Monday, March 10, 2014

இதில் கூடவா ஏமாத்துவாங்க!? - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள சோகமா இருக்கே!?

தெருவுல பூச்செடிகள் வந்துச்சுங்க. செடிகள் வாங்கலாமேன்னு செடி விக்குறவரை கூப்பிட்டு, ஒரு பாலித்தீன் கவர் மேல ரோஜாச்செடி லேசா வடி இருந்துச்சு. ஏன் இப்படி வாடி இருக்குன்னு கேட்டதுக்கு, ”வெயில்ல வச்சுதானேமா சுத்துறேன். அதான்”ன்னு சொல்லி, லேசா கவரை பிரிச்சு வேரைக் காட்டினார். சரின்னு நானும் நம்பி ரெண்டு பூச்செடி வாங்கினேன். செடி நடலாம்ன்னு பள்ளம் தோண்டி செடி இருந்த பாலித்தீன் கவரைப் பிரிச்சா, மண்ணுக்கு மேல ரோஜாச்செடி கிளையும், மண்ணுக்குக் கீழ ஏதோ செடியின் சல்லி வேரையும் வச்சு ஏமாத்தி இருக்கான். அம்பது ரூபா போச்சு. அதான் சோகமா இருக்கேன்.

அடிப்பாவி! என்கிட்டச் சொல்லி இருந்தா நம்பிக்கையான இடத்துல இருந்து செடிகள் வாங்கித் தந்திருப்பேனே! இப்ப 50ரூபா போச்சே! இனி கவனமா இருந்துக்க!

சரிங்க மாமா! மாமா உடம்பு குண்டாகிட்டேப் போகுது! நான் நாளைக்கு காலைல இருந்து எக்சர்சைஸ் பண்ணவா!? டயட்ல இருக்கவா!?

ம்ம்ம் பண்ணு. ஆனா, என்ன எக்சர்சைஸ் பண்ணனும்!? என்ன டயட்ல இருக்கனும்ன்னு டாக்டரைக் கேட்டுட்டு அப்புறம் செய். வேணாம்ன்னு சொல்லல. 

ஏன் மாமா! நான் நெட்டுல பார்த்து ஏழு நாளில் ஏழு கிலோ எடைக்குறைப்பது பத்தி படிச்சு அதுப்படி நடந்துக்கலாம்ன்னு இருக்கேனே!!

அதெல்லாம் தப்பு புள்ள! டாக்டர் அட்வைஸ் இல்லாம இதெல்லாம் முயற்சி செய்யக்கூடாது புள்ள. என் ஃப்ரெண்ட் வெங்கடேசன் பொண்ணு உடம்பு குண்டாகிட்டே போகுதுன்னு திவிரமா டயட்லயும், எக்சர்சைஸிலயும் இறங்கி ச்சு. உடம்பு வெயிட்டும் குறைஞ்சது., கூடவே, பிபி, சர்க்கரை, கொலஸ்ட்ரால் லெவலும் குறைஞ்சு கோமா ஸ்டேஜ்க்குக் கொண்டுப் போய் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கு. அதனாலதான் சொல்றேன்.

சரி மாமா! ஹாஸ்பிட்டல் போய் டாக்டரைக் கேட்டு வந்து எடைக்குறைப்பை ஆரம்பிக்குறேன் மாமா!
ம்ம்ம்ம் நீ எக்சர்சைஸ்ன்னு சொன்னதும் நினைவுக்கு வருது. உன் ஃப்ரெண்ட் ராஜி, அப்பு, உனக்கு பதினெட்டு வயச்சானதும் ஜிம்முக்குப் போய் எக்சர்சைச் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சுக்கனும்டான்னு தன் பையன்கிட்ட சொல்லிட்டு இருந்தா.

அதுக்கு அப்பு, SIX PACK BODY ன்னா என்னம்மா!?ன்னு கேட்டான். கை, மார்புல சதைலாம் குண்டு குண்டா இருந்தா அதுதான் சிக்ஸ் பேக்ன்னு ராஜி சொன்னா. உடனே அப்பு, "ஆறடி மண்ணுல புதையைப்போற உடம்பு" ன்னும் அர்த்தம் வரும்ன்னு சொல்லி ராஜி வாயை அடைச்சான். 

அவன் தன் அம்மாவோட சேர்ந்து பல பிளாக் படிக்குறதால அவன் அம்மா போலவே அவனும் புத்திசாலியாகிட்டே வரான் மாமா! ஒரு ஜோக் சொல்லவா!?

