Saturday, March 23, 2019

காதுக்குத்திக்க யாராவது அடம்பிடிப்பாங்களா!? கிராமத்து வாழ்க்கை

இன்னிக்கு பக்கம் பக்கமா படிக்கும் இம்சைல இருந்து விடுதலை... விடுதலை...

சிங்கப்பூரிலிருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒருவர்  ஒரு உண்டியல் பொம்மையை எனக்கு கொடுத்தார். . இந்த பொம்மையின் கதவின் வெளிய பைசாவை வச்சா உள்ளிருந்து ஒரு நாய்  பைசாவை உள்ளிழுத்துக்கும். எனக்கப்புறம் என் எதிர்வீட்டு குழந்தைக்கு அதை அப்பா கொடுத்துட்டார்.  பிள்ளைங்க பிறந்தபின் நிறைய இடத்தில் தேடியும் கிடைக்கல. வேலூர் பர்மா பஜார்ல கிடைச்சது. 

கோவை இலையுடன், அடுப்புக்கரியை அரைச்சு ஸ்கூல் போர்ட், ஸ்லேட்டுக்குலாம் தடவினா புதுசு மாதிரி ஆகிடும். அப்படி கோவை இலை கிள்ள போகும்போதுலாம் கோவைப்பழத்தை பசங்க சாப்பிடுவாங்க. நான் சாப்பிட்டதில்லை.


திருத்தணில குடியிருந்தபோது, பாட்டி வீட்டுக்கு வரனும்ன்னா திருத்தணில பஸ் ஏறினால் காஞ்சிபுரத்துல இறங்கி,  ஆரணிக்கு பஸ் பிடிச்சு வரனும். ரிட்டர்னும் அப்படியே! ஆரணி டூ காஞ்சிபுரம், காஞ்சிபுரம் டூ திருத்தணி. காஞ்சிபுரத்துல ஒரு கடையில் அம்மா பன்னீர் சோடா வாங்கி தருவாங்க. கோலிசோடாவை குடிக்க துப்பில்லாத வயசு. கண்ணாடி டம்ப்ளர்ல ஊத்தி தருவாங்க.  பெயிண்டிங்க் பண்ண அந்த டம்ப்ளரை அம்புட்டு பிடிக்கும். பெருசானால் நிறைய வாங்கி வைக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா, கண்ணாடி டம்ப்ளர் இருந்தாலும் நான் ஆசைப்பட்ட மாதிரி ஒன்னுக்கூட  கிடைக்கல :-(

Image may contain: one or more people and text

படிச்சு பெரிய ஆராய்ச்சியாளரா வருவேன்னு  அப்பா படிக்க வாங்கிக்கொடுத்த பொருளை வச்சு இப்படிதான் ஆராய்ச்சி நடந்துச்சு :-)


எதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கி வந்தால் வீட்டுக்கு ஒரு பொருள் வந்துச்சுன்னு அம்மா, அப்பாக்கு சந்தோசம், நம்ம சந்தோசம்லாம் இந்த பப்பிள்சை உடைக்குறதுலயே இருந்துச்சு. இப்ப என்னோடு போட்டி போட்டுக்கிட்டு நான் பெத்ததுங்களும் உடைக்குதுங்க. 
Image may contain: one or more people, fruit and food
 பழத்துல இருக்கும் விதையை சாப்பிட்டா வயித்துல செடி முளைச்சு காது, மூக்குல இலை வரும்ன்னு பயமுறுத்தியதால் தர்பூசணியை சாப்பிடவே மாட்டேன். ஏன்னா, இதுல விதையும் சிறுசு. அதிகமாவும் இருக்கும். ஆனா, கொய்யாப்பழத்துல இம்புட்டு விதை இருக்கே! இது முளைக்காதான்னு  கேட்க தோணலை. ஏன்னா, இப்ப மாதிரிலாம் அப்ப அம்புட்டு அறிவுலாம் கிடையாது!!! பாருங்க.  இப்ப மட்டும் இருக்குதான்னு யாரும் கேட்கப்படாது. அப்புறம் அழுதுடுவேன்.
இந்த பாப்பா எத்தனை சமர்த்தா காது குத்திக்குது!! நான்லாம் காது குத்திக்க பண்ணின அட்டூழியத்தை அம்மா கதை கதையா சொல்வாங்க. அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் பலர்லாம் பிடிச்சு அமுக்கி காது குத்தினாங்களாம். இந்த களேபரத்துல என் மாமாக்கு அடிப்பட்டதுதான் ஹைலைட்டே. 

