கால் உடைஞ்சு அம்மா வீட்டில் இருந்தபோது பின்னியது. பெட் ரெஸ்ட்ன்னு ஒரு மாசம் செமயா போரடிக்கும். அம்மா பார்க்கும் சீரியல் இன்னும் கடுப்பேத்தும். அப்பாவை வயர் வாங்கி வரச்சொல்லி பின்னியது. அப்பாக்கு நிறங்களுக்கான வேறுபாடு தெரியாது. மொத்தம் நாலு வயர் வாங்கி வா, அதில் ஒரே கலர்ல ரெண்டு பாக்கெட்ன்னு ரெண்டு கலர், அதிலும் லைட் கலர், டார்க் கலர்ன்னு பார்த்து வாங்கி வான்னு சொன்னால் இப்படி வாங்கி வந்தார்.
மகளின் மாமியார் வீட்டிற்கு மார்க்கெட் போக, பூஜைக்கூடை, கடைக்கு போக சின்ன கூடைன்னு மொத்தம் மூணு கூடை போட்டுக்கொடுத்தேன். அதை பார்த்து மகளின் நாத்தனார் கேட்க அவங்களுக்காக பின்னியது இது.. இது கிராஸ் கட் கூடை.. வயர் கொஞ்சம் பத்தாம போக கைப்பிடி சிறுசாகிட்டது.
இது அண்ணன் வீட்டுக்காக பின்னியது..
நல்லா இருக்கா மக்களே!?
நன்றியுடன்,
ராஜி




