Thursday, January 09, 2014

குந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்

எப்படியோ, எங்கயோ அடிச்சு, பிடிச்சு சுமாரா எம்ப்ராய்டரிப் போட கத்துக்கிட்டேன். அப்படி சேலை, பாவாடை, ஜாக்கட்ல எம்ராய்டரி செய்து மிச்சம் மீந்த கலர் கலரா மீந்துப் போன கற்கள் இருக்கும். வீட்டை சுத்தம் பண்ணும்போது தூக்கிப் போட்டுடுவேன். பைசா வேஸ்ட், சுற்றுச்சூழலும் மாசுப்படும்.

ஆனா, வலையில் மாட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கும்போது அப்படி மீந்துபோன கற்கள் கொண்டு அழகான பூங்கொத்து செய்யலாம்ன்னு படிச்சேன். செஞ்சும் பார்த்தாச்சு. இப்பலாம் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு பர்த்டேன்னாலும், இல்ல எதாவது விழான்னாலும் என் பசங்களே குந்தன் பூ பொக்கே, க்ரீட்டிங்க்ஸ் செஞ்சு கொடுத்துடுவாங்க. கடைக்கு போக வேண்டிய வேலையே இல்ல. பைசாக்கு பைசா மிச்சம், தன் கையாலயே செஞ்சு தன் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்குறதுல பசங்களுக்கும் சந்தோசம். ரொம்ப ஈசி. 10 நிமிசத்துல ஒரு பூ செஞ்சுடலாம்.தேவையான பொருட்கள்:
கலர் கலரான திலகம் வடிவ குந்தன் கற்கள்
வட்ட வடிவ குந்தன் கற்கள்
கோல்ட் இல்ல சில்வர் கலர் அலுமினிய கம்பி
பச்சை டேப்
நூல்எல்லாக் குந்தன் கற்களிலும் மேல, கீழன்னு ரெண்டு ஓட்டை இருக்கும் அதுல ரெண்டு ஓட்டைகளிலும் கம்பியை விட்டு எடுத்து முறுக்கிக்கிக்கோங்க.
இப்படியே எல்லா கற்களிலும் கம்பி கோர்த்து முறுக்கி வச்சுக்கோங்க.


வட்ட வடிவ குந்தன் கற்களை மையமா வச்சு திலக வடிவ குந்தன் கல் வச்சு பூ கட்டுற மாதிரி நல்லா இறுக்கமாக் கட்டிக்கோங்க.


இப்படியே ஒண்ணொன்னா ஆறு இல்ல எட்டு கற்கள் வச்சு இறுக்கமா கட்டிக்கிட்டே வந்தால் ஒரு பூ ரெடியாகிடும்.

 உங்களுக்கு பிடிச்ச மாதிரி வளைச்சு ரெடிப் பண்ணிக்கோங்க. 

இதை வச்சு க்ரீட்டிங் கார்ட் ரெடி பண்ணலாம். பொக்கே தயாரிக்கலாம். ஃப்ளவர் வாசும் செய்யலாம். மேல இருக்குற படத்துல இருக்குறது நானும் அப்பும் செஞ்ச மினி ஃப்ளவர் வாஸ்.

புது கற்கள்தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல. பழசாகிப்போன பிள்ளைங்க ட்ரெஸ், நம்ம புடவைல இருக்கும் கற்களிலே கூட செய்யலாம்.பிடிச்சிருக்கா!?

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான கிராஃப்டோட சந்திக்கலாம். 

டாடா, பை பை, சீ யூ.

16 comments:

 1. அய்யோ அக்கா ரொம்ப அழகாக இருக்கு.என்னிடம் நிறைய குந்தன்கற்கள் இருக்கு.இனி நிறைய பொக்கே பண்ணுவோம்.உங்களை பார்க்கும் போது உங்களுக்கு என் கையால் செய்த பொக்கே தருவேன் அக்கா

  ReplyDelete
  Replies
  1. நீ தந்தால் நானும் மறுக்காம வாங்கிக்குவேன் சுபா! பொக்கே மட்டுமில்ல, இதை வச்சு மாலை பின்னி நிலை வாசல், பூஜை ரூமையும் அலங்காரம் பண்ணலாம் சுபா!

   Delete
 2. அழகா செய்துள்ளீர்கள் சகோ... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி அண்ணா!

   Delete
 3. ரொம்ப அழகா இருக்குங்க... இங்கு திருவரங்கத்தில் இந்த மாதிரியெல்லாம் மணி , கற்கள் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது... திருச்சிக்கு தான் போகணும் ஒருநாள்...

  ReplyDelete
  Replies
  1. திருச்சிக்கு போகும்போது வாங்கி வாங்க. இல்லாட்டி, ரோஷினியோட பழைய சுடிதார், மிடி, பாவாடைல இருக்குறதை எடுத்தும் செய்யலாம்ங்க ஆதி!

   Delete
 4. அழகான கை வண்ணம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

   Delete
 5. ஆஹா எனக்கு புத்தாண்டுப் பரிசு தயாராகிக்கொண்டே இருக்குது !
  அருமையான இப் பரிசினைப் பெறுவதற்கு நான் கொடுத்து வைத்தவள் தான் :)))

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நான் குந்தன் பொக்கே கொடுக்கிறேன். எதிர் சீரா நீங்க என்ன தரப்போறீங்க அக்கா!?

   Delete
  2. அன்பா ஒரு முத்தம் தருவன் அதோட சரி :)))))))))))))))

   Delete
 6. வணக்கம்
  நல்ல முயற்சி ஒரு நிமிடம் கூட வினாக போகக்கூடாது என்ற எண்ணத்துடன் இப்படியான வேலைகளை செய்வது வாழ்நாள் முழுதும் பயனாக இருக்கும் வாழ்த்துக்கள் அழகாக உள்ளது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்

   Delete
 7. அழகா இருக்கு..... பாராட்டுகள்.

  ReplyDelete