மீண்டும் ஒரு நினைவு மீட்டலோடு வரேன்...

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. "//என்னோடு போட்டி போட்டுக்கிட்டு நான் பெத்ததுங்களும் உடைக்குதுங்க.//" - என்னையும் சேர்த்த்துக்குங்க. எனக்கும் அம்மணிக்கும் இதனாலேயே பெரிய பிரச்சனையாகும்.

    ReplyDelete
    Replies
    1. அங்கிட்டுமா?! நாம இன்னும் வளரனுமோ!?

      Delete
    2. இதுக்கு எல்லாம் போய் வளரணுமா என்ன?
      நம்ம மனசு எப்பவுமே குழந்தை மனசு. அதனால தான் இப்படி

      Delete
  2. நீங்க காது குத்திக்கிட்ட கதையை, உங்கள் அப்பா,அம்மா,இல்ல மாமா யாரையாவது விட்டு எழுத சொல்லுங்களேன். படிக்க ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்பா, அம்மா எதுக்கு?! நானே சொல்றேனே! எங்க வீட்டில்லாம் காது குத்துன்னு தனியா நிகழ்ச்சி வைக்கமாட்டாங்க. குழந்தை பிறந்ததும் மேல்மலையனூர் கோவிலில் மொட்டை அடிச்சுக்கிட்டு வந்திட்டு, வீட்டில் கல்யாணம் நடக்கும்போது கூடவே சேர்த்து காது குத்துவதுதான் வழக்கம்.

      என் சின்ன அத்தையின் நிச்சயதார்த்தத்தின்போதுதான் எனக்கு காதுகுத்து நடந்தது. அப்பவே அப்பா காதுகுத்து பத்திரிக்கைலாம் அடிச்சார். ஊரிலிருந்து ஆட்கள்லாம் வந்திருந்தாங்க. எங்க பூர்வீக வீட்டு நடுவாசல்ல வச்சு காது குத்துக்கு ஏற்பாடு ஆகிடுச்சு. ஆச்சாரி, ஊசி எடுத்துக்கிட்டு கிட்ட நெருங்க. மாமா மடியிலிருந்து எழுந்து ஓட ஆரம்பிக்க, அம்மா, அப்பா, அண்ணன்கள் பிடிக்க, அம்மா சேலைலாம் உருவிட்டேன்னு இன்னமும் என்னை கரிச்சு கொட்டும். அப்புறம் அமுத்தி பிடிச்சு குத்திட்டாங்க. இப்படி திமிறும்போது மாமா முகத்துல என் மண்டை இடிச்சு அவருக்கு காயம். இதான் சகோ நடந்தது. எதாவது புது மாடல் கம்மல் கேட்டால் அம்மா என்னைய கழுவி கழுவி ஊத்தும்.

      எல்லாம் சரி, என் காது குத்துக்கு மாமா எப்படி வரமுடியும்?! லாஜிக்கே இல்லியே!

      Delete
    2. ரொம்ப நன்றி சகோ உடனே எழுதுனதுக்கு.
      இந்த கதை உங்கள் பாணியில் சொல்லப்பட்ட கதை. இருந்தாலும் உங்கம்மா எழுதியிருந்தால் எப்படியிருந்திருக்கும்!!!
      இன்னமுமா அம்மாக்கிட்ட புது மாடல் கம்மல் கேப்பீங்க?

