Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, April 19, 2020

ஒரு பொண்ணை இப்படியா வர்ணிப்பாங்க?! - பாட்டு புத்தகம்

டி.ராஜேந்தர் படங்கள் ரிலீஸ்ன்னா கிராமம், நகரம்ன்ற பாகுபாடு இல்லாம  எல்லா இடத்திலும் வெற்றிகரமா ஓடும். ரஜினி, கமல் படங்களுக்கினையாக அந்த காலத்தில் இவர் படங்கள் வெற்றிப்பெற்றது. அதுக்கு காரணமா அவர் படங்களில் அம்மா தங்கை செண்டிமெண்ட், ஹீரோவின் காதல் தோல்வி, டி.ராஜேந்தர் ஹீரோயினை தொடாமல் நடிப்பது, இசை, கதை, ரைமிங்கான வசனம்ன்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.  அவர் படத்தோட செட்டிங்க்காகவே படத்துக்கு போன ஆட்கள் பலர் உண்டு.

Sunday, April 12, 2020

உன்கூடவே பொறக்கனும்.... உன் கூடவே இருக்கனும்.. - பாட்டு புத்தகம்

என் முதல் பொறந்த நாளுக்கு ரேடியோ செட் கட்டி, சீரியல் பல்ப் போட்டு ஊருக்கே விருந்து வச்ச அதே அப்பா, கல்யாணத்துக்குமுன்  புதுத்துணி எடுத்துக்கொடுத்து, எல்லாருக்கும் கொடுக்க சாக்லேட்டை வாங்கி தந்த அதே அப்பாதான் என்ன சாதிச்சேன்னு இப்ப பொறந்த நாள் கொண்டாடனும்ன்னு கேட்பாரு?!  ஞாயிற்றுக்கிழமைல பொறந்த நாள் வந்தால் பிரியாணியோடு மதியம் சாப்பாடு, கையில் ஒரு நூறு ரூபா. இதுதான் பல வருசமா தொடர்ந்து வருது...  பிள்ளைகள் வளர்ந்தபின் அதுங்க கேக் வாங்கி வந்து, எதாவது கிஃப்ட் பண்ணும்...

Saturday, April 07, 2018

முதன் முதலாக...... பாகம் 1


முதல் காதல், முதல் முத்தம், முதல் அழுகை, முதல் ஸ்பரிசம், முதல் பரிசு என முதன்முதலாய் வாய்த்தவைகள் என்றும் மறக்கலாகாது. அதுமாதிரி, முதன்முதலாய் நிகழ்ந்த நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவகளின் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். 
இன்னிக்கு சோனி (sony)ன்ற பேரை கேட்டதும் நமக்கு டிவிதான் நினைவுக்கு வரும். ஆனா, சோனி கம்பெனில முதன்முதலா தயாரிச்ச பொருள் ரைஸ்குக்கராகும்...  அதேமாதிரி, டயர் தயாரிப்பில் பேர்போன எம். ஆர் . எப். (MRF) கம்பனி தயாரிச்சது ஒரு பலூனை.... ரிலையன்ஸ் தன்னோட வியாபாரத்தை ஆரம்பிச்சது விமல்ன்ற துணிகள்மூலம்தான். அதேப்போல, விப்ரோ கம்பனி வனஸ்பதியையும், பானசானிக் கம்பனி பல்பு ஸ்டாண்டுகளையும், நோக்கியா பேப்பர் மில்ன்னுதான் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சாங்க.  

இந்திய அளவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குன முதல் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அம்மா. சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும், முதல் நடிகையும் இவங்கதான். காந்தியடிகளே நேரில் வந்து சுதந்திர போராட்டாத்தில் தங்கள் பங்களிப்பு வேணும்ன்னு சொல்லி கூப்பிட்ட முதலும் கடைசியுமான நடிகை இவங்கதான். 

முழுக்க முழுக்க இந்தியர்களாலயே தோற்றுவிக்கப்பட்ட வங்கி பஞ்சாப் நேசனல் பேங்க்.  தமிழகத்தின், இந்தியாவின் முதல் மாநகராட்சின்ற பெருமை சென்னையையே சேரும். சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்  சர்.பி.டி. தியாகராயர்,   சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார், . சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்,  தாரா செரியன் என பதவியை அலங்கரித்தனர். 



