Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Saturday, December 07, 2013

கல்யாணப்பரிசு


ஏதோ ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,

பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்.
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,

நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய் எனை..,
உன் மணநாள் பரிசாய்
என்ன தரலாம் என்று
மனதினுள் குழப்பம்!!

இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி!

ஒருவேளை
இல்லையென்று சொல்லி, அவன்
மறுத்தாலும் மறுப்பான்
அந்த கள்வன்.

என்னிடமிருந்து உனக்குத் தர‌
எவனிடம் நான் கெஞ்ச வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் .