Tuesday, April 09, 2019

புருசங்களுக்கு பிடிக்காத உணவு - கிச்சன் கார்னர்.

இந்த ஆம்பிள்ளைகளுக்கு பொண்டாட்டிய பிடிச்சாலும் பிடிச்சுடும். ஆனா, உப்புமாவை மட்டும் பிடிக்க மாட்டேங்குது ஏன்னு தெரில. எனக்கு உப்புமான்னா ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் அதிகமா வெங்காயம், எண்ணெய் சேர்த்து செய்யும் விதத்தில் செஞ்சா நல்லா இருக்கும். 

தேவையான பொருட்கள்;
வெள்ளை ரவை - 1 டம்ப்ளர் 
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் 
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
முந்திரி பருப்பு
ப.மிளகாய் 
இஞ்சி 
உப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து சிவக்க விடனும். 
பருப்புகள் சிவந்ததும், கீறி வச்சிருக்கும் ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை சேர்க்கனும்.
நீளவாக்கில் வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தினை சேர்த்துக்கனும்..
உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துடும்.
வெங்காயம் வதங்கியதும் தண்ணி சேர்த்துக்கனும். மெல்லிசான ரவையா இருந்தால் ஒரு பங்கு ரவைக்கு 2 பங்கு சேர்க்கனும். பெரிய ரவையா இருந்தால் 1 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடனும்.
தண்ணி கொதிச்சதும் ரவையை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறி விடனும்.
கட்டித்தட்டாமல் நல்லா கிளறி விட்டு, கொஞ்சம் இளகு பதமா இருக்கும்போதே அடுப்பை அணைச்சுடனும். கொஞ்ச நேரம் மூடி வச்சு பரிமாறினால் சாப்பிட சூப்பரா இருக்கும்.

ரவையை  சிலர்  முதல்லியே கொஞ்சம் எண்ணெயில் வறுத்து சேர்ப்பாங்க. சிலர் கொஞ்சம் பாலும் சேர்த்துக்குறாங்க. தண்ணி குறைச்சலா இருந்தாலோ இல்ல எண்ணெய் குறைச்சலா இருந்தாலோ உப்புமா நல்லா இருக்காது.   உப்புமாவுக்கு தேங்காய் சட்னியும், சர்க்கரையும்தான் நம்மாளுங்க சைட் டிஷ்சா பிடிக்கும். சின்ன வயசில் அம்மா உப்புமாவுக்கு தொட்டுக்க வெல்லம் தருவாங்க. சூடான உப்புமாவில் வெல்லம் தொட்டு சாப்பிட்டால் செமயா இருக்கும். இட்லிப்பொடியும், தக்காளி ஊறுகாயும்கூட உப்புமாவுக்கு தொட்டுக்க நல்லா இருக்கும்..  

என்ற மாமனுக்கு உப்புமா பிடிக்காது. பார்ப்போம் எத்தனை பேருக்கு உப்புமா பிடிக்குதுன்னு..

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. சத்தியமாக எனக்கு உ(ப்பு)மாவை பிடிக்காது சகோ.

    ReplyDelete
    Replies
    1. உப்புமாவை பிடிக்காத ஆண்கள் உண்டுன்னு ஐ நோ; உமாவையுமா பிடிக்காது?! எல்லாம் சரி யார் அந்த உமா?!

      Delete
    2. உப்புமாதான் எழுதினேன் இடையில் கணினியோட சதி அடைப்புக்குறி வந்துடுத்து...

      Delete
  2. இங்கயும் உப்புமா வா

    ReplyDelete
  3. முன்பு என் மனைவிக்கு உப்புமா பிடிக்கும் ஆனால் எனக்கு பிடிக்காது.. இப்போது சின்ன மாற்றம் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் என் மனைவிக்கு பிடிக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆகமொத்தம் எந்த காலத்திலும் இருவரும் ஒத்து போகப்போறதில்லைன்னு உப்புமா உணர்த்துது.

