Monday, December 07, 2020

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தவறா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! வெட்டவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அசுத்தம்ன்னு சொல்லி வீட்டிற்குள் கழிப்பறை கட்டி வச்சிருக்கோம்.  இது சரியா?! வீடுகளுக்குள் கழிப்பறை  வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் எம்மாம்பெரிய வீடுன்னாலும் கழிப்பறை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாதான் இருந்தது. திருட்டுபயம், சோம்பேறித்தனத்தினாலும், 800 அல்லது 1000 சதுர அடிகளில்  மனைகள் வந்தபின்  கழிவறை வீட்டிற்குள்ளயே கட்ட ஆரம்பிச்சி இப்ப கழிப்பறை நடு ஹால்லயே இருக்கும் நிலை வந்தாச்சு. 

ஆமா அதுக்கென்ன இப்போ?!

 எங்கயோ வயல்வெளியில், ஊருக்கு ஒதுக்குப்புறமா வேலையை முடிச்சுட்டு, நேராய் வீட்டுக்குள் வராம, வீட்டுக்கு பின்பக்கமா போய் கை, கால், முகம்லாம் கழுவியபின் வீட்டிற்குள் வந்தபோதே அசுத்தம்ன்னு சொன்னதுபோய் இப்ப வீட்டிற்குள்ளயே கழிப்பறை இருக்கே! இப்ப அசுத்தம்,  கிருமின்னு எந்த பேச்சும் காணோமே ஏன் மாமா?!

வெட்டவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதில் பல பிரச்சனை இருக்கு. ஊருக்கு ஒதுக்குப்புறம்ன்றதால பொண்ணுங்களுக்கு பாதுகாப்பில்ல.  ஆண், பெண்ன்னு பேதமில்லாம நாய் மாதிரியான விலங்கிடமும், பாம்பு மாதிரியான விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்படுறாங்க. .  ஒரு கிராம் மலத்தில் ஒரு லட்சம் கோடி வைரஸ்கள், பாக்டீரியாக்கள் இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.  ஒரே ஆள் பில்லியன் கணக்கிலான  வைரஸ்களையும், பாக்டீரியாக்களையும் வெட்டவெளியில் கொட்டிட்டு வர்றாப்ல! அது காற்றில், நீரில் கலந்தும், நாய், பூனை, காக்கா, குருவி, ஈக்கள் மூலமா பயணிச்சு எல்லா இடத்துக்கும் பரவுது. அதுமட்டுமில்லாம செருப்பில்லாம வெறுங்கால்களால் போகும்போது அதையெல்லாம் மிதிச்சு வீட்டுக்குள்ளயும் போகும்...  மலத்தினால் மஞ்சள்காமாலை, டைஃபாய்டு , காலரா மாதிரியான உயிரை பறிக்கும் நோய்கள் பரவுது.


ஆனா, வீட்டினுள் கழிப்பறை இருந்தால் இந்த கிருமிகள் வெளியில் பரவாமல் செப்டிக் டேங்கிற்குள் போய்டும். மிச்சமிருக்கும் கிருமிகளும் அடிக்கடி கழிப்பறையை சுத்தப்படுத்துவதால் அழிஞ்சுப்போயிடும். ஆனா, இப்ப மார்க்கெட்களில் கிடைக்கும் டாய்லட் க்ளீனரோ, ஆசிட்டோ கொண்டு சுத்தப்படுத்துவதைவிட கோலமாவு கொண்டு சுத்தப்படுத்துவதே சரி. அதற்கு காரணம் மலத்தினை நொதிக்க வைக்கும் நொதிப்பொருட்கள் டாய்லட் க்ளீனரில் இருக்கும் வேதிப்பொருட்களால் அழிந்து போகுது.  கோலமாவு கொண்டு கழிப்பறையை சுத்தபடுத்திவிட்டு ரூம் ஃப்ரெஷ்னரால் கழிப்பறையை வாசனைப்படுத்தலாம். என்ன கோலமாவினால் சுத்தப்படுத்தும்போது கொஞ்சம் கீறல் விழும். அதுதான் அதில் இருக்கும் ஒரு மைனஸ் பாயிண்ட்..

ஒவ்வொரு முறையும் கழிப்பறைக்கு சென்று வந்தபின் கைகளை சோப்பு போட்டு கழுவனும். கால்களையும் கழுவனும். சிலர் வெஸ்டர்ன் டாய்லட்தானேன்னு கால்களை கழுவாமல் வந்துடுவாங்க, அது தப்பு... கழிப்பறை எதுவா இருந்தாலும் கை,கால்களை கழுவனும்...  ஒவ்வொரு முறையும் தனது அந்தரங்க உறுப்பையும் சுத்தப்படுத்திக்கனும். இந்த விசயத்தில் பெண்கள் பரவாயில்லை. ஆனா, ஆண்கள் எல்லா நேரத்திலும் சிறுநீர் கழிச்சப்பிறகு கையைக்கூட கழுவுறதில்லை.  பின், எங்கே தங்கள் உறுப்பை கழுவுறது?!.’ ஆண்கள் செய்யும் இன்னொரு தப்பு, நின்னுக்கிட்டே சிறுநீர் கழிப்பது..

