Sunday, June 02, 2019

தன்னாலே வந்த வினை..... பாட்டு புத்தகம்

நடிகர் பிரபுக்கு, கல்யாணம், சடங்கு, செக்ஸ்ன்னா என்னன்னே தெரியாத அப்பாவி சின்னதம்பி கேரக்டர் அத்தனை பாந்தமா பொருந்தி போகும்போல!! சின்னதம்பி மாதிரியான வெகுளி கேரக்டரில் எனக்கு தெரிஞ்சே அஞ்சாறு படம் நடிச்சிருக்கார்.

முதிர்கன்னி மலையாள பெண்ணான லட்சுமி   டீக்கடை வச்சு வாழ்ந்திருக்கும் ஊரில் பிழைக்க வர்றார் பிரபு. அங்க பிரபுக்கும் ராதாவுக்கும் லவ்ஸ் உண்டாகுது. . ஒரு மழைநாளில் குடிச்சிட்டு வர்ம் பிரபு லட்சுமியை ராதான்னு நினைச்சு அணைப்பார். லட்சுமியும் ஒத்துக்கும். செக்சின் முடிவில் ராதா பெயரை பிரபு உச்சரிக்க, தன்மீது காதல்லாம் இல்லன்னு உணர்ந்து அங்க நடந்த விசயத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஆனா கர்ப்பம் ஆகி ஊருக்கெந் விசயம் தெரிய வரும். ஆனாலும் பிரபு பேரை சொல்லாம மறைச்சிடுவாங்க. படத்தின் முடிவில்தான் பிரபுக்கு அந்த குழந்தை தன்னுதுன்னு தெரிய வரும்.

இந்த படத்தின் வி.சி.ஆர் கேசட் என் அப்பாவின் பிரண்ட் வீட்டில் இருந்துச்சு. இந்த படத்தை அடிக்கடி பார்த்திருக்கேன். படம் முழுக்க காடு, அருவி,மலை சார்ந்த இடமா வரும். என் கனவு வீடு மாதிரியான ஆற்றங்கரை ஓரம் லட்சுமியின் டீக்கடை இருக்கும். அந்த லொக்கேஷனுக்காகவே இந்த படம் பிடிக்கும்..



பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி,
 இப்போ ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும  போனா.. இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி......

தன்னாலே பெண்ணொருத்தி, தாயாக ஆன கதை...
உண்டாக்கி வைத்தவனே, ஓர் நாளும் அறிந்ததில்லை..
கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்..
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்..
யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீ தானே?!
எந்நாளும் நாளை என்று ஏன் மறைத்தாய்?!

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும் போனா இதுகென்ன வழி காமி...
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..

அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே..
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதிங்கே..
உல்லாச ராகத்திலே பாடுதொரு ஜோடிக் குயில்...
சொல்லாத சோகத்திலே வாடுதொரு ஊமைகுயில்..
வாய்ப்பூட்டு போட்டுகிட்டா
வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூங்கோதை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தாள்...

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி...

படம்: என் உயிர் கண்ணம்மா
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

எனக்கு பிடிச்ச பாட்டு. உங்களுக்கு பிடிக்குதான்னு கேட்டு பாருங்க..

நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. ஒஹோன்னு இல்லா விட்டாலும் ஓரளவுக்குப் பிடிக்கும்!!

    ReplyDelete
  2. இந்தப் பாட்டும் படம் பற்றியும் இப்பத்தான் தெரியுது!!!

    பாட்டு ஓகே. ராஜா எஸ்பிபியப் பாட வைச்சிருக்கலாமோ?!

    கீதா

    ReplyDelete