Showing posts with label படம் சொல்லும் சேதி. Show all posts
Showing posts with label படம் சொல்லும் சேதி. Show all posts

Thursday, April 19, 2018

மனிதநேயத்தின் அடையாளம் - படம் சொல்லும் சேதி

கடவுள் கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டா அதை தடுக்க யாராலும் முடியாது என்பதற்கு சாட்சி. வெட்டுப்பட்ட மரத்தின் சிறுகிளையில் பசியாற்றும் பழம் (போட்டோஷாப் ஆனாலும்...)

பூமிப்பந்து எல்லா உயிரினத்துக்குமே பொதுன்னு என்னிக்குதான் நாம புரிஞ்சுக்க போறோம்?! 
எப்படிலாம் பசங்களை இந்த டீச்சருங்க மேய்க்குறாய்ங்க...

மனிதநேயத்தின் அடையாளம்...
அன்றும்...இன்றும்...



தெலுங்கானாவில் 700 ஆண்டுகால மரமொன்று சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்தது. இந்த மரம் பூச்சியடிக்க ஆரம்பிச்சு, பட்டுப்போகும் சூழலுக்கு வந்தது. சமூக, இயற்கை ஆர்வலர்கள் ட்ரிப்ஸ் மூலம் பூச்சிக்கொல்லி, சுத்தமான தண்ணின்னு செலுத்தி காப்பாற்ற முயற்சி செய்றாங்க.. 
இன்றைய சமூக அவலம்...
அம்மா அப்பா, டீச்சர், படிக்கும் கல்வி நிறுவனத்தை தாங்கும் பொறுப்பு மாணாக்கரின் கையில்... பசங்க பாவம்!

 தான் மட்டும் தப்பிச்சா போதும்ன்ற சுயநல மனநிலை.  பெரிய படகா இருந்தால் இன்னும் பலரை காப்பாத்தலாமே!
அறிவு சொல்லுறதை என்னிக்கு நாம கேட்டிருக்கோம்...

 காட்டில் இருக்கும் ஒரு மரம் வெட்டும்போது மரத்தோடு சேர்ந்து ஒரு உயிரும் அழிக்கப்படுது..
புகைப்பிடித்தல் கொடுமைன்னு இனியாவது உணரனும்...

நன்றியுடன்,
ராஜி

Thursday, April 12, 2018

நமக்கு நாமே! இல்லன்னா நமக்கு நாமமே! - படம் சொல்லும் சேதி

 அறிவுக்கொழுந்து..
காதலை இழந்து காதலியை காப்பாத்திய கதை இதுக்கு பொருந்தும்..

சொல்லித்தான் தெரியனுமா?!

 நிறைக்குடம் தளும்பாது, குறைக்குடம் கூத்தாடும்ன்னு அன்னிக்கே சொல்லி வச்சது இப்ப படத்தில்...
 கல்லைக்கண்டா நாயைக்காணோம், நாயைக்கண்டா கல்லைக்காணோம்.. கதை இதுக்கும் பொருந்தும்.
வாழ்க்கையை வாழ....
 அன்றும்... இன்றும்...
 எங்கு சென்றாலும் நம்ம தடத்தை அழுத்தமா பதிஞ்சுட்டு வரனும்ன்னு சொன்னதை நம்மாளுங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!
மஞ்சக்கண்ணாடி போட்டு பார்த்தால் உலகமே மஞ்சளாதான் தெரியுமாம்.
மனசையும், மூளையும் பேலன்ஸ் பண்ணிட்டு போறது எம்புட்டு கஷ்டம்?!


நமக்கு நாமே திட்டம்தான் சரிப்பட்டு வரும். இல்லன்னா, நமக்கு நாமமே!
நன்றியுடன்,
ராஜி

Sunday, November 26, 2017

ஆதாமும் ஏவாளும் சீனாவிலோ, ஜப்பானிலோ பிறந்திருந்தா.... - படம் சொல்லும் சேதி



நல்லவேளை எனக்கு அறிவாள்மனைல காய்கறி கட் பண்ணும் பழக்கமில்ல.  அதனால பாம்பு தப்பிச்சுட்டுது. 

ஆதாமும் ஏவாளும் சைனாவிலோ இல்ல ஜப்பானிலோ பிறந்திருந்தா, காதல் கன்றாவிலாம் இல்லாம நாடும் நல்லா இருந்திருக்கும். 

தடுப்பூசியின் அர்த்தம் இதானோ?!
ஒரு பஸ், ரெண்டு நம்பரோடு ஓடுற அதிசயமான பஸ், இதுகூட கவனிக்காம எஃப்.சிக்கு போய் வந்திருக்கு இந்த பஸ்.
நல்ல வாத்தியார்களுக்கு சமர்ப்பணம்...

குழந்தைகளை சாக்லேட் கொடுத்து கடத்திக்கிட்டு போய்டுற மாதிரி என்னைய வா தஞ்சாவூர், மகாபலிபுரம், கன்யாக்குமரிக்கு கூட்டிப்போறேன்னு சொல்லி ஈசியா கடத்திடலாம். அந்தளவுக்கு இந்த ஊர்களை பார்க்க பார்க்க சலிக்காது எனக்கு..  வித்தியாசமான கோணத்தில் பார்த்த தஞ்சை பெரிய கோவில்... 

கடைமட்ட ஊழியர்களின் நிலை இதுதான்ன்னு வெளிச்சம் போடும் படம்...

அட, பக்கி பயலுங்களா! இப்படியா தப்பிக்க சொல்லி கொடுப்பீங்க?! அப்புறம் பொம்பளைங்க நாங்க உண்மை கண்டறியும் மெசினோடுதான் அலையனும்... 


இது எல்லாருக்குமே பொருந்தும்தானே?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
க்ளிக் ஹியர்.

நன்றியுடன்,
ராஜி.



Saturday, November 18, 2017

நம்பிக்கை வைத்தது தவறோ?! - படம் சொல்லும் சேதி

என்னத்த சொல்ல?!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.....


காதல், மது மாதிரி சோசியல் மீடியாவும் ஒரு போதை ஆகிட்டுது...

 நம்மோட மகிழ்ச்சியை பணம்தான் தீர்மாணிக்குது...

 உயிர் கொடுத்த தந்தைக்கு உயிர் கொடுத்த மகள். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிட்டும்?!

வாழ்வின் கடைசி கட்டத்தில் பணம் துணைக்கு இருக்காது.  

 நம்பிக்கை வைத்தது தவறோ?!
என் கண்ணை தொறந்து வச்சுட்டாங்கன்னு சொல்லுறது அர்த்தம் இதுதான்...

பின் குறிப்பு.... 
நோன்பு, ஊர் பயணம்ன்னு கொஞ்சம் பிசி மக்களே! அதனால நம்ப வூட்டுக்கு வராத புள்ளையோட வீட்டுக்கு நாம ஏன் போகனும்ன்னு கோவிக்காம வந்துட்டு போங்க. திங்க கிழமை முதல் உங்க வீட்டுக்கு வரேன்...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
ராஜி