1. வாயிலிருந்த விழுந்த பல்லை., மனுசங்க மிதிக்காத இடத்துல நட்டு வச்சு.., அதை யானை மிதிச்சா.., அந்த இடத்துல பைசா கிடைக்கும்ன்னு நினைச்சு “வீட்டு காம்பவுண்டுக்குள்” புதைச்சு வெச்சுப்பேன்....,
2. ”டிரைவிங் ஸ்கூல்” இருக்குற மாதிரி “டிரைவிங் காலேஜ்”ன்னு ஒண்ணு இருக்குன்னு நினைச்சிருக்கேன்...,
3. ”ஓணான்” கடிச்சா ஒரு நிமிசம், ‘அரணை” கடிச்சா அரை நிமிசம், “பல்லி” கடிச்சா பத்து நிமிசத்துல செத்துடுவோம்ன்னு நம்பியிருக்கேன்....,
4. ”ப்ளட் கேன்சர்” வந்தா மருந்தே கிடையாது செத்துதான் போவாங்கன்னு சினிமா பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..,
5. போட்டோ எடுத்துக்கிட்டா ஆயுசு குறைஞ்சுடும்ன்னு தாத்தா சொன்னதை நம்புனேன்....,
6. கிணறு தோண்டும்போது மூட்டை, மூட்டையாய் சர்க்கரை கொட்டுனதாலதான் தண்ணி நல்ல சுவையில இருக்குறதா நினைச்சுப்பேன்...,
7. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10பைசா இல்ல 20 பைசாவை வெச்சு அது மேல ரயில் ஏறுனா அது தங்கமாய்டும்ன்னு நம்புனேன்...,
8. பெரியவளானதும் பனை ஓலைல செஞ்ச காத்தாடி, பனங்காயினால செஞ்ச வண்டிலாம் செஞ்சு விக்குற தொழிலதிபராகனும்ன்னு நினைச்சுப்பேன்...,
9. மழை டைமல் இடி இடிச்சா அது எங்காவது போய் விழும். அது விழுற இடத்துல பசு மாட்டோட சாணியை போட்டு வெச்சா அந்த ”இடி” ஒரு கம்பியா மாறும். அதை வெச்சு பாறைல கூட ஓட்டை போடலாம்ன்னு பாட்டி சொன்னதை நம்புனேன்...,
10. அம்மன் சாமிலாம் னடிகை கே. ஆர். விஜயா சாயல்ல இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்...,
11. அசோக மரத்தையெல்லாம் அசோகர் தான் நட்டார்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...,
12. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.
13. அடுத்த தெரு ராமு மாமா வீட்டு நாய்தான் கொடிய விலங்குன்னு நினைச்சுப்பேன்(சனியன்! நான் எங்கே போனாலும் விடாது.., அன்பா?! தொரத்தும்..)
14. புத்தகத்துல மயிலிறகு வெச்சு குங்குமம் வெச்சா மயிலிறகு குட்டி போடும்ன்னு நினச்சுப்பேன்.
15. பொய் சொன்னா, ராத்திரி தூங்கும்போது சாமி வந்து கண்ணு குத்தும்ன்னு நம்புனேன்...,