மாமா! வெட்டவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அசுத்தம்ன்னு சொல்லி வீட்டிற்குள் கழிப்பறை கட்டி வச்சிருக்கோம். இது சரியா?! வீடுகளுக்குள் கழிப்பறை வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் எம்மாம்பெரிய வீடுன்னாலும் கழிப்பறை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாதான் இருந்தது. திருட்டுபயம், சோம்பேறித்தனத்தினாலும், 800 அல்லது 1000 சதுர அடிகளில் மனைகள் வந்தபின் கழிவறை வீட்டிற்குள்ளயே கட்ட ஆரம்பிச்சி இப்ப கழிப்பறை நடு ஹால்லயே இருக்கும் நிலை வந்தாச்சு.
Showing posts with label ஐஞ்சுவை அவியல். Show all posts
Showing posts with label ஐஞ்சுவை அவியல். Show all posts
Monday, December 07, 2020
Monday, November 02, 2020
விட்டுட்டு போறதா காதல்!? எதற்கும் விட்டுட்டு போகாமல் இருப்பதே காதல்?! - ஐஞ்சுவை அவியல்
சிக்கனை வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆகுது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே! சிக்கன் கறிதானே சமைக்குறே?! என்னமோ பெரம்பலூர்ல வாழ்ந்த டைனோசர் கறி சமைக்குற மாதிரி இம்புட்டு நேரமா!?
சமைக்குறது அம்புட்டு ஈசியா?! ஒருநாளுக்கு சமைச்சு பாருங்க அப்ப தெரியும் எங்க கஷ்டம்..
Monday, June 15, 2020
கவலைகளை மறக்க இந்த பாப்பாவோட சிரிப்பை பாருங்க -ஐஞ்சுவை அவியல்
போர்க்கால அவசரத்துக்கு உதவும்ன்னு கோவில், அரண்மனைகளிலிருந்து கோட்டைக்கு வெளியில் அல்லது காடு, மலைகளுக்கோ போற மாதிரி சுரங்கப்பாதை அமைச்சிருப்பாங்களே! அதுமாதிரி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சுரங்கப்பாதை அமைக்கலாமில்ல!!
Monday, June 08, 2020
பெண்மனசு ஆழத்தையும் தெரிஞ்சுக்கலாம்.. ஆழ்கடல் ரகசியத்தை தெரிஞ்சுக்க முடியாதுபோல!! - ஐஞ்சுவை அவியல்
மாமா! என் போன்ல வால்பேப்பரா வைக்க நல்லதா ஒரு கடல் படம் தேடி தாயேன்..
என்ன புள்ள! திடீர்ன்னு கடல் படம் கேக்குறே?!
இன்னிக்கு சர்வதேச பெருங்கடல்கள் தினமாம். அதனால் அதுபத்திய பதிவை பார்த்தேன். அதான் கடல் படம் வைக்கலாம்ன்னு..
குரங்கு, யானை, விமானம், கடல் இவற்றின்மீதான பிரமிப்பும், ஆர்வமும் எத்தனை வயதானாலும் மக்களுக்கு குறையாது. இந்த பூமி எத்தனையோ விந்தைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதற்கு சற்றும் குறைவில்லாதது கடலும், கடல் சார்ந்த விசயங்களும்... கடலைவிட பிரம்மாண்டது கடல் சார்ந்த விசயங்கள்..
மெரினா கடற்கரைக்கு போய் இருக்கியே! அதை பார்த்தே பிரமிச்சு நின்னியே! தமிழ்நாடு முழுக்க நீண்டிருக்கும் கடற்கரைகளின் நீளம் எவ்வளவு தெரியுமா?!
தெரியாது மாமா...
தமிழ்நாட்டில் 997 கிமீ நீளத்துக்கு கடற்கரை இருக்காம். இந்தியாவில் இருக்கும் கடற்கரை 7,517கிமீ ஆகும். உலகத்தில் இருக்கும் மொத்த கடற்கரைகளின் நீளம் 5,50,000 கிமீ. கடலை ஒட்டிய கரையே அஞ்சரை லட்சம் கிமீக்கு மேல் நீண்டிருக்குதுன்னா., கடல் எந்தளவுக்கு பரந்து விரிஞ்சிருக்கும் . அப்படி பரந்து விரிந்திருக்கும் கடலில் இருக்கும் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் தெரியுமா?! 1450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன் அளவுக்கான நீர் இருக்காம் . இது பூமியின் மொத்த எடையில் 0,022 சதவிகித எடைதான் இருக்காம்.
போ மாமா! பொய் சொல்லாத! பூமியின் மேற்பரப்பின் மூன்றில் இரண்டு பங்கு கடல்ன்னு படிச்சிருக்கேன். அப்படி இருக்க, 0.022 சதவிகித எடைதானா இருக்கும்?!
ஆமா புள்ள, நீ சொல்ற பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நிரைஞ்சிருக்கும் கடலானது பூமிக்கு மேலதான் இருக்கு, பூமியின் குறுக்கு வெட்டு நீளம் கிட்டத்தட்ட 12,700கிமீ. , இதுல முதல் 5 டூ 10 கிமீக்குதான் கடல் தண்ணி இருக்கு. மிச்சம்லாம் மணல், பாறைகள், கற்கள், மலைகள்ன்னு இருக்கு. அதனாலதான் கடல்நீரின் எடையின் சதவிகிதமாகும். என்னதான் கடல் மூன்றில் இரண்டு பங்கு பூமியில் இருந்தாலும் பூமியின் மொத்த எடையில் ஒரு பங்கு கூட இல்ல. உதாரணத்துக்கு நம்ம உடம்பில் அதிகமா தென்படுவது தோல்தான். ஆனா, மொத்த தோலின் எடை எவ்வளவு இருக்கும்?! அதுமாதிரிதான் பூமியை மூடியிருக்கும் தோல்தான் கடல்ன்னு வச்சுக்கலாம். பூமிக்கடியில் இருக்கும் நெருப்பு குழம்பால் பூமியின் மேற்பரப்பு பாதிப்படையாமல் காக்கும் ஒரு இயற்கை அரணே இந்த கடல்ன்னு சொல்லலாம்.
உலகில் அட்லாண்டிக், பசிபிக், இந்தியன் பெருங்கல், அண்டார்டிக், ஆர்டிக்ன்னு மொத்தம் 5 பெருங்கடல்கள் இருக்குன்னு சின்ன வயசில் படிச்சிருக்கோம். இப்ப, அட்லாண்டிக் பெருங்கடலை வட அட்லாண்டிக், தென் அல்டாண்டிக்ன்னும் பசிபிக் பெருங்கடலை வட பசிபிக், தென் பசிபிக்ன்னு பிரிச்சு மொத்தம் ஏழு பெருங்கடலா ஆக்கி இருக்காங்க. தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு நிலத்தை வகைப்படுத்தி வச்சிருக்கிற மாதிரி பெருங்கடல்களை உப்புக்கடல், கரும்பச்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல்ன்னு ஏழா பிரிச்சு வச்சிருந்ததற்கான குறிப்புகள் இருக்கும்.
பெருங்கடல்களின் பகுதிகளாக கடல், வளைகுடா(Gulf) விரிகுடா(Bay), நீரிணை(Strait) இருக்கு. நாலு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்தது தீவுன்னும் சொல்றோம். அதாவது கடலுக்கு அடியில் இருக்கும் மலைகளின் உச்சிப்பகுதி கடலுக்கு வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும் பகுதிதான் தீவா உருவெடுக்குது. , மூன்று பக்கமும் கடல் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் மூடியது தீபகற்பம். இந்தியா தீபகற்ப நாடுன்னு சின்ன வயசில் படிச்சதை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.
ஐந்து வகை பெருங்கடல்களில் பசிபிக் பெருங்கடல்களில் பசிபிக் பெருங்கடல்தான் பெரியது.இப்ப இருக்கும் உலக நாடுகள் மொத்தமும் சேர்த்து பசிபிக் கடலில் வச்சாலும் இன்னொரு ஆப்பிரிக்க கண்டத்தின் நிலப்பரப்பையும் வைக்குற அளவுக்கு பசிபிக் பெருங்கடல் பெரிசாம். சீனா, ஜப்பான் நாடுகளுக்கு கிழக்காகவும், அமெரிக்காவுக்கும் மேற்காகும் இடைப்பட்ட பகுதில் பரந்து விரிநதிருக்கும் பசிபிக் பெருங்கடல் சில இடத்தில் இதன் அகலம் 16,000கிமீ இருக்கு. அதனால்தான் பசிபிக் கடலை தென், வட என பிரிச்சு வச்சிருக்காங்க. பூமி கிழக்கு பக்கமா சுத்துவதால், காத்து மேற்கு பக்கமா வீசும். இடையில் எந்த தடுப்பும் இல்லாததால் பசிபிக் கடல் காற்றின் வேகம் அதிகம் அதனால், கிழக்கு நோக்கி கப்பலை ஓட்டுறது மிக சிரமம். தென் பசிபிக் பகுயில் காற்றின் வேகத்தால் பெரியப்பெரிய அலைகள் உருவாகுது. இதுவரை உருவான சுனாமி மொத்தமும் இந்த பசிபிக் கடலில்தான் உருவாச்சு. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் நடுக்கங்களால் உருவாகும் பெரும் அலைகள் ஜப்பானிய கடற்கரையைத்தான் தாக்கும்.
