இன்று நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பற்றி பார்க்கப்போகிறோம்.80-களில் இடுப்பில ஜட்டி போடாத குழந்தைகளை கூட
பார்த்து இருப்போம் .ஆனா தாயத்து இல்லாத குழந்தைகளை பார்ப்பது மிக அரிது .இன்றைய நாகரீக கால ஓட்டத்தில் இவைகள் எல்லாம் மறைந்து விட்டாலும் சில இடங்களில் இன்னமும் அந்த பழக்கம்
இருக்கத்தான் செய்கிறது.சரி நம்முடைய நாட்டில் மட்டும் தான் இப்படி என்று
நினைச்சோம்னா, உலகம் பூரா இந்த வழக்கம் பரவலா இருந்துவந்திருக்கு,.அதுபற்றிய ஒரு
பதிவை இப்ப நாம பார்க்க போறோம்
இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில்
பிரபலமான ஒன்று பெரும்பாலான வீடுகளில் சுவர்களில்ல தான் தொங்கவிடுறாங்க கண்திருஷ்டிலிருந்து தடுக்க என்று சொல்லப்பட்டாலும் ,வரலாற்றில் இதன் பயன்பாடு பல்வேறு சமூகங்களில் பாதுகாப்பிற்கான
சின்னமாகவும் பயன்படுத்தி இருக்கிறாங்க .
திறந்த நிலையில் இருக்கும் இந்த வலதுகை சின்னமானது ,சுவர்களில்
மட்டுமல்ல ,ஆபரங்களாகவும், யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே
பயன்படுத்தப்படுகிறது .ஹம்சா என்றால் ஐந்து அல்லது கைகளில் உள்ள ஐந்து விரல்களை என்றும்
சொல்லப்படுவதுண்டு. இது அவர்களுக்கு தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு
அளிப்பதாக நம்பப்பட்டு வருகிறது..இந்தவழக்கம் பண்டைய எகிப்து நாகரீகத்தினரிடமும் ,மற்றும் பண்டைய Carthage (modern-day Tunisia) துனிசியா சமூகத்தின் வழியாக நடைமுறைக்கு வந்தது எனவும்
கூறப்படுவதுண்டு.
இது முதன்முதலாக பண்டைய மெசபடோமியா
(இன்றைய ஈராக் )பகுதியில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது என ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்..திறந்த நிலையில் இருக்கும் இந்த கைகள் சிக்கல்களிருந்து அவர்களை காக்கும் இஷ்தார் என்னும் (மெசபடோமியன் நாகரீகத்தில்
வணங்கி வந்த பெண்)தெய்வத்தின் கைவடிவிலான தாயத்து என சொல்லப்படுகிறது.இந்த தாயத்துவடிவிலான கைகளை சுற்றி உள்ள குறியிடுகள் ,வீனஸ் என்ற பெண்
தேவதையின் கைகள் என்றும் அவைகள் தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் தெய்வீக
குறியிடுகள் என்றும் சொல்லப்படுகின்றன .
மேலும் ,பெண்கள் வலுவாக இருக்கவும் ,நல்ல குழந்தைகளை
பெற்றெடுக்கவும் அவர்கள்,வாழ்வில் தீய சக்திகளினால் பிரச்சனைகள் வராமல் இருக்கவும்,திருமணவாழ்க்கை நன்றாக அமையவும் இந்த தாயத்து பயன்படுத்தி வந்தனர் பண்டைய எகிப்தியரின் கோட்பாடுகளின்
படி ,இது கடவுள்களின் கைகள்,இதன் மூலம்
கடவுள் எங்கும் இருக்கிறார் என்று நம்பிக்கைவைத்தனர் .அதில் இருக்கும் கண்கள் ஆகாய
கடவுள் ஹார்ஸ்சினுடையது என்றும் ,அவருடைய இரண்டு கண்களாக சூரியனும் ,சந்திரனும் உள்ளனர் என்றும் அதுவே அவர் மனக்கண்ணாக இருந்து பார்த்து
வருகிறார் என்றும் , தப்பு செய்கிற எவரும் அவர்களுடைய மனச்சாட்சியிடம் இருந்து தப்பிக்க
முடியாத அளவு பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்ற நம்பிக்கையும் கொண்டு வழிபாட்டு
வந்துள்ளனர்.இஸ்லாமியர் இது பாத்திமாவின் கரங்களாக
ஆபத்துகளில் இருந்து காக்கும் கரங்களாக வழிபட்டு வந்துள்ளனர் .
.
இதன் பயன்பாடு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே
யூதர்களாலும் ,அதன் பின்பு இஸலாமியர்களும் வழிபாட்டு வந்திருக்கிறது ,யூதர்கள்
இந்த ஐந்து விரல்களையும் கடவுளரின் ஐந்து நிலைகளாக கருதி வழிபட்டுவந்தனர் இஸ்லாமியர்களால் மிக
முக்கியமாக பயன்படுத்தப்படும் இந்த தாயத்து,,யூத,மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா,மத்திய
கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலும் அறியதாக உபயோகத்தில் இருந்து வந்துள்ளது ..கிருஸ்துவர்களும் இதை மேரியின் கைகளாக பாவித்து வணங்கி வந்துள்ளனர் அதேபோல் இஸலாமியரின் ஆட்சி
ஸ்பெயினில் முடிவுக்கு வந்தவுடன் ஐந்தாம் சார்ள்ஸ் அரசர் 1526 ம் ஆண்டு இதற்க்கு தடைவிதித்தார்
இந்த ஹம்சா தாயத்தானது ,தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது .இது தெய்வங்களின் வலதுகையை குறிப்பிடுகிறது என்றாலும் ,மேலும், பாதுகாப்பும் பலமும் அளிக்கும் இது மிகவும் புனிதமானதும் மந்திரசக்தி கொண்டது என்றும் நம்பப்படுகிறது
அரபு மற்றும் பெர்பர் கலாச்சாரதில்
முக்கியத்துவம் வாய்ந்த இது ,அல்ஜீரியாவில் தேசிய சின்னமாகவும் இருக்கிறது. மேலும் குரானின்
வசனங்கள் அடங்கிய வெள்ளி பெட்டிகளின் வடிவிலும் இது உபயோகத்தில் உள்ளது..பண்டைய
எகிப்து கலாச்சாரத்தில் ,இந்த சின்னமானது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்க ,சிறுவர்களின்
தலைமுடி அல்லது கருப்பு நூல்களை கொண்டு அணிந்துகொண்டனர்..இந்த சின்னம்
இஸ்ரேல் மக்களால் இன்றளவும் அணிகலன்களிலும், வாழ்த்து அட்டைகள், லாட்டரி மற்றும் விளம்பரங்களில் இந்த சின்னம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது..சில இடங்களில் இந்த சின்னம் சுவர்களிலும் அலங்கரிக்கின்றன..பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருக்கும் இந்த சின்னம் அல்லது தாயத்து நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தாலும்,,உலகம் முழுவதும் பல சமூகத்தினராலும் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது.மீண்டும் இதுபோன்ற ஒரு வித்தியாசமான பதிவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி
அருமை .அருமை .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... ஆமா, இதென்ன இம்புட்டு பெரிய கமெண்ட்!?
Deleteநல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஇப்படியும் ஒரு நம்பிக்கையா...? வியப்பளிக்கிறது சகோதரி...
ReplyDeleteநம்பிக்கை என்பது அவரவர் உளவியல் சார்ந்ததுண்ணே!!
Delete