Showing posts with label காய்கறிகள். Show all posts
Showing posts with label காய்கறிகள். Show all posts

Monday, July 31, 2017

லஞ்சம் கேக்குறவங்களுக்கு நல்ல செருப்படி - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! ஆப்பிள் கேட்டியே வாங்கி வந்திருக்கேன்.. எடுத்துக்கிட்டு போய் உள்ள வை. பசங்க வந்தபின் கட் பண்ணி கொடு..

மாமா! இந்த பழத்து மேல ஏதோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கே! பார்க்க என்ன விலை மாதிரியும் தெரில! என்னது மாமா!? 



அதுவா?! மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பூச்சிக்கொல்லினால தயாரிக்கப்பட்டதுன்னும்,  நாட்டு விதை,  இயற்கை உரம் கொண்டு தயாரிக்கப்பட்டதுன்னும் நாம தெரிஞ்சுக்கனும்ன்னுதான்  பி.எல்.யுன்ற குறியீடு போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுது.  பி.எல்.யு(PLU) ஸ்டிக்கர் என்பது Price Look Up நம்பர் ஒட்டப்படுது.  காய்கறி, பழங்கள்ல 1441 மாதிரியான நான்கு நம்பர் இருந்தா வழக்கமா பயன்படுத்துற பூச்சிக்கொல்லியை தெளிச்சு விளைஞ்சது. 81442 ன்னு 8 ல ஆரம்பிக்குற நம்பர் இருந்தா மரபணு மாற்றம் செஞ்சு விளைஞ்சது.  94532 ன்னு 9 ல ஆரம்பிக்குற நம்பரா இருந்தா அது நாட்டு விதை மற்றும் இயற்கை உரத்தால விளைஞ்சதுன்னும் அர்த்தம். 

ஓ அப்படியா?! ஆப்பிள் மேல மெழுகு பூசுறதா சொல்லுறாங்களே! உண்மையா?!

ஆமா, ஆப்பிள் சீக்கிரம் கெட்டுப்போகாம இருக்க ஒருவிதமான மெழுகு பூசுறாங்க. அதனால, ஆறு மாசம் வரைக்கூட கெடாம வச்சுக்கலாம்..

ஐயோ! அந்த மெழுகை சாப்பிட்டா நம்ம உடம்பு என்னத்துக்கு ஆகும்?!

அதனாலதான் ஆப்பிளை நல்லா கழுவி, தோலை சீவிட்டு சாப்பிடனும்.. கண்ணுக்கு தெரியாம எங்கயோ விளைஞ்சு வரும் ஆப்பிள்லதான் சத்து இருக்குன்னு இல்ல... நம்மை சுத்தி விளையுற கொய்யா, நெல்லிக்காயில் இதைவிட நிறைய சத்து இருக்கு. அதனால அதைலாம் சாப்பிடலாம்.

அப்பயும் பூச்சிக்கொல்லிலாம் தெளிச்சிருப்பாங்களே!



ம்ம்ம்ம் புளி தண்ணில ஒரு கால் மணிக்கூர் ஊற வெச்சு அப்புறம் நல்லத்தண்ணில கழுவி அப்புறம் கட் பண்ணனும்.  கீரை, கேரட், வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்குன்னு அத்தனையையும் மண் போக கழுவி அப்புறம் கட் பண்ணிக்கனும். கட் பண்ணிட்டு கழுவக்கூடாது. கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான கட் பண்ணா கருத்திடும் காய்களை வேணும்ன்னா கட் பண்ணிட்டு அப்புறமா தன்ணில போடலாம். அப்பயும் புளித்தண்ணில கழுவிட்டுதான் ஊறவெச்சுதான் கட் பண்ணனும். இதுப்போல திராட்சை, கொய்யா, மாதிரியான பழங்களையும் கழுவி சாப்பிடலாம். புளித்தண்ணில ஊற வைக்கும்போது பூச்சிக்கொல்லி தன்னோட வீரியத்தை இழக்குது. முட்டைக்கோசை கட் பண்ணும்போது இலை இலையா எடுத்துதான் கட் பண்ணனும். அப்படியே கட் பண்ணா இலைகளுக்கிடையே இருக்கும் பூச்சி, புழுவை நாம பார்க்க முடியாது.  வெங்காயம் கட் பண்ணும்போது கண் எரியாம இருக்க வெங்காயத்தை கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வச்சு எடுத்திட்டு அப்புறமா கட் பண்ணா கண்ணு எரியாது. வெண்டைக்காயை கட் பண்ண பொறவு லேசா எலுமிச்சை பழச்சாறு தெளிச்சு பொரியல் செஞ்சா ஒன்னோட ஒன்னு ஒட்டாது.கேரட்டை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சா அதிலிருக்கும் சத்துலாம் போய்டும். வெங்காயத்தை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சிருந்தா சுத்தி இருக்குற பாக்டீரியாவைலாம் வெங்காயம் இழுத்துக்கும். 

