Showing posts with label கோழிக்கறி. Show all posts
Showing posts with label கோழிக்கறி. Show all posts

Tuesday, December 24, 2013

முந்திரி, கோழிக்கறி வறுவல் - கிச்சன் கார்னர்

எப்பப் பாரு சப்புன்னு வெஜ் அயிட்டமாவே போட்டுக்கிட்டிருக்கியே! காரசாரமா நான்-வெஞ் அயிட்டம் எதும் உனக்கு சமைக்கத் தெரியாதா!?ன்னு நீங்க கேக்குறதுக்குள்ள ஒரு நான் வெஜ் அயிட்டத்தை எப்படி சமைக்குறதுன்னு இன்னிக்கு பார்த்துடலாம்.

என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ட்ரையாவும், கருப்பாவும் இருக்குறதால இந்த டிஷ் என் வீட்டுக்காரருக்குப் பிடிக்காது. சும்மா ஒண்ணு இல்ல ரெண்டு ஃபீஸ் எடுத்துப்பார். ஆனா, நாங்க ஃபுல் கட்டு கட்டுவோம்.

தேவையானப் பொருட்கள்:
எலும்பில்லாத கோழிக்கறி - கால் கிலோ
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதள்வு
சிக்கன் மசாலா - சிறிது
மிளகு - 10
பூண்டு - 4பல்
பட்டை - 1துண்டு
கிராம்பு -2
அன்னாசிப் பூ - 1
வெறும் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
எலுமிச்சைப் பழச்சாறு - 1டீஸ்பூன்
தூள் உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தை நீளவாக்குல வெட்டி வச்சுக்கோங்க. தக்காளியையும் பொடியா வெட்டிக்கோங்க. மிளகை பொடி பண்ணி வச்சுக்கோங்க. பூண்டை பஞ்சுப் போல நசுக்கி வச்சுக்கோங்க.

முந்திரியை ரெண்டா உடைச்சு எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து  வச்சுக்கோங்க.
எலும்பில்லாத கோழிக்கறியை நல்ல தண்ணில 4 வாட்டி அலசி, தண்ணில வடிச்சுட்டு, மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் மசாலா, இஞ்சி பூண்டு விழுது,  எலுமிச்சை சாறுலாம் சேர்த்து பிசிறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூலாம் போட்டு பொரிய விடுங்க.

அடுத்து வெங்காயம் சேர்த்துக்கோங்க.

கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

அடுத்து புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேருங்க.

அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து நல்லா வதக்குங்க.

அடுத்து மசாலாலாம் சேர்த்து பிசிறி வச்ச கோழிக்கறியைச் சேர்த்துக்கோங்க.

மிளகாய்தூள் வாசனை போனதும் கொஞ்சமா தண்ணி ஊத்தி, அடுப்பை சிம்ல வச்சு கோழிக்கறியை வேக விடுங்க.

தண்ணிலாம் சுண்டி வரும் நேரத்துலவறுத்து வச்சிருக்கும் முந்திரியை சேர்த்துக்கோங்க.
பொடிப் பண்ணி வச்சிருக்கும் மிளகு, பூண்டை சேர்த்து கிளறி அடுப்புல இருந்து இறக்கோங்க.


காரம், உப்பு சேர்ந்து பூப்போல வெந்தக் கோழிக்கறியும், கூடவே மொறுமொறுப்பான முந்திரியும்ன்னு சாப்பிடவே ஜோரா இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதத்தோடு சாப்பிட நல்லா இருக்கும். 

அடுத்த வாரம் குழந்தைகள் உடம்புக்கு வலு சேர்க்கும் சத்து மாவு எப்படி தயாரிச்சுக்குறது. கஞ்சி காய்ச்சுறதைப் பத்தி கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.