அதனால, நம்ம சக பதிவர்கள்லாம் நிஜமாவே எப்படி அவங்க வீட்டுல எப்படி பொங்கல் கொண்டாடினாங்கன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சதால கொஞ்சம் லேட்டாகிட்டுது.., சாரி..., இனி ஒவ்வொரு பதிவரும் அவங்க வீட்டுல எப்படி கொண்டாடினாங்கன்னு அவங்கவங்க குடும்பத்தார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது...,
கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.
”அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன் வீட்டில்...,
ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க, கூட மாட ஒத்தாசை பண்ணாம அங்க என்ன செல்லை நோண்டிக்கிட்டு இருக்கீங்க.
மதுரை தமிழன்: வரேன் இரு.
ஹவுஸ் பாஸ்: ஏங்க, இங்க வந்து ஹெல்ப் பண்ணா சீக்கிரம் சாமி கும்பிடலாமில்ல!!
மதுரை தமிழன்: பொங்கல் வச்சுட்டேன். ஏழு காய் போட்டு குழம்பு வச்சாச்சு. பூஜை ரூம்ல விளக்குலாம் ஏத்தி ரெடி பண்ணி வச்சுட்டென். நீ கற்பூரம் காட்ட வேண்டியதுதான் பாக்கி! வேற என்ன வேலை பாக்கி இருக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ண!?
ஹவுஸ் பாஸ்: என்ன அங்க வாய் நீளுது!? நல்ல நாளும் அதுமா பூரிக்கட்டையை எடுக்கக் கூடாதுன்னு நினைச்சா எடுக்க வச்சுடுவீங்க போல!! இந்த கற்பூரத்தை யார் ஏத்தி தருவாங்க. 10000ல பட்டுச் சேலை எடுத்துக் கட்டி இருக்கேன். அது கசங்கக் கூடாது.
மதுரை தமிழன்: ம்க்கும், புடவை கசங்க கூடாது. ஆனா, புருசனை மட்டும் கசக்கி புழிவா!
” கோவை நேரம்” ஜீவா வீட்டில்..,
ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! இன்னிக்கு பொங்கல் பண்டிகை. சர்க்கரை பொங்கல் செய்யனும்.., பொங்கல் குழம்பு வைக்கனும்.., கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வர்றீங்களா?!
ஜீவா: இதோ பாரும்மா! சர்க்கரை பொங்கல், நம்ம மூணவது தெருவுல இருக்குற ------- ஹோட்டல்ல நல்லா இருக்கும். காலையில 8 மணிக்கு கூட்டம் கம்மியா இருக்கும். அங்க வாங்கிக்கலாம்.பொங்கல் குழம்பு லாங்க் பஜார் ரோடுல இருக்குறா------- ஹோட்டல்ல நல்லா இருக்கும் அங்க வாங்கிக்கலாம். டேஸ்ட் கொஞ்சம் மட்டமா இருந்தாலும் கலர் கலரா அம்மணிகள்லாம் வருவாங்க.
ஹவுஸ் பாஸ்: !@#$%^ +)&^%$ !@#%^&&
ஜீவா: நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா ஒரு பக்கார்டியா அடிக்க உடுறாளா?! நொய், நொய்ன்னு சே இதுக்கு நான் டூர் இருக்குன்னு வழக்கம்போல எங்கிட்டாவது கிளம்பி போய் இருக்கலாம்.
ஸ்கூல் பையன் வீட்டில்...,
ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க அடுப்பு ரெடி பண்ண சொன்னா வரலை. நானே ரெடி பண்ணி, பானை வாங்கி வந்து பொங்கல் வைக்க ரெடி பண்ணிட்டேன். நீங்க கற்பூரம் காட்டவாவது வாங்களேன்.
ஸ்கூல் பையன்: வர மாட்டேன் போடி!
ஹவுஸ்பாஸ்: என்னது போடியா!?
ஜூனியர் ஸ்கூல் பையன்:: நல்ல நாள் அதுமா அப்பாவை அடிக்காதம்மா!
ஹவுஸ் பாஸ்: பையனுக்காக சும்மா வுடுறேன். நானும் பார்க்குறேன் ஒரு வாரமா நீங்க சரியில்ல. எது சொன்னாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறிங்க. முஞ்சை தூக்கி எரவானத்துல வச்சிருக்கீங்க. நல்ல நாளும் அதுமா ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க.
ஸ்கூல் பையன்: அடிப்போடி, எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தியா!?
ஹவுஸ்பாஸ்: புரியலை!