காய்கறி நறுக்க இத்தனை விசயமிருக்கா?!   ஃபேஸ்புக்ல இந்த படம் வந்துச்சு. காத்து வர என்னலாம் யோசிக்குறாங்கண்னு பாரு மாமா..

தான் ஆசை ஆசையாய் வாங்கிய வண்டிக்கு லைசென்ஸ் வாங்க போனதுக்கு லஞ்சம் கேட்டிருக்காங்க. அதுக்கு ஒருத்தர் கொடுத்த செருப்படியை பாருங்க மாமா. ட்விட்டர்ல பார்த்தேன். ஆனா எந்த ஊருன்னுதான் தெரில. இந்த மாதிரி எல்லோரும் லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு எல்லாரும் கிளம்புனா நாடு உருப்பட்டுடும். 

ம்ம்ம் லஞ்சம் கேக்குறவங்களைவிட லஞ்சம் கொடுக்குற நம்மேலதான் தப்பு அதிகம். அதுசரி, நாமதான் கடவுளுக்கே லஞ்சம் கொடுக்குற ஆளாச்சே!

ம்ம்ம் அப்படியே இந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....
காய்க்கும்...
 பூக்கும்....
 சலசலக்கும்...
ஆனா, காக்காய் உட்காரக்கூட இடமிருக்காது..
 அது என்ன? 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467861

நன்றியுடன்,
ராஜி.

Thursday, October 10, 2013

காய்கறிகள் சமைக்க மட்டும்தானா!?

பறங்கிக்காயில் மஞ்சள் குருவி.

கேரட்டில் செய்த பூ...,

கேரட், பீட்ரூட், கோஸ் ரோஸ்...,

கேரட், ,முள்ளங்கி, வெள்ளரி பூங்கொத்து

என்ன காய்ன்னு தெரியல, ஆனா, அழகான் பூங்கொத்து


கேரட், தர்பூசனி பூ..,

சிவப்பு முள்ளங்கி பூ...,

தர்பூசனி அன்னப்பறவை...,

கேரட் சங்கு...,


பச்சை, சிவப்பு ஆப்பிள். திராட்சை பூ..,

 தர்பூசணி மயில்..,

தர்பூசணி பாப்பா..,

 தர்பூசணி, கேரட் விநாயகர்...,


தர்பூசணி குருவி...,
இதெல்லாம் நானே செஞ்சதுன்னு சொன்னா நம்பவா போறீங்க. இதெல்லாம் வச்சு ஒரு சாம்பார், பொறியல், வறுவல் செய்ய தெரியாத உனக்கு இப்படிலாம் செய்ய தெரியுமா!?ன்னு நீங்க கேக்குறது தெரியுது. இதெல்லாம் கூகுள்ள சுட்டதுன்னு உண்மையை சொல்லிட்டு நான் எஸ்கேப்பிக்குறேன்.

Thursday, August 08, 2013

கத்திரிக்கா!! கத்திரிக்கா!! குண்டு கத்திரிக்கா!! -ஆண்கள் ஸ்பெஷல்


ஒரு சட்டையோ இல்ல ஃபேண்டோ வாங்கும்போது திருப்பி திருப்பி பார்த்து வாங்கி வரும் நம்ம ஆளுங்களை ”ஒரு கால் கிலோ கத்திரிக்காயும், அரைக்கிலோ வெங்காயமும் வாங்கி வாங்க”ன்னு அனுப்பினா..., 

கடைக்காரர் வாயையே பார்த்துக்கிட்டு கத்திரிக்காயில பாதி சொத்தையாவும்  வெங்காயத்துல பாதி  அழுகலாவும் வாங்கி வருவாங்க.  இவங்களுக்குன்னே இதெல்லம் எடுத்து வச்சிருப்பாங்களோ தலையில் கட்ட!!

ஒரு கத்திரிக்காய் வாங்க துப்பில்லே நீயெல்லாம் ஒரு ஆஃபீசுல மேனேஜரா எப்படிதான் குப்பை கொட்டுறியோ?!ன்னு  நம்ம சகோ’ஸ்  பேச்சும், ஏச்சும் வாங்கக்கூடாதுன்னுதான் இந்த பதிவு....,

 வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமயும்,உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்கனும்...,

வெள்ளை வெங்காயத்தை  நசுக்கி பார்த்தா  சாறு வரும்படி இருக்கனும்.(அதுக்காக, ரொம்ப அழுத்தமா நசுக்கி ஜூஸ் எடுத்துட்டு கடைக்காரர்கிட்ட அடி வாங்குனா கம்பெனி பொறுப்பேற்காது)
 முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி  விரல்களால லேசா முறுக்கினா, ஈசியா  வளைஞ்சா அது நல்ல முருங்கைகாய். ஒடிஞ்சா அது முத்தல்.

