எனக்கு கடவுள் பக்திலாம் அவ்வளவா கிடையாது. ஆனா, அதுக்காக கடவுள் இல்லைன்னு சொல்ற ஆளும் கிடையாது. அப்புறம் எப்படி கோவிலுக்கு போய் பதிவுலாம் போடுறென்னு கிராஸ் கொஸ்டின்லாம் கேக்கப்படாது. அது ஃபேமிலி டூர் போகும்போது பெரியவங்களை சமாதானப்படுத்த போறது. எனக்கும் உம்மாச்சிக்குமான தூரம் ஹாய்! ஹலோ!ன்ற அளவுதான். கோவிலுக்கு போகும்போதுகூட சாமி கும்பிடுறதைவிட அங்கிருக்கும் சிலை, படம் இதுலாம் பார்த்துக்கிட்டு நின்னுட்டு திட்டு வாங்குவேனே தவிர, ஒழுங்கா மனசு ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடமாட்டேன்.
அப்படி இருக்கும் என் எதிரில்லாம் கடவுள் தோன்றுவாரா?!ன்னு தெரியல. கடவுள்ன்னா க்ரீடம், நகை, வேல், அம்பு, பட்டாடை, நகை போட்டு ஹெவி மேக்கப்புலதான் வருவாங்களா!? ஆனா, நான் பல நேரங்களில் கடவுளை என் அப்பா, அம்மா ரூபத்துல பார்த்திருக்கேன். இப்பவும் பார்த்துக்கிட்டிருக்கேன்.
எல்லா கடவுளும் கேட்டப் பின்தான் வரம் கொடுக்கும், ஆனா, என் கடவுள்கள் நான் கேட்காமலே எனக்கு தேவையானதை கொடுக்க முதல் ஆளாய் நிக்கும். அதனால, இதுவரை யார்கிட்டயும் கேட்டுப் பழக்கமில்ல. கடவுள் உட்பட....,
அப்பேற்பட்ட என்னையும் உங்க ஆசை என்னன்னு கேட்க ஒரு ஆள் இருக்கேன்னு மனசுக்குள் சந்தோசம் ரெக்கைக் கட்டி பறக்குது. தேங்க்ஸ் கிரேஸ்!! எம்புட்டோ யோசிச்சு பார்க்குறேன்...., என் தேவைகள் என்னன்னு?! நிஜமா தெரிலப்பா!!
பொதுநலத்துக்காக யோசிக்க, பாடுபட நிறைய பேர் இருக்காங்க..., என் வீட்டுக்கு யோசிக்க அம்மா, அப்பா இருக்காங்க...,
எல்லாமே கிடைச்சாலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஜெயம் ரவி மாதிரி எனக்குள்ளும் சின்ன சின்ன ஆசை உண்டு...,
7,8,9 மணிக்குன்னு எங்க வீட்டுல பள்ளி, வேலைக்கு கிளம்புவாங்க. அதனால, கண்ணு முழிக்குறதே அடுப்புலதான். 5 மணிக்கு எழுந்தால்தான் 7மணிக்கு டப்பா கட்ட சரியாய் இருக்கும். வேலைநாட்களில் லேட்டா எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஆத்துக்காரர் ஞாயிறு அன்னிக்கு மட்டும் டான்னு 5 மணிக்கு எந்திருச்சு வாசல் கதவை திறந்து வச்சுட்டு வாசல் தெளி, டீ கொண்டான்னு இம்சிப்பாங்க. அதனால, ரூம் கதவை பூட்டிக்கிட்டு, காலை குளிருக்கு இதமா போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கனும்...,
பக்கத்து தெருவுக்கு கூட அப்பா, அம்மா, பையன், வூட்டுக்காரர்ன்னு எஸ்கார்ட் கூட போயே பழகிட்டேன். அதனால, தனியா வெளி ஊருக்கு போய் கடைக்கு போய் நான் என் இஷ்டபட்டதை வாங்கி வரனும்..