அண்டார்டிகா பெருங்கடலிலிருந்து பிரிந்து வரும் பனிப்பாறைகள் எட்டுமாசம் வரைக்கும் உருகாம பசிபிக் கடலில் மிதந்து பல இடங்களுக்கும் போகுமாம். சில பாறைகள் நியூசிலாந்து வரைக்கும் நகர்ந்து போய் இருக்குன்னா பார்த்துக்கோயேன். கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல்கள் வரைக்குதான் எல்லை பிரிச்சு வச்சிருக்காங்க. எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சராசரியா 600 அடி ஆழம் வரைக்கும் இருக்கும். கடலோட ஆழமே அதுக்கு பிறகுதான் ஆரம்பிக்குது. எல்லை பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் கடல் பகுதிகளுக்கு காண்டினெண்டல் ஷெல்ப்ன்னு பேரு. இதிலும் 3%கடல்தான் இருக்கு. காண்டினெண்டல் ஷெல்ப்க்கு பிறகு97% கடல் இருக்கு. இங்கு குறைஞ்சது 13,000 அடியிலிருந்துதான் ஆழமே ஆரம்பிக்குது. அதுக்கு அபிஸ்(abyss)ன்னு பேரு. இங்கதான் நிலத்தில் இருப்பதுபோல் எரிமலைகள், சமவெளிகள், மேடுகள், பள்ளங்கள், மலைத்தொடர்கள் இருக்கு. சூரிய ஒளி 100 அடி ஆழம் வரைக்கும்தான் போகும். 100 அடிக்கு மேல ஆழம் போகப்போக வெளிச்சம் குறைஞ்சுக்கிட்டே வந்து கும்மிருட்டாகிடும். இருட்டில் என்ன இருக்கும்?! ஒன்னுமே இருக்காதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கோம்..
கடலுக்கடியில் ஏதோ இருக்குன்னு அரிஸ்டாட்டில் சொல்ல, அவரது அலெக்சாண்டர் கண்ணாடியில் பலூன் மாதிரி செஞ்சு, அதில் எந்தவித கருவியும் இல்லாம, மூச்சை அடக்கிக்கிட்டு கடலுக்குள் போய் இருக்கார். மிகப்பெரிய திமிங்கலத்தை பார்த்ததா சொன்னார். அதுதான் கடலுக்குள் நடந்த முதல் ஆராய்ச்சி.. பலர் பல்வேறாய் முயன்றாலும் 1960ல சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிக்கார்ட் என்பவர் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி ட்ரீஸ்டின்னு பேர் வச்சார். அதில் உக்காந்துக்கிட்டு செங்குத்தாக கடலில் இறங்கினார். 4 மணி நேரமாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அஞ்சு மணி நேரம் கழிச்சு தரையை தொட்டுவிட்டேன்னு வயர்லெஸ்சில் தகவல் அனுப்பினார். பிக்கார்ட் கடலுக்குள் இறங்கிய இடம்தான் ‘மெரியான் ட்ரெஞ்ச்’. இங்கு கடலின் ஆழம் ஆறே முக்கால் மைல். அதாவது 35 ஆயிரத்து 808அடி. நம்ம எவரெஸ்ட் சிகரம் 29 ஆயிரத்து 28அடிதான். அதைவிட அதிக ஆழமானது இந்த மரியானா ட்ரெஞ்ச். அங்க பிக்கார்ட் 20நிமிசம் இருந்தார். இதுவரை மனிதன் கண்டுபிடித்த மிகமிக ஆழமான இடம் இது. இதுவே இப்பவரைக்கும் சாதனையா இருக்கு. கடல் சார்ந்த ஆரய்ச்சிகள் உலகம் முழுக்க குறைச்சலாகவே இருக்கு. மிகச்சவாலான இந்த வேலைக்கு எட்டு முதல் கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பேசப்படுது. ஆராய்ச்சிக்காக மட்டுமில்லாம எரிவாயு, எண்ணெய் குழாய்களை பதிக்கவும், கண்டங்களுக்கு இடையிலே தகவல் பரிமாற்றத்துக்காக கேபிளை பதிக்க, அவற்றை பராமரிக்க ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் பயன்படுறாங்க. இந்தியாவில் ஆழகடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் இல்லைன்னாலும் ஆனாலும் ஆஸ்திரேலியா, நார்வே மாதிரியான நாட்டில் பயிற்சிப்பெற்ற 800 ஆழ்கடல் வீரர்கள் இந்தியாவில் இருக்காங்க. பெல் டைவிங்ன்னு சொல்லப்படும் இந்த ஆழ்கடல் வீரர் பயிற்சிக்கு பத்து லட்சத்துக்கும் மேல் செலவாகுமாம்.
காற்றும், வெளிச்சமும் இல்லாத, தண்ணீர் சூழ்ந்த இடத்தில் வேலை பார்க்கும் துணிவு இருக்க வேண்டும். டைவிங் பெல் அமைப்பினரால் மட்டுமே இந்த வீரர்களுக்கு உடைகள் கொடுக்கப்படும். அந்த அமைப்பின்மூலம் வெதுவெதுப்பான காற்றும், நீரும் அடிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர், மற்ற உபகரணங்கள் இந்த அமைப்பின்மூலமே கொடுக்கப்படும். டைவிங் பெல் அமைப்புக்கு சொந்தமான கப்பலின் சாச்சுரேசன் சேம்பர்ன்ற பகுதியிலிருந்து வீரர்கல் கடலுக்குள் இறக்கப்படுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் மூச்சு விடும் முறை மாறுபட்டு இருக்கும். அதனால் இவர்களுக்கு ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்த காற்றைதான் சுவாசிக்க கொடுப்பாங்க. நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனும், நைட்ரஜனும் இருக்கும்., கடலின் ஆழத்தில் உள்ள அழுத்தத்தால் ரத்தத்திலிருந்து ஆக்சிஜனும், நைட்ரஜனும் வெளியேறும். அப்ப ரத்தக்கசிவு உண்டாகும். சிலசமயம் உயிரிழப்புக்கூட ஏற்படும். ஆனா, ஹீலியம் வெளியேறாது. அதனால்தான் ஹீலியத்தை கணிசமான அளவுக்கு உடலில் செலுத்துவாங்க. கடலுக்குள் பல நாட்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செது முடித்து வெளிய வந்தபின் வெளிப்புற அழுத்தத்திற்கும், சூழலுக்கும் உடல் பழகும்வரை சாச்சுரேசன் சேம்பரில் வைப்பாங்க. அந்த சாச்சுரேஷன் சேம்பரில் எல்லா வசதியும் இருக்கும். கடல் எல்லைகளை ஐக்கிய நாடுகள் மன்றம் எனப்படும் United Nations Convention on th Law of the Sea வரையறுத்தது. இந்த அமைப்பில் 158 நாடுகள் இருக்கு. கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட கரைக்கடல் பகுதியில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலா, அதற்கடுத்த ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும் பகுதிக்கு அண்மைக்கடல்ன்னு பேரு. இதில் விசைப்படகு வீரர்கள் மீன் பிடிக்கலாம். அதற்குப்பிறகு இருக்கும் பகுதிகள் ஆழிக்கடல்ன்னு பேரு. இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். கால மாற்றத்தால் கரையோரங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் இடம்மாறி மீன் பிடிச்சு சண்டை வருது. இந்தியா, இலங்கைக்கு இடையிலான கடற்பரப்பின் தூரம் 25கிமீதான். பல்வேறு அரசியல் காரணங்களல் எல்லை பிரிப்பு சரிவர நடக்காததால் இரு நாட்டுக்குமிடையில் எல்லை தகராறு வருது. எந்த நாடா இருந்தாலும் கடலிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தில் அதாவது தோராயமா 22.2 கி.மீ தூரத்திற்கு பயணிகள் கப்பல் போகலாம். ஆனா, மீன்பிடிக்கப்பல், போர்க்கப்பல், சரக்கு கப்பல்லாம் போகனும்ன்னா பர்மிஷன் வாங்கனும்.
