சினிமாவுல காட்டுற மாதிரி எல்லா வாசப்படிக்கும் மணியாலான ஸ்க்ரீன் போடனும்ன்னு ஆசை. கோவம் வந்தா நானே எல்லாத்தையும் பிச்சு போட்ருவேன்னும் உள்ளுக்குள் பயம். அதனால, ரெண்டு பெட்ரூமுக்கும் இடைப்பட்ட இடத்துல என் ஆசைக்கும், பயத்துக்கும் ஏத்த மாதிரி சிம்ப்ளா ஒரு கண்ணாடி தோரணம் செஞ்சு மாட்டியாச்சு. கோவத்துல பிச்சு போட்டா கொஞ்சமா வீணாப்போகுமே! அதான்.... என்னிக்கு கோவம் வந்து நான் இல்லன்னா அப்பு பிடிச்சு இழுத்து அறுக்கப்போறோமோ?! அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்....
தேவையானப் பொருட்கள்:
வெவ்வேறு கலர் மீடியம் சைஸ் உருண்டை வடிவ கண்ணாடி மணிகள்,
சின்ன சைஸ் கலர் முத்து
குஞ்சலம் போல தொங்க விட எதாவது ஒரு வடிவத்துல கண்ணாடி மணி(என் பொண்ணுக்கு பிடிச்சது கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணி)
கத்தரிக்கோல்
நரம்பு இல்ல திக்கான நூல்
எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.
முதல்ல கதாயுதம் வடிவத்துல இருக்கும் மணியை கோர்த்துக்கிட்டேன்...
எனக்கு பிடிச்ச கத்திரிப்பூ கலர் மணி...
அதுக்கடுத்து ஸ்கைப்ளூ கலர் மணியை கோர்த்துக்கிட்டேன். இப்படியே உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கோர்த்துக்கோங்க...
இடையிடையே கோல்டன் கலர் திலக வடிவ மணிகளையும் கோர்த்துக்கிட்டேன்....
எல்லாத்தையும் கோர்த்துக்கிட்டே வந்தா ஒரு சரம் ரெடி....
நடுவில் சின்ன சரம். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிய சரம், அதுக்கடுத்து இன்னும் கொஞ்சம் பெரிய சரம்ன்னு அழகா கோர்த்து ஆணி அடிச்சு மாட்டியாச்சு...
தோரணம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476634
நன்றியுடன்,
ராஜி
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476634
நன்றியுடன்,
ராஜி
தோரணம் அழகா இருக்கு. அருமையான கைவேலைப்பாடு.
ReplyDeleteநன்றி சகோ
Deleteம்ம்... அயித்தானோட சம்பளம் அப்படியே பேங்குக்கு போயிடும் போலயே...
ReplyDeleteம்க்கும். இதுலாம் வாங்க பைசா யாரு கொடுப்பாங்களாம்?!
Deleteதோரணம் ரொம்ப அழகாக இருக்கு ராஜிக்கா....வீடும்..
ReplyDeleteநன்றிப்பா
Deleteமிகவும் அருமை
ReplyDeleteநன்றி சகோ
Deleteதோரணம் ஜோரா இருக்கு கோபம் வந்தா நியாபகமா கையை இழுத்துக்கோங்கோ உழைப்பு வீணா போயிடும் உள்ளுக்குள் சொல்லிகோங்கோ
ReplyDeleteஅதென்னமோ கோவம் வந்தா அந்த ஸ்கிரீன்லதான் எனக்கும் என் பையனுக்கும் கை போகும். அப்ப்புறம்தான் அடுத்தவங்க கை போகும்
Deleteஅருமை
ReplyDeleteதம +1
வருகைக்கும் பாராட்டி கருத்து சொன்னதுக்கும் நன்றிண்ணே
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
ReplyDeleteதோரணம் ரொம்ப அழகாக இருக்கிறது, வீட்டின் இந்த இரு ரூம்களின் நடுவில் நல்ல ஸ்பேஸ் வாஷ் பேசின் என்று அந்த இடம் அமைப்பு அழகாக இருக்கிறது சகோ/ராஜி
ReplyDelete