புத்தகம் படித்தல், தோட்டம் பராமரித்தல், பிராணிகள் வளர்ப்பு, கிராஃப்ட், எம்ப்ராய்டரி என எதாவது ஒரு பொழுதுபோக்கு இருக்கனும். மனசை ரிலாக்ஸ் செய்ய உதவும். முன்னலாம் ஸ்கூல்லயே கைத்தொழில்ன்னு ஒரு கிளாஸ் இருக்கும். அதில் தச்சு வேலை, தையல், கூடை பின்னுதல்,எம்ப்ராய்டரின்னு சொல்லி தருவாங்க. ஆனா, இப்ப அதுலாம் இல்ல. பாடத்தை மனப்பாடம் பண்ணி அப்படியே பேப்பரில் எழுதுறதுக்கு மட்டுமே பள்ளிகள் சொல்லி தருது. படிக்கும் குழந்தைகளுக்கே ஏகப்பட்ட மன அழுத்தம்.
வளர்ந்தபின் சின்ன சின்ன விசயத்திற்குகூட டென்ஷன் ஆகி கத்துறோம். மனசு இறுக்கமா இருக்கும் சூழலில் புத்தகம் படிக்குறதோ இல்ல தோட்ட வேலையோ, இல்ல எதாவது ஒரு கிராஃப்டோ செய்ய ஆரம்பிச்சால் அது முடியும்போது மனசு ரிலாக்சாகி புத்துணர்ச்சி கிடைக்கும். இதுமாதிரியான உபயோகமான பொழுதுபோக்கு எம்புட்டு உதவும்ன்னு இந்த லாக் டவுன் நேரத்தில் நிறைய பேர் புரிஞ்சுக்கிட்டிருப்பாங்க.
ஒன்பதாம் வகுப்பு லீவில் வயர்கூடை பின்ன கத்துக்க அப்பா வயர் வாங்கி வந்து கொடுத்தார். பெரிய மகள் பிறந்தபின் பக்கத்து வீட்டு ஸ்கூல் போகும் பொண்ணுக்கிட்ட மேட் போட கத்துக்கிட்டேன். இப்ப, சும்மா இருக்கும்போது உதவுது. கோடைக்காலம் வந்தாலே அம்மன் கோவில்களில் கூழ் ஊத்தி, பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் கூடைமேல மூட உல்லன்ல பின்னி தர சொன்னாங்க. மங்களகரமா இருக்கட்டுமேன்னு மஞ்சளும், சிவப்புமா வுல்லன் நூல் இருக்கட்டும்ன்னு அவங்களே கலர் காம்பினேஷன் சொன்னாங்க.

போன வாரம் பின்னியது. மொத்தம் 7 வுல்லன் நூல் கண்டு செலவானது..
நல்லா இருக்கா சகோஸ்?!
நன்றியுடன்,
ராஜி.
அருமை
ReplyDeleteஅழகு
அழகாக இருக்கிறது.
ReplyDeleteம்..ம்... எங்கிட்டோ வருமானம் வந்தால் சரிதான்.
மிகவும் அழகாக உள்ளது சகோதரி...
ReplyDeleteஅழகாக இருக்கிறது. பாராட்டுகள். மேலும் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமனதை ஒருங்கமைக்கும் பயிற்சி ...
ReplyDeleteஅழகு
வாழ்த்துகள்
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்று பள்ளிக்காலத்தில் படித்தநு சரியாய்த்தான் இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteமிகவும் அழகாக இருக்கிறது.
ReplyDeleteவாவ்! ஒருகாலத்தில் நமக்கும் இதேவேலை இப்பொழுது எல்லாம் விட்டுப்போய்விட்டது.
ReplyDelete