புகுந்த வீடு, பொறந்த வீடு, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அக்கா, நாத்தனார், மூத்தார், கொழுந்தனார் வீடுலாம் சுத்தி 20 கிமீக்குள்ளயே இருக்குறதால ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணம் போகனும். அதும், ரயில், பஸ் பிரயாணம் போகனும்....,
வெளிய எங்கிட்டாவது போகும்போது பசங்கலாம் ஜன்னல் சீட்டை பிடிச்சுக்குதுங்க. கூடவே இயர் ஃபோனையும் பிடுங்கிக்குதுங்க. அதனால, யாருமில்லாம குளிர், மழை நேரத்துல பஸ் பயணம் போகனும். ஜன்னலோர சீட், இயர் ஃபோனோடு ஃபுல் சார்ஜ்ல மொபைல் இல்ல ஐபாட். கூடவே இளையராஜா, கார்த்திக், பிரபு, கமல், ரஜினி மெல்லிசை பாட்டும் வேணும்.
என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.
காலைல ஆளுக்கொரு நேரத்துல சாப்பிட்டு போவாங்க. நைட் சாப்பாடு ஒண்ணா சாப்பிடுவோம். தோசை, சப்பாத்திலாம் செஞ்சு வச்சு சாப்பிட மாட்டோம். ஒவ்வொண்ணா சுட்டு சாப்பிடுவோம். பிள்ளைங்கலாம் சாப்பிட லேட் ஆகும். அதனால, எனக்கு தேவையானதை நானே சுட்டுக்கனும்:-( அதனால, நான் போதும் போதும்ன்னு சொல்லும்வரை தோசை, பூரி, சப்பாத்தி யாராவது சுட்டு போடனும், நான் சாப்பிடனும்.
அப்பாக்கு, வீட்டுக்காரருக்கு புத்தகம் படிச்சா பிடிக்காது. சத்தம் அதிகமா வச்சு பாட்டு கேட்டாலும் திட்டு விழும். அதனால, எனக்கே எனக்குன்னு ஒரு ரூம்ல 80ல வந்த மெல்லிசை பாட்டு சிடிக்களும், நிறைய புத்தகங்களும் வேணும்.
எங்க வீட்டுல புத்தகம் படிச்சு விமர்சிக்க யாரும் இல்ல. அதனால, மாலை வேளையில் சூடான காஃபி, நொறுக்கு தீனியோடு, கைக்கோர்த்து கதை பேச ஒரு தோழி வேணும்.
மழை நாள்ன்னு ஐஸ் வாட்டர், கூல் ட்ரிங்க்ஸ்க்கு தடா போட்டுடுவாங்க. அதனால, ஃப்ரிட்ஜ்ல ஐஸ் வாட்டரும், கூல்ட்ரிங்க்ஸும் இருக்கனும். மிட்நைட்ல எழுந்து குடிக்கனும்.
என் பொண்ணுங்க சில நாட்களில் சமைப்பாங்க. ஆனா, கிச்சன் க்ளீன் பண்ண மாட்டாங்க. துணி துவைக்க மெஷின் இருக்கு. அதனால, கிச்சன், துணி லாம் மடிச்சு எடுத்து அந்தந்த இடங்களில் வைக்க ஒரு ஆள் வேணும்.
எல்லோரோடவும் டூர் போனால் ஒரு நாளைக்கு நாலு கோவில், அஞ்சு ஊர்ன்னு அவசர அவசரமா பார்ப்பாங்க. அதனால, சிவகாமி, நரசிம்ம பல்லவன், மகேந்திர பல்லவன், பரஞ்சோதியோடு நான் மட்டும் மகாபலிபுரத்தையும்..., அருள்மொழிவர்மன், வல்லவராயன், குந்தவை, பூங்குழலியோடு தஞ்சாவூரையும் சுற்றிப் பார்க்க ஆசை.
ஸ்ஸ்ஸ் அபா! என் ஆசைலாம் இவ்வளவுதான். நான் லேட்டா பதிவு போட்டதால யாரைக் கூப்பிடுறது. எல்லோரையும், எல்லாரையும் கூப்பிட்டதால என் பதிவுக்கு வரும் எல்லோரையும் கூப்பிடுறேன்.

