Thursday, March 07, 2019

எச்சூஸ்மீ! பத்மபூஷன் விருது எங்க கிடைக்கும்?! - கைவண்ணம்

கருப்பு உடைன்னா என் சின்ன பொண்ணுக்கு பிடிக்கும். எனக்கும் அப்படியே! என் அம்மாக்கு ஆகாய நீலம்ன்னா பிடிக்கும். என் அப்பாக்கு பஞ்சுமிட்டாய் கலர்.. இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு நிறம் பிடிக்கும். ஆனா, என் தெருவில் இருக்கும் ஒரு பொண்ணுக்கு பா.ம.க கட்சிக்கொடியில் இருக்கும் வண்ணங்களைதான் பிடிக்கும்... 

பொங்கல் கூடை, டெலிபோன்/டேபிள் மேட்லாம் போடுறதை பார்த்து பொங்கல் கூடைமேல் போர்த்திக்கிட்டு போக பா.ம.க கட்சிக்கொடி கலர்ல பின்னி தாங்கன்னு கேட்டாள். படிக்குற பொண்ணுக்கு எதுக்குடி கட்சிலாம்?!ன்னு திட்டி மாட்டேன்னுட்டேன். ஆனா, அதேதான் வேணும்ன்னு அடமா இருந்ததால் சின்ன பொண்ணு ஆசையை ஏன் கெடுப்பானேன்னு பின்னி கொடுத்துட்டேன். அடுத்து, வாசல் தோரணம்... முன்ன ஒருமுறை பின்னியது... அப்ப படமெடுக்கலை.. மணி அறுத்துட்டு கோர்த்துக்கொடுக்க சொல்லி கொண்டுவந்தாங்க. அடடா! பதிவுக்காக படமெடுக்க  மிஸ் பண்ணிட்டோமேன்னு  வருத்தத்தில் இருந்த எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது மட்டுமில்லாம மிக்சில விழுந்து மில்க்‌ஷேக்காகவே ஆகிட்டுது..

எல்லார் வீட்டிலயும் எதாவது எழுதினால், பின்னினால் பாராட்டுவாங்க. எங்க வீட்டில் மட்டும் திட்டுவாங்க. எப்ப பாரு லாப்டாப், இல்லன்னா வயர், வுல்லன், ஜுவல்ன்னு வீட்டை குப்பையாக்கிக்கிட்டே இரு.. எல்லாத்தையும் ஒருநாளுக்கு தூக்கிப்போட்டு கொளுத்தப்போறேன்னு கத்துவாங்க... 
பெருசுங்கதான் அப்படின்னா, சிறுசுங்களை கொஞ்சம் இதை போட்டோ எடுத்துக்கொடேன்னு சொன்னா, நீ பதிவு தேத்த என்னை ஏன்மா இம்சிக்குறேன்னு சிறுசுங்க கத்துதுங்க. எனக்கு உயரம்ன்னா பயம். ஸ்டூல்ல ஏறமாட்டேன். சின்னதுக்கிட்ட வாசப்படில மாட்டி ஒருபடம் எடுத்துக்கொடுடின்னு சொன்னா மேலயும், கீழயும் பார்க்குது :-(
ஒருநாள் இல்ல ஒருநாளுக்கு இதுக்குலாம் நான் பத்மபூஷன், பத்மவிபூஷன் பட்டம் வாங்கும்போது ஒட்டுக்கா வந்து ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு பக்கத்துல நிக்கட்டும்..அன்னிக்கு வச்சுக்குறேன் கச்சேரியை... 
விருது வாங்கும் கனவுடன்
ராஜி

23 comments:

 1. பத்மா பூசை வாங்கின கதையாகாமல் இருந்தால் செரிதேன்...

  ReplyDelete
  Replies
  1. சரிதான்.. இப்படி ஒரு ஆசையா?! எல்லாமே நமக்கு வில்லனா வாய்ச்சிருக்கு!!

   Delete
 2. கச்சேரியை நான் தான் ஆரம்பிப்பேன்... சரியா...?

  ReplyDelete
  Replies
  1. எப்படியோ கச்சேரி களைக்கட்டினால் சரி.

   Delete
 3. தளம் சுற்றிக் கொண்டே இருக்கிறது... தளத்தில் சைடு gadget-ல் எங்கேனும் http://www.pathivar.net/ இருக்கும் போல... அதை யோகாயா ஆகி விட்டது... எடுத்து விடவும்...

  ReplyDelete
  Replies
  1. எடுத்தாச்சு!! எடுத்தாச்சு!!

   Delete
 4. நல்லாப் பின்னியிருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. தோரணத்தையா இல்ல பிள்ளைகளையா?!

   Delete
 5. ஹையோ செமையா செஞ்சுருக்கீங்க!! சூப்பர்ப்! ராஜி...உங்க பத்மவிபூஷன், பத்மபூஷன் எல்லாம் காணாமல் போன ராஜியின் கனவுகள்ல சேர்ந்துடாம வெற்றி காணட்டும்னு வாழ்த்துறேன். எல்லாரும் வாழ்த்தறா மாதிரியாவது கனவு காணுங்களேன்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்படியொரு பேர் வச்சதால கனவுகள் பலிப்பதில்லையா?! இல்ல கனவுகள் பலிக்காததால் இந்த பேர் அமைஞ்சுதான்னு எனக்கே தெரில. வாஸ்து சரியில்லைன்னு நினைக்குறேன்

   Delete
 6. எங்க வீட்டில் மட்டும் திட்டுவாங்க.//

  வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!!!

  கீதா

  ReplyDelete
 7. பின்னிட்டீங்க என்று சொல்ல வந்தேன். நெல்லை ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. அவருக்கான பதிலே உங்களுக்கும்..

   Delete
 8. மகளிர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அருமையான பின்னல்கள்..ரசனைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 10. வண்ணங்கள் எல்லாம் பளிச் பளிச் ராஜி க்கா


  எல்லாமே சூப்பரா இருக்கு

  விருது வாங்கும் கனவுடன்....வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ராஜி க்கா உங்கள் கனிவு நனவாக ...இந்த மாதரி கனவு இருப்பததால் தான் நம்ம வண்டி இப்படி அழகா ஓடுது ..

  ReplyDelete
  Replies
  1. கனவே வாழ்க்கையாய்...

   Delete
 11. சிறப்பான கைவண்ணம்... பாராட்டுகள்.

  மகளிர் தின வாழ்த்துகளும்!

  ReplyDelete