டுக்கு தொட்டுக்கன்னு பத்து பதினஞ்சு நாளுக்கு அந்த பண்டம் இருக்கும். இப்ப மாதிரி கடையில் வாங்கும் பழக்கமில்லை. எங்க ஊரில் இதை கலகலான்னு சொல்வாங்க. மத்த ஊரில் என்ன பேருன்னு தெரில!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய்
கோதுமை மாவை சலிச்சு எடுத்துக்கனும். கோதுமை மாவில் அரை பங்கு சர்க்கரையை எடுத்துக்கனும்.
சர்க்கரையை பொடிச்சு கோதுமை மாவில் சேர்த்துக்கனும்.
ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக்கனும்..
வெண்ணெய் இல்ல. அதனால் நெய்யினை சேர்த்து, மாவினை நல்லா கலந்துக்கிட்டு, சிறுக சிறுக தண்ணி சேர்த்து பிசையனும்,. சர்க்கரை சேர்த்திருக்குறதால் அதிகம் தண்ணி செலவாகாது. சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைஞ்சுக்கனும்.
சப்பாத்தி மாதிரி திரட்டி, கத்தியால் சின்னசின்னதா வெட்டிக்கனும்.. ரொம்ப மெல்லிசா திரட்டிக்க வேணாம். கொஞ்சம் கனமா இருக்கனும்.
சர்க்கரை சேர்த்திருக்குறதால் சீக்கிரம் சிவந்திடும். அதனால், அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.
நல்லா சிவக்கவிட்டு எடுத்தால் கலகலா ரெடி. இதை கிண்ணத்தில் போட்டு உருட்டுனா கலகலன்னு இருக்கும் அதனால்தான் இந்த பேரா இருக்குமோ?! கோதுமை, மைதா மாவினை சம பங்கா எடுத்தும் செய்யலாம்.
நன்றியுடன்,
ராஜி
Tuesday, March 10, 2020
ருசியான பாதாம் அல்வா - கிச்சன் கார்னர்
கோதுமை, பாசிப்பருப்பு, கேரட், பிரட்ன்னு. அல்வா எந்த ரூபத்தில் இருந்தாலும் எனக்கு பிடிக்கும். மனுஷங்க கொடுக்கும் அல்வாவினை தவிர!! ஆனா, அடிக்கடி அதுதான் கிடைக்குதுன்றது வேற விசயம். பசங்களுக்காக வாங்கின பாதாம், பசங்கலாம் ஆளுக்கொரு திக்குக்கு போயிட்டபின் சாப்பிட ஆள் இல்லாம இருந்துச்சு. ஓடு யூட்யூப்க்கு.. பலவிதமா செய்யலாம்ன்னு இருந்தாலும் பாதாம் அல்வாதான் என்னை ஈர்த்துச்சுன்னு சொன்னா அது பொய். இதுதான் ஈசியா இருந்துச்சு. அதான், உடனே செஞ்சுட்டேன்..
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு- 25
சர்க்கரை- ஒரு கப்
நெய்
ஏலக்காய்பொடி
மஞ்சள் கலர்
பொடித்த முந்திரி, திராட்சை
பாதாமை எட்டு மணிநேரம் ஊறவச்சு தோலெடுத்து, கொரகொரப்பா அரைச்சு வச்சுக்கனும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தினை வச்சு சூடாக்கி நெய் ஊற்றி, அது உருகினதும் முந்திரி, திராட்சையினை வறுத்து எடுத்து வச்சுக்கனும்.
இன்னும் கொஞ்சம் நெய்யினை சேர்த்து அரைச்சு வச்சிருக்கும் பாதாமை சேர்த்து கிளறனும்.
பச்சை வாசனை போனதும் சர்க்கரையை சேர்த்து கிளறிவிடனும்..
ஏலக்காய் பொடி சேர்க்கனும்.. கூடவே கொஞ்சூண்டு மஞ்சள் கலர்பொடி சேர்க்கனும்.. இயல்பாவே பாதாம் பருப்பிலிருந்து மஞ்சள் நிறம் வரும். அதனால், சேர்க்கலைன்னாலும் பரவாயில்லை. மஞ்ச்ள் கலருக்கு பதிலா குங்குமப்பூவை பாலில் கரைச்சு சேர்க்கலாம். இன்னும் ருசி கூடும் கலரும் வரும்.
வறுத்து வச்சிருக்கும் முந்திரி, திராட்சையினை சேர்த்து கிளறனும்..
சுவையான பாதாம் அல்வா தயார்.
நன்றியுடன்,
ராஜி
Tuesday, March 03, 2020
மாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்னர்..