சென்னையில் முதன்முதலாக கட்டிய சினிமா தியேட்டர் ‘கெயிட்டி’. இது ஆந்திராக்காரரான ஆர். வெங்கய்யா. இவர்தான் ஊமைப்படத்துக்கு பிண்ணனி இசை சேர்த்து, சினிமாவை பேச வைத்தவர், இந்த தியேட்டர் கட்டுறதுக்கு முன்,  எக்மோர் பக்கத்துல இருக்கும் விக்டோரியா ஹால்லதான் நாடகம், மௌன படங்கள்லாம் காட்டப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் படம் கீசகவதம். 1916l இப்படம் வெளியானது.  நடராஜ முதலியார்  இயக்கியிருந்தார். இவரே தமிழ்த் திரையுலகின் முதல் இயக்குனரும் ஆவார். தமிழில் வெளியான இரட்டைவேடம் கொண்ட படம் உத்தமபுத்திரன். பி.யு. சின்னப்பா ஹீரோவா நடிச்சிருந்தார்.  ஏ.வி. எம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முதல் படம் அல்லி அர்சுனா. 1935ல வெளியானது. 

முதன்முதலாக ... அடுத்த பாகமும் வரும்...

நன்றியுடன்,
ராஜி






Saturday, August 26, 2017

அத்தை மகனே போய் வரவா?!

என் பெரியம்மாக்கு கல்யாணம் ஆகும்போது என் அப்பாரு சின்ன புள்ளை. என் அப்பாவோட அம்மாவும், என் அம்மாவோட அப்பாவும் உடன்பிறந்தவர்கள். அதாவது விளக்கமா சொல்லனும்ன்னா என் அம்மாக்கு என் அப்பா முறைப்பையன்.

என் பெரியம்மா கல்யாணம் கட்டிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு கிளம்பும்போது எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டு, அப்படியே என் அப்பாக்கிட்ட வந்து  போய்வரேன்னு சொல்லும்போது சரியா இந்த பாட்டு ஒலிச்சதாம். இந்தன் பாட்டை எப்ப கேட்டாலும் அப்பா இதை சொல்வாரு.  இப்பலாம் அப்பா கண்ணுல தண்ணி வழியும்., காரணம் பெரியம்மா இப்ப இல்ல. ஆனா அப்பா நினைவில் இருக்காங்க..
படம்

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!


மல்லிகை மலர் சூடி காத்து நிக்கவா?!
மாலை இளம் தென்றல் தூதுவிடவா?!
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா?!
நாட்டோரை சாட்சி வைத்து வந்துவிடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா?!
முகம் பார்க்க முடியாம நிலம் பார்க்கவா?!
நிலம் பார்த்து உன்னை நாடவா?!
உன்னை நாடி.... உன்னை நாடி....
உன்னை நாடி .... உன்னை நாடி உறவாடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!













தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468381
நன்றியுடன்,
ராஜி

Saturday, September 28, 2013

சினிமாவை பிடிக்காம போக காரணங்கள்

1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா  அட்வைஸ் பண்ணும்.

2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.

3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.

4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.

5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும்,  அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம்.  ஐந்தடி கூந்தல்?!

6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!

7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும்,  உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.

8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.

9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.

10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,


11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும் விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி பெண்கள்.

12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம் விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள். 

13. அண்ணி, நாத்தனார் கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம் வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.

14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே மாறுவேசத்துல அலையும் ஹீரோ.

15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன் கிட்ட கொடுக்கனும்.


(தொடரும்...,)

Thursday, April 05, 2012

குழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டோரும் விரும்பும் ஜாக்கி சான்



 குழந்தைகளுக்கும், குழந்தை மனதுள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஜாக்கி  சான்,  10 மாதங்களுக்கு பதிலாக, 12 மாதங்கள் அம்மாவின் வயிற்றில் இருந்த  பிறக்கும்போது 5 கிலோ வரை இருந்தார். பிரசவம் பார்த்த டாக்டர் எங்களுக்கு பீஸ் எதும் வேண்டாம், இந்த குழந்தையை எங்களுக்கு குடுத்துடுங்க” அன்றார், அந்த அளவுக்கு கொள்ளை அழகுடன் இருந்தார் ஜாக்கி சான்.

