இந்துக்கள் பண்டிகைக்கும், பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எதாவது ஒரு விசேசதினம் இருக்கும். அதன்படி, தமிழ்மாதங்களில் 12வதும், கடைசிமாதமுமான பங்குனியும், 12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் எனக் கொண்டாடுவது வழக்கம். கல்யாண சுந்தரர் விரதம்ன்னும் இந்நாளை சொல்வார்கள்..
Showing posts with label பார்வதி. Show all posts
Showing posts with label பார்வதி. Show all posts
Monday, April 06, 2020
Friday, February 21, 2020
21 தலைமுறைக்கும் முக்தி கொடுக்கும் மகா சிவராத்திரி
விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்திலாம் அந்தந்த இறைவனின் அவதாரங்களின் தினங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்களாகும். ஆனால், பிறப்பும், இறப்புமில்லாத சிவனுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஜெயந்தி விழா இல்லாத குறையை தீர்க்க ‘மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்கலை தன்னுல் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும் இந்த நாளில்தான் என்கிறது நம் புராணங்கள். இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ எனப்படுது. ‘லயம்” என்றால் ஒடுக்குதல். ஸ்ருஷ்டி என்றழைக்கப்படும் ‘படைத்தல்’. அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே ” மகா சிவராத்திரி’ ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை பெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதி தேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நீக்கி நான் எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே ’மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.
சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின் முன் பூஜை செய்து, அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். அன்று சிவன் கோவில்களில் நடைப்பெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், தேன், இளநீர்.. போன்ற பொருட்களை வழங்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
விரதம் இருக்கும் முறை;
குளித்து முடித்து பூஜை செய்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்லது. பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ சிவலிங்கத்தை அலங்கரித்து இரவு முழுவதும் விழித்திருந்து நாலு கால பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்த்பவ காலத்திலாவது கண்விழித்திருக்கவேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிவாய நம ஓம்... ஓம் நமச்சிவாய.. என சிவ நாமத்தை தியானம் செய்ய வேண்டும். சிவன் தொடர்பான கதைகள், திருவாசகம், திருமூலர், திருமந்திரம்.. போன்றவற்றை படித்தல் நல்லது.. அதைவிடுத்து, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்தல் நலம்...
இனி நாலு கால பூஜை விவரங்களை பார்ப்போம்...
முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது. இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
மூன்றாம் கால பூஜை:
இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின் அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
சிவராத்திரி விரதத்தின் பலன்கள்;
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும், பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி உறங்காமலிருக்க மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழ போட்டும், சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை... நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலை..
பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.
சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே!

மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி
Wednesday, March 20, 2019
வண்ணங்கள் நிறைந்து வழியும் ஹோலிப்பண்டிகை
மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான். இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.
மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி.
Wednesday, November 07, 2018
குடும்ப நன்மைக்கு கேதார கௌரி விரதம்
சொத்து, வீடு, வாசல் இருந்தாலும்... சொந்தம் பந்தம் எல்லாம் இருந்தாலும் உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம்தான் கசக்கும்ன்னு... நம்ப சூப்பர் ஸ்டார் பாடி இருக்கார். கணவன், மனைவி ஒத்துமை இல்லன்னா பல விளைவுகள் சந்திக்கனும். அதுக்கு கடவுள் துணை இருக்கனும். எல்லா விரதமும் குடும்ப நன்மைக்கும், கணவன், மனைவி ஒத்துமைக்கும்தான் அனுஷ்டிக்கப்படுது. இவ்விரதம் பார்வதிதேவியால அனுஷ்டிக்கப்பட்டு சிவனின் இடப்பாகத்தை பெற உதவியது. அதனால, இந்த விரதத்தை எல்லா பெண்களும் கடைப்பிடிப்பாங்க.
கவுரி என்பது பார்வதிதேவியோட இன்னொரு பெயர். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால இந்த விரதத்துக்கு ‘கேதார கவுரி’ விரதம்ன்னு பேர் வந்திச்சு. பார்வதி தேவி ஏன் விரதமிருந்தாங்கன்னு பார்க்கலாம் வாங்க...