மனிதன், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பலதரப்பட்ட உயிர்கள் இருக்கு. அவற்றை பற்றி ஆராய்ச்சிகள் பல காலமாய் நடந்துக்கிட்டு இருந்தாலும் அடிக்கடி புதுசா எதாவது ஒரு உயிரினத்தை பத்திய தகவல் வந்துக்கிட்டுதான் இருக்கு, இதேமாதிரிதான் கடலிலும் பலதரப்பட்ட உயிரினங்கள் இருக்கு.1சதவிகிதம்தான் பூமியில் இருக்கு. மிச்சம்லாம் கடலில்தான் இருக்கும் . கடலில் 25மில்லியன் உயிரினங்கள் வாழலாம்ன்னு ஒரு கணக்கு சொல்லுது. உலகின் முதல் உயிரி கடற்பாசி, உலகின் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்.. இப்படி பல சாதனைகள் கடலுக்குண்டு. சுறாவில் மட்டும் 350வகை இருக்காம்.
மாறிவரும் வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசுகள், கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல் மாசுப்பட்டு வருது. வெப்பநிலை உயர்ந்துக்கொண்டே வருவதால் பனிமலைகள் உருகி கடற்கரைகள் நகரை நோக்கி நீண்டுக்கொண்டு வருகிறது. மாலத்தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் தங்களது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கு. இனி கடல்களின் கதி என்னாகுமென சமூக ஆர்வலர்கள் யோசிக்குறாங்க.
அப்ப, கடலும் மாற்றத்திற்குள்ளாகும்போல.. உலக பெருங்கடல் தினமான இன்று கடலை பத்தி நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா.
கடலைப்போலவே கடல் சார்ந்த விசயங்களும் நிறைய இருக்கு. பதிவு நீளுமேன்னு இத்தோடு முடிச்சுக்கிட்டேன்..
ஆமா மாமா , ஏற்கனவே பதிவு நீளம்ன்னு பேச்சு வருது. வயித்துக்குள் இருக்கும் பாப்பாவை பத்தின மீம்ஸ். பார்த்ததும் பிடிச்சு போச்சுது. கூடவே அதிலிருக்கும் உண்மையும் ஒத்துக்க வேண்டியதா இருக்கு...
இந்த பாப்பாவை பாருங்க. கேட்டதும் கொடுக்கலைன்னு காண்டாகி என்ன பண்ணுச்சுன்னு...
கால்ல எதுக்கு இத்தனை விரல்ன்னு நினைச்சு கடிச்சு துப்ப பார்க்குதான்னு தெரில மாமா.
பாப்பாக்கள் வீடியோலாம் செம சூப்பர்ப்பா... வெளில வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்...
நன்றியுடன்,
ராஜி
Sunday, May 31, 2020
தெய்வீக ரகசியத்தை அறிந்துக்கொள்ளனுமா?! - ஐஞ்சுவை அவியல்
மாமா! இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல ரெடிமேட் சாம்பிராணி எழுத மறந்துட்டேன். அதையும் சேர்த்து வாங்கி வாங்க!
ஏன், தூபக்காலில் நெருப்பை வச்சு, அதில் சாம்பிராணி தூவி வீடு முழுக்க காட்டுறதுக்கென்ன?!
முன்னலாம் விறகு அடுப்பில் சமைச்சாங்க. அதனால் நெருப்பு இருந்தது. அதில் சாம்பிராணி புகை போட்டாங்க. இப்பலாம் கேஸ்ல சமைக்குறதால் நான் நெருப்புக்கு எங்க போவேன்?!
தேங்காய் ஓடும், தேங்காய் நாறும் இருக்கே. அதை வச்சு நெருப்பு கங்கை உருவாக்க முடியாது. மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?!
இந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும். இப்ப ரெடிமேட் சாம்பிராணி ஏத்தி வீடு முழுக்க காட்டுறதுல உனக்கென்ன குறைஞ்சு போகுது?!
அடியேய்! நான் சொல்லுற மாதிரி சாம்பிராணி புகையை காட்டுறதால எத்தனை நன்மை இருக்கு தெரியுமா?! சிவன் கோவிலில் தினத்துக்கும் குங்கிலியம் கொண்டு புகை போடுறாங்களோ அவர்களுக்கு தெய்வீக ரகசியம் தெரியவருமென அகத்தியர் தன்னோட வாத காவியம்ன்ற நூலில் சொல்லி இருக்கிறார். இப்படி தெய்வீக ரகசியத்தினை தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எமதூதர்களிடமிருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும். அதாவது மரணத்தை வெல்லும் சக்தி கிடைக்குமாம். அப்படி சக்தி கிடைச்சவங்க தான் மட்டுமல்லாம மத்தவங்களையும் காப்பாத்துவாங்க. இது சித்தர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றூ. அதனால்தான் சித்தர்களால் மற்றவங்களை மரணத்திலிருந்து காப்பாத்த முடிஞ்சது. அதை நாம பல கதைகளில் கேட்டிருக்கோம்.
தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரம் மாதிரியான சில காடுகளில் விளையக்கூடிய கருமருதுன்ற மரத்தினை கீறி, அதிலிருந்து வடியும் பிசினை சேகரிச்சு காயவச்சால் கிடைக்குறதுக்கு பேருதான் குங்கிலியம். இதைதான் நாம சாம்பிராணின்னு சொல்றோம். இந்த சாம்பிராணி புகை இந்துக்கள் வழிபாட்டில் மட்டுமல்லாமல் மதங்களை கடந்து எல்லா எல்லா மதத்தின் வழிபாட்டிலும் இடம்பெறுகிறது.
இப்படி மதங்களை கடந்து எல்லோரும் சாம்பிராணி புகை போட இறை நம்பிக்கை மட்டுமல்லாம வாசனைக்காகவும், காற்றில் கலந்து வரும் நச்சுக்கிருமிகளை அழிக்கவும் வீடு, கடைன்னு எல்லா இடத்திலும் சாம்பிராணி புகை போடும் வழக்கம் உண்டானது. முன்னலாம் குழந்தைகள், பெண்கள் அதிலும் முக்கியமா கர்ப்பிணி பெண்கள், புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு வாரமொரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு ஊற்றி, சாம்பிராணி புகை காட்டுவது வழக்கம். சாம்பிராணி புகையை தலையில் காட்டுவதோடு புகையை சுவாசிக்கவும் செய்வாங்க. இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள், தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் மாதிரியான வியாதிகள் தீரும். இளநரை, முடி கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வராமல் இந்த சாம்பிராணி புகை தடுத்தது.
சாம்பிராணி புகை ஆஸ்த்துமா, வீசிங்க் பிராப்ளம் மாதிரியான சுவாசக்கோளாறுகளையும் போக்கியது. சாம்பிராணி புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குறதாகவும் இப்பத்தைய ஆய்வுகள் சொல்லுது. சுத்தமான குங்கிலியம் கொண்டு போடும் சாம்பிராணி புகையால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனா, நீ சொல்லும் ரெடிமேட் சாம்பிராணி புகையால் மூச்சடைப்பு, அலர்ஜி மாதிரியான தொல்லைகள் உண்டாகுவதை நாமே பார்த்திருக்கோம்..
ஆமா மாமா, ரெடிமேட் சாம்பிராணி ஏத்தினாலே என் பாட்டி மூச்சடைக்குதுன்னு வெளில போய்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சுதான் உள்ள வருவாங்க.
ம்ம் அந்த ரெடிமேட் சாம்பிராணியில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயாண பொருட்களும், வாசனை பொருட்களும்தான் இதற்கு காரணம். முன்னலாம் மழைக்காலத்தில் சாம்பிராணி புகையுடன், காய்ந்த வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகையும் போட்டு மாலைவேளையில் வீடு முழுக்க காட்டுவாங்க. இதனால் கொசு தொந்தரவு இருக்காது. மழைக்காலத்தில் உருவாகும் நோய்க்கிருமிகள் தொற்றிலிருந்து நம்மை காக்கும். சுத்தமான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலை பகுதிகளில் கிடைக்கும். இப்பலாம் அங்கும் கலப்படம் நடக்குது. தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு வாங்குறது நல்லது.
சரி இனி பார்த்து வாங்குறேன். காலையில் எழுந்து அரக்க பரக்க சமைச்சு டப்பா கட்டும் வேலையில்லை. காலெஜ் லீவுங்குறதால் பாப்பா இருக்குறதால் வேலையே இல்லாத மாதிரி இருக்குன்னு சொன்னது குத்தம்ன்னு அப்பு இந்த கணக்கை நேர் பண்ணுன்னு சொல்லிட்டு போறான். இதுல 8767458998 அரிசி இருக்கு வேணும்ன்னா எண்ணிக்கன்னு மொக்கை ஜோக் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் வேற!
தேவையா உனக்கு?! வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம...
நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா மாமா!? இப்படி என்னையை நக்கல் அடிக்குறான்.
இதுக்கும் வடிவேலு காமெடி மாதிரி எதும் சொல்லிடப்போறான். சின்ன வயசில் இப்படி எதாவது அவனை வெறுப்பேத்தி இருப்பே! அதான் உன்னைய இப்ப அவன் ரிவெஞ்ச் எடுக்குறான்...
