Monday, May 12, 2014

இந்தப் பதிவர்களே இப்படித்தானா!? - ஐஞ்சுவை அவியல்

                         
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
        
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ராஜியோட பையன் அப்புக்கு ரொம்ப கோவம் வரும்.  ஒரு முறை தமிழ்வாசி பிரகாஷ் தன் பதிவுல கோவம் எவ்வளவு தப்புன்னு பதிவு போட்டிருந்தார். அதாவது, ஒரு அப்பா தன் பையன்கிட்ட உனக்கு கோவம் வரும்போதுலாம் ஒரு ஆணியை மரத்துல அடின்னு சொல்றார். அந்த பையனும் செய்றான். கோவம் தனிஞ்சதும் அந்த ஆணியை புடுங்கச் சொல்றார். பையனும் அதேப்போல செய்றான். கொஞ்ச நாள் கழிச்சு அந்த மரத்தை பார்க்கச் சொல்றார். ஆணி அடிச்ச தழும்பு அப்படியே மரத்துல இருக்கு. அதனால, கோவம் மறைஞ்சாலும் அதோட பாதிப்பு மறையாதுன்னு போட்டிருந்தார்.

அதை தன் பையனைக்கிட்ட அதைப் படிக்க சொன்னா ராஜி. அதுக்கு ராஜியோட பையன் அப்பு, ஏன்மா! கோவப்படாதடா! கோவப்பட்டா உடம்புக்கு ஆகாது, அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்ன்னு சொல்ல வேண்டியதுதானே! அதைவிட்டு இப்படி சுத்தி வளைச்சு ஏன் சொல்லனும்!? நீங்க மட்டுமில்ல உங்க பதிவர்களுக்கே நறுக் சுறுக்குன்னு சொல்லத் தெரியாதா!? வளவளன்னு சுத்தி வளைச்சுதான் சொல்வீங்களோ!? புத்தி சொல்றேன்னு நல்லா இருக்கும் மரத்துல வேற ஆணி அடிக்கச் சொல்றிங்க. மரமும் ஒரு உயிர்தானே! அதுக்கு வலிக்காது!?ன்னு கேட்டு ராஜியை படுத்தி எடுக்குறான் மாமா!

பின்னே குழந்தைகளுக்கு புத்திச் சொன்னாலே இப்பலாம் பிடிக்குறதில்ல. அதுலயும் சுத்தி வளைச்சு சொன்னா இப்படித்தான் நடக்கும். ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லுப் பார்ப்போம்!!

கேளுங்க மாமா!


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
இதான் புள்ள விடுகதை. நல்லா யோசிச்சு பதில் சொல்லு. பதில் சொல்லச் சொன்னா ஏன் இப்படி மூஞ்சை அஷ்டக்கோணலாக்குறே!? சும்மாவே உன் மூஞ்சி பார்க்க சகிக்காது. இதுல இப்படி ஒரு சேஷ்டை தேவையா!?
                           
                                           


நான் ஒண்ணும் பதில் தெரியாம முழிக்கல மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்தையா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க . மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குற பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.

22 comments:

 1. /// பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே,///

  இப்ப உள்ள கல்விமுறையில் என்ன படித்தால் எதைப்படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுதான் சொல்லி தருகிறார்களே தவிர எப்படி நடந்துக்கனும் என்று சொல்லி தருவதில்லை அதனால் படிப்புக்குக் இதற்கும் சம்பந்தமில்லை. இதற்கு குறை சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் உள்ள பெரியோர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்

  ReplyDelete
 2. நொடியில் வந்து விட்டேன்...

  நான் ஈ.............. ஹிஹி...

  விடை : ஆங்கில e

  ReplyDelete
 3. விடுகதைக்கு விடை "கரண்ட்?"

  ReplyDelete
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 5. பலே அப்பு...! பல்வலி அனுபவ வைத்தியமா... ஸேம் பிளட்! புதிரின் விடைய நான் சொல்றதுக்குள்ள டி.டி. சொல்லிட்டாரு. ஈஈஈஈஈ!