கைகளை, உறுப்புகளை கழுவுறதில்லைன்னு சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, நின்னுக்கிட்டு சிறுநீர் கழிப்பதில் என்ன தப்புன்னு எனக்கு புரியலை மாமா.

Squat Toilet எனப்படும் இண்டியன் டாய்லெட்டில் ஆண்கள் நின்னுக்கிட்டே சிறுநீர் கழிப்பதால் பேஷினுக்கு வெளியேயும் தெறிச்சு விழும். ஆனா, பேஷினுக்குள் மட்டும் தண்ணீர் ஊத்திட்டு வந்துடுவாங்க. அதுவும் தப்பு.. கழிப்பறை முழுக்க தண்ணி ஊத்தி கழுவனும். இல்லன்னா நாறுவது மட்டுமில்லாம வைரஸ்களும், பாக்டீரியாக்களும் அந்த கழிப்பறை முழுக்க பரவிடும்....
Sitting Toiletன்னு சொல்லப்படும் வெஸ்டர்ன் டாய்லெட்ல போறதா இருந்தால் மூடி மற்றும் சீட் கவரை எடுத்துட்டுதான் ஆண்கள் சிறுநீர் கழிக்கனும். சிலர் மூடி மட்டும் எடுத்துட்டு அப்படியே நின்னுக்கிட்டே போவாங்க. எல்லாம் சரியாதான் போகும். கடைசி சில சொட்டுகள் டாய்லெட் விளிம்பிலோ அல்லது சீட் கவர்மேல் தெறிப்பது தவிர்க்க முடியாது. இதனால் நோய் கிருமி பரவுறது மட்டுமில்லாம சீட் கவர்லாம் நாளடைவில் மஞ்சள் நிறமா மாறிடும். நின்னுக்கிட்டே தங்கள் வேலையை முடிச்சப்பிறகு, தண்ணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு டாய்லெட் சீட் கவர், விளிம்பை தொடைக்கனும். அதுமட்டுமில்லாம முக்கால்வாசிப்பேர் சீட் கவரை அப்படியே விட்டுட்டு வந்துடுவாங்க. அடுத்து வரும் பெண்கள் அந்த சீட் கவரையும், மூடியும் தொட்டு இறக்கனும், பெண்கள் அமர்ந்து தங்கள் வேலையை முடிக்க அவங்களுக்கு டாய்லெட் சீட் கவர் அவசியம்.ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதில் அசிங்கம், அவமானம்ன்னு நினைக்குறாங்க. ஆணோ, பெண்ணோ இருபாலருக்குமே சிறுநீரகமும் அது சார்ந்த உள்ளுறுப்புகளும் ஒன்றுதான். வெளி உறுப்பின் அமைப்புதான் வேறு. பேண்டோ, ஷார்ட்சோ அதை கழட்டனும்ன்ற கூடுதல் வேலைதானே தவிர வேறு எதும் அசௌகரியமில்லை. நின்னுக்கிட்டே போறது சுலபம் என்பதை தாண்டி அதுவே சரின்னு அர்த்தமில்லை. நின்னுக்கிட்டே போறதால், சிறுநீர் தெறித்தல்,  டாய்லெட் நிறம் மங்குதல், டாய்லட் கழுவுதல், பெண்களுக்கு சங்கடம்ன்னு யோசிக்கும்போது பேண்டை கழட்டுவது அம்புட்டு பெரிய வேலை இல்ல... சோம்பேறித்தனத்தினை தவிர்த்தால் கூடுதல் நன்மைகள் உட்கார்ந்து போவதால் கிடைக்கும். அதனால் எந்த கழிப்பறையா இருந்தாலும் உட்கார்ந்துதான் ஆண்களும் போகனும். இதுலாம் அசிங்கம்ன்னு பார்க்காம வீட்டில் விவாதிக்கனும். அப்பதான் ஆண்குழந்தைகள் பொறுப்பா நடந்துப்பாங்க.

இதையெல்லாம பேசனுமான்னு மத்தவங்க முகம் சுளிக்கும் விசயத்தை  பத்தி ரொம்ப சீரியசா நாம பேசியாச்சு...  அதனால் கொஞ்சம் சிரிச்சுக்குற மாதிரி இந்த வீடியோவை பாருங்க..  நம்ம பேரனுக்கு வீட்டில் போட்டுக்க பேண்ட் வாங்கி வந்தோம்ல! அது அவன் இடுப்பளவைவிட பெருசா இருக்குறதால தூக்கும்போதெல்லாம் கழண்டு வரும். இந்த வீடியோவை பார்த்ததும் வருண்ராகவ் ஞாபகம்தான் மாமா  வந்துச்சு..

