Showing posts with label உப்புமா. Show all posts
Showing posts with label உப்புமா. Show all posts

Tuesday, April 09, 2019

புருசங்களுக்கு பிடிக்காத உணவு - கிச்சன் கார்னர்.

இந்த ஆம்பிள்ளைகளுக்கு பொண்டாட்டிய பிடிச்சாலும் பிடிச்சுடும். ஆனா, உப்புமாவை மட்டும் பிடிக்க மாட்டேங்குது ஏன்னு தெரில. எனக்கு உப்புமான்னா ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அதிகமா வெங்காயம், எண்ணெய் சேர்த்து செய்யும் விதத்தில் செஞ்சா நல்லா இருக்கும். 

தேவையான பொருட்கள்;
வெள்ளை ரவை - 1 டம்ப்ளர் 
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் 
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
முந்திரி பருப்பு
ப.மிளகாய் 
இஞ்சி 
உப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து சிவக்க விடனும். 
பருப்புகள் சிவந்ததும், கீறி வச்சிருக்கும் ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை சேர்க்கனும்.
நீளவாக்கில் வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தினை சேர்த்துக்கனும்..
உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துடும்.
வெங்காயம் வதங்கியதும் தண்ணி சேர்த்துக்கனும். மெல்லிசான ரவையா இருந்தால் ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு சேர்க்கனும். பெரிய ரவையா இருந்தால் 1 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடனும்.
தண்ணி கொதிச்சதும் ரவையை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறி விடனும்.
கட்டித்தட்டாமல் நல்லா கிளறி விட்டு, கொஞ்சம் இளகு பதமா இருக்கும்போதே அடுப்பை அணைச்சுடனும். கொஞ்ச நேரம் மூடி வச்சு பரிமாறினால் சாப்பிட சூப்பரா இருக்கும்.

ரவையை  சிலர்  முதல்லியே கொஞ்சம் எண்ணெயில் வறுத்து சேர்ப்பாங்க. சிலர் கொஞ்சம் பாலும் சேர்த்துக்குறாங்க. தண்ணி குறைச்சலா இருந்தாலோ இல்ல எண்ணெய் குறைச்சலா இருந்தாலோ உப்புமா நல்லா இருக்காது.   உப்புமாவுக்கு தேங்காய் சட்னியும், சர்க்கரையும்தான் நம்மாளுங்க சைட் டிஷ்சா பிடிக்கும். சின்ன வயசில் அம்மா உப்புமாவுக்கு தொட்டுக்க வெல்லம் தருவாங்க. சூடான உப்புமாவில் வெல்லம் தொட்டு சாப்பிட்டால் செமயா இருக்கும். இட்லிப்பொடியும், தக்காளி ஊறுகாயும்கூட உப்புமாவுக்கு தொட்டுக்க நல்லா இருக்கும்..  

என்ற மாமனுக்கு உப்புமா பிடிக்காது. பார்ப்போம் எத்தனை பேருக்கு உப்புமா பிடிக்குதுன்னு..

நன்றியுடன்,
ராஜி