கவுரி என்பது பார்வதிதேவியோட இன்னொரு பெயர். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால இந்த விரதத்துக்கு ‘கேதார கவுரி’ விரதம்ன்னு பேர் வந்திச்சு. பார்வதி தேவி ஏன் விரதமிருந்தாங்கன்னு பார்க்கலாம் வாங்க...
தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது எத்தெய்வத்தையும் வணங்கமாட்டார். இதனால் , நாரதர் கலகத்தால்... முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார். இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்... தன்னை பிருகு முனிவரும் சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோவத்துடன் பூலோகம் வந்தார். சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி... அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..
ஞான கவுரி...
ஒருமுறை சிவத்தைவிட சக்தியே உயர்ந்ததென்ற கர்வம் பார்வதிதேவிக்கு தோன்றியது. இதனை உணர்ந்த சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் உலகில் பல குழப்பங்கள் நேர்ந்தது. இதைக்கண்டதும் அன்னையின் கர்வம் காணாமல் போனது. உலகம் இயங்க சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனுக்கு பணிந்தாள். இதையடுத்து தன்னுடைய உடலில் சரிபாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கியதால் அவளுக்கு ஞான கவுரி என பேர் வந்தது. இவளை பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறையில் வன்னி மரத்தின் அடியில் வைத்து வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’ கவுரி பஞ்சமி என அழைக்கப்படுது. இவளுடன் ஞான வினாயகரும் வீற்றிருப்பார். இவள் மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், கல்வியையும் அளிக்கிறாள்.
அமிர்த கவுரி.... உயிர்களின் ஆயுளை நீட்டிக்க வல்லது அமிர்தம். அது தேவலோகத்திலிருக்கும் இந்திரன் வசம் உள்ளது. மிருத்யுஞ்ஜயரான சிவப்பெருமானின் தேவியாக இருப்பதால் இவளுக்கு அமிர்த கவுரி எனப்பேர் உண்டானது. இவளுக்குரிய நாள் ஆடி மாத பௌர்ணமி ஆகும். ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிப்படுவதால் ஆயுள் விருத்தியாகும். வம்சம் செழிக்கும். திருக்கடையூர் அபிராமி இவளின் அம்சம்.
ஒருமுறை சிவத்தைவிட சக்தியே உயர்ந்ததென்ற கர்வம் பார்வதிதேவிக்கு தோன்றியது. இதனை உணர்ந்த சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் உலகில் பல குழப்பங்கள் நேர்ந்தது. இதைக்கண்டதும் அன்னையின் கர்வம் காணாமல் போனது. உலகம் இயங்க சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனுக்கு பணிந்தாள். இதையடுத்து தன்னுடைய உடலில் சரிபாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கியதால் அவளுக்கு ஞான கவுரி என பேர் வந்தது. இவளை பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறையில் வன்னி மரத்தின் அடியில் வைத்து வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’ கவுரி பஞ்சமி என அழைக்கப்படுது. இவளுடன் ஞான வினாயகரும் வீற்றிருப்பார். இவள் மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், கல்வியையும் அளிக்கிறாள்.
சுமித்ரா கவுரி.....
உலக உயிர்களுக்கு உற்ற சினேகிதி இவள். உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை விரதமிருந்து வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.
சம்பத் கவுரி..
வீடு, தனம், தான்யம், பசு, ஆடு, வயல்..எனப்படும் சொத்துக்களை சம்பத்துகள் என சொல்வர். ஒரு வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை கணக்கில்கொண்டு பெரியாளாய் நினைச்சதெல்லாம் ஒருகாலம். இன்னிக்கு கார், மொபைல், நகை மாதிரி அன்று கால்நடைகள் மனிதனின் அந்தஸ்தை உயர்த்தி காட்டும். அத்தகைய உயர்ந்த சம்பத்துகளை அளிக்கவல்லவள் இவள். இவள் பசுவுடன் காட்சி அளிப்பாள்.கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து சிவனை வழிப்பட்ட கதை பல உண்டு. காசி அன்னப்பூரணி இவளது அம்சம். பங்குனி வளர்பிறை திருதியை தினத்தில் இவளை வழிபட்டால் வீட்டில் தனம், தான்யம் உட்பட அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் இருக்கும்.
யோக கவுரி...
யோக வித்தைகளின் தலைவி இவள். சித்தர்களுக்கெல்லாம் தலைவனான சிவனுடன் இணைந்து யோகேஸ்வரியாக காசியில் வீற்றிருக்கிறாள். இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் இந்த இடத்திற்கு யோகேஸ்வரி பீடம் என அழைக்கப்படுது. சித்தர்களுக்கு யோகங்களை அள்ளி வழங்குவதால் இவளுக்கு யோகாம்பிகைன்னும் பெயருண்டு.
வஜ்ர ச்ருங்கல கவுரி....
உறுதியான, ஆரோக்கியமான உடலே மூலதனம். அத்தகைய உடலை உயிர்களுக்கு அளிப்பவள் இவள். ச்ருங்கலம் என்பதற்கு சங்கிலி என அர்த்தம். அமுத கலசம், கத்தி, சக்கரத்துடன் நீண்ட சங்கிலியை தாங்கி காட்சி தருவாள். நோய்கள் அண்டாமலும், முக்தியையும் அளிப்பது இவளது பணி.
சாம்ராஜ்ய கவுரி...
அன்பும், வீரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தலைமை பண்பு தானாய் வந்து சேரும். அத்தகைய தலைமை பண்பை அள்ளி தருபவள் இவள். ராஜராஜேஸ்வரி எனவும் இவளை அழைப்பர். மதுரை மீனாட்சி இவளது அம்சம்.
த்ரைலோக்ய மோஹன கவுரி...
ஆசை என்னும் மாய வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. மனுசனாய் பொறந்த எல்லாருக்கும் ஆசை இருந்தே தீரும். ஆசை தப்பில்ல. அது நியாயமான ஆசையாய் இருக்கும்வரைக்கும்... மாய வலையில் சிக்கி சீரழிபவர்களை கரை சேர்ப்பவள் இவள். இவளை வழிபட்டால், உற்சாகமும், தெய்வீக களையும் அந்து சேரும். காசியில் நந்தகூபரேஸ்வரர் ஆலயத்தில் த்ரைலோக்ய மோஹன கவுரி அருள் புரிகிறாள்.
சுயம் கவுரி....
சிலருக்கு இன்னார்தான் வாழ்க்கை துணையா வரனும்ன்னு ஒரு ஆசை இருக்கும். மனசுக்குள் அவங்ககூட குடும்பமே நடத்துவாங்க. அப்படி ஆசை இருப்பவங்க இவளை நினைத்து வழிப்பட்டால் நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் காட்சி அளிப்பவள். திருமணத் தடையை நீக்குபவள். இவளுக்கு சாவித்திரி கவுரி எனவும் பெயர். சத்தியவான், சாவித்திரி கதை தெரியும்தானே?! அந்த சாவித்திரி இவளை வணங்கிதான் கணவன் உயிரை மீட்டெடுத்தாள்.
சத்யவீர கவுரி....
நாக்கு பிழறலாம்.. வாக்கு பிழறக்கூடாதுன்னு சொல்வாங்க. இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே! எல்லோராலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றலை அளிப்பவள் இந்த சத்யவீர கவுரி’.இவளை ஆடி மாத வளர்பிறை திரயோதசி நாளில் வழிபடலாம். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் ன்னு சொல்வாங்க.
கஜ கவுரி....
யானை முகம் கொண்ட வினாயகரை தன் மடியில் அமர்த்தியபடி காட்சி அளிப்பதால் இப்பெயர் உண்டானது. இந்த அன்னையை ஆடி மாத பௌர்ணமி திதியில் வழிபாடு செய்து வழிப்பட்டால் குழந்தை பக்கியம் உண்டாகும். வம்சம் விருத்தியாகும்.
வரதான கவுரி...
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் அடுத்தவருக்கும் கொடுக்க பலருக்கு மனதிருக்காது. அடுத்த வேளை சோறுக்கு உத்தரவாதமில்லாத நிலையிலும் தனக்கு கிடைத்த உணவை சிலர் பகிர்ந்துப்பாங்க. அத்தகைய கொடை உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் வாழ்பவள் இவள். கேட்ட வரத்தை அள்ளி, அள்ளி வழங்குவதால் இவளுக்கு வரதான கவுரின்னு பேர்.
சொர்ண கவுரி....
ஒரு பிரளயத்தின் முடிவில் அலைகடலின் நடுவே சொர்ணலிங்கம் ஒன்று தேவர்களுக்கு கிடைத்தது. அதை வைத்து அவர்கள் பூஜித்துவர, பொன்மயமாக ஈசனும், பார்வதிய்ம் வெளிப்பட்டனர். அதனால் இவளை சொர்ண வல்லி என போற்றினர். ஆவணி மாத வளர்பிறை திருதியை திதியில் வழிப்பட்டால் வறுமை நீங்கி, குலதெய்வத்தின் அருள் கிட்டும்.
விஸ்வபுஜா மகா கவுரி...
தீவினை பலன்களை, நல்வினை பலன்களாய் மாற்றுபவள். அனைத்து உயிர்களுக்கும் இன்பம் அளிப்பவள். தூய எண்ணங்களை மனதில் வளர செய்பவள். ஆசைகளை பூர்த்தி செய்வதால் பூர்த்தி கவுரி என்றும் பெயர். சித்திரை மாத வளர்பிறை திருதியை திதியில் இவளை வழிபடுவது நல்ல பலனை தரும்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம். சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு. இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை அனைவரும் கட்டிக்கனும். பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக்கனும். நோன்பு சட்டியில் வைத்த பலகாரங்களை அந்த வீட்டினரே சாப்பிடனும். நோன்புக்கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக்கூடாது., மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்து சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள்ன்னு எஞ்சியவகளை ஆற்றில் விட்டு விட்டுனும். ஒருவேளை இந்த பழக்கம் இல்லாதவங்க, நோன்பு எடுக்க ஆசைப்பட்டா, அவங்க கைக்கு இந்த நோன்பு கயிறு கிடைச்சா, அதை ஒரு செம்புல நெல் நிரப்பி, மஞ்சத்துணியால கட்டி தீட்டு படாம பரண்மேல் வச்சிடுவாங்க. மறுவருசம் அதை திறந்து பார்க்கும்போது நெல்லின் அளவு வளர்ந்திருந்தா அவங்க நோன்பு எடுக்கலாம்ன்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.
நன்றியுடன்,
ராஜி.
Monday, November 20, 2017
சிவப்பெருமான் மனசுல இடம் பிடிக்கனுமா?!
’ சீமந்தினி’ன்ற ராஜக்குமாரி சிறந்த சிவ பக்தை. அவள் சிவனுக்குண்டான அனைத்து விரதங்களை முறையாக கடைப்பிடித்து வாழ்ந்து வந்தாள். ‘சீமந்தினி’சிவனை நினைத்து அந்நாளில் விரதமிருப்பதை அறிந்த திருடர் இருவர், அவளிடமிருக்கும் செல்வத்தை களவாட, கணவன் மனைவிப்போல வேடமணிந்து, அவளிடம் வந்து, அம்மா நாங்கள் இருவரும் தம்பதிகள், சிவ பக்தை கையால் உணவருந்துவோம்ன்னு அவளை நம்ப வச்சு அவள் வீட்டுக்குள் போனாங்க.. அவளும், அவர்களை சிவனடியார்கள் என நம்பி, வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறினாள். என்ன ஆச்சர்யம்!! உணவு உண்ட திருடர் இருவரில் ஒருவன் , பெண்ணாய் மாறி நிஜ கணவன் மனைவியாய் மாறினர். அழுது புலம்பிய அந்த திருடர்களை அழைத்துக்கொண்டு காட்டில் இருக்கும் முனிவரை சந்தித்து நடந்ததை சொன்னாள். அவரும் ஞானதிருஷ்டியில் நடந்ததை உணர்ந்து, அம்மா! நீ இன்று சோமவார விரதம் இருந்தாயா?! என வினவினார். ஆமாம், என உரைத்தாள் சீமந்தினி. சோமவாரம் விரதம் இருப்பவர்களின் கையால் சாப்பிட்டல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் ஏற்படும். சோமவாரம் விரதம் இருப்வர்களை எந்த துஷ்ட சக்திளும் அண்டாது. தீயசக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள். என உரைத்ததோடு சீமந்தினியின் வேண்டுகோளின்படி அந்த திருடர்களை உருமாற்றி அனுப்பி வைத்தார்.
வசிஷ்ட மகரிஷி, சோமவாரம் விரதத்தை தவறாமல் கடைபிடித்ததால், கற்புக்கரசியான அருந்ததியை திருமணம் செய்தார். வசிஷ்டரை மறந்த இந்த உலகம் அருந்ததியை மறக்கவில்லை. இன்றும் திருமணம் செய்யும்போது அருந்ததி பார்க்கும் வழக்கம் உள்ளது. அந்த சடங்குக்கு சொந்தக்காரி இந்த அருந்ததிதான்.
விபுன்ற அரசனுக்கு குழந்தை செல்வம் இல்லை. ஆட்சி, அதிகாரம், படைபலம், திரண்ட செல்வம் இருந்தும் தனக்கு பின் தன் நாட்டை கட்டி காத்து ஆள ஒரு வாரிசு இல்லையே என வருந்தி, ஒரு முனிவரிடம் சென்று தன் வேதனையை சொல்லி குழந்தை வரம் வேண்டினான். சோமவார விரதத்தின் மகிமையை சொல்லி, மன்னா! இந்த விரதத்தை கடைப்பிடி. உனக்கு குழந்தை செல்வம் உண்டாகும் என ஆலோசனை கூறினார். பட்ட மரம் தழைக்குமா?! காலம் பல கடந்து, யௌவனம் மாறி முதுமை நெருங்கும் இக்காலத்தில் பிள்ளை உண்டாகுமா என மன்னனின் எதிரிகளின் பேச்சை கேளாமல் இறை சிந்தனையோடு சோமவார விரதத்தினை கடைப்பிடித்ததால் அரசனுக்கும், அரசிக்கும் பிள்ளைப்பேறு உண்டானது.
கீசகன் என்ற அந்தணர், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இறைவனே உலகம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. எது நமக்கு கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு சோமவார விரதம் இருந்தார். அதன்பலனாக, அவருக்கு பிச்சை அளித்தவர்கள் அவரிடமே உதவி கேட்கும் பெரும் செல்வந்தரானார். அதுமட்டுமின்றி, தான் அடைந்த வறுமையின் கொடுமையை வேறு யாரும் படக்கூடாதுன்னு எல்லா செல்வத்தையும் வாரி வாரி வழங்கினார்.
குசேலன் முன் ஜென்மத்தில் யாருக்கும் கொடுக்காத கருமியாய் இருந்து இறைவன் கொடுத்த எல்லா செல்வத்தையும் தானே அனுபவித்து இறந்தான், அதனால், மறுபிறவியில் குசேலனாய் பிறந்து வறுமையில் அல்லல் பட்டான். அதேநேரம் கீசகன் குசேலனாய் பிறந்து இன்றளவும் செல்வத்துக்கு அதிபதியாய் உள்ளான். சோமவார விரதத்தை முறையாய் கடைப்பிடித்ததால் மூதேவியையும், எமனையும் தன்னிடம் நெருங்கா வண்ணம் இருக்கின்றான்.
