திங்கள், நவம்பர் 19, 2012

சின்ன புள்ளையா இருக்கும்போது இப்படி நினைச்சுப்பேன்..., பாகம் 2


                                       

1. வாயிலிருந்த விழுந்த பல்லை., மனுசங்க மிதிக்காத இடத்துல நட்டு வச்சு.., அதை யானை மிதிச்சா.., அந்த இடத்துல பைசா கிடைக்கும்ன்னு நினைச்சு “வீட்டு காம்பவுண்டுக்குள்” புதைச்சு வெச்சுப்பேன்....,

2. ”டிரைவிங் ஸ்கூல்” இருக்குற மாதிரி  “டிரைவிங் காலேஜ்”ன்னு ஒண்ணு இருக்குன்னு  நினைச்சிருக்கேன்...,

3. ”ஓணான்” கடிச்சா ஒரு நிமிசம், ‘அரணை” கடிச்சா அரை நிமிசம், “பல்லி” கடிச்சா பத்து நிமிசத்துல செத்துடுவோம்ன்னு நம்பியிருக்கேன்....,

4. ”ப்ளட் கேன்சர்” வந்தா மருந்தே கிடையாது செத்துதான் போவாங்கன்னு சினிமா பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..,

5. போட்டோ எடுத்துக்கிட்டா ஆயுசு குறைஞ்சுடும்ன்னு தாத்தா சொன்னதை நம்புனேன்....,

6. கிணறு தோண்டும்போது மூட்டை, மூட்டையாய் சர்க்கரை கொட்டுனதாலதான் தண்ணி நல்ல சுவையில இருக்குறதா நினைச்சுப்பேன்...,

7. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10பைசா இல்ல 20 பைசாவை வெச்சு அது மேல ரயில் ஏறுனா அது தங்கமாய்டும்ன்னு நம்புனேன்...,

8. பெரியவளானதும் பனை ஓலைல செஞ்ச காத்தாடி, பனங்காயினால செஞ்ச வண்டிலாம் செஞ்சு விக்குற தொழிலதிபராகனும்ன்னு நினைச்சுப்பேன்...,

9. மழை டைமல் இடி இடிச்சா அது எங்காவது போய் விழும். அது விழுற இடத்துல பசு மாட்டோட சாணியை போட்டு வெச்சா அந்த ”இடி” ஒரு கம்பியா மாறும். அதை வெச்சு பாறைல கூட ஓட்டை போடலாம்ன்னு  பாட்டி சொன்னதை நம்புனேன்...,

10. அம்மன் சாமிலாம் னடிகை கே. ஆர். விஜயா சாயல்ல இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்...,

11. அசோக மரத்தையெல்லாம் அசோகர் தான் நட்டார்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...,

12. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

13. அடுத்த தெரு ராமு மாமா வீட்டு நாய்தான் கொடிய விலங்குன்னு நினைச்சுப்பேன்(சனியன்! நான் எங்கே போனாலும் விடாது.., அன்பா?! தொரத்தும்..)

14. புத்தகத்துல மயிலிறகு வெச்சு குங்குமம் வெச்சா மயிலிறகு குட்டி போடும்ன்னு நினச்சுப்பேன்.


15.  பொய் சொன்னா, ராத்திரி தூங்கும்போது  சாமி வந்து கண்ணு குத்தும்ன்னு நம்புனேன்...,

25 கருத்துகள்:

 1. புத்தகத்துல மயிலிறகு வெச்சு குங்குமம் வெச்சா மயிலிறகு குட்டி போடும்ன்னு நினச்சுப்பேன்.

  இதை நானும் நினைச்சிருக்கேன்

  பதிலளிநீக்கு
 2. . //அசோக மரத்தையெல்லாம் அசோகர் தான் நட்டார்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்...,//
  இது நல்லா இருக்கே!

  பதிலளிநீக்கு
 3. பல ஞாபகங்களை வரவைத்தது.

  எல்லோருக்கும் இப்படி சிலவை இருக்கும் நண்பரே.

