Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Thursday, April 19, 2018

மனிதநேயத்தின் அடையாளம் - படம் சொல்லும் சேதி

கடவுள் கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டா அதை தடுக்க யாராலும் முடியாது என்பதற்கு சாட்சி. வெட்டுப்பட்ட மரத்தின் சிறுகிளையில் பசியாற்றும் பழம் (போட்டோஷாப் ஆனாலும்...)

பூமிப்பந்து எல்லா உயிரினத்துக்குமே பொதுன்னு என்னிக்குதான் நாம புரிஞ்சுக்க போறோம்?! 
எப்படிலாம் பசங்களை இந்த டீச்சருங்க மேய்க்குறாய்ங்க...

மனிதநேயத்தின் அடையாளம்...
அன்றும்...இன்றும்...



தெலுங்கானாவில் 700 ஆண்டுகால மரமொன்று சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்தது. இந்த மரம் பூச்சியடிக்க ஆரம்பிச்சு, பட்டுப்போகும் சூழலுக்கு வந்தது. சமூக, இயற்கை ஆர்வலர்கள் ட்ரிப்ஸ் மூலம் பூச்சிக்கொல்லி, சுத்தமான தண்ணின்னு செலுத்தி காப்பாற்ற முயற்சி செய்றாங்க.. 
இன்றைய சமூக அவலம்...
அம்மா அப்பா, டீச்சர், படிக்கும் கல்வி நிறுவனத்தை தாங்கும் பொறுப்பு மாணாக்கரின் கையில்... பசங்க பாவம்!

 தான் மட்டும் தப்பிச்சா போதும்ன்ற சுயநல மனநிலை.  பெரிய படகா இருந்தால் இன்னும் பலரை காப்பாத்தலாமே!
அறிவு சொல்லுறதை என்னிக்கு நாம கேட்டிருக்கோம்...

 காட்டில் இருக்கும் ஒரு மரம் வெட்டும்போது மரத்தோடு சேர்ந்து ஒரு உயிரும் அழிக்கப்படுது..
புகைப்பிடித்தல் கொடுமைன்னு இனியாவது உணரனும்...

நன்றியுடன்,
ராஜி

Monday, May 29, 2017

பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும்போது கவனிக்க வேண்டியவை -ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள டல்லா இருக்கே! என் ஃப்ரெண்ட் ராஜி பையன் ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டான்.. மார்க் கம்மியா எடுத்திருக்கான்.

உடனே உன் ஃப்ரெண்ட் அவனை திட்டி அடிச்சிருப்பாளே! டிவி, ஃபேஸ்புக்ன்னு சுத்த தெரியுமே தவிர நல்ல விசயங்களை புரிஞ்சுக்குற கெப்பாசிட்டி அவளுக்கு கிடையாதே!
ம்க்கும். அவங்க வீட்டுல கரிச்சு கொட்டுறது போதாதுன்னு நீங்களும் அவளை கரிச்சு கொட்டுங்க. அவ ஒன்னும் புள்ளைய திட்டல. ஆனா, எந்த காலேஜ்ல சேர்க்கலாம், என்ன கோர்ஸ் சேர்க்கலாம்ன்னு குழம்பி போய் நிக்குறா. அவங்க வீட்டுல சொல்லுற படிப்பை சேர்க்கலாமா?! இல்ல எல்லாரையும்போல இஞ்சினியரிங், பிஸினெஸ் மேனேஜ்மெண்ட்ன்னு சேர்க்கலாமான்னு அல்லாடி போய் நிக்குறா. 

அவனுக்கு என்ன விருப்பமோ அந்த கோர்ஸ்ல சேர்க்க சொல்லுறதுதானே?! 

அவன் தனக்குன்னு எந்த விருப்பமுமில்லை. எது நல்லதோ அதுல சேருங்க. படிக்குறேன்னு சொல்லிட்டான். அதனால, எந்த பக்கம் போறதுன்னு அவளுக்கு புரிபடலையாம். சொல்லி கஷ்டப்பட்டா. 
இப்பலாம் மார்க் கம்மியான பசங்கதான் பின்னாளில் நல்லா சாதிக்குறாங்க. அதனால, மனசை தளர விட வேண்டாமுன்னு சொல்லு.  எல்லாரையும் போல இஞ்சினியரிங்க், பிஸினெஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ன்னு போய் விழாம ப்யூச்சர்ல எந்த துறைல வேலை வாய்ப்புன்னு பார்த்து முடிவெடுக்க சொல்லு. இப்ப மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலமிருக்கு. பாராமெடிக்கல் சம்பந்தமான படிப்புல சேர்க்க சொல்லு. அதுக்கடுத்து காமர்ஸ் மாதிரியான ஆர்ட்ஸ் படிப்புக்கும் மதிப்புண்டு. மூணு வருசம் படிச்சு டிகிரி வாங்கி மேற்படிப்பு படிச்சுக்கிட்டே க்ரூப் 1,2,3,4 மாதிரியான பரிட்சை எழுதி அரசு வேலைக்கு போகலாம். இல்ல பி.பார்ம், ரேடியாலஜி, லேப்டெக்னீசியன் மாதிரியான படிப்புகளை படிச்சு லோன் வாங்கி சுயதொழில் செய்யலாம். 

சரி இதுலாம் அவக்கிட்ட சொல்லுறேன் மாமா.
இரு. படிப்புலாம் தேர்ந்தெடுக்குற நேரத்துல சேர்க்குற காலேஜ் பத்தியும் நல்லா விசாரிக்க சொல்லு.  ஏன்னா, லோன் கிடைக்குறது முதற்கொண்டு வேலை கிடைக்குறது வரை பல விசயங்கள் எந்த காலேஜ்ல படிக்கிறோம்ன்றதுதான் தீர்மானிக்கும்.  அதனால, மாமன் சொன்னான், மச்சான் சொன்னான்னும், டிவி, பேப்பர் விளம்பரத்துல வருதுன்னும் கண்ட காலேஜ்ல சேர்த்து லோல்படவேணாம்.  எந்த படிப்பா இருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த அனைத்து தரச்சான்று அங்கீகாரம் வாங்கி இருக்காங்களான்னு பார்க்கனும். காலேஜ்ல சிறப்பான வசதி இருந்தா அதுக்கான அங்கீகாரத்தையும்  வாங்கி இருக்காங்களான்னும் பார்க்க சொல்லு.   காலேஜ்ல லேப், ப்ரொபஷர்ஸ், கழிவறை, சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல்ன்னு அடிப்படை வசதிகளை நேரில் பார்த்து சேர்க்கச்சொல்லு.  இந்த விசயங்கள் நமக்கு மட்டும் புடிச்சா போதாது. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கான்னும் பார்க்கனும்.  காலேஜ் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்கள் வெப்சைட்டுலயும்,  காலேஜ் ஆண்டுமலரில் வந்திருக்கான்னு பார்க்க சொல்லு. அப்படி இருந்தாலும் அதை ஒருமுறை கிராஸ் செக் பண்ணிக்க சொல்லு. பேருந்து வசதி எப்படி இருக்குன்னு பார்க்கனும். ஹாஸ்டல்ல தங்கினாலும் போக்குவரத்து, மருத்துவ வசதி இருக்கான்னு பார்க்கனும்.
ஒவ்வொரு காலேஜ்க்கும் அந்தந்த துறை சார்ந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டு அதுக்குன்னு ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு விசாரிக்கலாம்.  வெப்சைட்டுல இல்லன்னா ஆண்டு மலர்ல எல்லா புரொபசர்ஸ், அவங்க படம், அவங்க படிச்ச காலேஜ், அனுபவம், வாங்கின பட்டங்கள் இருக்கான்னும் பார்க்கனும். காலேஜ் மேனேஜ்மெண்ட்ல இருக்கும் மெம்பர்ஸ்  யார் அவங்க பேக்ரவுண்ட் என்னன்னும் விசாரிக்கனும். குறைஞ்சது மூணு வருசம் அந்த காலேஜ்ல படிச்சவங்க, எத்தனை பேருக்கு வேலை கிடைச்சதுங்குற விவரம் பொதுவுல சொல்லி இருக்காங்களான்னு பார்க்கலாம், இல்லன்னா விசாரிச்சும் தெரிஞ்சுக்கலாம்.  மார்க், பணம், சாதி..ன்னு எந்த அடிப்படையில் பசங்களை சேர்த்துக்குறாங்கன்னும் கவனுக்கனும்.