பாவம்டி அந்த குழந்தை.. படமெடுக்குறதுல இருக்குற அக்கறை குழந்தைக்கு டவுசர் மாட்டிவிடுறதுல காட்டலாம்ல்ல!
மீண்டும் சீரியஸ் மோடுக்கு போகாத மாமா!  எல்லாத்தையும் ரசிக்கனும். குழந்தைக்கு ஆபத்தா இருந்தால் இப்படி படமெடுப்பாங்களா?! அந்த கதையை விடுங்க.. இந்த படத்தை பாருங்க, ஆரணி, காஞ்சிபுரம், திருபுவனம், இளம்பிள்ளை, உப்படம், மைசூர், காஷ்மீர் பட்டுதான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, பட்டில் இன்னும் நிறைய ரகமிருக்குன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுது. எல்லா பட்டிலும் ஒவ்வொரு புடவைன்னு இந்த பொங்கலுக்கு  எடுத்துக்கலாம்ன்னு இருக்கேன்.

அடிப்பாவி,உழைச்சு சம்பாதிக்குறது நானு.. அதனோட பலன் உனக்கா?! 
நானாவது உன் பொண்டாட்டி உன் உழைப்பின் பலனை அனுபவிச்சா தப்பில்ல.  ஆனா, இந்த படத்தை பாருங்க.. கஷ்டப்பட்டு பள்ளம் தோண்டி, செடி நட்டது யாரோ, ஆனா, போட்டோவுக்கு போஸ் கொடுத்து பேர் வாங்குறது வேற யாரோ?!  படத்தில் இருக்கும் பையன் முகத்தை பார்த்தாலே அவனோட உழைப்பை திருடியதன் வேதனை தெரியும். என்னதான் பள்ளமெடுக்க பைசா கொடுத்திருந்தாலும் கண்டிப்பா உள்ளுக்குள் வேதனை பட்டிருப்பான்ல!


கடைசியா ரசிக்கும்படியா ஒரு க்ளிப் பார்ப்போமா?! பார்க்குமிடங்களிலெல்லாம் கண்ணனின் பச்சை நிறத்தை பார்த்த மாதிரி உள்ளத்தில் அன்பிருந்தால் எல்லா இடத்திலும் அதுவே  தெரியுமாம்.. அதுமாதிரி இங்க ஒருத்தர் ஐஸ்கட்டியில் லவ் அடையாளத்தை உண்டாக்குறார். 

பார்க்கவே சூப்பரா இருக்கு மாமா. ஆனா, எனக்கொரு டவுட். எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி ரசனையான ஆளு கிடைக்காம சாமியாரா ஒரு ஆள் அமையனும்?! இதுக்கு மட்டும் பதில் சொல்லு மாமா.. மாமா பதில் சொல்லாம எங்க ஓடுறே?!

அந்தாளு எங்காவது இருந்தா பிடிச்சு இழுத்து வாங்க சகோ!!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

 1. வயசானவங்களுக்கு நின்னுட்டுப் போனாத்தான சிறுநீர் முழசும் வெளியேறும்னு சொல்வாங்க.ஆனா தெறிச்சி விழற துளிகளைச் சுத்தம் பண்ணச் சிலர் மறந்துடுவாங்க.

  பயனுள்ள பதிவு.

  ReplyDelete
  Replies
  1. போனாத்தான-போனாத்தான்

   Delete
 2. நல்ல விளக்கம் சகோதரி...

  ReplyDelete
 3. உபயோகமான தகவல்கள்.  காணொளியில் அந்தக் குழந்தையின் அவஸ்தை அந்தத் தகப்பனுக்குத் தெரியவில்லை!

  ReplyDelete
 4. இளம் வயதில் நாங்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தபோது எங்கள் தாத்தா திட்டியது நினைவிற்கு வந்தது. பின்னர் அவர் கூறியபடி பழக ஆரம்பித்தோம்.

  ReplyDelete
 5. மிகவும் நல்ல இடுக்கை... நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

  ReplyDelete
 6. ஓம் அகஸ்திஸ்வராய போற்றி
  ஓம் காக புஜண்டார் போற்றி

  ReplyDelete
 7. ஓம் காகபுஜண்டர் போற்றி
  ஓம் அகஸ்தியர் போற்றி
  ஓம் அருணகிரிநாதர் போற்றி
  உலகத்தில் உள்ள அனைத்து சித்தர்களையும் ஜீவ சமாதிகளையும் வணங்குவோம்🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  ReplyDelete