  ReplyDelete
 6. புள்ளங்ககிட்ட இப்படில்லாம் வாங்கிகிட்டு டோட்டல் பதிவரையும் டேமேஜ் செய்தா என்ன அர்த்தம்க்கா?
  வீட்டு பக்கமா வர ரொம்ப யோசனையா இருக்கு.....வந்தாலும் பதிவர்னு சொல்லிடாதிங்கக்கோ ..

  ReplyDelete
 7. //நீ முதல்ல சமையல் செய். நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். // ஹா ஹா ஹா செம

  ReplyDelete
 8. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 9. சகோதரி! படிப்புக்கும், னம்ம நடந்துக்கற முறைக்கும் சம்பந்தமே கிடையாது! ரொம்ப மெத்தப் படிக்காதவங்க நிறைய பேர் மிக நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்! பெற்றொர்களின் வளர்ப்பிலேதான் எல்லாமே!

  ஜோக்கு அருமைங்க!

  புதிர் அதான் நம்ம DD நண்பர் இப்படி பிசிஈஈஈஈஈஈஈ யாக இருக்கும் போது.......!!!!!! எங்க எல்லோருக்கும் சேர்த்து ரெப்ரசன்ட் பண்ணி சொல்லிடுவாரு..........அதனால எங்க எல்லாருக்கும் மூளையக் கசக்கற வேலை மிச்சமுங்க! ஹி ஹி ஹி ! என்ன ஒரு எஸ்கேப்பு!

  ReplyDelete
 10. ஐஞ்சுவை அவியல் நன்று! எனக்குப் பிடித்தது கார குழம்பு!

  ReplyDelete
 11. ஐஞ்சுவை அவியல் காரம் கொஞ்சம் அதிகம். (நான் முன்பு படித்த ஆணி பிடுங்கிய கதையில் மரத்திற்குப் பதில் கதவு வரும்) பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. இன்றைய கல்வி முறை எதை போதிக்குதுன்ற கேள்வி அடிக்கடி தோன்றிட்டுதான்கா இருக்கு.... வீட்டில் பெற்றோர்களுக்கும் நேரமே(?) இருப்பதில்லை... இதில் பிள்ளைகள் இப்படிதான் வளர்கிறார்கள்... புதிருக்கான விடையை வழக்கம் போல் டிடி சார் கமெண்ட் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்... சொத்தைபல் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வா சொல்லிருக்கீங்க நன்றி...

  ReplyDelete
 13. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 14. ஐந்சுவை அவியல் சூப்பர்.

  புதிருக்கு விடை எனக்கு முன்பே திண்டுக்கல் கொடுத்துவிட்டார்.

  ReplyDelete
 15. அடாடா, பதிவர்களைப் பற்றி என்னமா தெரிந்து வைத்திருக்கிறான் உங்கள் மகன்.

  ReplyDelete
 16. பையன் சொல்லுவதும் சரிதான்:)))

  ReplyDelete
 17. சுவையான அவியல்! பல்வலி மருத்துவ குறிப்புக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 18. Iymsuvai aviyalil karam athigam pragalathanin kathai arumai avan innoru varam kettan chinnakuzhaithaigal kizhe vizhunthal ennai boomathevi thangiyathupol thangavendum enran inrim kuzhaithaigal kizhe vizhunthal adipaduvathillai enna periya manasu

  ReplyDelete
 19. அப்புவின் கேள்வியில் உள்ள நியாயம் அசத்துகிறது. அப்புவுக்கு என் பாராட்டுகள். ஐஞ்சுவையில் அனைத்தும் சுவை... அருமை ராஜி.

  ReplyDelete
 20. சுவையான அவியல்
  அடுத்த அவியலுக்கு ஏன் இத்தனைத் தாமதம் ?

  ReplyDelete