Thursday, March 27, 2014

சேலைல எம்ப்ராய்டரி- கிராஃப்ட்

எங்க அண்ணன் மகளுக்கு சடங்கு . அதுக்கு,நான் அத்தை சீர் செய்யனும். அதனால, ஷாப்பிங்க் கிளம்பினேன். காதுக்கு கம்மல், ஃபேன்சி ஐயிட்டம்லாம் வாங்கிட்டேன். பட்டு சாரி வாங்கலாம்ன்னு கடைக்கு போனேன். நிறைய புடவைகள்லாம் கடைக்காரர் எடுத்து போட்டார். பொம்பளைங்களுக்குதான் புடவை விசயத்துல திருப்தி வராதே. அதனால, அண்ணன் பொண்ணுக்கிட்டயே போன் போட்டு கேட்டேன். எப்படிப்பட்ட சேலை வேணும்ன்னு கேட்டேன். எனக்கு பிளெய்ன் பட்டு சேலைதான் வேணும்ன்னு அடம்பிடிக்க சிகப்பு கலர்ல ப்ளெய்ன் பட்டு சேலை 2400 ரூபாய்ல வாங்கி வந்துட்டேன்.
                                       
வாங்கி வந்ததுலாம் அவக்கிட்ட காட்டினேன். எல்லாமே நல்லா இருக்கு அத்தைன்னு சொன்னா.  ஆனா, எனக்குதான் சேலைல மனசு ஏத்துக்கலைடா, 5000 ரூபாய்ல வைர ஊசி போட்ட மயில் கழுத்து கலர் சேலை பார்த்தேன். ஆனா, நீதான் பிளெய்ன் சேலைக்கு அடம்பிடிச்சியேன்னு சொல்ல, அத்தை, பிளெய்ன் சேலை 2400, வைர ஊசி சேலை 5000ரூபாய். உனக்கு நான் 2600 ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கேன்னு சொன்னா. ஆஹா, நம்ம மருமகளுக்கு நம்ம மேல என்ன கரிசனம், அத்தைக்கு காசு செலவாகிடக்கூடாதேன்னு சொல்றாளேன்னு ஒரு செக்கண்ட் சந்தோசம் பட்டுக்கிட்டு என்ன இருந்தாலும்  பிளெய்ன் சேலை தரோமேன்னு தயக்கமா இருக்குடான்னு சொன்னேன். என்னது, பிளெய்ன் சேலை தரப்போறியா?! என் சடங்குக்கு இன்னும் 10 நாள் இருக்கு. உனக்குதான் எம்ப்ராய்டரி போடத் தெரியுமே, பத்து நாளைக்குள்ள இதுல எம்ப்ராய்டரி போட்டு எனக்கு கிஃப்ட் பண்ணிடுன்னு சொன்னா.
                                     

அவ்வ்வ்வ் பயபுள்ள என்னமா பிளான் போடுதுன்னு சொல்லி, பத்து நாள்தான் டைம்ங்குறதால, சிம்பிளாதான் டிசைன் பண்ண முடியும்ன்னு சொன்னேன். ஓக்கே அத்தை, நீ எம்ப்ரய்டரி போட்டு தந்தாலே போதும்ன்னு சொன்னான். கடைக்கு போய், மல்டி கலர் கோன் திரெட், ரெடி மேட் பூ, சில்க் தெரெட், குந்தன் கல், மல்டி கலர்ல குட்டி குட்டி லீஃப்ன்னு பர்ச்சேஸ் 400 ரூபாய்ல முடிச்சுட்டேன்.
           
                                     
பார்டர்ல  கொடி கொடியா போற மாதிரி ஒரு டிசைன் போட்டேன். கொடிக்கு “காம்புத்தையல்” போட்டு  லீஃப் வச்சு தச்சேன். கொடில பூவுக்கு பதில் அங்கங்கு, ”கமல் தையல்” போட்டு நடுவுல வெள்ளைகலர் சூரியகாந்தி போல கல் வெச்சு தச்சுட்டேன்.
                                         
 முந்தானைல மூணு ஹார்ட் ஷேப்பை ஒண்ணா ஒட்டுனது போல ஒரு டிசைன் போட்டு ஜரிகை நூலால் “சங்கிலி தையல்” போட்டு தைச்சேன். இரண்டு ஹார்ட்டுக்கு நடுவுல லீஃப் வெச்சு தச்சுட்டேன்.
                                         
                                         
 இப்போ முந்தானையும், பார்டரும் ரெடி, இருந்தாலும் என்னமோ குறையுற மாதிரி இருக்கவே, பார்டர் டிசைன்னுக்கு கொஞ்சம் மேல அங்கங்க ஒரு பூக்கொடி “காம்புத் தையல்” போட்டு குந்தன் திலகம் கல்லை வெச்சு தச்சு, ரெடிமேட் பூவை அங்கங்கு வெச்சு தெச்சு, இலைக்கு பச்சை குந்தன் கல்லும் காம்பின் முடிவில் அகல் விளக்கு கல்லையும் வெச்சு தைச்ச பின் பூக்கொடி ரெடி.
                                                        
                             

                             
அங்கங்கு, அந்த பூக்கொடியை போட்டு விட்டபின் சேலை ரெடி. அயர்ன் பண்ணி சடங்குல சீர் செஞ்ச பின், அதை அண்ணன் மகள் கட்டி அவள் முகத்துல வந்த சந்தோசத்தை பார்த்தப்பின் 10 நாள் நான் பட்ட உடல் கஷ்டம் பஞ்சாய் பறந்து போச்சு. என்னதான் 10000 ருப்பாய் குடுத்து சேலை எடுத்து வந்திருந்தாலும் ரெண்டு பேருக்கும் இவ்வளவு திருப்தி வந்திருக்குமான்னு தெரியல. 
                                        
                              
                                  
                                 

எம்ப்ராய்டரி பண்றவங்களுக்கு டிப்ஸ்: நல்ல வெளிச்சமான இடத்துல உக்காந்து போடுங்க. ஊசில நூலை ரொம்ப நீளமா போடாம, ஒரு முழம் அளவுக்கு கோர்த்துக்கிட்டா நூல் சிக்கல் விழாது. நூல் கண்டுல இருந்து  தேவையான அளவு நூலை எடுத்து ஒரு சுத்து சுத்தி முடி போட்டு வச்சுக்கிட்டா நூல் சரியாம இருக்கும். கற்கள், சமிக்கிலாம் மீதமாச்சுன்னா ஒரு கவர்ல போட்டு பின் பண்ணி வச்சுக்கிட்டா, குட்டி பசங்க பாவாடை, சட்டை, ஃபேண்ட்ல சின்ன சின்ன டிசைன் போட உதவும்.

நன்றி:   எம்ப்ராய்டரி போட, நூல் கோர்த்து கொடுத்து, கற்கள் பதித்து  உதவி செஞ்ச என் மழலை செல்வங்களுக்கு..,

இது ஒரு மீள் பதிவு....,

11 comments:

 1. தொடர்ச்சியா செய்றேன்னு சொல்லுங்க... ஒரு சேலை பண்டலை அனுப்பி வைக்கிறேன்... - உண்மையிலே சகோதரி...

  // அங்கங்கு, ”கமல் தையல்” போட்டு //

  அதென்ன கமல் தையல்...?

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஒரு தையல் தான் அண்ணா! பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அதை தனி பதிவாகவே போட்டுருறேன்.

   Delete
 2. அத்தை செய்த சீர் ஜோரா இருக்கு... இங்கயும் ஒன்று பார்சல்....:)

  ReplyDelete
 3. அழகோ அழகு! எவ்ளோ திறமை உங்களுக்கு..வாழ்த்துக்கள் ராஜி! :)

  ReplyDelete
 4. அருமையா இருக்கு புடவை..எனக்கெல்லாம் ரசிக்க மட்டும்தான் தெரியும்..

  ReplyDelete
 5. அருமை அக்கா... அம்மாவிற்க்கு இது போன்ற வேலைகள் செய்வதில் மிகவும் விருப்பம்... நீங்கள் போடும் அனைத்து கை வேலை பதிவுகளையும் அம்மாவிடம் காட்டுவேன் இதையும் காட்டிவிட்டேன் தன் பழைய புடைவையை புதிதாக்க கிளம்பி விட்டார்... :)

  ReplyDelete
 6. //ஓக்கே அத்தை, நீ எம்ப்ரய்டரி போட்டு தந்தாலே போதும்ன்னு சொன்னான். //

  இங்க ஒரு டவுட்டு.... திடீர்னு எங்கேயிருந்து சொன்னான்..... நு வந்தது?

  ரொம்ப அழகா இருக்கு டிசைன்....

  ReplyDelete
 7. மிகவும் அழகாய் உள்ளது சகோதரி தொடர்ந்தும் அசத்துங்கள்
  உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
  த .ம.5

  ReplyDelete
 8. உங்க மருமக கேட்டிகாரபிள்ளைதான்! அத்தைக்கிட்ட என்ன கேட்கணும் ,எப்படி கேட்கனும்னு தெரிஞ்சு வைச்சுருக்கே! இவ்ளோ ஒழுங்கா போட எவ்ளோ பொறுமை வேணும் ! என் தோழி அனிதா போடுவாள் ! சூப்பர் அக்கா!

  ReplyDelete
 9. Organicandherbal.blogspot.com

  ReplyDelete
 10. Organicandherbal.blogspot.com

  ReplyDelete