அப்படித்தான் போல! சில கடுப்பேத்தும் வீடியோக்களால் எனக்கு டிக்டாக்ன்னாலே பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு யாராவது பகிர்ந்தால் பார்ப்பேன். அப்படி பார்த்ததில் இந்த வீடியோ பிடிச்சது. உலக அழகியாக ஐஸ்வரியா ராய் தேர்வானபோது, இந்தியாவே அவர் அழகை கொண்டாடிச்சு. அப்ப எங்க சார் ஒருத்தர் சொன்னாரு. ஐஸ்வர்யா ராயின் உடல் வாகு, அறிவுத்திறனோடு, உயரம், எடையோடு ஒத்துப்போகும் மொத்தத்தில் ஐஸ்வரியா ராயைவிடவும் அழகான பெண் எங்கோ காடு மேடுகளில் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். அதனால் ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார்.
அதுமாதிரி, பயிற்சி எடுத்துக்கிட்டு அசரவைக்குற மாதிரி ஆடும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, எந்த பயிற்சியும் செய்யாம, எங்கோ ஒரு மூலையில் நேர்த்தியுடனும்,அசர வைக்கும்படியாகவும் ஆட்களுக் இருக்கத்தான் செய்றாங்கன்னு இந்த வீடியோ பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன். அதனாலோ என்னமோ எனக்கு பிடிச்சு போச்சு. நீ இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இரு. நான் போய் சமைக்கும் வேலையை பார்க்கிறேன்...
நன்றியுடன்,
ராஜி
Monday, April 13, 2020
மணல் கடிகாரம் டூ டிஜிட்டல் கடிகாரம்.. - ஐஞ்சுவை அவியல்
மாமா! சமையல் கட்டில் மாட்டியிருந்த கடிகாரம் ரிப்பேர் ஆகிட்டுது. புதுசு ஒன்னு வாங்கிட்டு வாங்களேன்.
எதுக்கு அதான் ஹால்ல, பெட்ரூமில்ன்னு 3 கடிகாரம் இருக்கு. உனக்குன்னு செல்போன் இருக்கு. அதில்லாம, உன் கைக்கடிகாரம் இருக்கு.இத்தனை இருக்கும்போது எதுக்கு சுவர் கடிகாரம் கேட்குறே?!
காலையில் எல்லாருக்கும் டப்பா கட்ட சரியான டைமுக்கு சமைக்கனுமே! கையில் ஈரம் இருக்கும்போது செல்போன், வாட்ச்ல எப்படி டைம் பார்க்கமுடியும்?! அதனால், சின்னதா ஒரு நூறு ரூபாயில் வாங்கி வந்தால் போதும்.
டைம் பார்க்க செல்போன், வாட்ச்ன்னு இன்னிக்கு பலவழிகள் இருக்கு. முன்னலாம் சூரியன் நகர்வதை வச்சும் பொருட்களின் நிழல்களைக்கொண்டுமே நேரத்தை கணக்கிட்டாங்க. முதல்ல நேரத்தை கணக்கிட்டது சுமேரியர்கள்தான். இவங்கதான் மணி, நாள், வாரம், மாசம், வருசம்ன்னு பிரிச்சாங்க. பிறகு எகிப்தியர்கள், சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின்மீது விழுவதை வச்சு நேரத்தை அளவிட முயற்சி செய்தனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சிகளில் மற்ற நாடுகளும் முயற்சி செய்துக்கிட்டே இருந்தாங்க. கிரேக்க நாடு தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி செய்தாங்க. தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு ஏற்பாடு செய்து, அப்படி விழும் தண்ணீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இது நடந்தது கி.மு. 320ல் நடந்தது.
கிரேக்கர்களும் ரோமானியர்களும் இந்த தண்ணீர் கடிகாரத்தில் பல மாற்றங்களை உண்டாக்கினர். மணற்கடிகாரமும் சோதனை முயற்சியில் கண்டுபிடிச்சாங்க. கி.பி.1510-ம் ஆண்டுவாக்கில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசலாடும் (pendulum) கடிகாரத்தை உருவாக்கினார்.
ஹியூஜன்ஸ்தான் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பிரித்து, கடிகாரம் செய்வதில் புதுப்புது உத்தியை கையாண்டார். கூடவே, ஒரு நாளை A.M.–Ante meridiem,( befor e noon) P.M.– Post meridiem, (after noon) பிரித்தார். இங்கிருந்து கடிகாரம் பல்வேறு மாறுதலுக்குட்பட்டு விதம்விதமா தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துச்சு. ஆரம்பத்துல மரத்துலதான் கடிகாரத்தின் பாகம்லாம் செய்யப்பட்டது. பிறகு இரும்பில் செய்தாங்க. இப்ப பிளாஸ்டிக், பைபர்ன்னு வர ஆரம்பிச்சுட்டுது.
ஹியூஜன்ஸ்தான் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பிரித்து, கடிகாரம் செய்வதில் புதுப்புது உத்தியை கையாண்டார். கூடவே, ஒரு நாளை A.M.–Ante meridiem,( befor e noon) P.M.– Post meridiem, (after noon) பிரித்தார். இங்கிருந்து கடிகாரம் பல்வேறு மாறுதலுக்குட்பட்டு விதம்விதமா தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துச்சு. ஆரம்பத்துல மரத்துலதான் கடிகாரத்தின் பாகம்லாம் செய்யப்பட்டது. பிறகு இரும்பில் செய்தாங்க. இப்ப பிளாஸ்டிக், பைபர்ன்னு வர ஆரம்பிச்சுட்டுது.
19 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பெண்டுலம் வச்ச கடிகாரங்கள்தான் வழக்கத்துல இருந்துச்சு. இந்த பக்கமும் அந்த பக்கமுமாய் அசைந்தாடும் பெண்டுலம் கடிகாரத்தின் இரு முட்களையும் இயக்கி சரியான நேரத்தை காட்டுச்சு. இந்த கடிகாரங்களை ஸ்கூல், அலுவலங்களில், வசதியான சில வீடுகளில் நாமலாம் சின்ன பிள்ளையா இருக்கச்சே பார்த்திருப்போம். இப்ப மாதிரி பேட்டரியால் இந்த கடிகாரம் இயங்காது. அதுக்குன்னு இருக்கும் ஒரு சாவியை கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் நாம சாவி கொடுக்கனும். அப்பதான் கடிகாரம் இயங்கும்.
ம்ம் என் பிரண்டோட அப்பா , ஒரு சாவியால் கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதை பார்த்திருக்கேன் மாமா. அப்புறம் அந்த பெண்டுலத்தை ஆட்டி ஓட வைப்பார். அந்த சாவியை பத்திரமா பீரோவுக்குள் வைக்குறதையும் பார்த்திருக்கேன்.
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபின் பெண்டுலம் வச்ச கடிகாரங்களின் மவுசு குறைய ஆரம்பிச்சது. அலெக்சாண்டர் பெயின், 1840ல பேட்டரியில் இயங்கும் கடிகாரத்தை கண்டுபிடிச்சார். சாவி கொடுக்கலைன்னா கடிகாரம் இயங்காது. சாவி கொடுக்கும் கால இடைவெளியை மறக்கக்கூடாதுன்ற நடைமுறை சிக்கல்கள் எல்லாரையும் பேட்டரி வச்ச கடிகாரத்திற்கு மாற வச்சது. ரோமானிய எழுத்தக்களிலிருந்து அவரவர் வட்டார வழக்கு எழுத்து வர ஆரம்பிச்சது. எண்கள் இல்லாத கடிகாரம், படம் வைத்தது, கல் வச்சதுன்னு பல கிரியேட்டிவான கடிகாரங்கள் மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது.
1920ல குவாட்ஸ்ன்ற கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. கடிகாரம் வந்தது. குவாட்ஸ்ன்னா கல் மாதிரியான ஒருவகை கிரிஸ்டல் (Crystal). இந்த குவாட்ஸ்ஸினூடாக கரெண்டை பாய்ச்சும்போது சீராக துடிக்கும் (Osillates) இந்த துடிப்பை வைத்து கடிகாரத்தின் ஓட்டத்தை உண்டு பண்ணி இயங்க வைக்குது. பெண்டுலம் கடிகாரத்தைவிட குறைவான பராமரிப்பு இந்த குவார்ட்ஸ் கடிகாரத்திற்கு போதும்ன்றது இதன் சிறப்பம்சமாகும். அதுமில்லாம பெண்டுலம் கடிகாரம் தயாரிக்கப்படுவதைவிட இது குறைச்சலா செலவாகுது. பேட்டரி, ஒரு மைக்ரோசிப் சுற்று, ஒரு மின் மோட்டார், கியர்கள், கைகள், கடிகார முகம், மற்றும் ஒரு குவார்ட்ஸ் கிரிஸ்டல் இது போதும்.