சமையலில் புலி இல்லதான். ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை செய்தா எந்த பலகாரமும் செய்ய பழகிடும். ஆனா, இந்த எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்படும் தட்டை செய்ய மட்டும் எனக்கு இன்னும் கைவரல. மாவை ஆவில வச்சு பார்த்தாச்சு, வறுத்து பார்த்தாச்சு.. ஆனாலும் கைகூடாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு நாலைஞ்சு முறைதான் நல்லா வர ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் இந்நிலை தொடருதான்னு...
பச்சரிசியை ஊறவச்சு அரைச்சு மாவாக்கி சிலர் வறுத்தும், சிலர் ஆவியில் வேக வச்சு, மிளகாய் பூண்டை அரைச்சு அதில் சேர்த்து, பெருங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தட்டை செய்வாங்க. ஆனா, நான் இப்பவும் கல் உரலில் மாவு ஆட்டிதான் செய்வேன்.
தேவையான பொருட்கள்..
புழுங்கலரிசி - கால் படி
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
பூண்டு - பத்து பல்
ஊறவைத்த கடலை பருப்பு - ஒரு கப்
எள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- தேவைக்கேற்ப
பொடித்த வேர்க்கடலை - சிறிது
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைச்ச மாவோடு ஊற வச்ச கடலை பருப்பு, எள், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி சேர்த்துக்கனும்..
கூடவே பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கனும்..நல்லா பிசைஞ்சுக்கனும்..
ஒரு சுத்தமான பருத்தி துணில தேவையான அளவில் தட்டை தட்டிக்கனும்.. அதிகப்படியான தண்ணியை துணி இழுத்துக்கும். அரிசி காய வைக்க, தானியங்கள் முளைக்கட்ட இப்படி பயன்படுத்த ஒரு காட்டன் லுங்கியை தனியா வச்சுக்குறது நல்லது. இல்லன்னா காடா துணியையும் இதுக்கு பயன்படுத்தலாம்.
எண்ணெயில் போட்டு இருபக்கமும் திருப்பி விட்டு சிவக்க விட்டு எடுத்தால் தட்டை ரெடி..
வாங்களேன்! தட்டையோடு கொஞ்சம் காஃபி, நிறைய கதைன்னு இந்த மாலைப்பொழுதை கழிக்கலாம்!!
நன்றியுடன்,
ராஜி
Tuesday, February 04, 2020
காயம் ஆற்றும் அவரைக்காய்+துவரம்பருப்பு பொரியல் -கிச்சன் கார்னர்
அவரைக்காய் வீட்டில் காய்த்து தொங்குது. பிஞ்சு அவரைக்காய்க்கு புண்களை ஆற்றும் சக்தி இருக்குன்னு அம்மாக்கிட்ட யாரோ சொன்னாலும் சொன்னாங்க. இட்லி சாம்பார்ல அவரைக்காய், பொரியலாய், அவியலாய், கூட்டாய்,சூப்பாய்..... அவரைக்காய் பல ரூபமெடுக்குது. அட! நைட் குருமாவிலும் அவரைக்காய்ன்னா அம்மாவோட அக்கறையை!! என்ன சொல்ல?!. நல்லவேளையா காபில அவரைக்காயை கலந்து கொடுக்காம விட்டுச்சேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
புண்களை ஆற்றும் திறன்கொண்ட அவரைக்காய் பொரியல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்..
பிஞ்சு அவரைக்காய்-1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 1
பூண்டு பற்கள்
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
துவரம்பருப்பு-1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - கொஞ்சம்
கடுகு
கடலைப்பருப்பு’
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு
அவரைக்காயை கழுவி பொடியா நறுக்கிக்கனும்,, துவரம்பருப்பை அதிகம் குழையாம வேக வச்சு எடுத்துக்கனும்..
அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடனும். அடுத்து கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்..பூண்டு பற்களை போட்டு வதக்கனும். பூண்டை நசுக்கி போட்டால் நல்லது.
வெங்காயம் போட்டு வதக்கனும்..
கறிவேப்பிலை கொத்தமல்லி போடனும்..
பொடியா நறுக்கின அவரைக்காயை கொட்டி வதக்கனும்..
தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து வேக விடனும்..
காய் வெந்த, தண்ணி சுண்டினதும் வெந்த துவரம்பருப்பை சேர்த்துக்கனும்தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிடனும்,...
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி..
செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..
நன்றியுடன்,
ராஜி
Tuesday, September 03, 2019
கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

ஆரணிக்கு பக்கத்தில் படைவேடுன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க புகழ்பெற்ற ரேணுகாம்பாள் ஆலயம் இருக்கு. அங்கு அம்மன் கோவில் மட்டுமில்லாம அந்த ஊரில் விளையும் புளி, இளநீர், கத்தரிக்காய், தக்காளிக்கென தனி மவுசு எங்க ஊரில் உண்டு. அதிகாலையில் எங்க ஊர் உழவர் சந்தையில் கீரைகள், பப்பாளி, தேங்காய், தென்னந்துடைப்பம்ன்னு கடை விரிச்சிருப்பாங்க. வயலட் கத்தரிக்காய், வெள்ளை கத்தரிக்காய், நாம கத்தரிக்காய்ன்னு எத்தனையோ விதங்கள் கத்தரிக்காய் இருந்தாலும், எங்க ஊர் கத்தரிக்காய் ருசிக்கு ஈடாகாது.
