Showing posts with label முந்திரி. Show all posts
Showing posts with label முந்திரி. Show all posts

Tuesday, December 24, 2013

முந்திரி, கோழிக்கறி வறுவல் - கிச்சன் கார்னர்

எப்பப் பாரு சப்புன்னு வெஜ் அயிட்டமாவே போட்டுக்கிட்டிருக்கியே! காரசாரமா நான்-வெஞ் அயிட்டம் எதும் உனக்கு சமைக்கத் தெரியாதா!?ன்னு நீங்க கேக்குறதுக்குள்ள ஒரு நான் வெஜ் அயிட்டத்தை எப்படி சமைக்குறதுன்னு இன்னிக்கு பார்த்துடலாம்.

என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ட்ரையாவும், கருப்பாவும் இருக்குறதால இந்த டிஷ் என் வீட்டுக்காரருக்குப் பிடிக்காது. சும்மா ஒண்ணு இல்ல ரெண்டு ஃபீஸ் எடுத்துப்பார். ஆனா, நாங்க ஃபுல் கட்டு கட்டுவோம்.

தேவையானப் பொருட்கள்:
எலும்பில்லாத கோழிக்கறி - கால் கிலோ
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதள்வு
சிக்கன் மசாலா - சிறிது
மிளகு - 10
பூண்டு - 4பல்
பட்டை - 1துண்டு
கிராம்பு -2
அன்னாசிப் பூ - 1
வெறும் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
எலுமிச்சைப் பழச்சாறு - 1டீஸ்பூன்
தூள் உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தை நீளவாக்குல வெட்டி வச்சுக்கோங்க. தக்காளியையும் பொடியா வெட்டிக்கோங்க. மிளகை பொடி பண்ணி வச்சுக்கோங்க. பூண்டை பஞ்சுப் போல நசுக்கி வச்சுக்கோங்க.

முந்திரியை ரெண்டா உடைச்சு எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து  வச்சுக்கோங்க.
எலும்பில்லாத கோழிக்கறியை நல்ல தண்ணில 4 வாட்டி அலசி, தண்ணில வடிச்சுட்டு, மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் மசாலா, இஞ்சி பூண்டு விழுது,  எலுமிச்சை சாறுலாம் சேர்த்து பிசிறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூலாம் போட்டு பொரிய விடுங்க.

அடுத்து வெங்காயம் சேர்த்துக்கோங்க.

கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

அடுத்து புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேருங்க.

அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து நல்லா வதக்குங்க.

அடுத்து மசாலாலாம் சேர்த்து பிசிறி வச்ச கோழிக்கறியைச் சேர்த்துக்கோங்க.

மிளகாய்தூள் வாசனை போனதும் கொஞ்சமா தண்ணி ஊத்தி, அடுப்பை சிம்ல வச்சு கோழிக்கறியை வேக விடுங்க.

தண்ணிலாம் சுண்டி வரும் நேரத்துலவறுத்து வச்சிருக்கும் முந்திரியை சேர்த்துக்கோங்க.
பொடிப் பண்ணி வச்சிருக்கும் மிளகு, பூண்டை சேர்த்து கிளறி அடுப்புல இருந்து இறக்கோங்க.


காரம், உப்பு சேர்ந்து பூப்போல வெந்தக் கோழிக்கறியும், கூடவே மொறுமொறுப்பான முந்திரியும்ன்னு சாப்பிடவே ஜோரா இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதத்தோடு சாப்பிட நல்லா இருக்கும். 

அடுத்த வாரம் குழந்தைகள் உடம்புக்கு வலு சேர்க்கும் சத்து மாவு எப்படி தயாரிச்சுக்குறது. கஞ்சி காய்ச்சுறதைப் பத்தி கிச்சன் கார்னர்ல பார்க்கலாம். 

Tuesday, October 15, 2013

சமையல் குறிப்புகள் - கிச்சன் கார்னர்




மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்தோடு பாவக்காயை ஸ்லைஸ் பண்ணி போட்டு ஊறவச்சா, மிளகாயின் காறம் பாவக்காயிலும், பாவக்காயின் கசப்பு மிளகாயிலும் கொஞ்சம் சேர்ந்து, சாப்பிடும்போது புது ருசியை கொடுக்கும்.


