முதல் காதல், முதல் முத்தம், முதல் அழுகை, முதல் ஸ்பரிசம், முதல் பரிசு என முதன்முதலாய் வாய்த்தவைகள் என்றும் மறக்கலாகாது. அதுமாதிரி, முதன்முதலாய் நிகழ்ந்த நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவகளின் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்னிக்கு சோனி (sony)ன்ற பேரை கேட்டதும் நமக்கு டிவிதான் நினைவுக்கு வரும். ஆனா, சோனி கம்பெனில முதன்முதலா தயாரிச்ச பொருள் ரைஸ்குக்கராகும்... அதேமாதிரி, டயர் தயாரிப்பில் பேர்போன எம். ஆர் . எப். (MRF) கம்பனி தயாரிச்சது ஒரு பலூனை.... ரிலையன்ஸ் தன்னோட வியாபாரத்தை ஆரம்பிச்சது விமல்ன்ற துணிகள்மூலம்தான். அதேப்போல, விப்ரோ கம்பனி வனஸ்பதியையும், பானசானிக் கம்பனி பல்பு ஸ்டாண்டுகளையும், நோக்கியா பேப்பர் மில்ன்னுதான் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சாங்க.
இந்திய அளவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குன முதல் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அம்மா. சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும், முதல் நடிகையும் இவங்கதான். காந்தியடிகளே நேரில் வந்து சுதந்திர போராட்டாத்தில் தங்கள் பங்களிப்பு வேணும்ன்னு சொல்லி கூப்பிட்ட முதலும் கடைசியுமான நடிகை இவங்கதான்.
முழுக்க முழுக்க இந்தியர்களாலயே தோற்றுவிக்கப்பட்ட வங்கி பஞ்சாப் நேசனல் பேங்க். தமிழகத்தின், இந்தியாவின் முதல் மாநகராட்சின்ற பெருமை சென்னையையே சேரும். சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் சர்.பி.டி. தியாகராயர், சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார், . சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், தாரா செரியன் என பதவியை அலங்கரித்தனர்.
சென்னையில் முதன்முதலாக கட்டிய சினிமா தியேட்டர் ‘கெயிட்டி’. இது ஆந்திராக்காரரான ஆர். வெங்கய்யா. இவர்தான் ஊமைப்படத்துக்கு பிண்ணனி இசை சேர்த்து, சினிமாவை பேச வைத்தவர், இந்த தியேட்டர் கட்டுறதுக்கு முன், எக்மோர் பக்கத்துல இருக்கும் விக்டோரியா ஹால்லதான் நாடகம், மௌன படங்கள்லாம் காட்டப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் படம் கீசகவதம். 1916l இப்படம் வெளியானது. நடராஜ முதலியார் இயக்கியிருந்தார். இவரே தமிழ்த் திரையுலகின் முதல் இயக்குனரும் ஆவார். தமிழில் வெளியான இரட்டைவேடம் கொண்ட படம் உத்தமபுத்திரன். பி.யு. சின்னப்பா ஹீரோவா நடிச்சிருந்தார். ஏ.வி. எம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முதல் படம் அல்லி அர்சுனா. 1935ல வெளியானது.
முதன்முதலாக ... அடுத்த பாகமும் வரும்...
நன்றியுடன்,
ராஜி
முதன்முதலாக ... அடுத்த பாகமும் வரும்...
நன்றியுடன்,
ராஜி