ஆரம்பத்தில் தயாரான கடிகாரங்கள் பெருசா இருந்ததால் பெரிய மாளிகைகள், அரண்மனைகளில்தான் அதுவும் காட்சிப்பொருளாகத்தான் இருந்தது. பயன்படுத்த எளிதான, சிறிய அளவில் கடிகாரங்கள் வந்தபின் சாமானியர்களும் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் நாம இருந்தபோது எல்லா அரசு அதிகாரிகளுக்கு, அரசு அலுவலகத்துக்கும் அரசு செலவில் கடிகாரங்கள் கொடுத்தாங்க. அப்பதான் அதுவரை ஆடம்பர பொருளாய் இருந்த கடிகாரம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துச்சு. ஆங்கிலேயர்களுக்கு போட்டியா சமஸ்தான மன்னர்களும், ஜமீந்தாரர்கள், பண்ணையார்களும் கடிகாரங்களை வாங்கி தங்கள் மாளிகையில் வச்சுக்கிட்டாங்க. ஆடம்பர பொருளாய் கடிகாரங்கள் இருந்ததால் கடிகார கம்பெனி ஏஜெண்டுகள் பல நாடுகளுக்கு போய் தங்கள் கம்பெனி கடிகாரத்தின் பெருமைகளை சொல்லி விற்பனை செய்ததோடு, அந்த ஊர் கடிகாரத்தின் சிறப்பம்சங்களையும் தெரிஞ்சுக்கிட்டு வந்தாங்க.
ஐதராபாத் நிஜாம் அவரோட அரண்மனைக்கு யார்கிட்டயும் இல்லாத மாதிரியான சுவர்கடிகாரம் ஒன்றினை வாங்க விரும்பி, ஸ்விஸ் நிறுவனத்துக்கிட்ட கேட்க, பெரும்பொருட்செலவில் ஒரு சுவர் கடிகாரத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இன்றும் அந்த கடிகாரம் “ஜலார் ஜங்” அருங்காட்சியகத்தில் அதிசய காட்சிப் பொருளாக இருக்காம் புள்ள!. நிஜாம்கிட்ட இருந்த அந்த அழகான கடிகாரத்தை பார்த்த பிறகு பல சமஸ்தானங்கள் சுவர் கடிகாரத்தை வாங்கி அரண்மனைகளில் மாட்டி இருக்காங்க. . கொஞ்ச காலத்திற்கு பிறகு பாக்கெட் கடிகாரம் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. . ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள்ன்னு அந்த கடிகாரத்தை வாங்கி கோட் பாக்கெட்டில் வச்சுக்கிட்டாங்க. அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாவே அப்ப இருந்துச்சு.
சின்ன சைசில் வந்த பாக்கெட் கடிகாரத்தில் சில மாற்றங்கள் செய்து தோல், செயின் வைத்து கைக்கடிகாரமா மாற்றினாங்க. கைக்கடிகாரத்தை முதலில் ஆண்கள்தான் பயன்படுத்தி வந்தாங்க. பிறகுதான் பெண்களும் கைக்கடிகாரத்தை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. பெண்கள் பயன்படுத்த ஆரம்பிச்சபிறகுதான் வாட்ச் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பிச்சது. காரணம், ஸ்கூல், அலுவலகம் போறவங்க மட்டுமில்லாம வீட்டிலிருக்கும் பெண்கள் கடைத்தெருவுக்கு போகும்போதுகூட வாட்ச் கட்டினதுதான். இதுக்கு ஸ்டைல் மட்டுமே காரணமில்லை. பொண்ணுங்களோட டைம் மேனேஜ்மெண்ட்கூடத்தான்.
ஐதராபாத் நிஜாம் அவரோட அரண்மனைக்கு யார்கிட்டயும் இல்லாத மாதிரியான சுவர்கடிகாரம் ஒன்றினை வாங்க விரும்பி, ஸ்விஸ் நிறுவனத்துக்கிட்ட கேட்க, பெரும்பொருட்செலவில் ஒரு சுவர் கடிகாரத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இன்றும் அந்த கடிகாரம் “ஜலார் ஜங்” அருங்காட்சியகத்தில் அதிசய காட்சிப் பொருளாக இருக்காம் புள்ள!. நிஜாம்கிட்ட இருந்த அந்த அழகான கடிகாரத்தை பார்த்த பிறகு பல சமஸ்தானங்கள் சுவர் கடிகாரத்தை வாங்கி அரண்மனைகளில் மாட்டி இருக்காங்க. . கொஞ்ச காலத்திற்கு பிறகு பாக்கெட் கடிகாரம் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. . ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள்ன்னு அந்த கடிகாரத்தை வாங்கி கோட் பாக்கெட்டில் வச்சுக்கிட்டாங்க. அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாவே அப்ப இருந்துச்சு.
பாக்கெட் கடிகாரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரத்தில் ஒலி எழுப்பும் வசதிக்கொண்ட அலாரம் கடிகாரம் வந்தது. அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்வோரும், மாணவர்களுக்கும் இந்த கடிகாரம் பெரிய அளவில் பயன்பட்டது. பெரும் பணக்காரர்கள் வீட்டை அலங்கரித்த கடிகாரங்கள் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியடைஞ்சு சாமானியர் வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறியது. கடிகாரம் மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி ஆரம்பித்தது. பாக்கெட் கடிகாரத்தை பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருந்துச்சு, ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருந்து எடுத்து திறந்து மணி பார்க்கனும். இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சாங்க..
ஸ்கூல், காலேஜ் போற பிள்ளைக கறுப்பு, பிரவுன் கலர் பட்டை வாட்சையும், வேலைக்கு போகும்போது மெட்டாலிக் வாட்சையும், விருந்துக்கு போகும்போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தங்க (நிற), வெள்ளி வாட்சையும் பெண்கள் கட்டுவாங்களாம். வளையல், பிரேஸ்லெட், கல் பதித்தது, ட்ரெஸ்சுக்கு மேட்சா பட்டை மாத்தும் வாட்சுகள்..இவைதான் டீன் ஏஜ் பொண்ணுங்களோட விருப்பமாம். உன்கிட்ட எத்தனை வாட்ச் வச்சிருக்கே புள்ள?!
ம்க்கும் விதம்விதமா வாங்கிக்கொடுத்துட்டுதான் மறுவேலை செய்வீரு?! என்னைய கோவப்படுத்தாத மாமா!!
கோவத்துலகூட நீ அழகா இருக்கேன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன். ஆனா, இந்த பாப்பா கோவத்துலயும் அழகா இருக்கும் பாரு..
சரி, ரொம்ப நாளா புதிர் இல்லன்னு டிடி அண்ணா சொல்லிக்கிட்டே இருக்காரு. எதாவது விடுகதை சொல்லலாமா?!
வேணாம் புள்ள! ட்விட்டரில் ரொம்ப நாளா ஒரு படம் சுத்துது. படத்துல இருக்கும் காட்சிகளை வச்சு அது என்ன படம்ன்னு சொல்லனும். ஒருவாரமாகியும் இதுவரை யாரும் சொல்லல. உங்க டிடி அண்ணனாவது சொல்வாரான்னு பார்க்கலாம்.
பதில் சொல்லிடுவீங்கதானே டிடி அண்ணா?!
நன்றியுடன்,
ராஜி
Monday, March 30, 2020
காடுகளின் தாய் எதுவென தெரியுமா?! -ஐஞ்சுவை அவியல்
என் ஃப்ரெண்ட் ராஜி பையனுக்கு காய்ச்சல், தொண்டை வலின்னு இருந்திருக்கு. இப்பதான் ஊரெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கே. அவ பையன் வேற கடந்த 15 நாளில் மூணு முறை ஏர்போர்ட்டுக்கு போய் வந்திருக்கான். பதட்டத்துக்கு சொல்லவா வேணும்?! அலறி அடிச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனா சாருக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு வடிவேலு காமெடிப்போல டெம்ப்ரேச்சர்கூட பார்க்காம பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து விட்டிருக்காங்க.
Monday, March 23, 2020
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காதற்கு இதுதான் காரணம்- ஐஞ்சுவை அவியல்
ஏய் புள்ள! எதுக்கு வாசல் கோலத்து நடுவுல சொம்பும் வேப்பிலையும் வச்சிருக்கே?
Monday, March 16, 2020
கொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா?! ஐஞ்சுவை அவியல்
மாமா! ஃப்ரீயா இருந்தால் வர்றியா?! கடைவீதிக்கு போய் வரலாம்?!
அடியே! ஊரு உலகமெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கு. உனக்கு கடைவீதிக்கு போகனுமா?! சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு. இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு. என் மதமா?1 உன் மதமான்னு அடிச்சுக்கும் நம்மாட்கள், மத வேறுபாடின்றி தங்களோட வழிபாட்டு தலத்துக்கு வரவேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருக்கு.
கொரோனா வைரஸ்ன்னா என்ன மாமா?!