ஸ்கூல் பையன்: என் பேர் என்ன!? ஸ்கூல் பையன். என் பேருக்கு தகுந்த மாதிரி சட்டை, ட்ரவுசர் எடுக்காம வேட்டி ஃபேண்ட் எடுத்திருக்கியே! அதான் கோவம்.
ஹவுஸ் பாஸ்: ம்க்கும். நீங்க எனக்கு அடங்க மாட்டீங்க. இருங்க உங்க அக்கா ராஜிக்கு போன் பண்றேன். அப்பதான் அடங்குவீங்க.
ஸ்கூல் பையன்: அம்மா தாயே! உன்கிட்ட அடிகூட வாங்கலாம். அவங்கக் கிட்ட அட்வைஸ்ன்ற பேர்ல கடிலாம் வாங்கமுடியாது. இதோ வந்துட்டேன்.
கடல் பயணங்கள் சுரேஷ்குமார்....,
ஹவுஸ்பாஸ்: டேய் கண்ணா! உன் அப்பாவை கூப்பிடுடா. சாமி கும்பிடலாம்.
ஜூனியர் சுரேஷ் குமார்: ம்க்கும் உங்க வீட்டுக்காரர் எங்க இருக்கார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பதிவாக்க காரெடுத்து கிளம்பி ஒரு மணிநேரமாச்சு.
ஹவுஸ் பாஸ்: இந்தாள்கிட்ட இதே ரோதனையாப் போச்சு!
ஆரூர் மூனா வீட்டில்...,
ஆரூர் மூனா அம்மா: ஏம்மா! அந்த பானையை எடுத்து மஞ்சள் துண்டு கோர்த்து கட்டும்மா
ஹவுஸ் பாஸ்: கட்டிடேனுங்க அத்தை. அரிசி களைஞ்சு வெச்சுட்டேன். குழம்பு வைக்க காய்லாம் கூட கட் பண்ணி வெச்சுட்டேன்.
ஆரூர் மூனா அம்மா: பொங்க பானை அடுப்புல வெக்கனும் செந்தில் எங்கேம்மா!? கூப்பிடு அவனை!!
ஹவுஸ் பாஸ்: ம்க்கும். உங்க புள்ள எங்கே இங்க இருக்க போறார். இன்னிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 படம் ரிலீஸ் அதனால, நேத்து நைட்டே பாய், தலைகாணிலாம் எடுத்துக்கிட்டு தியேட்டர் வாசல்லயே போய் படுத்துக்கிட்டார்.
திண்டுக்கல் தனபாலன் வீட்டில்...,
ஹவுஸ் பாஸ்: பொங்கல் பொங்கி வரும் போது எல்லாரும் சத்தமா சொல்லுங்க. பொங்கலோ பொங்கல்ன்னு...,
திண்டுக்கல் தனபாலன்: ஏய்! நீங்க யாரும் சொல்லக்கூடாது, நாந்தான் முதல்ல சொல்லுவேன். சீக்கிரம் பொங்கல் வை. அப்புறம் நமக்கு முன் மத்த வீட்டுலலாம் பொங்க வச்சிட போறாங்க.
”காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் வீட்டில் ...
பெரியப்பா: ஏம்மா தூயா! செங்கல் கொண்டு வாம்மா!
தூயா: இந்தாங்க பெரியப்பா.
பெரியம்மா: அந்த அரிசில இருக்குற கல்லு, நெல்லுலாம் பொறுக்கி சுத்தம் பண்ணும்மா.
தூயா: சரி பெரியம்மா. என்ன காய்கறின்னு சொன்னா.., நான் கழுவி நறுக்கி தருவேன்.
ராஜியோட ஹவுஸ் பாஸ்: ஏய் தூயா! நீதான் வேலை செய்யுறே. உங்கம்மா எங்கே?!
தூயா: ம்க்கும் அம்மா என்னிக்குப்பா வீட்டு வேலைகள் செஞ்சு இருக்காங்க?! அதோ பாருங்க பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..., மனசுக்குள் பிரபல பதிவர்ன்னு நினைப்பு...,
ராஜியோட ஹவுஸ் பாஸ்: 1{@}%:&{)_!?$<>^&*&))()@<>{}][’;./,
டிஸ்கி: இது என்னோட 500 வது பதிவு. என்னையும் ஒரு ஆளாய் மதிச்சு நான் போடும் பதிவையும் படிச்சு ஆதரவு தரும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஆளுக்கொரு கேக் துண்டு எடுத்துக்கோங்க. அமெரிக்காவுல இருந்து நீளும் கை மேல மட்டும் ஒரு கண் வச்சுக்கோங்கப்பா! அது ரெண்டு, மூணு கேக் துண்டு எடுத்துக்கும்.