Tuesday, November 03, 2020

வெங்காய பக்கோடா - கிச்சன் கார்னர்

நொறுக்குத்தீனிகள் எத்தனை இருந்தாலும் பக்கோடாவுக்கு ஈடு இணை கிடையாது... மாலை நேரத்தில் ரோட்டோர கடையில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து மினுமினுப்போடு எடுக்கும் பக்கோடாவை, அதே சூட்டோடு மந்தார இலையில் பொட்டலமா கட்டி வாங்கிக்கிட்டு வேலையிலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருந்த தருணம் அலாதியானது. வீட்டுக்கு வந்ததும் மந்தார இலையின் வாசத்தோடும் இளஞ்சூட்டோடும் இருக்கும் பக்கோடாவை சாப்பிட்டதுலாம் பொற்காலம்...

முந்திரி பக்கோடா, கீரை பக்கோடா, வெங்காய பக்கோடான்னு பக்கோடாக்களிலும் வெரைட்டி உண்டு. அப்பாவுக்கு பக்கோடா தூளாய் இருக்கனும். கடையில் வாங்கும்போது பெரிய பெரிய கட்டிகளாய் இல்லாமல் பார்த்து வாங்கனும். பெரிய பெரிய கட்டிகள் முழுசா வேகாம உள்ள மாவு அப்படியே இருக்கும். மறுநாளே ஊசிப்போகும்ன்னு அப்பா டிப்ஸ் சொல்வார்...

செய்ய மிக சுலபம்தான்.. ஆனாலும், அதிகமாய் வீட்டில் செய்வதில்லை. அது ஏன்னும் புரியலை...  வீட்டில் கடலை மாவும் அரிசி மாவும் இருந்தால் பத்து நிமிசத்துல பக்கோடா  செஞ்சுடலாம்..

தேவையான பொருட்கள்..

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2கப்
பெரிய வெங்காயம்- 2
தனி மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
ப.மிளகாய்-1
சோம்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் 
உப்பு -ருசிக்கேற்ப
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி அதை இதழ் இதழா பிரிச்சுக்கனும்...

உப்பு சேர்த்து வெங்காயத்தோடு சேர்த்து பிசைஞ்சு விட்டுக்கனும்,. உப்பும் வெங்காயமும் சேரும்போது தண்ணி வெளிவரும்..
பச்சை மிளகாயை சின்ன சின்னதா வெட்டி சேர்த்துக்கனும்.. விருப்பப்பட்டால் இஞ்சி ஒரு துண்டு சேர்த்துக்கலாம்... கடலைமாவினால் வரும் வாயுத்தொல்லை இருக்காது..
கறிவேப்பிலையை பொடிப்பொடியா வெட்டி சேர்த்துக்கனும்...
சோம்பு சேர்த்துக்கனும்...
தனி மிளகாய் தூளை சேர்த்து மீண்டும் நல்லா பிசைஞ்சு விட்டுக்கனும்....
கடலை மாவு 1 கப் சேர்த்துக்கனும்...
அரிசி மாவு 1/2கப் சேர்த்து நல்லா பிசைஞ்சு விட்டுக்கனும்...
தண்ணியை ஊத்தாம லேசா தெளிச்சு தெளிச்சு பிசைஞ்சுக்கனும்..


 ரொம்ப தண்ணி சேர்க்கக்கூடாது..  அப்புறம் போண்டாதான் செய்யனும்...

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது மாவினை அள்ளி, நான்கு விரலால் தேய்த்து போடனும்... 
கறிவேப்பிலையை ஒரு கொத்து பொரிச்சு பக்கோடாக்களில் சேர்த்தால் கடையில் வாங்கும் பக்கோடா மாதிரியே இருக்கும்...   
#பக்கோடா மாவு பிசையும்போது வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து மாவில் சேர்த்தால் பக்கோடா மொறுமொறுன்னு இருக்குமாம்.  டிவியில் டிப்ஸ் சொல்லும்போது கேட்டேன். அடுத்தமுறை செய்யும்போது முயற்சிப்போம்..

அடுத்த வாரம் இரும்பு சத்துள்ள முருங்கைக்கீரை சூப் செய்முறையோடு வரேன்..
நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. வெங்காயம் - சமூவம் பெரிய இடம் போல...! வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. சம்முவம் பெரிய இடம்தான்... இது செப்டம்பர் மாசத்தைய ரெசிப்பி...

      Delete
  2. IT ரெய்டு சிக்கிரம் வரும் என நினைக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. வந்தாலும் எதும் சிக்காது. ஏன்னா, இது செப்டம்பர் மாதத்தைய நிலவரம்.. போட்டோவுலயே தேதி இருக்கு தம்பி

      Delete
  3. இப்ப போட்ட வெங்காய பக்கோடா இல்லைன்னு நினைக்கிறேன்!!

    நம்ம வீட்டுல எல்லாம் செய்வதுண்டு ஆனால் இப்ப வெங்காயமே ரேஷன்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா! நீங்களாவது இடு இப்ப செய்யலைன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களே!

      அதுமில்லாம ஒரு ரெண்டு வெங்காயத்தில் பக்கோடா செய்தால் நிது நிலைமை ஒன்னும் அவ்வளவு மோசமாகிடாது என்பது எண்ணம் கீதாக்கா

      Delete
  4. Replies
    1. பெரும்பான்மையானவரின் ஓட்டு பக்கோடாவுக்கு கிடைக்குமென நம்புகிறேன்

      Delete
  5. கடைகளில் எண்ணெய் வழிய ஈதைப் பார்க்கும்போது ஆவல் வரும் அதே அளவு அந்த எண்ணெயை நினைத்து பயமும் வரும்.  வீட்டில் செய்தால் பயமில்லை.  அழகாக வந்திருக்கிறது.  நானும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //ஈதைப் பார்க்கும்போது//

      * இதைப் பார்க்கும்போது!!!

      Delete