போன், லாப்டாப், மனுஷங்க மட்டுமல்ல.. கால மாற்றத்திற்கேற்ப எல்லா உயிரினமும் தங்களை அப்டேட் பண்ணிக்கும். இல்லன்னா, அந்த உயிரினம் தங்களை தக்கவச்சுக்க முடியாது. இது வைரசுக்கும் பொருந்தும். கொஞ்ச நாளுக்கு முந்தி வந்த சார்ஸ், எபோலா மாதிரி இப்ப வந்திருக்க வைரசுக்கு பேரு கொரோனா வைரஸ். இந்த கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இப்ப பரவி இருக்கும் வைரஸ் 7 வது வைரஸ் கொரோனா குடும்பத்தில் நுழைஞ்சிருக்கு. கொரோனாவுக்கு சோறு வச்சியே பேரு வச்சியான்னு யாரும் கேட்டுடக்கூடாதுல்ல! அதனால், இதுக்கு 2019- nCoV (new strain of coronavirus) ன்னு பேர் வச்சிருக்காங்க. 2019 ஆம் கண்டுப்பிடிச்சதுக்காக 2019ன்ற ஆண்டையும் n என்பது புதியதுன்னு , CoV என்பது கொரனாவையும் குறிக்கிற விதமா பேர் வச்சிருக்காங்க.
2002 ல் சார்ஸ் SARS- CoV ன்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசும் சீனாவில்தான் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் . கொரோனா குடும்பத்தின் அடுத்த வைரஸான MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிச்சாங்க. இதை கேமல் ப்ளூ பேர் வச்சாங்க. பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம்ன்னு சொல்றமாதிரி ஒட்டகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது குதிரையிலிருந்து பரவுச்சு. இதுல 800 பேர் வரை இறந்தாங்க. தன்னை அப்டேட் செய்துக்கிட்டே வந்த கோரோனா வைரஸ் இப்ப 2019- nCoV நிலைக்கு வந்து இருக்கு.
இந்த வைரஸ் ஒருத்தருக்கு தொற்றுச்சுன்னா, முதலில் சாதாரணமா சளி, ஏற்படுத்தும் வைரஸ் மாதிரியே பரவுது. அவங்களுக்கு, ஒருவகையான நிமோனியாவை உண்டாக்குது. கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்தாலும் தும்மல், இருமல்ன்னு ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுது. சாதாரண சளி, இருமல், காய்ச்சல்ன்னு இதோட அறிகுறிகள் இருக்குறதால் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடியாது. உரிய பரிசோதனைகளை செஞ்சுக்கிட்டால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கோமான்னு தெரியும். ஆனா, அதுக்கான வசதிகள் நம்மக்கிட்ட இல்லன்றதுதான் இதில் வேதனையான விசயம். இதை பொதுவில் அரசு சொல்லல. ஆனாலும், நிலை இதுதான். அப்படியே கண்டுபிடிச்சாலும் கொரோனாவை குணப்படுத்த இப்பவரைக்கும் மருந்துகள் இல்ல. முதலில், சளி பிடிக்கும். அடுத்து தலைவலி,காய்ச்சல் வரும். அதுக்கடுத்து, தொண்டைவலி, வறட்டு இருமலை உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு கொண்டு போய்விடும். பிறகு கடுமையான உடல்வலியை ஏற்படுத்தி, நிமோனியா வந்து கிட்னி செயலிழந்து மரணம் ஏற்படும்.
அப்ப, கொரோனா வந்தால் செத்துதான் போகனுமா மாமா?!
அப்படிலாம் இல்ல. 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்குன்னு வச்சுக்க. கொரோனா தொற்று ஏற்பட்டதுன்னு கண்டுபிடிச்சா அவங்கள்ல 80 பேருக்கு சாதாரண சளி, காய்ச்சல் லெவல்லயே குணப்படுத்த முடியும். மிச்சம் இருக்கும் 20 பேரில் 10 பேர் மூச்சுத்திணறல் வரை போவாங்க. அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்தா பிழைக்க வச்சுடமுடியும். மிச்சமிருக்கும் 10 பேரில் 8பேர் ஐசியூ வரைக்கும் போனாலும் காப்பாத்திடலாம். மிச்சமிருக்கும் 2 பேர்தான் இறப்பு வரைக்கும் போவாங்க.
பாதிக்கப்பட்டங்க, தனி மனிதன்ன்னு ரெண்டே ரெண்டு பேர் மனசு வச்சால் போதும். வைரஸ் தொற்று ஏற்பட்டவங்க மாஸ்க் போட்டுக்கனும். சளியை கண்ட இடத்தில் துப்பாம இருக்கனும். தனியா இருந்துக்கனும். ஹாஸ்பிட்டல்ல சேரனும். கூட்டம் கூடும் இடங்களுக்கு போகக்கூடாது. ஒவ்வொருத்தரும் கண்ட இடங்களில் கைவைக்காம இருக்கனும், கைகளை கழுவாம முகம், வாய்க்கு அருகில் கைகளை கொண்டு போகக்கூடாது. இதை செய்தாலே போதும் அதைவிட்டு எல்லாரும் முகமூடின்ற மாஸ்க் போடத்தேவையில்லை, பாதிக்கப்பட்டவர் போட்டாலே போதும். பெருநகரங்களில் பொதுமக்கள் மாஸ்க்கோடு போறதை பல இடத்தில் பார்க்கமுடியுது. பாதிக்கப்பட்டவங்க இருமும்போது நம்மீது தெறிக்காதவரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது. ஆனா, நிலப்பரப்பு வழியா பரவும். அதாவது கொரோனா வைரஸ் உள்ள சளியை தொட்டு நம் கண், மூக்கு, வாய் அருகில் கொண்டு சென்றால் பரவும். நிலப்பரப்பில் இருக்கும் இந்த கிருமி 12 மணிநேரம் வரை உயிர்வாழும்.
பொழுதன்னிக்கும் ஒரே மாஸ்க்கை போட்டிருந்தால் ஒரு பிரயோசனுமுமில்லை. பொதுவாவே ரெண்டு இல்ல மூணு மணி நேரத்திற்கு மட்டுமே மாஸ்க் பயன்படும். அதுக்கப்புறம் அது பயன்படாது. சர்ஜிக்கல் மாஸ்க்ன்னு சொல்லப்படும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மாஸ்க் அஞ்சாறு மணிநேரத்திற்கு தாங்கும். மாஸ்கை காதில் மாட்டும் எலாஸ்டிக்கினை மட்டுமே பிடிச்சு போட்டுக்கனும், கழட்டனும். அதைவிட்டு, வாய்க்கு அருகில் இழுக்கக்கூடாது. வாய்க்கு அருகில் மாஸ்க்கை கழட்டிட்டு சாப்பிடுறது, சிகெரெட் பிடிக்குறது, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது, லிப்ஸ்டிக்ன்னு போடுறது கூடாது. சானிட்டரி நாப்கின் மாதிரி மாஸ்கையும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்போஸ் பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்தில் போடக்கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது தெறிக்கும் சளியின் மூலமா மட்டுமே கொரோனா வெளிவருது. அந்த சளியை நம்ம சுவாச்சாலோ, அல்லது எதேச்சையாய் நம் வாயில் விழுந்தாலோ நம் உடலில் பரவும். அதுக்கடுத்து, அந்த சளியை கையால் தொட்டு, முகம், வாய்க்கு அருகில் கொண்டு போனால் பரவும். அதாவது சளியில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியா சுவாசப்பாதைக்கு போகாமல் இருந்தால் ஒரு பிரச்சனையுமில்ல.
கூடிய மட்டிலும், தண்ணியை காய்ச்சி குடிக்கனும். எங்க போனாலும் தண்ணியை எடுத்து போங்க. வெளி உணவை தவிர்க்கலாம். சமைச்ச அசைவ உணவையும், சமைக்காத இறைச்சியையும் கிட்டக்க வச்சுக்காம இருக்கனும். வெளியில் எங்காவது போகும்போது சுவற்றில், பஸ் ஜன்னல், கதவுன்னு கைவைக்காம இருக்கனும்.வெளி இடங்களில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவனும். அதுவும் 20 நொடிகள் கைகளை தேய்ச்சு கழுவனும். கை கழுவுறேன்னு தேங்குற நீரில் கை கழுவக்கூடாது. ஓடும் நீரில்தான் கை கழுவனும். எச்சில் தொட்டு பணத்தை எண்ணுற பழக்கமிருக்குறதால பணத்தை தொட்டுட்டு கைகளை கழுவ மறக்காதீங்க.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமா இருக்கும். சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமா இருக்கும். சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.
