திங்கள், ஜூன் 02, 2014

கடவுள் எங்கு இருக்கிறார் என்பதை உணர்ந்தது புரோகிதரா?! இல்ல ”அந்த” தாத்தாவா!? - ஐஞ்சுவை அவியல்

நெகிழ்ச்சி:

கடந்த வெள்ளி(30/05/2014) அன்னிக்கு அப்பாவோட அறுபதாவது வயது முடியுறதால திருக்கடையூர் கோவிலுக்கு போய் வந்தோம். அவங்கவங்க வசதிக்கேத்த மாதிரியும், பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரியும் யாகம் வளர்த்தி, கல்யாணம் செய்து வைக்குறாங்க. அப்பாக்கு இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாததால, நாங்க எந்தவித முன் ஏற்பாடும் இல்லாம,  ரொம்ப சிம்பிளா ரெண்டு மாலை, அர்ச்சனையோடு அப்பா, அம்மாக்கு அறுபதாம் கல்யாணத்தை செஞ்சுட்டு வந்திட்டோம்.  அது பத்தி தனியா ஒரு பதிவு வரும்...,  

அங்க கண்ட ஒரு காட்சி..., வயதான ஒரு ஜோடி கோவிலுக்குள் வந்தாங்க. அவங்க முகம், உடையைப் பார்க்கும்போதே தெரிஞ்சது வறுமையில் இருக்காங்கன்னு..., அர்ச்சகர்கிட்ட அந்த தாத்தா தன்கிட்ட இருந்த மஞ்சள் கோர்த்த கயிறைக் கொடுத்து சாமி பாதத்துல வச்சுக் கொடுங்க. நான் இவ கழுத்துல கட்டுறேன்னு சொன்னார். அப்படி தாத்தா சொன்னதும் பாட்டி கன்னத்துல ரூஜ் தடவாமலயே வெட்கச்சிவப்பு. அர்ச்சனை டிக்கட் வாங்கினியான்னு அர்ச்சகர் கேட்டார். அதுக்கும் கூட அந்த தாத்தாவுக்கு வசதியில்லப் போல!! இல்லன்னு சொன்னார். உடனே, அந்த மஞ்சள் தாலிக் கயிற்றை தாத்தாக்கிட்டயே கொடுத்து போய் அர்ச்சனை டிக்கட் வாங்கி வாங்க அப்பதான் சாமி பாதத்துல வச்சு தருவேன்னு சொல்லிட்டார். தாத்தா எவ்வளவோ கெஞ்சியும் கேக்கல. 

அர்ச்சனை செய்ய வரிசையில் நின்னுட்ட இருந்த  என் அப்பா. அர்ச்சனை முடிஞ்சதும் என் பையனை கூப்பிட்டு அப்பு, போய் ஒரு அர்ச்சனை டிக்கட் வாங்கி வந்து அந்த தாத்தாக்கிட்ட கொடுன்னு சொல்லிட்டு இருந்தார். நாங்க அர்ச்சனை முடிச்சு வெளிய வந்து டிக்கட்டோடு அந்த தாத்தாவை தேடும்போது , கோவில் தூணில் இருக்கும்  சிலை முன் தாலியை பாட்டிக் கழுத்தில் கட்டினார். அதைப் பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்ச்சி. உடனே, எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் கொடுக்க எடுத்து வச்சிருந்த சேலை, வேட்டி சட்டையை ஒரு தட்டில் வச்சு அந்த ஜோடிகளுக்கு கொடுத்து ஆசிர்வாதம் வாங்குனோம். முதலில் மறுத்தாலும் எங்க வற்புறுத்தலால் வாங்கி அப்பவே உடுத்திக்கிட்டாங்க. திருப்பி மரியாதை செய்ய என்கிட்ட ஒண்ணுமே இல்லன்னு சொன்னவர் தான் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வந்ததை சாப்பிடனும்ன்னு சொல்லி எங்களுக்கு கொடுத்தாங்க.

சாமிக்கு அர்ச்சனை செஞ்சுட்டா மட்டும் போதுமா!? கோவிலுக்கு வரும் பக்தனின் மன்நிலை, பணநிலையை கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா!? ஒரு அர்ச்சனை டிக்கட்னால வரும் பங்கு இல்லாமப் போனால்தான் என்ன!? அந்த சொற்ப பணத்தை விட அந்த வயதான மனிதரின் ஆசை அற்பமானதா!? பணம்தான் இறைவனுக்கும், பக்தனுக்கும் இடைத்தரகரா!? இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா!?

யோசிக்க வைத்த படம்:

வாங்கிக் கட்டிக்கிட்டது:
தூயா பொறந்ததுக்கப்புறம் ஆண்பிள்ளை வேணும்ன்னு, அதுக்காக, இனி சனிக்கிழமை, புரட்டாசிகளில் அசைவம் சாப்பிட மாட்டேன்னு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொல்லிக்கிட்டேன். அதுக்கப்புறம் இனியா பொறந்து அப்பு பொறந்தாலும் கடவுள் கிட்ட சொன்னதை இதுவரை அப்படியே கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்.  ஒருமுறை டூர் போய்க்கிட்டு இருக்கும்போது இன்னிக்கு நைட் அசைவம் சாப்பிடலாம்ன்னு எல்லோரும் முடிவு பண்ணாங்க. உடனே, தூயா, இன்னிக்கு சனிக்கிழமை அம்மா அசைவம் சாப்பிட மாட்டாங்கன்னு சொன்னா. ஹோட்டலுக்குப் போனோம். எல்லோரும் பரோட்டா, பிரியாணின்னு வெளுத்து வாங்கும் போது நான் மட்டும் ப்ரெட்,ஜாம்ன்னு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.

ஏம்மா! இதுவரைக்கும் ஒரு சனிக்கிழமைகள்ல உனக்கு அசைவம் சாப்பிட தோணலியா!? எங்களுக்குலாம் சமைச்சுக் கொடுத்துக் கூட இருக்கே! அன்னிக்கு கூட நீ சாப்பிட்டதில்லையேன்னு கேட்டா. அதுக்கு நான், சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டதால அது மாதிரியான எண்ணம் வராதுன்னு சொன்னேன்.  ஏன் வரலின்னு கேட்டா. தெரியலையே! அதான் சாமி இருக்குங்குறதுக்கு அடையாளம்ன்னு சொன்னேன். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட்டா என்னாகும்!?ன்னு இனியா கேட்டா. எங்க பேச்சைக் கேட்டு ரொம்ப கடுப்புல இருந்த அப்பு , ம்ம்ம்ம்ம்ம் சாப்பிட்டதுலாம் ஜீரணம் ஆகும்ன்னு சொன்னான்.
ரசித்த கவிதை: 
பக்கத்தில் அமர்ந்திருப்பது
அத்தையா!? சித்தப்பாவா!?
என ஊகிக்க முடியாமலயே தொடர்கிறது
என் பேருந்து  பயணம்.
யோசிக்க வைத்தது:
ஒன்றுமே இல்லாத ஒன்று
எல்லாவற்றையும் உடைய ஒன்றை அழிக்கின்றது!!
அந்த ஒன்றுமில்லாத ஒன்று எது!?
எல்லாம் உடையது எது!?

30 கருத்துகள்:

 1. இது போன்ற ஒரு சில அர்ச்சகர்களால் எல்லோருடைய பெயரும் கெட்டுவிடுகிறது! அப்புவின் டைமிங் காமெடி ரசித்தேன்! கவிதையும் யோசிக்க வைத்ததும் என்னை யோசிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ!

   நீக்கு
 2. இப்படிச் சிக்கல் ஒரு தடவையா? இரு தடவையா? வெறுத்தே விட்டது. 2 தரம் தமிழகம் வந்து மிகப் படுத்திவிடார்கள்.தங்களால் முடிந்ததைச் செய்துள்ளீர்கள். தங்கள் பெற்றோருக்கும், தங்களுக்கும் இதுவே நல்லூழ்.
  அசைவம் உண்ணுவதில் கட்டுபாடு, இறைவனுக்காக என்பதிலும் அது நமக்கு நலமெனக் கொள்வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய கோவில்களுக்கும், இதுப்போன்ற பரிகார ஸ்தலங்களிலும் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது கோவிலுக்கு போகத்தான் வேணுமான்னு தோணுது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 3. உண்மையில் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் தந்தையின் அறுபதாம் கல்யாணத்திற்கு சென்று விட்டு, ஒரு தாத்தா பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  அப்புவிற்கு சரியான sense of humor. அந்த வரியை படிச்சு முடிச்சவுடனே சிரிப்பை அடக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் படும் பாடு உங்களுக்கு சிரிப்பாய் இருக்கா!?

   நீக்கு
 4. Ainsuvaiyil muthal suvai arumai, kangalil neerai varavalaithathu...... unmaithaan panathukkuthaan ingu mathippe !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் பாதாளம் வரை பாயும் என்பதெல்லாம் சரி. ஆனா, அது கோவிலில் கூடவா பாயனும்!?