சர்க்கரைவள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடிப்பட்டு கருப்பா இருந்தா கசக்கும்

மக்காச்சோளம் அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

 தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).


கோவக்காய் முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்


சின்ன வெங்க்யாம் வாங்கும்போது பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருக்குறதும், முத்து முத்தாக தெளிவா இருப்பதை வாங்கவும்


 தோல் சுருங்காம இருக்கனும்.  கரும்பச்சையில இருந்தாலும்  வாங்கவேணாம். 


காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாம அடர்த்தியா காம்பு தடினமனா இல்லாம வாங்கனும். எடை போடும்போது இலை தண்டை வெட்டிட்டு எடை போட சொல்லுங்க. 

 மாங்காய வாங்கும்போது  தட்டி பார்க்கும்போது டொக்க்ன்னு சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சின்னதா  இருக்கும்


பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ): அடிப் பகுதி குண்டா இல்லாம காய் முழுதும் ஒரே சைசில் இருக்குற மாதிரி  பார்த்து வாங்குறது நல்லது


புடலங்காய்  கொஞ்சம் கெட்டியா அழுத்தமா இருக்குற மாதிரி பார்த்து வாங்குங்க.  அப்போதுன் விதைப்பகுதி குறைவா, சதைபகுதி அதிகமா இருக்கும்


உருளை கிழங்கு முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர மாதிரி இருக்கனும்.

 கருணை கிழங்கு முழுசா வாங்கும் போது பெரியதா பார்த்து வாங்குறது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்குனா, உள்ள இளம்சிவப்பு நிறத்துல இருக்குமாறு  வாங்கவும்


சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது.கொஞ்சம்  உருண்டையா பார் த்து வாங்கவும்


 பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். கீழ் பகுதில வால் முளைக்காமயும் பார்த்து வாங்குங்க.


இஞ்சி லேசா கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வந்தா வாங்குங்க.இதுல  நார் குறைவா இருக்கும். 


 கத்திரிக்காய் தோல் சாஃப்டா இருக்கனும். மேல் காம்பு தடிமனா இல்லாம, மேல்தோல் கத்திரிக்காயோடு ஒட்டி இருக்கனும்.
 

 சுரைக்காயை நகத்தால அழுத்தினா நகம் உள்ளே இறங்னும். அப்போ தான் அது இளசு.

 பூண்டு பல் பல்லா வெளியே தெரியனும். இல்லாட்டி உள்ளே பூச்சி, பூஞ்சை இருக்க வாய்ப்பு அதிகம். 


அவரைக்காய் தொட்டு பார்த்து விதைகள் பெரிதா இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசா வாங்கினா நார் அதிகம் இருக்காது


 பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.


 வாழைப்பூவோட மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா?! என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் பூன்னு அர்த்தம். 


  மொச்சைக்காய் வாங்கும்ப்போது கொட்டை பெரிதா தெரியும் காய் பார்த்து வாங்கவும்


சௌசௌ வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தா முற்றிய காய்


முள்ளங்கி  லேசாக கீறினா தோல் மென்மையா இருந்தா அது இளசு- நல்ல காய்.

 பச்சை மிளகாய்  நீளமானது  காரம் குறைவா இருக்கும்.  குண்டா இருக்குறதுதான் காரம் தூக்கலாகவும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

இப்படி பார்த்து பார்த்து காய் வாங்கிட்டு போய் வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு எடுங்க சகோ’ஸ்

Wednesday, March 28, 2012

ப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு


(ஐ,  எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)
 

















(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)

















(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)













(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்?! ...,)


















(நான்  மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)
















(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)

 

















 (நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)













 (நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை  நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)














(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)
















(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,) 

 
 
















   (பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால்  எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)



















டிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா?

Wednesday, November 09, 2011

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??


மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க.  ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க. 
அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க. 
கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, சக ஆண்பதிவர்களுக்கு இந்த டிப்ஸ்.
இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க. 
*முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்
*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

                     
*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும்  அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

      
அசைவ பிரியர்களுக்கு:
*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும்.  மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்
*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.
*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.
ஆட்டுகறி வாங்கும்போது  கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்(ரம்பா, தொடை அது இதுன்னு கமெண்ட் போட்டால்.. அவங்க தளத்துல மைனஸ் ஓட்டு போடப்படும் என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.)

டிஸ்கி: சொந்தமா யோசிச்சீங்க போல இருக்குன்னு யாரும் கமெண்ட் போட வேணாம். இது சொந்தமா யோசிச்சு போட்ட பதிவல்ல. சொந்த அனுபவங்களை வச்சு போட்ட பதிவு. என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.