தர்ம வீரியன் என்ற ராஜவம்சத்து இளைஞன் தங்குவதற்கு சிறுகுடிசைக்கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தான் . அவன் சோம வார விரதம் இருந்ததன் பலன் மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு அதிபதியானான். விரடன் என்ற திருடன் அரண்மனை களஞ்சியத்தில் களவாட, அவனை சிரச்சேதம் செய்ய மன்னன் உத்தரவிட்டான். தண்டனைக்கு பயந்து அவன், காட்டில் சென்று மறைந்துக்கொண்டான். அவனை, வீரர்கள் தேட, மரத்தில் ஏறி அமர்ந்துக்கொண்டான். மழையில் உடல் தூய்மையாகி, பசிக்கு உணவில்லாமல் பகலெல்லாம் தவித்து, இரவில் காட்டில் கிடைத்த பழத்தை உண்டு ஜீவித்திருந்தான். அவ்வழியே வழித்தவறி வந்த பெண்ணை கண்டு அவளுக்கு வழிக்காட்டி நகரின் எல்லையில் விட்டு வந்தான். அவள் அந்நாட்டு இளவரசி, அரண்மனை சென்று தன் தந்தையிடம் நடந்ததை சொல்லி, தான் அந்த மனிதனை மணக்க வேண்டுமென கூற, தந்தையும் தீர விசாரித்து, அவனை திருத்தி அவனுக்கே மணமுடிக்க சம்மதித்தான். திருடனுக்கு தெரியாது, அந்த பெண், இளவரசியென்றும், அன்றைய தினம் சோமவார தினமென்றும்... அவன் அறியாமல் பசியோடு இருந்ததன் பலன், அந்த இளவரசியே அவனுக்கு மனைவியாகி, எந்த களஞ்சியத்தில் களவாடினானோ அந்த களஞ்சியமே அவனுக்கு சொந்தமானது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,... இத்தனை பலனை அளிக்கவல்ல சோமவிரதம் எப்படி உண்டாகிச்சுன்னு இனி பார்ப்போம்... சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் பெரியவன் ஆனதும் ராஜசூய யாகம் நடத்தி பெரும் புகழை அடைந்தான். அவனது புகழை கண்ட தட்சன், தன்னுடையை 27 பெண்களை கொடுத்தான், 27 பேரை மணந்தாலும், 27 பேரில் ஒருவளான, ரோகினி மீது மட்டும் மிகுந்த அன்பு கொண்டான். இதனால், மற்ற பெண்களை ஏறெடுத்தும் பாராமல் இருந்தான். தந்தை தட்சனிடம் சென்று எல்லா பெண்களும் முறையிட்டனர். தட்சன் சந்திரனை எச்சரித்தும் சந்திரனின் போக்கில் மாற்றமில்லை. அதனால், அழகன் என்ற கர்வத்தால் என் பெண்களை அலட்சியப்படுத்தியதால், நாளுக்கு நாள் தேய்ந்து போகக்கடவது என சாபமிட்டான்.
தட்சனின் சாபத்தால் உடல் நாளுக்கு நாள் தேய்வதைக்கண்ட சந்திரன், சிவனை தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் சொல்வr. சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
ஒருமுறை கயிலை மலையில் சிவபெருமான், தேவர்கள், முனிவர்கள் புடைசூழ வீற்றிருந்தனர். அத்தருணம் பார்வதிதேவி அங்கு வந்து சிவபிரானைப் பணிந்து வணங்க, பதிலுக்கு எம்பிரானும் தமது தலைமுடியை அசைத்தருளினார். அதிலிருந்த சந்திரனைக் கண்ட , பார்வதிதேவி இறைவனிடம், சந்திரன் தங்கள் ஜடாமுடியில் அமர்ந்த மர்மமென்ன வினவ, அவன் சோமவார விரதம் கடைப்பிடித்ததன் பலன் என சிவன் சொல்ல, தனக்கும் அந்த விரதம் பற்றி சொல்லக்கேட்டு, பார்வதிதேவியும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தாள் என்கிறது புராணங்கள்.
பார்வதி தேவிக்கு சிவப்பெருமான் சொன்ன சோமவார விரதம் கடைப்பிடிக்கும் முறை....
கார்த்திகை மாத முதல் கார்த்திகை மாதத்து திங்கட்கிழமை அதி காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, சிவனை முதலில் வணங்கி . ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு வில்வ இலையிலும், அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யவேண்டும். அன்னதானம் செய்வது அவசியம். வயது முதிர்ந்த தம்பதியை சிவன் பார்வதிதேவியாய் நினைத்து பாத பூஜை செய்து, உணவிட்டு அவர்களின் ஆசியை பெறவேண்டும்., அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம். மறுநாள் குளித்து முடித்து இறைவனை வணங்கி உணவு உட்கொள்ளலாம். இயலாதவர்கள் இரவு மட்டும் பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். இவ்வாறு முறையாய், 6, 12 வருடங்களென சங்கல்பமிருந்து ஆண்டுமுழுவதும் வரும் அனைத்து திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைப்பிடித்து வந்தல், ஈசனுக்கு பிரியமானவராகி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்... ..
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்சோமவார விரதமிருப்போம்..
இறை அருள் பெறுவோம்...
தமிழ்மணம் ஓட்டுப்போட வரிசை..
நட்புடன்,
ராஜி.
Subscribe to:
Posts (Atom)















































