போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!! அருகிலிருந்த திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம். திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க.