  பதிலளிநீக்கு
 4. ஏறக்குறைய நானும் அப்படித்தான்
  இருந்திருக்கிறேன்
  ஆனாலும் உங்களைப்போல ஏன் என்னால்
  அருமையான சுவாரஸ்யமான பதிவுகளைத்
  தர இயலவில்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. கிட்டதட்ட சிறுவயதில் எல்லாம் அப்படித்தான்.அது பரவாயில்லை.பெரியவர்கள் ஆயும் கூட பில்லி,சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளின் பின் போகிறவர்களை என்ன சொல்ல?.....

  பதிலளிநீக்கு
 6. அந்த அறியாப் பருவ நம்பிக்கைகள் அலாதிதான்.நன்று ராஜி

  பதிலளிநீக்கு
 7. அப்படியே இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்?

  பதிலளிநீக்கு
 8. பலர் மனதில் உள்ளதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க...!

  ரசித்தேன்...

  நன்றி சகோதரி....
  tm5

  பதிலளிநீக்கு
 9. இப்போ சாமி கனவுல வந்து தண்டனை கொடுத்தா?

  பதிலளிநீக்கு

 10. நான் எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் வந்தது என்று நினைத்து வெளியில் சொல்ல வெட்கப்பட்டு இருக்கிறேன்.
  நீங்கள்...
  குழந்தை மனத்தைத் திறந்துக் காட்டியிருக்கிறீர்கள்.
  சூப்பர் ராஜி அக்கா.

  பதிலளிநீக்கு
 11. அந்த வயசுக்கே உரிய அப்பாவித்தனங்களை அழகா பட்டியலிட்டுக் காமிச்சுருக்கீங்க :-)

  பதிலளிநீக்கு
 12. மிகமிக ரசனையாக....
  சற்று நகைப்புடனேயே படித்தேன்....
  சுவையாக இருந்தது...

  பதிலளிநீக்கு
 13. ஆமாம் ஆமாம்.... அப்படித்தான் நானும்.

  ஆமாம்.... இந்தப் பதிவில் குழந்தைப் படம் அருமை!!!!! பாக்கப்பாக்க ஆசையா இருக்கு!

  பதிலளிநீக்கு
 14. அடடே..நல்லா இருக்கே..இதுல பாதி நானும் நினைச்சிருக்கேன்.இதை ஒரு பதிவாக்கிய விதம் ஜூப்பர்..பின்னுங்க..

  பதிலளிநீக்கு
 15. //8. பெரியவளானதும் பனை ஓலைல செஞ்ச காத்தாடி, பனங்காயினால செஞ்ச வண்டிலாம் செஞ்சு விக்குற தொழிலதிபராகனும்ன்னு நினைச்சுப்பேன்...,//

  i too have thought like that. LOL. aaaaaaaaaah sweet childhood innocence.

  பதிலளிநீக்கு
 16. இந்த வரிசையில் வந்த ரெண்டு கட்டுரையும் அருமை எனக்கும் அப்படி ஒன்று எழுத ஆசை வந்தது

  பதிலளிநீக்கு
 17. இப்ப சின்னப்புள்ளை எல்லாம் இப்படி நினைக்குங்களா கேட்டு பார்க்கணும்.இப்ப அப்பாவிதனம் நிறைய குழந்தைகளுக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
 18. நிறையாபேரு இப்படில்லாம் நினச்சிருப்பாங்கதான்.

  பதிலளிநீக்கு
 19. நீங்க பரவாயில்லை நான் ABC small letters நான் படிக்க ஆரம்பிக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் கண்டு பிடித்தார்கள் என்று நினைத்துகொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 20. இதை படித்த போது எனக்கும் பல சிறு வயது நம்பிக்கைகள் நினைவில் வருகிறது.....ஆனால் இப்போ உள்ள குழைந்தைகள் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறார்கள்....அவர்களுக்கு எல்லா அறிவும் சிறு வயதிலே வந்து விடுகிறது.....பாகிர்வுக்கு மிக்க நன்றி......


  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு
 21. எத்தனை குழந்தைத்தனமான நம்பிக்கைகள் !

  பதிலளிநீக்கு