காய்கறிகள் நறுக்கி கை கழுவி பார்த்தால் கத்திரிக்காய், வாழைக்காய்லாம் விரலுக்கு கருப்பையும், பீட்ரூட் சிவப்பையும் கொடுக்கும். என்னதான் கையை கழுவினாலௌம் அதுலாம் மறைய நேரம் பிடிக்கும். அதனால, காய்கறி வெட்டும் முன் கொஞ்சம் சமையல் எண்ணெயை கைகளில் தேச்சுக்கிட்டு , காய்கறி வெட்டிய பின் கைகளை சீயக்காய்ல கை கழுவினால் கைலாம் பளிச்சுன்னு இருக்கும்.



மட்டன், சிக்கன்ன்னு எந்த கிரேவி செய்தாலும் வேர்கடலை கொஞ்சமூண்டு எடுத்து ஊற வச்சு அரைச்சு சேர்த்தால், கெட்டியாவும் செம டேஸ்டாவும் இருக்கும்.


வத்தல் செய்ய ஜாவரிசி வேக வைக்கும் போது கொஞ்சம் கசகசாவை  அரைத்து சேர்த்தால் வத்தல் நல்ல வாசமாவும், மொறு மொறுன்னும் இருக்கும்

வடைக்கு உளுத்த மாவை அரைக்கும்போது த்ண்ணியாகிட்டுதா!? கவலைப்படாம வறுக்காத அப்பளத்தை தண்ணில ஊற வச்சு அரைச்சு சேர்த்தா மாவு கெட்டிப்படும்.


முழு முந்திரிப்பருப்பை வாங்கி வீட்டில் வைக்கும்போது சில சமயம் பூச்சியரிக்க ஆரம்பிக்கும். அதனால, முந்திரி டப்பாவுல பச்சை கற்பூரத்தை கொஞ்சம் போட்டு வச்சா பூச்சி அரிக்காது.

முட்டை வேக வைக்கும்போது சில சமயம் உடைஞ்சு உள்ளிருப்பதெல்லாம் வெள் வந்து பார்க்கவே போர்க்களம் மாதிரி இருக்கும். அதனால முட்டை வேக வைக்கும் தண்ணீரில் சில சொட்டு வினிகர் விட்டால் முட்டை உடைந்தாலும் உள்ள இருக்கும் கருலாம் வெளி வராது.

குளோப் ஜாமூன் செய்யும் போது ஆறிய சர்க்கரை பாகில் பொரிச்ச ஜாமூன்களை போட்டால் உடையாது.

சேப்பங்கிழங்கு வதக்கும்போது பிசுபிசுன்னு கடாயில ஒட்டி வரும். அதனால, கொஞ்சம் கடலை மாவை தூவி பொறியலுக்கு வதக்கினா மொறு மொறுன்னு கடாயில ஒட்டாம வரும்.

பச்சை மிளகாய், தேங்காயை ஃப்ரீசர் பாக்சுல வச்சா 2 மாசம் வரை வரும். சமைக்கும் முன் ஒரு 5 நிமிசம் தண்ணில போட்டால் பழைபடிக்கு வந்துடும்.

வெங்காயம் நறுக்கும்போது கண் எரிச்சலை தடுக்க ஒரு மெழுகு வர்த்தியை கொளுத்தி பக்கத்துல வச்சுக்கிட்டா கண் எரிச்சலை தடுக்கும்.

டிஸ்கி: யார் கண் பட்டுதோ!? எத்தனை பேர் திட்டி சாபம் விட்டீங்களோ!?பதிவர் சந்திப்புக்கு வரும்போது டாக்சிலேயே கேமராவை மிஸ் பண்ணிட்டேன். அதனால, சமைக்குறதை படமெடுக்க முடியாம சமையல் ரெசிபியை போட முடியாம போச்சு. சமைக்குறது மட்டும்தான் கிச்சன்ல நடக்குதா!? க்ளீனிங், காய் வெட்டுறது, அடுக்குறதுன்னு எத்தனை வேலை அங்க நடக்குது!? அதையும் ஒரு பதிவா கிச்சன் கார்னர்ல போடுன்னு பதிவு தேத்த ஐடியா தந்த மகனுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் கேமரா வாங்கி பதிவர் கடமையை நிறவேத்தனும் அதுக்கு பாதாள பைரவிதான் அருள் புரியனும்.