Saturday, February 08, 2014

மணல் கொள்ளை - கேபிள் கலாட்டா

ஞாயித்துக்கிழமை மதியம் புதுயுகம் சேனல்ல ஒளிப்பரப்பாகும் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. காஞ்சிப்புரம், பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளைப் பற்றி வந்த நிகழ்ச்சி. ரெண்டு வருசத்துக்கு முன் பாலாற்றில் அறுநூறுக்கும் மேற்பட்ட ஊற்றுகள் இருந்ததாம். இப்ப, ஒன்றுக்கூட இல்லியாம். அதுமட்டுமில்லாம, இந்நிகழ்ச்சியில்மணல் எடுக்க வேண்டிய அவசியம், விதிகள், விதிமீறல்கள், பணப்புழக்கம்ன்னு விரிவாக அலசப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு மெருகேத்துற மாதிர் திரு.தமிழ் உலா என்பவரின் நாட்டுப்புறப்பாட்டு அமைஞ்சது. பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் எடுப்பது தடைச் செய்யப்பட்டிருக்குறதால, நம்ம ஊர் ஆத்துல இருந்து மண் எடுத்து கொடுக்குறாங்களாம். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போது மனசு கனத்துப் போச்சு. இனி வரும் காலங்களிலாவது நாம விழித்துக் கொண்டால்தான் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மிச்சம் மீதி ஆறுகளையாவது காப்பாற்றப்படும்ன்னு தோணுச்சு.

மக்கள் டிவில தினமும் மாலை நேரத்துல அட்டக்கத்தின்னு குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பேப்பர், க்ரேயான்ஸ், பென்சில் சீவல்ன்னு எளிமையான பொருட்களை வச்சு கிராஃப்ட் செய்யக் கத்துக் கொடுக்குறாங்க. குழந்தைகளோட ஆசைகள் என்னன்னு கேக்குறாங்க. அப்பா, அம்மா ஆசையாப் பேசனும்ன்றது முதல் ஒரு பூ பூக்குறதை முழுசாப் பார்க்கனும், ஒரு ஆறு தொடங்குற இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை ஆத்தோடவேப் போகனும்ன்ற ஆசை வரை குழந்தைகள் சொல்லும்போது நாமும் குழந்தையாக மாட்டோமான்னு இருக்கு. குழந்தைகளை குழந்தையாகவே காட்டுற நல்ல நிகழ்ச்சி.
தந்தி டிவில உலகம் 360டிகிரின்னு ஒரு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிப்பரப்புறாங்க. உலகத்தோட மூலைல நடந்த சுவாரசியாமான நிகழ்ச்சிகளை அழகா தொகுத்து தர்றாங்க. கடலுக்கடியில் நடந்த கல்யாணம் முதற்கொண்டு நாய்கள் ஃபேஷன் ஷோ வரை இதுல இடம்பெறுது. குழந்தைகளும் ஆர்வமா பார்க்குதுங்க. அதனால, தவற விடாம இந்நிகழ்ச்சியைப் பார்க்குறோம்.
கேப்டன் டிவில ஃபேஸ்புக் பிஸ்தாக்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி. அதுல ஃபேஸ்புக்ல கலக்குற வீடியோ, மொக்கை, டிப்ஸ்ன்னு எல்லாம் ஷேர் பண்ணுறாங்க. தெரிஞ்சவங்க பேர் வந்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சிப் போடுறாங்க.

கேபிள் கலாட்டா தொடரும்.....,

17 comments:

  1. உங்கள் பதிவின் மூலம் தான் இந்நிகழ்ச்சிகள் தெரியும்... மக்கள் டிவி தகவலுக்கு நன்றி சகோ...

    ReplyDelete
    Replies
    1. தொலைக்காட்சியே தப்பில்லைண்ணா! சில நிகழ்ச்சிகள் தான் தப்பு.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  3. உருப்படியான தகவல்கள் தந்து இருக்கீங்க. நன்றி. பலவற்றை நானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

    இலவச மின் நூல் தளத்தை அறிமுகம் செய்யும் பொருட்டு (உங்கள் நண்பர்களின் பார்வைக்கு, அனைவரும் இந்த மின் நூல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கோருகின்றேன்)

    நன்றி.

    http://freetamilebooks.com/ebooks/white-slaves/

    ReplyDelete
    Replies
    1. இதோ அங்கதான் வந்திட்டு இருக்கேன் சகோ!

      Delete
  4. நன்றி பகிர்வுக்கு! சில டி.வி சானல்கள் புதிதாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  5. இதனால் அறிவது என்னவென்றால், தங்கச்சி இடையிடையே சீரியலும் பாக்குறாங்க போல, மாமா"கிட்டே போட்டு குடுத்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் சகோ :)))) கேபிள் கலாட்டா தொடர வாழ்த்துக்கள் தங்கச்சி .

      Delete
  6. எல்லா நிகழ்ச்சியையும் பார்க்க முடிகிறதா?

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள் சகோதரி..
    பகிர்வுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  8. மக்கள் டி‌வி வர்ற இந்த குழந்தைங்க நிகழ்ச்சி மாதிரி, இங்கேயும், "Mr. Maker" அப்படின்னு ஒரு நிகழ்ச்சி. அதை என்னோட ரெண்டு வாண்டுகளும் விடாமல் பார்ப்பார்கள்.
    இனி அந்த மக்கள் டி‌வி நிகழ்ச்சியையும் அவுங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டியது தான். தகவலுக்கு மிக்க நன்றி சகோ.
    தொடரட்டும் உங்களது கேபிள் கலாட்டா.

    ReplyDelete
  9. மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் பயனுள்ளவையாக இருப்பது உண்மைதான். புதுயுகம் மற்றும் தந்தி தொலைக்காட்சிகளும் பல நல்ல நிகழ்ச்சிகளை தரமுடன் அளிக்கின்றன. இவற்றில் சமீபத்தில் நான் பார்த்த வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த வார நிகழ்ச்சியில் கழிவு நிரிலிருந்து குடிநீர் தயாரிக்க இரு பெண் குழந்தைகள் அளித்த செயல்முறை விளக்கம் என்னை வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி மாணவ மாணவியருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. நானும் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அடிக்கடிப் பார்ப்பேன். தொலைக் காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகள் நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete