Saturday, March 22, 2014

என்னவருக்கு வந்த ஊடல்


திங்கள் கிழமை மதியம் வரை என்னோடு நல்லாவே உறவாடிக்கிட்டு இருந்த என்னவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அதுக்கப்புறம் என்கிட்ட பேசுறதையே நிறுத்திக்கிட்டார். எம்புட்டு யோசிச்சும் நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு புரியவே இல்ல. எவ்வளவோ சமாதானப்படுத்தியும், கெஞ்சியும் கேட்டுப் பார்த்துட்டேன். ம்ஹூம் நோ ரெஸ்பான்ஸ். 

ஸ்கூல் விட்டு வந்த அப்புக்கிட்ட சொல்லி, சமாதானப்படுத்தப் பார்த்தேன். அப்படியும் சமாதானமாகி கோவம் குறையல. சரிடா, உடம்புக்கு எதாவது முடியலியோன்னு செக் பண்ணி பாருடான்னு சொன்னேன். அப்பு, உடம்பு  முழுக்க செக் பண்ணி பார்த்து, உடலில் இருக்கும் அழுக்கு, தூசிலாம் துடைச்சி புது ட்ரெஸ் போட்டு விட்டும் என்னுடனா என்னவரின் ஊடல் குறையல.


அவரின் ஊடலால் மனசு நொந்து போயிருந்த சமயத்தில் பெரிய பொண்ணு ஊரிலிருந்து வந்தாள். அவளிடம் சொல்லி சமாதானப்படுத்தப் பார்த்தேன். அவளும் என்னால முடியலைம்மான்னு சொல்லிட்டா. ச்சீ போ. உனக்கே இம்புட்டு கோவம் இருக்குன்னா, தப்பே செய்யாத எனக்கு எம்புட்டு கோவமிருக்கும்ன்னு சொல்லி, நாலு நாளாகத் திரும்பி கூடப் பார்க்காம இருந்துட்ட்டேன்.  

பெரிய பொண்ணுக்கு பிடித்ததை சமைத்துப் போடுவதும், அவளுடன் ஷாப்பிங் போவதிலும், சின்ன பொண்ணை பத்தாவது பரிட்சைக்கு தயார் செய்வதிலும் இருந்ததால் என்னவரின் பிரிவு எனக்கு பெருசா தெரியல. இன்னிக்கு தூயா ஊருக்குக் கிளம்பிட்டா. சின்னவ ஸ்கூல் போயிட்டா. தனிமை வாட்டவே, எதாவது டாக்டரைக் கூட்டி வந்து பார்க்கலாமா?ன்னு யோசிச்சுக்கிட்டே கடைசியாய் ஒரு முறை பேசிப் பார்க்கலாம்ன்னு வெட்கத்தை விட்டு அவரைத் தொட்டவுடன், தன் கோவத்தையெல்லாம் மறந்து, என்னுடன் சகஜமாகி, நாலு நாட்கள் பேசாதக் கதையெல்லாம் பேசித் தீர்க்க ஆரம்பிச்சிருக்கோம்.  பைசா செலவில்லாம, நாலு நாள் ஓய்விலேயே என்னவர் சகஜ நிலைமைக்கு திரும்பிட்டதுதான் எனக்கு ஆச்சர்யம்!!

மனிதருக்கு மட்டுமில்ல இயந்திரத்துக்கும் ஓய்வுத் தேவைன்னு இந்த நாலு நாளில் என்னவரின் ஊடலால் புரிஞ்சுக்கிட்டேன். இனி, அடிக்கடி, உனக்கு  கொஞ்சம் ஓய்வு தருகிறேன்  என் ஆசை கணினியே!

18 comments:

 1. Replies
  1. √ இதைத்தானே சொன்னீங்க

   Delete
  2. ஆஹா! சகோதரியைக் கலாய்க்க சகோதரர்கள்லாம் செட்டு சேர்ந்துட்டாங்கப்பா!

   Delete
 2. அருமை
  கடைசி வரி வரை
  அனுமானிக்க முடியவில்லை
  மிக மிக சுவாரஸ்யமான பகிர்வு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிப்பா!

   Delete
 3. அது தான் பதிவே வரவில்லையா...?

  கணினி எல்லாம் எம்மாத்திரம்...! சரி தானே சகோதரி...?

  ReplyDelete
  Replies
  1. கணினி வேலை செஞ்சது, ஆனா, இணையம் மட்டும் கனெக்ட் ஆகவே இல்லண்ணா! அதான் பிரச்சனை.

   Delete
 4. ஓ.... அப்படியா? ஹூம் ஊடலுக்குப் பிறகு கூடல்! நானும் வீட்டுக்காரரோடுதான் பிரச்னை போலும்னு நினைச்சேன்.

  ReplyDelete
 5. அது சரி... கொஞ்சம் ஓய்வு கொடுத்ததும் நல்லது தான்! :)

  ReplyDelete
 6. ஆஹா என்ன ஒரு கற்பனை. வூட்டுக்காரரைக் கூட சமாளிக்கலாம். கணினியைச் சரி செய்ய முயற்சி வேணும்தான். கணினி இல்லாமல் நாலு நாள் இருந்தீங்களா}}}}

  ReplyDelete
 7. //என்கிட்ட பேசுறதையே நிறுத்திக்கிட்டார்..// அப்பாடா, எந்த போதி மரத்துக்கடியில போனாரோ? ;-)

  ReplyDelete
 8. //உனக்கு கொஞ்சம் ஓய்வு தருகிறேன் என் ஆசை கணினியே!//

  ட்விஸ்டு வைக்கிறாங்களாம்.. அதான் பதிவு பப்ளிஷ் ஆகும்போதே அந்த படமும் வந்திடுச்சே.. :) :)

  ReplyDelete
 9. கணிணியை வைத்து இப்படி ஓரு கதையா சூப்பர்

  ReplyDelete
 10. ஆரம்பமே புரிந்து விட்டது! அந்த "என்னவர்" யார் என்று! சஸ்பென்ஸ் இல்லாம!!!!! அதான் இடுகைகள் இல்லையோ! என்னடா இது நம் சகோதரியின் கையும், மூளையும் ஓயாதே! ஏதாவது தட்டிக் கொண்டு சுவார்ஸயமா போட்டுக்கிட்டேதானே இருப்பாங்கனு! கிச்சன்ல ஒரு காலும், வெளில ஒரு காலும், டி.வில கண்ணும், "அவர்" கிட்ட கையுமாதானே இருப்பாங்க வழக்காம்னு நினைச்சேன்! மறுபடியும் அவரு கோபப்படாமப் பாத்துக்கங்க சகோதரி!

  ReplyDelete
 11. உள் ஜுரம் ஏதாவது இருக்கப் போவுது! எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டிருங்க!

  ReplyDelete
 12. இவ்வளோ தைரியமா? பாராட்டலாம்னு பாத்தா இப்படி ஆயிடுச்சே

  ReplyDelete
 13. ஆஹா, உங்களவருக்கு அவ்வளவு தைரியமா, பரவாயில்லை அவரிடமிருந்து அந்த தைரியத்தை நாமளும் கத்துக்கலாம்னு நினைச்சா, கடைசியில அது கணினியா?????

  கொஞ்சம் யோசிச்சு பார்த்த பிறகு தான் புரிஞ்சுது, ஆம்பிளைங்க எங்களுக்கு எப்படி அவ்வளவு தைரியம் எல்லாம் இருக்கபோவுதுன்னு......

  ReplyDelete