அரசாங்கமும் கூட்டமா இருக்காதீங்க, கோவிலுக்கு போகாதீங்க, மாஸ்க் போடுங்கன்னு அட்ராசிட்டி பண்ணாம தகுந்த நடவடிக்கை எடுக்கனும் அதாவது, கூட்டம் கூடும் இடமான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மாதிரியான பொது இடத்தில் கழட்டமுடியாத கை கழுவுற லிக்விட்டை வைக்கலாம். தியேட்டர், மால், திருமண மண்டபம் மாதிரியான தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதைவிட்டு,
கொரோனா பாட்டுக்கு வந்த தடம் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு. அதைவிட்டு, கிரிவலம் வந்த கொரோனா, பாண்டிச்சேரியின் புது சரக்கு கொரோனா, காஞ்சிபுரம் பட்டிற்கு போட்டியாய் உலகப்புகழ் கொரோனா...ன்னுலாம் அறிவிக்காதீங்க. ஆனாலும் நம்மாளுங்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கன்னும், ரசம் சாப்பிடுங்கன்னு ஆளுக்காள் அட்வைஸ். குற்றவாளி கிடைக்கலைன்னா கிடைச்சா ஆள் மேல் கேஸ் எழுதுற போலீஸ்க்காரன் மாதிரி இதையும் பிராய்லர் கோழி மேல் உயில் எழுதுனது பரிதாப கதை. நம்மூரு வெயிலுக்கு வராதுன்னு ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ். பரப்பாதீங்க. கூடவே, மணிக்கணக்கா டிவில விவாதமும் பேட்டியும் போடாதீங்க. இதுலாம் பார்த்தா கொரோனா கோபமாகி ஒரு காட்டு காட்டிட போகுது.
எல்லாம் சரி, நீ எதுக்கு கடைவீதிக்கு கூப்பிட்ட?!
கடையில் கொரோனா வைரஸ் புடவை வந்திருக்காம். அதை வாங்கிக்கிட்டு, அப்படியே எதிர் கடையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஹேர் க்ளிப்பையும் வாங்கிட்டு வந்திடலாம்ன்னுதான் கூப்பிட்டேன்.
ஊரெல்லாம் உயிர் போய்டுமோன்னு பயத்துல இருக்கு. உனக்கு கொரோனா புடவையும், கிளிப்பும் வேணுமா?!
ஆமா, போற உசுரு ஆசைப்பட்டதை அடைஞ்சுட்டு போகட்டுமே! ஆசைப்பட்டதுக்கு ஏங்கிக்கிட்டு இருக்குறதுக்கு இல்லாம போறதே மேல். அப்புறம் புளிய மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் பேயா அலைய வேண்டியதுதான்,.
நன்றியுடன்,
ராஜி
Monday, March 02, 2020
பொண்டாட்டி பொறந்த நாளுக்கு இப்படிலாமா சர்ப்ரைஸ் கொடுப்பாங்க?! - ஐஞ்சுவை அவியல்
சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். கேன் தயாரிக்குறவங்க ஏதோ ஸ்ட்ரைக் பண்ணுறாங்களாம். அதான் கேன் வர லேட்டாகுது..
ஏன் ஸ்டிரைக் பண்ணுறாங்களாம்?! தண்ணியில்லாம ஜனங்க எம்புட்டு கஷ்டப்படுறாங்க.
நாம செய்யுறது தப்புன்னு தெரியாமயே அதுக்கு அடிமையாகிட்டோம் புள்ள!! எந்த காலத்திலயும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு இருந்துச்சு. வறண்ட கிணத்தில் இருக்கும் நீரை சொட்டி, ஆத்துல ஊற்று வெட்டி.. இப்படி கோடையை சமாளிச்சோம். வீடுகளுக்கு குழாய் மூலமா தண்ணி வர ஆரம்பிச்சபின் ரெண்டு நாளுக்கு ஒருமுறைன்னு ஆரம்பிச்சு 10 டூ 20 நாளிலாவது தண்ணி கிடைச்சது. எப்ப ருசியான தண்ணி வேணும்ன்னும், அல்லல்படக்கூடாதுன்னும், சுத்தமான குடிதண்ணின்னு சொல்லப்பட்ட விளம்பரத்திற்கும் ஆசைப்பட்டு கேன் தண்ணியை வீட்டுக்குள் விட்டோமோ அன்னிக்கே நிலத்தடி நீர் படு வேகமா குறைய ஆரம்பிச்சுட்டுது. இன்னிக்கு மினரல் வாட்டர்ன்னு சொல்லி நாம குடிக்கும் தண்ணில மினரலே இல்ல தெரியுமா?!.
மினரல்ன்னா என்ன மாமா?!
மினரல்ன்னா தாது உப்புக்கள். மண்ணில் நம்ம உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மாதிரியான தாது உப்புக்கள் இருக்கு. அது நிலத்தடி நீரில் கலந்து தண்ணீர் வழியா நம்ம உடலுக்கு போய்க்கிட்டு இருந்துச்சு. சுத்தமான தண்ணின்னு தண்ணில இருக்கும் நல்ல பாக்டீரியா, தாது உப்புகளை நீக்கிட்டு, தண்ணி ருசியா இருக்க, தண்ணில இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை எடுத்துட்டு, தண்ணி பளீர்ன்னு இருக்க பலவித சோடாக்களைக்கொண்டு தண்ணியையும், கேனையும் ப்ளீச் பண்ணி சுத்தமான?! தண்ணியை நமக்கு கொடுக்குறாங்க. கூடவே, தண்ணி வரும் பிளாஸ்டிக் கேன்ல இருக்கும் டாலேட்ன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளும் தண்ணில கலந்து நம்ம ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
சுத்தமான குடிநீரை அரசாங்கம் கொடுத்தா, இப்படிலாம் ஏன் மாமா நடக்கபோகுது?!
ஏன் ஸ்டிரைக் பண்ணுறாங்களாம்?! தண்ணியில்லாம ஜனங்க எம்புட்டு கஷ்டப்படுறாங்க.
நாம செய்யுறது தப்புன்னு தெரியாமயே அதுக்கு அடிமையாகிட்டோம் புள்ள!! எந்த காலத்திலயும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு இருந்துச்சு. வறண்ட கிணத்தில் இருக்கும் நீரை சொட்டி, ஆத்துல ஊற்று வெட்டி.. இப்படி கோடையை சமாளிச்சோம். வீடுகளுக்கு குழாய் மூலமா தண்ணி வர ஆரம்பிச்சபின் ரெண்டு நாளுக்கு ஒருமுறைன்னு ஆரம்பிச்சு 10 டூ 20 நாளிலாவது தண்ணி கிடைச்சது. எப்ப ருசியான தண்ணி வேணும்ன்னும், அல்லல்படக்கூடாதுன்னும், சுத்தமான குடிதண்ணின்னு சொல்லப்பட்ட விளம்பரத்திற்கும் ஆசைப்பட்டு கேன் தண்ணியை வீட்டுக்குள் விட்டோமோ அன்னிக்கே நிலத்தடி நீர் படு வேகமா குறைய ஆரம்பிச்சுட்டுது. இன்னிக்கு மினரல் வாட்டர்ன்னு சொல்லி நாம குடிக்கும் தண்ணில மினரலே இல்ல தெரியுமா?!.
மினரல்ன்னா என்ன மாமா?!
மினரல்ன்னா தாது உப்புக்கள். மண்ணில் நம்ம உடலுக்கு தேவையான கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மாதிரியான தாது உப்புக்கள் இருக்கு. அது நிலத்தடி நீரில் கலந்து தண்ணீர் வழியா நம்ம உடலுக்கு போய்க்கிட்டு இருந்துச்சு. சுத்தமான தண்ணின்னு தண்ணில இருக்கும் நல்ல பாக்டீரியா, தாது உப்புகளை நீக்கிட்டு, தண்ணி ருசியா இருக்க, தண்ணில இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை எடுத்துட்டு, தண்ணி பளீர்ன்னு இருக்க பலவித சோடாக்களைக்கொண்டு தண்ணியையும், கேனையும் ப்ளீச் பண்ணி சுத்தமான?! தண்ணியை நமக்கு கொடுக்குறாங்க. கூடவே, தண்ணி வரும் பிளாஸ்டிக் கேன்ல இருக்கும் டாலேட்ன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளும் தண்ணில கலந்து நம்ம ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
சுத்தமான குடிநீரை அரசாங்கம் கொடுத்தா, இப்படிலாம் ஏன் மாமா நடக்கபோகுது?!
அரசாங்கத்தையே குத்தம் சொல்லமுடியாது. எல்லாத்துக்கும் நம்ம பொறுமையின்மை, அவசரம், சுத்தம்ன்ற பேர்ல நாம பண்ணுற அட்ராசிட்டிதான் இதுக்கு காரணம். ஆத்து தண்ணி, கிணத்து தண்ணியை வடிகட்டாம குடிச்ச தலைமுறைதான் நாம, ஆனா நாம நம்ம பிள்ளைங்களுக்கு சளி வரும், காய்ச்சல் வரும்ன்னும், அடுத்தவங்க கேட்பாங்கன்னும் வீட்டில் தண்ணி சுத்தம் பண்ணும் மெஷினை மாட்டி இருக்கோம்.