காலேஜ்ல போதுமான கிளாஸ் ரூம் இருக்கா?! ரூம் காத்தோட்டமா, வெளிச்சமா இருக்கான்னும் கவனிக்கனும். ஹாஸ்டல்ல தங்குறதா இருந்தா ரூம் எப்படி இருக்கு, கழிவறை எப்படி இருக்கு, வெளிச்சம், காத்து வசதி இருக்கான்னும் பார்க்கனும். ஹாஸ்டல் சமையலறை, டைனிங் ஹாலையும் நல்லா பார்க்க சொல்லு. அதைவிட்டு அங்க போயும் போனை நோண்டிக்கிட்டு இருக்க வேணாம்ன்னு உன் ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லு. அதேமாதிரி ஒரே காலேஜ்ல போய் சேர்த்துட்டு வராம ரெண்டு மூணு காலேஜை நல்லா பார்த்துட்டு சேர்க்க சொல்லு. இந்த விசயத்துல சோம்பேறித்தனம் கூடாது. இப்படி நல்லா அலசி ஆராய்ஞ்சு காலேஜ்ல சேர்த்துட்டு  வேற காலேஜ் பார்த்து ஆசைப்படக்கூடாது. நாம படிக்கப்போற காலேஜ்தான் பெஸ்ட் காலேஜ்ன்னு பசங்க மனசுல பதிய வச்சு படிக்க அனுப்ப சொல்லு.
Related image
அப்பாடி! இந்த கஷ்டமெல்லாம் நானும், ராஜியும் எங்களை பெத்தவங்களுக்கு வைக்கக்கூடாதுன்னுதான் ப்ளஸ்டூவுல பெயிலாயிட்டோம்.

ம்க்கும். மேய்க்குறது எரும. இதுல பெரும வேற.....

எருமைன்னு சொன்னது உங்களைத்தானே மாமா?!
என்கிட்ட வந்திடு. ஒன்னும் தெரியலைன்னாலும் வாய் மட்டும் காது வரை கிழியுது. தினமும் ரெண்டு வேளை சாமி படத்துக்கு பூ போட்டு விளக்கேத்தி சாமி கும்பிடுறியே! முருகா முருகான்னு அம்மன் கோவில்ல நின்னுக்கூட லூசு மாதிரி கும்பிடுறியே! முருகன் பக்கத்திலிருக்கும் ரெண்டு பேர்ல யார் வள்ளி எது, தெய்வானை எதுன்னு கரெக்டா சொல்வியா?!

ம்ம்ம் சொல்வேனே! முருகனுக்கு  வலப்புறம் இருக்குறது வள்ளி, இடப்புறம் இருக்குறது தெய்வானை. முருகன் தெய்வானையை கட்டிக்கிட்டு எல்லா தம்பதிகளையும் போல தெய்வானைக்கு இடப்பாகத்தை கொடுத்தார். பின்னாடி வள்ளியை கட்டிக்கிட்டதால அவளை வலப்புறம் வச்சுக்கிட்டார். வள்ளி பூமியில் பிறந்த பொண்ணுங்குறதால தாமரை பூ வச்சிருப்பாங்க. கூடவே வேடுவ குலத்து பெண்ணுங்குறதால மரவுறி தரித்திருந்ததால பச்சை நிற புடவை கட்டி இருப்பாங்க.  தெய்வானை இந்திரலோகத்து பெண்ங்குறதால கையில் நீலோத்பலர் மலர் வச்சிருப்பாங்க. சிவப்பு புடவை கட்டி இருப்பாங்க.

அடடே! உனக்கு நல்லன் விசயம்லாம்கூட தெரிஞ்சிருக்கே! எப்படி புள்ள?!  போன வருசம் மே முதல் வாரம் வள்ளிமலை கோவிலுக்கு டூர் போகும்போது அங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.

எப்படியோ நல்லது தெரிஞ்சுக்கிட்டா சரி..  லீவுல ஊர் சுத்த நம்ம பசங்க என்னலாம் ஐடியா பண்ணுறாங்கன்னு பாரு.. அத்தோடு
வாட்ஸ் அப்ல வந்த இந்த படம் யோசிக்கவும், மனசை பாதிக்கவும் வச்ச படம் இதையும் பாரு.  கூடவே,

என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?!


இதுக்கு பதிலும் யோசிச்சு வை... கொஞ்சம் வேலை இருக்கு வெளில போய் வரேன்...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு...

நன்றியுடன்,

ராஜி 

Monday, May 15, 2017

கடவுள் சிலையை கல்லில் வடிக்க காரணம் - ஐஞ்சுவை அவியல்


விழுந்து விழுந்து கோவிலுக்கு சாமி கும்பிட போறியே!  சாமி சிலை ஏன் கல்லால செஞ்சு வச்சிருக்கான்னு தெரியுமா?!

அதான் விலை குறைச்சல். எல்லா இடத்துலயும் கல் கிடைக்கும். அதனால, சாமி சிலையை கல்லால செஞ்சிருப்பாங்க.

அப்படி இல்ல, சில கோவிலுக்குள் நுழையும்போதே மனசு ரிலாக்சாகுறதை கவனிச்சிருப்பே. அது சின்னதோ பெரிய கோவிலோ கவனிக்காம அந்த கோவில் நமக்கு பிடிச்சு போகும். அதுக்கு காரணம் கருவறையில் இருக்கும் சிலையின் சக்திதான்.  வீடு கட்டுறதுக்கு வாஸ்து இருக்குற மாதிரி கோவில் கட்டுறதுக்குன்னு ஆகம விதி இருக்கு. அதுப்படி கோவில் கட்டி சிற்ப சாஸ்திரப்படி சிலையை கருங்கல்லில் வடித்து வேதங்களில் சொல்லி இருக்குற மாதிரி  பூஜைலாம் செய்து வந்தால் நாம் கோவிலுக்குள் நுழையும்போதே நம் உடலுக்குள் ஒரு சக்தி ஊடுறுவதை கவனிக்கலாம்.

தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு மாதிரியான உலோகங்களை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம்.  நல்லதோ கெட்டதோ அது  எந்த சக்தியா இருந்தாலும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் கல்லுக்கு உண்டு. கல்லில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ன்ற பஞ்ச பூதங்களின் தன்மை உள்ளது. இத்தன்மை எந்த உலோகத்திலும் கிடையாது. 

கருங்கல்லில் நீர் இருக்குறதால எத்தனை வெப்பத்திலும் இருந்தும் சட்டென இதோட இயல்பான குளிர் நிலைக்கு மாறிடும். கல்லுக்குள் நீரூற்று இருப்பதை பார்த்திருப்போம்.   இது நிலத்தில் கிடைக்கிறது.  நிலத்தோட தன்மை கல்லில் இருப்பதால் செடிகள் வளருது. கல்லில் நெருப்பின் சக்தி இருப்பதை கற்கள் உரசும்போது பறக்கும் தீப்பொறியிருந்து அறியலாம். கடினத்தன்மை கொண்ட கல்லில் காற்றும் இருக்குங்குறதுக்கு தேரை உயிரோடு இருப்பதால் உணரலாம்.  ஆகாயத்தைப்போல  ஒலியை தன்னுள் ஈர்த்து பின் வெளியிடும் சக்தி உண்டு. அதனாலதான் கோவில்களில் எதிரொலி கேட்கிறது. இறை வடிவங்களான பஞ்சபூதங்களின் வடிவில் இருக்கும் கருங்கல்லில் சிலை செய்து சாமி கும்பிறோம்.  அபிஷேகம், ஆராதனைகளை முறைப்படி செய்து சிலையில் இருக்கும் பஞ்சபூதங்களின் தன்மையை அதிகரித்து  அதை வணங்கும்போது நல்ல அதிர்வுகளை உண்டாக்கி நம் உடலில் பாய்ந்து நல்ல பலன்களை கொடுக்குது. 

தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. வர வர மாமியார் கழுதை போல தேஞ்சான்ற மாதிரி .....

ஏய் இரு இரு. மாமியார் எப்படி கழுதையாவா?!

ம்ம்ம்ம்ம்   கோவத்துல எட்டி உதைக்கும்போது... பழமொழி சொன்னா ஆராயக்கூடாது அனுபவிக்கனும்.

முழுசா தெரியாம எதையும் உளறாத.  மாமியார்ங்குறவ ஏற்கனவே மூர்க்கம். அவளை கழுதைன்னு சொன்னா இன்னும் கோவப்படுவா. அதனால, இதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்க.. வர வர மாமியார் கழுதைப்போலானாள்ங்குற பழமொழில கழுதைங்குறதுக்கு பதிலா கயிதைன்னு வரனு, கயிதைன்னா ஊமத்தைங்காய் ஆகும். ஊமத்தம்பூ பூக்கும்போது ரொம்ப மென்மையாய், அழகாவும் இருக்கும்.   ஆனா, போகப்போக முள்ளோடு கடினமாவும், விசமாவும் ஆகிடும். அதுமாதிரிதான் மாமியாரும். முதல்ல ரொம்ப அன்பாகவும், போகபோக நாக்காலயே குத்தி குத்தி சில நேரம் உயிருக்கேகூட ஆபத்தா போய்டும். அதனாலதான் அப்பிடி சொல்றாங்க. 

இத்தனை தெரியுது. இந்த வெயில்ல வேர்க்குரு வருதே. அது தடுக்க எதாவது சொல்லுங்களேன். தினமும் ரெண்டு வேளை குளிக்கனும். காட்டன் ட்ரெஸ்தான் போடனும் அதும் நல்லா காத்தோட்டமா இருந்தா நல்லது. தேவையில்லாம வெயில்ல சுத்துறதை குறைச்சுக்கனும்.  வேர்க்குரு வந்துட்டா பனை நுங்கு சதைய தடவலாம். வேப்பங்கொழுந்தும் குப்பைமேனியையும் அரைத்து தடவலாம். சந்தனம்  தேய்த்து குளிக்கலாம். நிறைய வேர்க்குரு இருந்தா சாதம் வடிச்ச கஞ்சியை தடவி ஊற வெச்சு குளிக்கலாம். வெள்ளரிக்காயை வெட்டி வேர்க்குருவில் தேய்ச்சுக்கிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். சாமந்தி பூவோட சாறையும் தேய்க்கலாம்.  சோத்துக்கத்தாழையையும் தேய்ச்சு வந்தாலும் வேர்க்குரு மறையும்.

டிப்சுக்கு நன்னி.. இந்த ஃபோட்டோவை பாருங்க. நாமதான் செண்டிமெண்ட்டா இருக்குற மாதிரி ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உண்டுன்னு நமக்கு தெரிஞ்ச கதைதான். ஆனா, செத்துப்போன தன் குட்டியை வெச்சு கதறியழுத தாய் குரங்கோட படம் பார்க்கும்போது தெரியும்  அன்பும் அதனால வரும் பிரிவும் எத்தனை வலியை எல்லா உயிருக்கும் தருதுன்னு..  இந்த படத்தை எடுத்தது அவினாஷ்ங்குற மேற்குவங்களத்தை சேர்ந்தவர். 


படம் பார்க்கவே கொடுமையா இருக்கு.  இப்ப நான் ஒரு கேள்வி கேக்குறேன். ராஜாவும், சுரேசும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுறாங்க.  ரெண்டாவதா ஓடிட்டிருக்கும் ராஜாவை சுரேஷ் முந்திக்கிட்டு ஓடுறான்.  அப்படின்னா சுரேஷ் இப்ப எத்தனையாவது இடத்துல ஓடிட்டிருக்கான்?!

மாமா பதில் சொல்லுறதுக்குள் நீங்க பதில் சொல்லுங்க சகோஸ்...

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459990

நன்றியுடன் ,’
ராஜி.




Friday, August 03, 2012

போவோமா ஊர்கோலம்?!




போவோமா? ஒரு திருமண
மண்டபத்திற்கு...
உண்மை பொருள்
உணர்ந்திட... 

உயிருடன் நடக்கும் கரும்பு
சக்கை.  அதோ
அவரே. பெண்ணிண் தந்தை...
அதோ மடியில் கட்டப்பட்ட
நெருப்பை அவிழ்த்து விட்டதாய்
கனவு காணும் பெண்ணின் தாயார்... 

உடற்பசிக்கும் பணப்பசிக்கும்
இலவசமாய் பெண் கிடைத்த
மகிழ்ச்சியில் அதோ மணமகன்... 


கடைசி பருக்கை வரை
பெண்ணின் வீட்டில் சுரண்டிய
தெம்பில் மணமகனின் தந்தை... 


வீட்டோடு இலவச வேலைக்காரி
கிடைத்த மகிழ்ச்சி களிப்பில்
அதோ மணமகனின் தாய்... 


வரதட்சணை வில்லேந்தி வந்த
ராமனையே கைப்பிடித்தாள் சீதையென்பதை
மறந்து வாழ்த்தும் கூட்டம்.. 


கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக...

Tuesday, March 13, 2012

புகைப்படம் சொல்லும் சேதி......

     அவசரமா எதையாவது ஒண்ணை தேடிக்கிட்டு இருப்போம். அப்போ, எதாவது ஒரு பழைய போட்டோ  ஒண்ணு, பையன் காது குத்து, மகளோட திருமணம், தன்னோட காலேஜ் போட்டோ இப்படி எதாவது ஒண்ணு கிடைத்தால்,  தேடும் வேலையை  சில நிமிடம் ஒத்தி வைத்துவிட்டு அந்த ஃபோட்டோவை ரசித்து விட்டுதான் மற்ற வேலையை பார்ப்போம்.

     புகைப்படம் என்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அடையாளம். ஒவ்வொரு புகைப்படமும் காதல், ஹாஸ்யம், சோகம், வெறுப்பு, காதல்ன்னு ஒவ்வொரு படமும் பலகதை சொல்லும். சாதாரண ஒரு மனிதன் வாழ்விலேயே புகைப்படம் பெரும்பங்கு வகிக்கும்போது ஒரு நாட்டோட புகைப்படம் எவ்வளவு கதைகள் சொல்லும்.

      நூறாண்டுகளுக்கு முன் எடுத்த இந்தியாவின் புகைப்படம் சிலது கிடைத்தது. அவை ஒவ்வொன்றும் இந்தியர்களின் கலாச்சாரம், கலை,பழக்க வழக்கங்களை பறைசாற்றுவதாய் இருந்தது.

                              













நன்றி: படங்களை மெயில் அனுப்பிய தோழிக்கு

Friday, February 17, 2012

உன் வீட்டு சுவற்றில் புகைப்படமாய்.......

                      
   என் மௌனத்தின்
அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்
தூரங்களே என் வாழ்க்கைப்
பயணங்களாய்...,

கண்ணீரை என் விழிகள்
அறியும் முன்னே – துடைத்து விட
நீளும் உன் கரங்களே
கானலாய் போனது....,

இத்தனையும் ஓர்
இரவின் மௌனத்தைக் கிழித்து
கொண்டு விசும்பலாய் உன் குரல்
கேட்கும் துடைக்க முடியா....,

தூரத்தில் நான் உயிரில்லா
நிழற்படமாய்
உன் வீட்டு
சுவரில்.