      Delete
  4. எப்போதுமே பிடிக்காது என்று சொல்ல முடியாது!

    ReplyDelete
    Replies
    1. அப்ப மாசம் ஒருக்கா செய்யலாம்ன்னு சொல்லுங்க. எங்க வீட்டில் வருசம் ஒருக்காக்கூட செய்ய அனுமதியில்லை.

      Delete
  5. அடக் கடவுளே.... உப்புமாவா.... நான் வரலை இந்தப் பக்கத்துக்கே..... :)

    ReplyDelete
    Replies
    1. நாந்தான் சொன்னேன்ல! ஆம்பிள்ளைகளில் 90% பேருக்கு உப்புமா பிடிக்காதுன்னு

      Delete
  6. புருசங்களுக்கு பிடிக்காத உணவு - நாங்க எப்படி இந்த பதிவை படிப்போம்?

    தலைப்பை படிச்சவுடனே நினைச்சேன் - உப்புமாவாகத்தான் இருக்கும்னு

    ReplyDelete
    Replies
    1. பதிவை யூகிச்சதுக்கு வாழ்த்துகள்.

      Delete
  7. எனக்கு ரவை உப்புமா பிடிக்கும், ஆனால் எங்கள் வீட்டில் அடிக்கடி அரிசி உப்புமா+ தக்காளிசட்னி.வீட்டம்மாவுக்கும் மகனுக்கும் அதுதான் பிடிக்கும்.

    ReplyDelete
  8. இட்லி தோசையைவிட உப்புமா எளீதில் செய்து விடலாம். அதனால் சமையல் செய்யும் அம்மா மார்களூக்கு உப்புமா செய்வது பிடிக்கும். ஈடு ஈடாக அவிக்க வேண்டியதில்லை, சூடாக ஒவ்வொருவருக்காக தோசை சுட வேண்டியதில்லை. அதனால் அம்மா மார்கள் எபோதாவது உப்புமா செய்வார்கள்.

    அதில் நெய் ஊற்றீ, முந்திரிப் பருப்பை நெய்யில் வருத்துப் போட்டு, இஞ்சி சேர்ந்து, தேங்காய் சட்னி தயார் செய்து (பலர் சகர் தொட்டுக்கொண்டு சாப்பிடுவாங்க) என்னதான் மணமாக ஹை காலரி உணவாக மாற்றீனாலும் உப்புமா உப்புமாதான். ரவைதான் அதில் மெய்ன் இன்க்ரீடியண்ஸ். யாரும் அதை மெச்சுவது இல்லை.

    இன்றூ இங்கே எல்லாம் பொதுவாக காலை உணவு பலருக்கு சீரியல், பால்தான். இது உப்புமாவைவிட எந்த வகையிலும் உயர்ந்த உணவில்லை. இருந்தும் உப்புமாவுக்கு பெரிய மரியாதை உயரவில்லை.

    ரவை ஒரு மாதிரியான ப்ராசஸ்ட் ஃபூட் னு நினைக்கிறேன். இட்லி தோசை, பூரி போல் அது ஃப்ரெஸ் கெடையாது. அதனால் அதில் எந்த மணமும் கெடையாது.

    உப்புமா அதிகமாக சமைக்கிறாங்க என்றால் அவர்களூக்கு சமையல் போக மற்ற வேலைகள் அதிகம் இருக்குனு அர்த்தம். உப்புமாவை சகித்துக் கொள்வார்கள். யாரும் ரசித்து சாப்பிடுவதில்லை. பிச்சைக்காரர்கள் கூட அப்படித்தான்னு நினைக்கிறேன்.

    மனைவிக்குப் பிடிக்காத உறவினர் வந்தால் (கணவன் சொந்த பந்தம்), உப்புமாதான் அனேகமாக தயாராகும். ;)





    ReplyDelete