அன்பு மகனுக்கு ”கோங் சாங் சான்” எனப் பெயரிட்டார் சார்லஸ். “பாவ் பாவ்” என்றும் செல்லமாக அழைப்பார்கள். இதற்கு பீரங்கிக் குண்டு என்று பெயர். சூ சாங் சான் என்ற சகோதரனும் தாய் சான்(Tai chan)என்ற சகோதரியும் உண்டு. மிகவும் குறும்புபுப் பிள்ளையாக வளர்ந்தார் ஜாக்கி சான்.

ஏழ்மை காரணமாகவும் சரியாகப் படிப்பு வராத்தாலும், சிறு வயதிலேயே நாடகப் பள்ளியில் சேர்ந்தார் ஜாக்கி. அங்கேயே தங்கி இருந்து, ஆடல், பாடல், ஜூடோ, குங்க்ஃபூ எனக் கற்றுக் கொண்டார். அப்பா சார்லஸுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்க, அவர் மனைவியுடன் ஹாங்காங்கை விட்டுக் கிளம்பிவிட்டார்.
                                 

நாடகப் பள்ளியில் படிப்பை முடித்த சான், சிறு சிறு வேடங்களில் நடித்தார். மூன்று வேளை சூப் குடிக்க முடியாத அளவுக்குதான் இருந்தது வருமானம். அதனால், பெற்றோரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றாற்.. சானின் பெயரை, ஆஸ்திரேலியா மக்கள் உச்சரிக்க கஷ்டப்பட்டனர். ஜாக்கி என்று விளையாட்டாய் அழைக்க போய், அதுவே இன்று, ஜாக்கி சானாக மாறியது.

மீண்டும் ஹாங்காங் திரும்பிய ாக்கியின் திறமையைப் பார்த்து, அதிரடி நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், புரூஆ லீக்குப் பிறகு, அவர் இடத்தைப் பிடிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் எல்லா நடிகர்களுமே குழம்பினர். அந்த சமயத்தில் உதித்தது ஆக்‌ஷன்+காமெடி. இந்த ஃபார்முலாவில் உருவான முதல் படமான “Snake in the Eagle Shadow" அதனை அடுத்த ‘Drunk-en Master" செம ஹிட். நடிகராக மட்டுமே இருந்த ஜாக்கி, பிறகு டைரக்டராகவும் ஆனார்.

1983ல் ஃபெங்ஜியோ லின் எனும் தைவான் நடிகையை மணந்த ஜாக்கிக்கு ஒரே ஒரு பையன், பெயர் ஜெய்ஸி சான்.
                             

பள்ளிக்குச் சென்று படிக்காத ஜாக்கி சானுக்கு, 7 மொழிகள் பேசத் தெரியும். சிறு வயதில் தன்னை வளர்த்த ரெட்கிராஸ் நிறுவனத்துக்கு கைமாறு செய்யும் வகையில் பன்மடங்காக உதவுகிறார். காடு வளர்ப்பு, எயிட்ஸ் விழிப்பு  உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிருக வதை தடுப்பு என சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் ஆர்வம் உண்டு.

உலக அளவில் எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் இன்சூரன்ஸ் கொடுக்க முன்வராத ஒரே நடிகர் ஜாக்கி சான். கை, கால், முது, கண், காது, மூக்கு என இவர் உடம்பில அடிபடாத இடமே இல்லை.

                                

2011 செப்டம்பர் 11ந்தேதி, நியூயார்க் உலக வர்த்தக மையத்தில், ஜாக்கி சான் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தார். ஆனால், ஏதோ காரணத்தினால் படப்பிடிப்பு ரத்தானது. அன்றுதான் உலகமே உறைந்துப் போன தீவிரவாத தாக்குதலால், அந்த வர்த்தகக் கட்டிடம் தரை மட்டமானது.

ஜாக்கி சானின் நீண்ட காலக் கனவு....., சீனாவில் தற்காப்புக் கலகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்குவது. “தி கராத்தே கிட்” படத்தில் வருவது போன்று, தனக்குத் தெரிந்த கலைகளை மற்றவர்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறார்.

டிஸ்கி: தகவல்கள் சுட்டி விகடனிலும், படங்கள் கூகுளிலும் சுட்டது