யாரு உன் ஃப்ரெண்ட் ராஜி புத்திசாலியா!? நேரக்கொடுமைடி. ஏதோ ஜோக் சொல்றேன்னு சொன்னியே! இதான் ஜோக்கா!?

ம்ம்க்கும் ரொம்பதான் மாமா உங்களுக்கு நக்கலு!! 
"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...

வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!
ஜோக் பரவாயில்ல புள்ள! ஆனா, சிரிப்புதான் வரலை. சரி நான் ஒரு விடுகதை கேக்கவா!? பதில் சொல்லுறியா!?

சொல்லுறேன் மாமா!

நாலு மூலை சதுரப் பெட்டி. அதில் ஓடுமாம் குதிரைக் குட்டி. அது என்ன!?

ப்ப்பூ இவ்வளவுதானா!?  இருங்க பதில் சொல்றேன்.

24 comments:

 1. // புத்திசாலியாகிட்டே வரான் மாமா // நக்கல் செய்வதற்கு காரணம் இருக்கு சகோதரி... அம்மியும்,அரைக்கும் கல்லும் - ன்னு (விடை) அவருக்குத் தானே தெரிய வாய்ப்பிருக்கு...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. விடை சரிதான் அண்ணா!

   Delete
 2. "அவன் தன் அம்மாவோட சேர்ந்து பல பிளாக் படிக்குறதால அவன் அம்மா போலவே அவனும் புத்திசாலியாகிட்டே வரான் மாமா! ஒரு ஜோக் சொல்லவா!?"

  இதுவே நல்ல ஜோக் தானே அக்கா.. :))

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமா சகோ!?

   Delete
  2. இக்பால் - செம்ம Counter .... :)

   Delete
  3. ஆஹா! செட்டு சேர்ந்துட்டீங்களா!?

   Delete
 3. சதுரங்கம்னு நினைச்சேன்..தப்போ?

  ReplyDelete
  Replies
  1. தப்புதான் கிரேஸ்! சரியான விடையை தனபாலன் அண்ணா சொல்லிட்டார்.

   Delete
 4. இடையிடையே அதோ படம் போட்டிருக்கீங்களே என்னாது ....?

  ReplyDelete
  Replies
  1. வாக்கிங்க் போய் உடம்பு வெயிட் குறைக்கனும்ன்னு எனக்கு நானே சொல்லிக்குறேன்

   Delete
 5. தெருவில் விற்கும் ரோஜா செடிகள் குறிப்பாக சிறிய செடியிலே பூத்தது மாதிரி இருப்பவை வாங்க கூடாது. அதை வாங்கி வைத்தாலும் சரியாக வளராது. பூக்கவும் செய்யாது. விரைவில் பட்டுப்போகும். என் அனுபவத்தில் கண்ட உண்மை இது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இனி கவனமா இருக்கேன் சகோ!

   Delete
 6. அக்கா எப்படி தான் உங்கள நீங்களே கலாய்ச்சு குரிங்கலோ ?
  வழிப்பறி ஜோக் சூப்பர்!
  அப்புறம் இப்புடி வாக்கிங் போன நாமளா எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்க ??!!அட அந்த படத்தை சொனேன்!

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் பார்க்க மாட்டாங்க. வாங்க சகோ வாக்கிங்க் போகலாம்!

   Delete
 7. அம்மியும் குழவியும்ன்னு தனபாலன் சார் சொல்லியாச்சு...
  ஜோக் அருமை அக்கா...

  ReplyDelete
 8. ஐஞ்சுவை அவியல் சுவையாக இருந்தது தோழி.

  ReplyDelete
 9. ஐஞ்சுவை ருசித்தேன் !

  ReplyDelete
 10. ஐஞ்சுவை அவியல் சுவையாக இருக்கிறது ஆனால் வீட்டில் சமையல் எப்படி இருந்துச்சு என்ற உண்மையை சொல்ல உங்க வீட்டுல யாருக்காவது தைரியம் இருக்கா? tha.ma 9

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டில் நல்லா இருக்குன்னு சொல்லத்தான் தைரியம் வேணும். ஏன்னா, நல்லா இருக்குன்னு சொன்னா அடிக்கடி சமைச்சு இம்சிப்பேனே! அதனால, சமையல் நல்லா இல்லாட்டி பட்டுன்னு சொல்லிடுவாங்க.

   Delete
 11. ஜோக்குல கூட ஆண்களைத்தான் காலைவாரி விடனுமா சகோ!!!

  ReplyDelete
 12. நல்ல அவியல்.....

  சொக்கன் சுப்ரமணியன்: உங்கள் ஆதங்கம் எல்லா ஆண்களுக்கும்! :)))

  ReplyDelete