   நீக்கு
 5. இரக்கமில்லாத அர்ச்சகர் இறைவன் சன்னதியில் சேவை செய்ய தகுதியில்லாதவர்

  பதிலளிநீக்கு
 6. என்ன சூழ்நிலையோ அந்த வயதான தம்பதிக்கு? ... அவர்களுக்கு நல்லதொரு பரிசும் உங்களுக்கு பாக்கியம் மிக்க ஓர் ஆசீர்வாதமும் கிடைக்க ஆண்டவன் அருள்தான் என்னே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் அவங்க கஷ்டத்தை எங்கக்கிட்ட பகிர்ந்துக்கலை. பகிர்ந்திருந்தலாவது எதாவது உதவி செய்திருக்கலாம். நன்றாய் வாழ்ந்து கெட்டவர் போல!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 8. அப்ப உண்மையில் சாமி அங்கெ கோவிலினுள் இல்லை என்னெனில் அந்த சாமிக்கே அந்த பெரியவரின் ஆசையை நிறைவேத்த முடியவில்ல்லை ஒரு சிலைதான் நிறைவேற்றியது என்றால் அங்குதான் தெய்வம் இருக்கவேண்டும் ...இப்படிதான் மனிதர்களை காலம் காலமாக ஏமாற்றுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் நினைக்கத் தோணுது!

   நீக்கு
 9. /// பணம்தான் இறைவனுக்கும், பக்தனுக்கும் இடைத்தரகரா!? இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா!? ///

  முடிவில் "யோசிக்க வைத்த"ற்கு இதில் பதில் உள்ளது சகோதரி...

  பதிலளிநீக்கு
 10. ஒரு சமயம் ... பணம் உள்ளவர் இடத்தில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரோ?!!

  கடவுள் தூணிலும் இருக்கிறார் என்பதை “அந்த“ தாத்தா உணர்ந்தவர் போல...
  நல்ல பகிர்வு தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் நினைக்கத்தோணுது அருணா!

   நீக்கு
 11. என்னைப் பொறுத்தவரை கோயிலில் என்று உண்டியல் என்பதையும், சிறப்பு தரிசனம் என்னும் முறையினையும் கொண்டுவந்தார்களோ,அன்றே இறைவன் அவ்விடத்தைக் காலிசெய்துவிட்டுப் போயிருப்பான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபடியும் கூட இருக்கலாமுங்க!

   நீக்கு
 12. கானாமல் போனவர்களை கண்டுபிடித்த உணர்வுடன். என்னுடைய அறுபதாவது வயதில் மனைவி மற்றும் சிலருடன் நிகழ்ந்தது. நானும் என் மனைவியும் தீபார்தனை காட்டும்போது எங்கள் பக்கத்தில் வயதான பெறியவர் ஒருவர் வந்து நின்று தேவாரப்பாடலை மனமுருகி பாடினார். ஏனோ தெறியவில்லை நாங்கள் நெகிழ்ந்து போனோம் அறுபதாம் கல்யாணம் பற்றிய திட்டம் ஒன்றும் அப்போது இல்லை. எங்கள் உடன் வந்தவர்களிடம் சர்தார்நிகழ்வை பகிர்ந்து கொண்டோம் அவர்கள் விரும்பியவாறு அன்றைக்குர்ிறைய தனம்றை உணவை வந்தவர்களிடம்கோவில் அண்ணதானத்திட்டத்திற்கும் எங்கள் உடன் வந்தவர்களுக்கும் உணவுவளித்து மகிழ்ந்தோம்

  பதிலளிநீக்கு
 13. உண்மையில் இது நல்ல பதிவு. இன்றய நிலையை அழகாக எடுத்து காட்டும் பதிவு. மக்கள் பணத்தை மட்டுமே தேடி செல்கிறர்கள், மனித உனர்வுகளை மதிக்க மறந்து விடுகின்றனர். இது தான் இன்றய தமிழக நிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழக கோவில்களில்தான் இந்நிலைன்னு நினைக்குறேன். மத்த மாநிலங்களில் பரவாயில்ல ரகம்தான்

   நீக்கு
 14. சமூக அவலத்தை படம் பிடித்து காட்டிட்டீங்க..கவிதை மட்டும் புரியவில்லை.. அத்தை, சித்தப்பா.. விம் ப்ளீஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீ எல்லாம் ஆவிப்பா எழுதறதுக்குதான் லாயக்கு. அதாவது நாகரீக காலத்தில் ஆணா!? பெண்ணா!?ன்னு புரிப்படாத அளவுக்கு நடை, உடை, பாவனை இருக்குன்னு சொல்றார்

   நீக்கு
 15. 'நெகிழவைக்கும் பதிவு. மனிதர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள் கடவுளின் அருளை எவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்?

  பதிலளிநீக்கு
 16. நெகிழ வைத்த பதிவு. பல கோவில்களில் இதே நிலை தான்.....

  கவிதை.... - இன்றைக்கு பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்! உடை வைத்து கண்டுபிடிப்பது கடினம்.

  பதிலளிநீக்கு