Showing posts with label பூ. Show all posts
Showing posts with label பூ. Show all posts

Sunday, June 09, 2019

திருமணம் ஆனப்பெண் காதலிக்கக்கூடாதா?! - பாட்டு புத்தகம்

வேற ஒருத்தங்களுக்கு வித்துட்டா  மறந்துடனுமா என்ன?! இந்த ஒருவரி போதும் கதையின் கருவை சொல்ல...  பதின்ம காதல், பள்ளி காதல், ஒருதலை காதல், கல்யாணத்துக்குப்பின் காதல்ன்னு காதலை பலவிதமாய் சொன்ன தமிழ் சினிமா திருமணமான பெண்ணின் கணவனில்லாத இன்னொருவனின் மீதான காதலை

 கண்ணியமாய் சொன்ன படம்.. கொஞ்சம் பிசகினாலும் வேற மாதிரியான படமாய் ஆகி இருக்கக்கூடும்.  ஆனா, அப்படில்லாம் இல்லாம வெற்றிப்படமா, அதேசமயம் முகம் சுளிக்க வைக்காம வெளியான படம் பூ...

ஸ்ரீகாந்த், பார்வதி மேனன்னு நடிச்ச படம்.  மேக்கப், சண்டை, ஐட்டம் சாங்க்ன்னு கமர்சியல் படமா இல்லாம யதார்த்தமான கிராமத்து ஆட்களை கண்முன் கொண்டு வந்த படமே பூ...

தாய்மாமன் மகனை, சின்ன பிள்ளையிலிருந்தே காதலிக்கும் ஒரு கிராமத்து வெகுளிப்பெண். ஒரு தவம் மாதிரி தங்கராசுக்கு பெண்டாட்டி ஆகனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் ஒரு பொண்ணு,  ஆனா அவனோ ரொம்ப பிராக்டிக்கல் மைண்ட் கொண்ட ஆளுன்னு ஆரம்பத்திலேயே இயக்குனர் ஒரு காட்சியில் புரிய  வச்சிடுவார் இயக்குநர்.

வகுப்பில் ஆசிரியர் என்னவா ஆகப்போறேன்னு கேட்கும் கேள்விக்கு தங்கராசு பொண்டாட்டி ஆவேன்னு சொல்ல, ஆனா தங்கராசுவோ ஆசிரியரின் கோவத்துக்கு பயந்து அழுக, இப்படிதான் நாளைக்கும் சொல்வார் பேச்சை கேட்கும் ஆள்ன்னு சொல்லாமல் சொல்வார். அதுக்கு தகுந்தவாறு பணக்கார பொண்ணா கிடைச்சதும் கிராமத்து அத்தை பொண்ணை  விட்டுட்டுவான்.

படத்தின் கண்ணியத்துக்காக ஹீரோ ஹீரோயின் பேசுற சீனோ இல்ல, லவ் பரிமாறிக்கிட்ட சீனோ இல்ல. கிராமத்து பெண்ணின் காதலை ஊரே அறியும். அது ஹீரோவுக்கும் தெரியும். ஆனா எதிர்கால நலன், பணம், அப்பாவின் வற்புறுத்தல்ன்னு பணக்கார பொண்ணை கட்டிப்பார். கிராமத்து பொண்ணும் வேற ஒருத்தங்களை கட்டிக்கும். புருசனோடு வாழ்ந்தாலும் மாமனை மறக்காது. அவனை பார்க்க திருவிழாவிற்கு வரும்.

த்த்தூ இதுலாம் ஒரு படமா?! கல்யாணம்தான் ஆகிட்டுதே அதெப்படி இன்னொரு ஆளை நினைக்கலாம்ன்னு கலாச்சார காபாளர்களாம் பொங்கி எழாதவாறு  படத்தை கொண்டு போன இயக்குனரை பாராட்டனும்.

மாரியாய் பார்வதி மேனனும், தங்கராசுவாய் ஸ்ரீகாந்த்தும் வாழ்ந்திருப்பாங்க...

எனக்கு பிடிச்ச பாட்டு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க!!

நன்றியுடன்,
ராஜி

Thursday, January 09, 2014

குந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்

எப்படியோ, எங்கயோ அடிச்சு, பிடிச்சு சுமாரா எம்ப்ராய்டரிப் போட கத்துக்கிட்டேன். அப்படி சேலை, பாவாடை, ஜாக்கட்ல எம்ராய்டரி செய்து மிச்சம் மீந்த கலர் கலரா மீந்துப் போன கற்கள் இருக்கும். வீட்டை சுத்தம் பண்ணும்போது தூக்கிப் போட்டுடுவேன். பைசா வேஸ்ட், சுற்றுச்சூழலும் மாசுப்படும்.

ஆனா, வலையில் மாட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கும்போது அப்படி மீந்துபோன கற்கள் கொண்டு அழகான பூங்கொத்து செய்யலாம்ன்னு படிச்சேன். செஞ்சும் பார்த்தாச்சு. இப்பலாம் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு பர்த்டேன்னாலும், இல்ல எதாவது விழான்னாலும் என் பசங்களே குந்தன் பூ பொக்கே, க்ரீட்டிங்க்ஸ் செஞ்சு கொடுத்துடுவாங்க. கடைக்கு போக வேண்டிய வேலையே இல்ல. பைசாக்கு பைசா மிச்சம், தன் கையாலயே செஞ்சு தன் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்குறதுல பசங்களுக்கும் சந்தோசம். ரொம்ப ஈசி. 10 நிமிசத்துல ஒரு பூ செஞ்சுடலாம்.



தேவையான பொருட்கள்:
கலர் கலரான திலகம் வடிவ குந்தன் கற்கள்
வட்ட வடிவ குந்தன் கற்கள்
கோல்ட் இல்ல சில்வர் கலர் அலுமினிய கம்பி
பச்சை டேப்
நூல்



எல்லாக் குந்தன் கற்களிலும் மேல, கீழன்னு ரெண்டு ஓட்டை இருக்கும் அதுல ரெண்டு ஓட்டைகளிலும் கம்பியை விட்டு எடுத்து முறுக்கிக்கிக்கோங்க.
இப்படியே எல்லா கற்களிலும் கம்பி கோர்த்து முறுக்கி வச்சுக்கோங்க.


வட்ட வடிவ குந்தன் கற்களை மையமா வச்சு திலக வடிவ குந்தன் கல் வச்சு பூ கட்டுற மாதிரி நல்லா இறுக்கமாக் கட்டிக்கோங்க.


இப்படியே ஒண்ணொன்னா ஆறு இல்ல எட்டு கற்கள் வச்சு இறுக்கமா கட்டிக்கிட்டே வந்தால் ஒரு பூ ரெடியாகிடும்.

 உங்களுக்கு பிடிச்ச மாதிரி வளைச்சு ரெடிப் பண்ணிக்கோங்க. 

இதை வச்சு க்ரீட்டிங் கார்ட் ரெடி பண்ணலாம். பொக்கே தயாரிக்கலாம். ஃப்ளவர் வாசும் செய்யலாம். மேல இருக்குற படத்துல இருக்குறது நானும் அப்பும் செஞ்ச மினி ஃப்ளவர் வாஸ்.

புது கற்கள்தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல. பழசாகிப்போன பிள்ளைங்க ட்ரெஸ், நம்ம புடவைல இருக்கும் கற்களிலே கூட செய்யலாம்.பிடிச்சிருக்கா!?

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான கிராஃப்டோட சந்திக்கலாம். 

டாடா, பை பை, சீ யூ.