      Delete
    3. ம்ம்ம் ஒரே பொண்ணு. வேற யாருக்கு செய்ய போறாங்க?! எனக்கு வேற யார் செஞ்சாலும் அவங்களுக்கு பிடிக்காது. பொசசிவ்னெஸ் ஜாஸ்தி

      Delete
  3. காஞ்சிபுரத்துல ஒரு கடையில் அம்மா பன்னீர் சோடா வாங்கி தருவாங்க. //

    காஞ்சிபுரத்துலதான் பனீர் சோடா குடிச்சுருக்கேன்...அங்கதான் சூப்பரா இருக்கும். சென்னைல கூடக் கிடைக்கல.

    அந்த பபிள் உடைக்கறது எனக்கும் உண்டு. இப்பதான் குறைச்சுட்டேன்...அதைப் பத்திரப்படுத்தி வைச்சுருவேன் ஏதாவது கூரியர்ல அனுப்ப யூஸ் ஆகும்னு...

    அதென்ன 90 ல இருந்த பிள்ளைங்க...நாங்களும் செஞ்சுருக்கோம்ல...ஆனா வருஷம் சொல்லமாட்டோமே!!! ஹா ஹா ஹா ஹா

    கோவைப்பழத்த பார்த்ததும் கோவைப்பழம் போன்ற சிவந்த கண்கள், கோவைப்பழம் போன்ற செவ்விதழ் இப்படிப் படித்த வர்ணனைகள் நினைவுக்கு வந்துச்சு...அந்தப் படம் ரொம்ப நல்லாருக்கு...நாங்க்ளும் சிலெட்டு போர்ட் தேய்ச்சுருக்கோம் அப்படி.

    எல்லாமே ரசித்தோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. 90கிட்ஸ்ன்னா 90ல வாழ்ந்த பிள்ளைக இல்ல. 90ல பிறந்த குழந்தைங்க. நான் 70 கிட்ஸ். பிறந்த வருசத்தை சொல்ல என்ன தயக்கம்? நான் 1977ல பிறந்தேன் கீதாக்கா

      Delete
  4. பனீர் சோடா திருச்சியிலும் ரொம்பவே நன்றாக இருக்கும். பனீர் சோடா நினைவுகள் வந்து விட்டது.

    காது குத்துவது - மகளுக்கு காது குத்தும்போது, அவளை விட அதிகம் தவித்தது நான் தான்! நண்பர் ஒருவர் தான் மாமாவாக இருந்து காது குத்தி அழைத்து வந்தார் - தில்லி நகைக்கடை ஒன்றில் தான் குத்தி விட்டார்கள்! நான் போகவே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் என் அப்பா என் பிள்ளைகளுக்கு காது குத்தும்போது அப்படிதான். சீர்வரிசைலாம் செஞ்சிட்டு தூர போய்ட்டார். அப்புறம் இழுத்து பிடிச்சு கூட்டி வந்து அவர் மடில உக்கார வச்சுதான் என் பெரிய மகளுக்கு காது குத்தினோம்.

      எனக்குதான் சகோதரன் இல்லியே! ஆனா அதுக்காக யார்கிட்டயும் நிக்கக்கூடாதுன்னு என் அப்பா மடியிலேயே உக்கார வச்சிட்டேன்

      Delete
  5. நான் தஞ்சையில் இருந்த காலங்களில் சென்னையில் மட்டுமே (அப்போது) கிடைக்கும் (அப்படிதான் சொன்னார்கள்) பன்னீர் சோடா குடிப்பது எனக்கும் பெரிய கனவாகவே இருந்தது. பெரிய எதிர்பார்ப்பு என்பதாலேயே குடிக்கும்போது ஏதோ ஏமாற்றமாக இருந்தது!

    இனிமையான நினைவுகள். குறிப்பாக அந்த ரப்பர்!

    ReplyDelete
    Replies
    1. எத்தனை குளிர்பானங்கள் வந்தாலும் இந்த பன்னீர் சோடா, கலருக்கு ஈடாகாது. பன்னீர் சோடாவுக்கு அடுத்து நன்னாரி சர்பத், லஸ்ஸி, ரோஸ்மில்க்தான் என் பேவரிட்

      Delete