Showing posts with label டேபிள் மேட். Show all posts
Showing posts with label டேபிள் மேட். Show all posts

Thursday, April 16, 2020

வுல்லன் மேட்- கைவண்ணம்

புத்தகம் படித்தல், தோட்டம் பராமரித்தல், பிராணிகள் வளர்ப்பு, கிராஃப்ட், எம்ப்ராய்டரி என எதாவது ஒரு பொழுதுபோக்கு இருக்கனும்.  மனசை ரிலாக்ஸ் செய்ய உதவும். முன்னலாம் ஸ்கூல்லயே கைத்தொழில்ன்னு ஒரு கிளாஸ் இருக்கும். அதில் தச்சு வேலை, தையல், கூடை பின்னுதல்,எம்ப்ராய்டரின்னு சொல்லி தருவாங்க.  ஆனா, இப்ப அதுலாம் இல்ல. பாடத்தை மனப்பாடம் பண்ணி அப்படியே பேப்பரில் எழுதுறதுக்கு மட்டுமே பள்ளிகள் சொல்லி தருது.  படிக்கும் குழந்தைகளுக்கே ஏகப்பட்ட மன அழுத்தம்.

Thursday, March 19, 2020

Thursday, September 05, 2019

பூ டிசைனில் உல்லன் மேட் - கைவண்ணம்

எப்பயும் ஒரே மாதிரி மேட் பின்னிக்கிட்டிருந்தா எனக்கும் போரடிக்கும். வாங்குறவங்களுக்கும் போரடிக்கும். அதான் கொஞ்சம் வித்தியாசமாய்... உல்லன்லியே பல விதமா பின்னுறாங்க. மாடல் இருந்தால் பின்னிடுவேன். இதுமாதிரி மணியில் டேபிள் மேட் செய்து வச்சிருந்தேன். அது எங்கன்னு தேடிப்பார்க்கனும்.



இப்ப இதை பார்த்துட்டு சிவப்பு, மஞ்சள் நூலில் பின்னித்தர சொல்லி இருக்காங்க...  அடுத்த கைவண்ணம் பகுதிக்குள் முடிக்கிறேனான்னு பார்க்கனும்,,,

நன்றியுடன்,
ராஜி

Thursday, March 07, 2019

எச்சூஸ்மீ! பத்மபூஷன் விருது எங்க கிடைக்கும்?! - கைவண்ணம்

கருப்பு உடைன்னா என் சின்ன பொண்ணுக்கு பிடிக்கும். எனக்கும் அப்படியே! என் அம்மாக்கு ஆகாய நீலம்ன்னா பிடிக்கும். என் அப்பாக்கு பஞ்சுமிட்டாய் கலர்.. இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு நிறம் பிடிக்கும். ஆனா, என் தெருவில் இருக்கும் ஒரு பொண்ணுக்கு பா.ம.க கட்சிக்கொடியில் இருக்கும் வண்ணங்களைதான் பிடிக்கும்... 

பொங்கல் கூடை, டெலிபோன்/டேபிள் மேட்லாம் போடுறதை பார்த்து பொங்கல் கூடைமேல் போர்த்திக்கிட்டு போக பா.ம.க கட்சிக்கொடி கலர்ல பின்னி தாங்கன்னு கேட்டாள். படிக்குற பொண்ணுக்கு எதுக்குடி கட்சிலாம்?!ன்னு திட்டி மாட்டேன்னுட்டேன். ஆனா, அதேதான் வேணும்ன்னு அடமா இருந்ததால் சின்ன பொண்ணு ஆசையை ஏன் கெடுப்பானேன்னு பின்னி கொடுத்துட்டேன். 



அடுத்து, வாசல் தோரணம்... முன்ன ஒருமுறை பின்னியது... அப்ப படமெடுக்கலை.. மணி அறுத்துட்டு கோர்த்துக்கொடுக்க சொல்லி கொண்டுவந்தாங்க. அடடா! பதிவுக்காக படமெடுக்க  மிஸ் பண்ணிட்டோமேன்னு  வருத்தத்தில் இருந்த எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது மட்டுமில்லாம மிக்சில விழுந்து மில்க்‌ஷேக்காகவே ஆகிட்டுது..

எல்லார் வீட்டிலயும் எதாவது எழுதினால், பின்னினால் பாராட்டுவாங்க. எங்க வீட்டில் மட்டும் திட்டுவாங்க. எப்ப பாரு லாப்டாப், இல்லன்னா வயர், வுல்லன், ஜுவல்ன்னு வீட்டை குப்பையாக்கிக்கிட்டே இரு.. எல்லாத்தையும் ஒருநாளுக்கு தூக்கிப்போட்டு கொளுத்தப்போறேன்னு கத்துவாங்க... 
பெருசுங்கதான் அப்படின்னா, சிறுசுங்களை கொஞ்சம் இதை போட்டோ எடுத்துக்கொடேன்னு சொன்னா, நீ பதிவு தேத்த என்னை ஏன்மா இம்சிக்குறேன்னு சிறுசுங்க கத்துதுங்க. எனக்கு உயரம்ன்னா பயம். ஸ்டூல்ல ஏறமாட்டேன். சின்னதுக்கிட்ட வாசப்படில மாட்டி ஒருபடம் எடுத்துக்கொடுடின்னு சொன்னா மேலயும், கீழயும் பார்க்குது :-(
ஒருநாள் இல்ல ஒருநாளுக்கு இதுக்குலாம் நான் பத்மபூஷன், பத்மவிபூஷன் பட்டம் வாங்கும்போது ஒட்டுக்கா வந்து ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு பக்கத்துல நிக்கட்டும்..அன்னிக்கு வச்சுக்குறேன் கச்சேரியை... 
விருது வாங்கும் கனவுடன்
ராஜி