காம்பில் சின்ன சின்னதா முட்கள் இருப்பதால் இதற்கு முள் கத்தரிக்காய்ன்னு எங்க ஊர்பக்கம் பேரு வச்சிருக்கோம். வயலட் நிறத்தில் மினுமினுன்னு குண்டு குண்டாய் இருக்கும். எல்லா கத்தரிக்காயிலும் காம்பையும், கத்தரிக்காயையும் இணைக்கும் பாவாடை பகுதி பிஞ்சாய் இருக்கும்போது ஒட்டிக்கிட்டு இருக்கும். காய் பெருசாக ஆக... பாவாடை பகுதி சிறிதாய் ஆகி, கத்தரிக்காயிலிருந்து பிரிஞ்சு இருக்கும். ஆனா, எங்க ஊரு கத்தரிக்காய்ல பாவாடை பகுதி பெருசாவும், காய் பெருசானாலும் காயோடு பாவாடை ஒட்டிக்கிட்டும் இருக்கும். சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல்ன்னு ஒருமுறை எங்க ஊர் கத்தரிக்காயை சமைச்சு சாப்பிட்டால் அதன் ருசியை மறக்கவே மாட்டாங்க. அரிசி, பருப்பு மாதிரி கத்தரிக்காய் எங்க வீட்டில் எப்பயும் ஸ்டாக் இருக்கும்.
எங்க வீட்டு பசங்களுக்கு, புதுசா வாங்கின குட்டியூண்டு பிஞ்சு கத்தரிக்காயை லேசாய் கீறி முழுசா போட்டு காரக்குழம்பு வைக்கனும். இதுக்காகவே பார்த்து பார்த்து வாங்குவேன். கத்தரிக்காய் காரக்குழம்பு எப்படி வைக்குறதுன்னு பார்க்கலாம். எங்க ஊரு கத்தரிக்காய்ன்னு இல்ல, எந்த ஊரு கத்தரிக்காய்லயும் இந்த குழம்பை செய்யலாம். ஆனா, ருசியில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.
தேவையான பொருட்கள்...
வெங்காயம்
தக்காளி
பிஞ்சு கத்தரிக்காய்(சின்ன சைஸ்)
எண்ணெய்
குழம்பு மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
சீரகம்-1/4 டீஸ்பூன்
சோம்பு-1/4 டீஸ்பூன்
கடுகு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு- 4 பற்கள்
உப்பு
புளி
வாணலியில் கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், வெங்காயத்தை பெருசு பெருசா வெட்டி லேசாய் வதக்கனும்.. வெங்காயம் லேசாய் நிறம் மாறினாலே போதும்.
இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கனும்...
தக்காளி சேர்த்து வதக்கனும்...
மிளகாய் தூள் சேர்த்து வதக்கனும்..மஞ்சப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்..
சீரகத்தை சேர்த்து வதக்கனும்,
சோம்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறவச்சு கொரகொரப்பா அரைச்சுக்கனும்..
கத்தரிக்காயின் நுனிகாம்பை மட்டும் வெட்டிட்டு, கத்தரிக்காயின் பின்பக்கம் ஆறு, ஏழு, எட்டு என கத்தரிக்காயின் முக்கால் பாகம் வரைக்கும் வெட்டிக்கனும். முழுசா வெட்டாம கவனமா இருக்கனும். வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், வெட்டி வச்சிருக்கும் முழு கத்தரிக்காயினுள் அரைச்சு வச்சிருக்கும் விழுதினை தடவி எண்ணெயில் வதக்கி எடுத்துக்கனும்.
வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கனும்.. சின்ன வெங்காயமா இருந்தால் குழம்பின் ருசி கூடும். எங்க ஊர் பக்கம்லாம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60க்கு குறைவா கிடைக்காது. அதனால், எப்பயுமே பெல்லாரி வெங்காயம்தான்.
கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து வதக்கனும்..
அரைச்சு வச்சிருக்கும் விழுதினை சேர்த்து வதக்கனும்..வதக்கி வச்சிருக்கும் கத்தரிக்காயை சேர்த்து கொதிக்க விடனும்..
கொதிச்சு பச்சை வாசனை போனதும், கத்தரிக்காய் வெந்தபின் புளிக்கரைச்சலை சேர்த்துக்கனும்.

அவரவர் விருப்பப்படி பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைச்சுடனும். கொஞ்சம் கெட்டியா இருந்தால்தான் இந்த குழம்பு நல்லா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துக்கு நல்லா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)