பொதுநலத்துக்காக யோசிக்க, பாடுபட நிறைய பேர் இருக்காங்க..., என் வீட்டுக்கு யோசிக்க அம்மா, அப்பா இருக்காங்க...,
எல்லாமே கிடைச்சாலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஜெயம் ரவி மாதிரி எனக்குள்ளும் சின்ன சின்ன ஆசை உண்டு...,
(என்னோட கடவுள்கள்..,)
7,8,9 மணிக்குன்னு எங்க வீட்டுல பள்ளி, வேலைக்கு கிளம்புவாங்க. அதனால, கண்ணு முழிக்குறதே அடுப்புலதான். 5 மணிக்கு எழுந்தால்தான் 7மணிக்கு டப்பா கட்ட சரியாய் இருக்கும். வேலைநாட்களில் லேட்டா எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஆத்துக்காரர் ஞாயிறு அன்னிக்கு மட்டும் டான்னு 5 மணிக்கு எந்திருச்சு வாசல் கதவை திறந்து வச்சுட்டு வாசல் தெளி, டீ கொண்டான்னு இம்சிப்பாங்க. அதனால, ரூம் கதவை பூட்டிக்கிட்டு, காலை குளிருக்கு இதமா போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கனும்...,
பக்கத்து தெருவுக்கு கூட அப்பா, அம்மா, பையன், வூட்டுக்காரர்ன்னு எஸ்கார்ட் கூட போயே பழகிட்டேன். அதனால, தனியா வெளி ஊருக்கு போய் கடைக்கு போய் நான் என் இஷ்டபட்டதை வாங்கி வரனும்..
புகுந்த வீடு, பொறந்த வீடு, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அக்கா, நாத்தனார், மூத்தார், கொழுந்தனார் வீடுலாம் சுத்தி 20 கிமீக்குள்ளயே இருக்குறதால ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணம் போகனும். அதும், ரயில், பஸ் பிரயாணம் போகனும்....,
வெளிய எங்கிட்டாவது போகும்போது பசங்கலாம் ஜன்னல் சீட்டை பிடிச்சுக்குதுங்க. கூடவே இயர் ஃபோனையும் பிடுங்கிக்குதுங்க. அதனால, யாருமில்லாம குளிர், மழை நேரத்துல பஸ் பயணம் போகனும். ஜன்னலோர சீட், இயர் ஃபோனோடு ஃபுல் சார்ஜ்ல மொபைல் இல்ல ஐபாட். கூடவே இளையராஜா, கார்த்திக், பிரபு, கமல், ரஜினி மெல்லிசை பாட்டும் வேணும்.
என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.
(எதிர் வீட்டு குட்டி)
என் வீட்டு குட்டிலாம் பெருசாகிட்டு என் சொல்பேச்சு கேக்குறதில்ல. அதனால, இப்போ என் சின்னக்குட்டியாய் எதிர்வீட்டு குழந்தைதான் இருக்கான். அவனுக்கு எப்பவுமே வயசாகக் கூடாது. வயசானால் என் சொல் பேச்சு கேட்க மாட்டான்.காலைல ஆளுக்கொரு நேரத்துல சாப்பிட்டு போவாங்க. நைட் சாப்பாடு ஒண்ணா சாப்பிடுவோம். தோசை, சப்பாத்திலாம் செஞ்சு வச்சு சாப்பிட மாட்டோம். ஒவ்வொண்ணா சுட்டு சாப்பிடுவோம். பிள்ளைங்கலாம் சாப்பிட லேட் ஆகும். அதனால, எனக்கு தேவையானதை நானே சுட்டுக்கனும்:-( அதனால, நான் போதும் போதும்ன்னு சொல்லும்வரை தோசை, பூரி, சப்பாத்தி யாராவது சுட்டு போடனும், நான் சாப்பிடனும்.