இன்னிக்கு பக்கம் பக்கமா படிக்கும் இம்சைல இருந்து விடுதலை... விடுதலை...

சிங்கப்பூரிலிருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒருவர் ஒரு உண்டியல் பொம்மையை எனக்கு கொடுத்தார். . இந்த பொம்மையின் கதவின் வெளிய பைசாவை வச்சா உள்ளிருந்து ஒரு நாய் பைசாவை உள்ளிழுத்துக்கும். எனக்கப்புறம் என் எதிர்வீட்டு குழந்தைக்கு அதை அப்பா கொடுத்துட்டார். பிள்ளைங்க பிறந்தபின் நிறைய இடத்தில் தேடியும் கிடைக்கல. வேலூர் பர்மா பஜார்ல கிடைச்சது.

கோவை இலையுடன், அடுப்புக்கரியை அரைச்சு ஸ்கூல் போர்ட், ஸ்லேட்டுக்குலாம் தடவினா புதுசு மாதிரி ஆகிடும். அப்படி கோவை இலை கிள்ள போகும்போதுலாம் கோவைப்பழத்தை பசங்க சாப்பிடுவாங்க. நான் சாப்பிட்டதில்லை.

திருத்தணில குடியிருந்தபோது, பாட்டி வீட்டுக்கு வரனும்ன்னா திருத்தணில பஸ் ஏறினால் காஞ்சிபுரத்துல இறங்கி, ஆரணிக்கு பஸ் பிடிச்சு வரனும். ரிட்டர்னும் அப்படியே! ஆரணி டூ காஞ்சிபுரம், காஞ்சிபுரம் டூ திருத்தணி. காஞ்சிபுரத்துல ஒரு கடையில் அம்மா பன்னீர் சோடா வாங்கி தருவாங்க. கோலிசோடாவை குடிக்க துப்பில்லாத வயசு. கண்ணாடி டம்ப்ளர்ல ஊத்தி தருவாங்க. பெயிண்டிங்க் பண்ண அந்த டம்ப்ளரை அம்புட்டு பிடிக்கும். பெருசானால் நிறைய வாங்கி வைக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா, கண்ணாடி டம்ப்ளர் இருந்தாலும் நான் ஆசைப்பட்ட மாதிரி ஒன்னுக்கூட கிடைக்கல :-(

படிச்சு பெரிய ஆராய்ச்சியாளரா வருவேன்னு அப்பா படிக்க வாங்கிக்கொடுத்த பொருளை வச்சு இப்படிதான் ஆராய்ச்சி நடந்துச்சு :-)

எதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கி வந்தால் வீட்டுக்கு ஒரு பொருள் வந்துச்சுன்னு அம்மா, அப்பாக்கு சந்தோசம், நம்ம சந்தோசம்லாம் இந்த பப்பிள்சை உடைக்குறதுலயே இருந்துச்சு. இப்ப என்னோடு போட்டி போட்டுக்கிட்டு நான் பெத்ததுங்களும் உடைக்குதுங்க.

பழத்துல இருக்கும் விதையை சாப்பிட்டா வயித்துல செடி முளைச்சு காது, மூக்குல இலை வரும்ன்னு பயமுறுத்தியதால் தர்பூசணியை சாப்பிடவே மாட்டேன். ஏன்னா, இதுல விதையும் சிறுசு. அதிகமாவும் இருக்கும். ஆனா, கொய்யாப்பழத்துல இம்புட்டு விதை இருக்கே! இது முளைக்காதான்னு கேட்க தோணலை. ஏன்னா, இப்ப மாதிரிலாம் அப்ப அம்புட்டு அறிவுலாம் கிடையாது!!! பாருங்க. இப்ப மட்டும் இருக்குதான்னு யாரும் கேட்கப்படாது. அப்புறம் அழுதுடுவேன்.
இந்த பாப்பா எத்தனை சமர்த்தா காது குத்திக்குது!! நான்லாம் காது குத்திக்க பண்ணின அட்டூழியத்தை அம்மா கதை கதையா சொல்வாங்க. அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் பலர்லாம் பிடிச்சு அமுக்கி காது குத்தினாங்களாம். இந்த களேபரத்துல என் மாமாக்கு அடிப்பட்டதுதான் ஹைலைட்டே.
மீண்டும் ஒரு நினைவு மீட்டலோடு வரேன்...
நன்றியுடன்,
ராஜி













