என் முதல் பொறந்த நாளுக்கு ரேடியோ செட் கட்டி, சீரியல் பல்ப் போட்டு ஊருக்கே விருந்து வச்ச அதே அப்பா, கல்யாணத்துக்குமுன் புதுத்துணி எடுத்துக்கொடுத்து, எல்லாருக்கும் கொடுக்க சாக்லேட்டை வாங்கி தந்த அதே அப்பாதான் என்ன சாதிச்சேன்னு இப்ப பொறந்த நாள் கொண்டாடனும்ன்னு கேட்பாரு?! ஞாயிற்றுக்கிழமைல பொறந்த நாள் வந்தால் பிரியாணியோடு மதியம் சாப்பாடு, கையில் ஒரு நூறு ரூபா. இதுதான் பல வருசமா தொடர்ந்து வருது... பிள்ளைகள் வளர்ந்தபின் அதுங்க கேக் வாங்கி வந்து, எதாவது கிஃப்ட் பண்ணும்...