பிளாஸ்டிக் பாட்டிலுக்கும், டபுள் டாப் கேனுக்குமென தனித்தனியா ரூல்ஸ் உண்டு. ஒவ்வொரு முறையும் தண்ணி சுத்தம் பண்ணும்போது தாது உப்புகள் அழிக்கப்படுது. அடுத்த முறை விடுபட்ட தாதுக்களை சேர்க்கனும். ஆனா, அதுமாதிரி எந்த கம்பெனியும் சேர்க்குறதில்லை. குறிப்பிட்ட ஆழத்துக்குதான் போர் போடனும். சுத்தம் செஞ்சு வரும் தண்ணியை முறையா மீண்டும் நிலத்தில் சேமிக்கனும். விவசாய நிலத்தில் விட்டாலும் தப்பில்ல. முக்கியமா விவசாய நிலத்தில் மினரல் வாட்டர் கம்பெனியை தொடங்கக்கூடாது. மழைநீரை நேரடியா சுத்தம் செய்யக்கூடாது. மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கென நிறைய கட்டுபாடுகள் இருக்கு. அங்க வேலை செய்யும் ஆட்களுக்கும் இதுமாதிரியான கட்டுபாடுகள் உண்டு. டாக்டர் சர்டிஃபிகேட் அவசியம் தரனும், தலையில், கையில், வாயில் உறை போட்டு இருக்கனும். பெண்களாயிருந்தால் பூ, பொட்டு, வளையல் போடக்கூடாது. இப்படி பல கண்டிஷன் போட்டு இருக்கு அரசாங்கம். ஆனா, அதுலாம் கடைபிடிக்காம அடுத்த தலைமுறைகளுக்கான நீரையும் நாம அளவில்லாம உறிஞ்சு காலி பண்ணிட்டு இருக்கோம். அரசாங்கம் லேட்டா விழிச்சுக்கிட்டு பேக்டரியை சோதனை செஞ்சா ஸ்ட்ரைக் பண்ணுறாங்க நம்மாளுங்க, என்னத்த சொல்ல?!
ஓ இதான் விசயமா?! இந்த ஆண்டவனுக்கு ஓரவஞ்சனை மாமா. நிலத்துல முக்காவாசி தண்ணியை வச்சுட்டு, அதை உப்பா வச்சுட்டதால் எவ்வளவு கஷ்டம் பார்த்தியா?! எல்லாமே நல்ல தண்ணியா இருந்திருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்?!
இந்நேரம் அதையும் உறிஞ்சு வித்திருப்பாங்க நம்மாளுங்க. எல்லா காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. அதுமாதிரிதான் கடல்நீர் உப்பா இருக்கவும் காரணமுண்டு, முதல்ல கடல் நீர் எப்படி உப்பா இருக்குன்னு கேளு. ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்ததுதான் நீர்ன்னு சின்ன வயசுல படிச்சு இருப்பே. அந்த மூலக்கூறுகள் எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்க. சோலார் நெபுலா(Solar Nebula), .விண்கல் மோதல்கள்ன்ற இந்த 2 காரணங்களில் எதாவது ஒன்றினால்தான் பூமியில் தண்ணி உருவாகி இருக்கலாம் சொல்றாங்க. சூரிய குடும்பம் உருவாகும்போது சூரிய குடும்பத்தை சுத்தி வாயுக்களாலும் தூசுகளாலும் ஆன ஒரு மிகப்பெரிய மேகக்கூட்டம் சூழ்ந்துச்சாம். அந்த மேகக்கூட்டம்தான் சோலார் நெபியுலா (Solar Nebula) ன்னு சொல்லப்படுது. அந்த மேகக்கூட்டத்தில் நிறைய ஹைட்ரஜன் அணுவும், ஆக்சிஜன் அணுவும் இருந்துச்சாம். ஏதோ ஒரு சூழல்ல இந்த இரு அணுக்களும் ஒன்னு சேர்ந்து உலர்பனியா மாறுச்சாம். அப்படி உருவான உலர்பனி ஈர்ப்பு விசை காரணமா ஒவ்வொரு கிரகத்தாலும் ஈர்க்கப்பட்டுச்சாம். அதேமாதிரிதான் பூமியின் மூலம் ஈர்க்கப்பட்ட உலர்பனித் துகள்கள் பூமியின் வெப்பமான மேற்பரப்பில் பட்டு உலர் நிலையில் இருந்த அனைத்து மூலக்கூறுகளும் வாயு மற்றும் திரவ நிலைக்கு மாறினதாகவும், இது பல மில்லியன் வருசங்களா நிகழ்ந்து பூமியின் மேற்பரப்பு வெப்பம் நன்கு குறையவும், நீர் மூலக்கூறுகள் நிலையான இப்ப இருக்கும் நிலைக்கு வந்ததா சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அப்படி முதன்முதலில் உருவான நீர் மூலக்கூறுகளை கொண்டு இந்த பூமியின் பெருங்கடல்களை 3 மில்லியன் முறைக்குமேல் நிரப்ப முடியுமாம்.
ம்ஹூம், இப்படி தண்ணி உருவாகலை. தண்ணி உருவாக விண்கல் வீழ்ச்சிதான் காரணம்ன்னு இன்னொரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. நாசா ஆராய்ச்சியின்படி விண்கல் தாக்குதல் இல்லன்னா சிறுகோள் வெடிப்பினால்(Asteroid Bombardment)தான் உலர்ந்த நீர் மூக்கூறுகளால் ஆன படிமங்கள் (Crystals) இருந்த விண்கற்கள்(சிறு கோள்கள்) பூமியின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு பூமியின்மீது மோதின. மோதிய எரிகற்களும், வால் நட்சத்திரங்களும் சுமந்துவந்த உறைந்த நிலையில் இருந்த நீர்படிமங்கள் பூமியின் வெப்பத்தை வேகமாக குறைத்தது மட்டுமில்லாம திரவநிலைக்கும் மாறி மேற்பரப்பை மூட ஆரம்பித்தன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த நிகழ்வில் வந்து மோதிய கோடிக்கணக்கான கற்களே இந்த அளவு நீர் பூமியை அடைந்ததற்கான காரணன்னு சொல்லுது. இரண்டாவது காரணத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முக்கிய காரணம்பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் டியூட்டிரியம் - ஹைட்ரஜன் விகிதமானது (D/H ratio) எரிகற்களில் காணப்படும் விகிதத்தோடு ஒத்துபோகுதாம்.
சரி, கடல் தண்ணி ஏன் உப்பாச்சுன்னு சொல்லு மாமா.
இதோ அதுக்குதான் வரேன்.
பூமி உருவான ஆரம்பித்தில் பூமியின் மேற்பரப்பு முழுக்க அதிக அளவில் குளோரைடும் சோடியமும் இருந்துச்சாம். பூமிக்கு வந்த நீரின் மூலக்கூறுகள் சோடியம் குளோரைடை உயரமான இடங்களிலிருந்து தாழ்வான இடத்திற்கு கடத்தி சென்று படிய வச்சுதாம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்ததால் பூமியின் உயரமான பரப்பிலிருந்த அனைத்து சோடியம் குளோரைடு மூலக்கூறுகளும் தாழ்வான பகுதியில வந்து படிந்ததாம். இப்படியாகத்தான் பூமியின் பெருங்கடல்கள் அனைத்தும் உப்பா மாறிட்டுதாம். அதிக நீரோட்டம் கொண்ட பெருங்கடல்களில் இருக்கும் உப்புத்தன்மையைவிட நால்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தேங்கியுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மையா இருக்குறதை எடுத்துக்காட்டா சொல்றாங்க. (உதா. சாக்கடல் - Dead sea). ஒருவேளை கடல் தண்ணி உப்பா இல்லன்னா பூமியே உப்பாதான் இருந்திருக்கும்.
அப்படி பூமி உப்பா இருந்தால் என்ன மாமா நடந்திருக்கும்?!
இப்பவே பதிவு பெருசாகிட்டு, அதனால் இன்னொரு பதிவில் அதை பார்க்கலாம்.. முகம் கொடுத்து பேசக்கூடாது. அது என்ன?1 இது என்னன்னு கேள்வி கேட்டே சாகடிப்பே!!
ம்க்கும் அவனவன் பொண்டாட்டிக்காக என்னவெல்லாம் செய்றாங்க. நீ என்னடான்னா நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம கெணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கியே!
பொண்டாட்டி புடவைக்கு மடிப்பு எடுக்கும் புருசனை பாரு...
பொண்டாட்டி பொறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் புருசனையும் பாரு. நீயும் கொடுத்தியே ஒரு சர்ப்ரைசை நாலு வருசத்துக்கு முந்தி.... அதை இப்ப நினைச்சாலும்... !@#$%^&)(*&^%$#@!$%^&*(*&^%$#@!@#$%)(*&^%$#@
நன்றியுடன்.
ராஜி
Subscribe to:
Posts (Atom)





































